Archive for the ‘செப்பேடுகள்’ Category

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடந்த விதம் (1)

செப்ரெம்பர்10, 2023

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடந்த விதம் (1)

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்: “உலக வரலாற்று காங்கிரஸ்” புதுச்சேரியில் குறுகி விட்ட நிலைதான் தென்படுகிறது. புதுச்சேரியின் வரலாற்று பின்னணியை விளக்கும் வகையில், இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது[1]. உண்மையில், “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” [Puducherry World Histoy Congress, PWHC] என்ற  அமைப்பு, உலக சரித்திரத்தை ஆய்வோம் என்றுதான் ஆரம்பிக்கப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால், இவ்வாறு செய்தி வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது[2]. இதன், ஆலோசனை கூட்டம், தாகூர் அரசு கல்லுாரி வளாகத்தில் 06-09-2023 அன்று நடந்தது[3]. அமைப்பின் பொதுச் செயலரான பேராசிரியர் சந்தீப் குமார் தாசரி தலைமை தாங்கினார்[4].  நிர்வாகிகள், இரண்டு நாள் மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கினர். தினமலர் மற்றும் ஏதோ ஒரு உள்ளூர் ஊடகத்தில் மட்டும் இதைப் பற்றிய செய்து வெளிவந்துள்ளது. மற்ற ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை போலும்.

சரித்திரப் பாடம், வரலாறு கல்வி முதலியவற்றிற்கு மவுசு குறைந்து வருகிறது: இப்பொழுதெல்லாம் சரித்திர பாடத்தை யாரும் கண்டுகொள்வதில்லை எனலாம். ஏனெனில், அதைப் படித்து என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், பெரும்பாலான பல்கலைக் கழகங்களில், இத்துறை மூடப் பட்டு வருகிறது. மேலும், சேரும் எண்ணிக்கை குறைவதுடன், போதிக்கும் ஆசிரியர்களும் குறைந்து வருகின்றனர். இந்நிலையில், சரித்திர மாநாடு, கருத்தரங்கம் என்றெல்லாம்நடத்தினால் யார் வருவார்கள் என்று யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாக, சுற்றுலா போல, ஊரைச் சுற்ரிப் பார்க்க கூட்டம் வருவது சகஜமாக இருந்தது. ஆனால், இப்பொழுதெல்லாம், கலந்து கொள்ள ரூ 3000/-முதல் ரூ 5000/- வரை வசூலிக்கப் படுவதால், அத்தகைய கூட்டமும் குறைந்து விட்டது. அந்நிலையில், உண்மையில் ஆராய்ச்சி, கட்டுரை வாசிப்பு என்று வருவது சிலரே. இருப்பினும், ஓய்வு பெற்ற சரித்திராசிரியர்கள் முதலியோர்களுக்கு இது ஒரு கிளப் போன்றுசெயல்படுகிறது. வருடத்திற்கு மூன்று நாட்கள் வந்து ஜாலியாக தங்கி, பழைய நண்பர்களைப் பார்த்து செல்ல வசதியாக இருக்கிறது.

மாநாடு பற்றிய விவரம்: பின், வரலாற்று காங்கிரசின் பொதுச் செயலர் சந்தீப் தாசரி அளித்த பேட்டி: “புதுச்சேரிக்கு செழுமையான வரலாற்று பின்னணி உள்ளது. புதுச்சேரியின் கலாசாரமும் தனித்துவம் வாய்ந்தது. புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் உள்ளிட்டவைகள் இங்கு அமைந்துள்ளன. மேலும், பண்டைய வாணிப தொடர்புக்கும், கடல் வழி வணிகத்துக்கும் சாட்சியாக விளங்கும் அரிக்கமேடு புதுச்சேரியில் அமைந்துள்ளது. புதுச்சேரியின் வரலாற்றை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கத்தில், உலக வரலாற்று காங்கிரஸ் கடந்தாண்டு அக்டோபரில் துவங்கப்பட்டது. இந்நிலையில், அரசின் சுற்றுலாத் துறை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுலா படிப்புகள் துறையுடன் இணைந்து, வரும் 9, 10 ஆகிய தேதிகளில் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். புதுச்சேரி பல்கலையில் நடக்கும் இந்த மாநாட்டில் நாடு முழுதும் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் வரலாறு சார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் 600 பேரும், வரலாற்று துறை மாணவர்கள் 200 பேரும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை, பல்கலை துணைவேந்தர் குர்மீத்சிங் துவக்கி வைக்கிறார். பழங்கால உலகம், இடைக்கால உலகம், நவீனகால உலகம், இந்தியா மற்றும் அயல்நாட்டு சமகால வரலாறு, கடல் சார் உலகம், உலக சுற்றுலா ஆகிய தலைப்புகளில் அறிஞர்கள் பேசுகின்றனர். 150 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன,” இவ்வாறு அவர் கூறினார். ஆக, இவரும் இவ்வாறு குறுக்கி விளக்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

09-09-2023 அன்று இம்மாநாடு துவக்கி வைக்கப் பட்டது. குறிப்பிட்டது போல, கவர்னர், முதலமைச்சர் என்றெல்லாம் யாரும் வரவில்லை. உள்ளூர் காலாப்பேட்டை எம்.எல்.ஏ மற்றும் சபாநாயகர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இவ்விவரமும் அந்த எம்.எல்.ஏ இணைதளத்திலிருந்து அறியப் படுகிறது. போதிய கூட்டமும் இல்லை. விசாரித்த போது, இந்த அமைப்பில் ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சினைகள் இருப்பது தெரிகிறது. ஏற்கெனவே “புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ்” [Pucherry History Congress, PHC] என்று ஒரு அமைப்பு செயல்பட்டு வந்தது தெரிகிறது. ஆனால், ஏதோ காரணங்களுக்காக இப்பொழுது செயல்படவில்லை. மாற்றாக, இன்னொரு அமைப்பு ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் அதே பெயரை உபயோகிக்காமல், இவ்வாறு, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” என்று டாம்பீகமாக பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பது தெரிகிறது. ஆனால், உன்மையில் வெளிநாட்டவர் யாரும் வரவில்லை, சுற்றுலாவுக்கு வந்தவர்களை, மாநாட்டுக்கு வந்தவர்கள் போன்று அறிவித்துள்ளனர். புதுச்சேரிக்கு சாதாரணமாக அயல்நாட்டவர் வந்து செல்வது சகஜம் தான். அதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

இந்தியாவில்உலக வரலாற்றுக் காங்கிரஸின்பரபரப்பான விசயமானது: பங்கேற்கும் பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அமர்வுகள் என்று வைத்துக் கொன்உ, “உலக வரலாற்றுக் காங்கிரஸை” உலக அளவில் நடத்தலாம், இதில். கடந்த 100 ஆண்டுகளாக வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்கேற்புடன் “சர்வதேச” மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்போது, இது ஒன்று அல்லது சில NRIகள் பங்கேற்கும் நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது, உறுகியுள்ளது. அவர்கள் தங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடும், அதை இங்கே விவரிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அத்தகைய நபர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், உள்ளூர் கூட்டத்தை கூட அத்தகைய “சர்வதேச மாநாட்டிற்கு” மாற்றுவதற்கும் வழிகள் காணப்படுகின்றன. சென்னையில், மூன்று நட்சத்திர ஹோட்டலில் பல தலைப்புகளில் பல “சர்வதேச மாநாடுகளை” நடத்தும் குழுக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கின்றன. இதுபோன்ற பல “சர்வதேச,” “உலகளாவிய,” “கண்டங்களுக்கு இடையேயான,” “உலகளாவிய” போன்றவை தோன்றி மறைந்தன. எனவே, ஆரம்பிக்கப் பட்ட தமிழ்நாடு உலக வரலாற்று மாநாடு, ஆந்திரப் பிரதேச உலக வரலாற்று மாநாடு, தெலுங்கானா உலக வரலாற்று மாநாடு, கர்நாடகா உலக வரலாற்று மாநாடு, கேரள உலக வரலாற்று மாநாடு, ஒடிஷா உலக வரலாற்று மாநாடு போன்றவற்றின் எண்ணம் குறித்து ஆச்சரியப்பட முடியாது. சமீபகாலமாக, “உலகத் தமிழ் மாநாடு” போன்றவை பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. எனவே, ஒருவர் பேசுவது, செய்தது, நடப்பது பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும்.

இது பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நுகர்வோர் கொண்ட எல்பிஜி உலகம்: பொதுமக்கள் அல்லது நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படும் போது, இயற்கையாகவே, அவர்கள் விலை மற்றும் தரத்தைப் பார்க்கிறார்கள். உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் “பொருட்கள் மற்றும் சேவைகளை” சந்தையில் கொட்டலாம், ஆனால் “நுகர்வோர்” தமது விருப்பத்திற்கு-தேவௌக்கு ஏற்ப வாங்கலாம் அல்லது வாங்காமல் இருக்கலாம், இருப்பினும் வாங்குபவர்களும் விற்பவர்களும் தங்கள் வணிகத்தைச் செய்கிறார்கள். எந்தவொரு நுகர்வோரும், “நான் 2,000, 3,000 அல்லது 5,000 ரூபாய் செலுத்தி, பயணத்திற்கும் மற்ற செலவுகளுக்கும் செலவழித்தால், அத்தகைய மதிப்புக்கு ஈடாக என்ன கிடைக்கும்?” என்று நினைப்பார்கள். நுகர்வோர் பெறவில்லை என்றால், அவர் ஏன் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்? எனவே, வரலாற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் நுகர்வோர் என்றால், நிச்சயமாக, அவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு செலுத்தியதை திரும்பப் பெற வேண்டும். மேலும், இங்கு, ஸ்பான்சர்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் லட்சங்கள் பெறப்படுகின்றன, எனவே, சேகரிக்கப்பட்ட பிரதிநிதி கட்டணத்தில் இருந்து அமைப்பாளர்கள் செலவிடுகிறார்கள் என்று யாரும் நினைக்க முடியாது. உண்மையில், பெறப்பட்ட லட்சக்கணக்கான நிதியில், அவர்கள் பிரதிநிதி கட்டணத்தை குறைக்கலாம்.

ஏறக்குறைய 100 உறுப்பினர்களுக்கு பிரதிநிதி கட்டண விலக்கு கிடைக்கும், என்பதால், மற்றவர்கள் இலவச சவாரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்களா?: ஏற்கனவே “ஜம்போ சைஸ்” செயற்குழுவில் சுமார் 100 நபர்கள் இருக்கிறார்கள். உண்மையில் 100 உறுப்பினர்களுடன், படிப்பு-ஆராய்ச்சி, கல்வி ரீதியாகவும் ஒரு மாநாட்டை நடத்தலாம். இங்கு, பிரதிநிதிக் கட்டணமாக ரூ.100 கொடுப்பார்களா என்பது தெரியவில்லை. 3,500 அல்லது இல்லையா, அப்படியானால், ஒருவர் சிந்திக்க வேண்டும், அவர்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் தேவையில்லை, அவர்களில் 90% பேர் பார்வைக்காக வருகிறார்கள், மீதமுள்ள 10% பேர் ஆய்வுக்கட்டுரைகளில் ஆர்வம் காட்ட மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் வாசித்து முடிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள். மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்குள் ஆய்வுக் கட்டுரையை முடித்து விட்டு, பீச், ரிசார்ட், கோவில் மற்றும் பலவற்றிற்குச் சென்று மகிழத் தான் சமயம் பார்ப்பார்கள். எனவே, கல்வி சாரா செயல்பாடுகளை விட, கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-09-2023


[1] தினமலர், புதுச்சேரி வரலாற்றை விளக்க 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு, பதிவு செய்த நாள்: செப் 07,2023 07:15.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3425347

[3] தினமலர், புதுச்சேரியின் வரலாற்றை விளக்க இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு, பதிவு செய்த நாள்: செப் 07,2023 05:03.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3425079

இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப் படட்டும் – தமிழக அரசியலும், சரித்திரம்-சரித்திரவரைவியல், சரித்திராசிரியர்கள் – சித்தாந்தம் முதலியன!

நவம்பர்30, 2022

இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்தமிழக அரசியலும், சரித்திரம்சரித்திரவரைவியல், சரித்திராசிரியர்கள்சித்தாந்தம் முதலியன!

திராவிட இனம், ஹிராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, “திராவிட” என்ற கோஷம் அதிகமாகி விட்டது, அது மட்டுமல்லாது, தன்னை “திராவிடியன் ஸ்டாக்,” (Dravidian stock) என்று குறிபிட்டுக் கொண்டு, “திராவிட மாடல்” (Drvidian model) ஆட்சிமுறை பின்பற்றப் போகிறோம் என்று ஸ்டாலின் அறிவித்தாகி விட்டது. அதிலிருந்து, அகழாய்வு அரசியலாக்கப் பட்டு, தொல்துறை திமுக அமைச்சர்கள் நடத்தி வருவது போல மாறிவிட்டது. கீழடி உச்சத்தில், எம்.பிக்கள், மந்திரிகள், அதிகாரிகள் என்று அடிக்கடி, அகழாய்வு நடக்கும் இடங்களுக்குச் சென்று பார்ப்பது, குழிகளில் இறங்குவது, பொருட்களைத் தொட்டுப் பார்ப்பது என்றெல்லாம் சகஜமாக நடந்து வருகின்றன. எந்த நியாவானும் இதையெல்லாம் தவறு என்று யோக்கியமாக எடுத்துக் காட்டவில்லை. மெற்குறிப்பிட்டவர்கள், தோண்டி கிடைத்தவற்றை, கைகளில் வைத்துக் கொண்டு அவற்றைப் பற்றி விவரிக்கின்றனர். இருப்பினும், கிடைத்த எல்லா பொருட்களையும் 6th.cent.BCE / 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று குறிக் கொள்வது தமாஷாக இருக்கிறது.

இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்:  தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் திருநெல்வேலியில் இலக்கிய திருவிழா முதன்முதலாக தொடங்கியது. தமிழ் மொழியின் இலக்கிய செழுமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அறிவு சார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்[1].  பாளையங்கோட்டையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.26, 27) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவை காணொலி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார்[2]. அப்போது, “தமிழ்ச் சமூகமானது இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம்[3]. கீழடியைத் தொடர்ந்து சிவகளை, கொற்கை என பல அகழ்வாய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் வழியாகவும் அறிவியல்பூர்வமாக நிறுவப்படும் நமது தொன்மை நம்முடைய பெருமை[4]. இந்தப் பெருமையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று, அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன[5]. தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபுகளைப் போற்றும்விதமாக பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களைத் தமிழ்நாடு அரசு நடத்துகிறது[6]. இதில் முதல் நிகழ்வாக, அன்னைமடியான பொருநை ஆற்றங்கரையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கியத் திருவிழா சிறந்ததொரு முயற்சி. அறிவை விரிவு செய், அகண்டமாக்குஎன்று பாவேந்தர் சொன்னதற்கிணங்க நமது தமிழ் மண்ணின் செழுமைமிக்க இலக்கிய பண்பாட்டினை உலகிற்குப் பறைசாற்ற நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு எனது வாழ்த்துகள். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்,” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திராவிட மாடல் என்பது சித்தாந்தம். அதனை தமிழக முதல்வர் கையிலெடுத்துள்ளார் – பேசிய அமைச்சர்: அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்[7], “திருநெல்வேலி என்றால் தியாக வரலாறு உள்ள பூமி. இந்த மண்ணில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இது போன்ற விழாவை யாரும் நடத்தியதில்லை…….. திராவிட மாடல் என்பது சித்தாந்தம். அதனை தமிழக முதல்வர் கையிலெடுத்துள்ளார்………. ,” என்று பேசினார்[8]. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று கடந்த மே 2022லேயே சட்டசபையில் சொன்னதாக செய்தி வந்துள்ளது[9]. அதையே தான், நவம்பர் 2022லும் சொல்கிறார். அப்பொழுது, “அதேபோல், அகழாய்வுகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்களை ஆய்வு செய்திட (1) தொல் தாவரவியல் (Paleo Botany), (2) தொல் விலங்கியல் (Paleo Zoology), (3) தொல் மரபணு ஆய்வு (Ancient DNA Analysis) (4) சுற்றுச்சூழல் தொல்லியல் (Environmental Archaeology) (5) மண் பகுப்பாய்வு (Soil Analysis), (6) உலோகவியல் (Metallurgy Study), (7) கடல்சார் ஆய்வு (Marine Archaeology) போன்ற பல்துறை வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றிடப் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன,” என்றெல்லாமும் சொல்லியிருப்பதை கவனிக்கலாம்[10].

இனவாதக் கட்டுக் கதைகள் சரித்திரம் ஆகாது: .19-20 நூற்றாண்டுகளில், அரசியல் வாழ்க்கையில் கருத்துக்கள், விதிமுறைகள் மற்றும் கலாச்சாரம் போன்ற கருத்துக்கள் வகிக்கும் பங்கை அறிஞர்கள் மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளனர். உருவாக்கப் பட்ட கட்டுக் கதைகள், இட்டுக் கதைகள், கருதுகோள்கள் முதலியவற்றை ஆய்ந்து, பற்பல புனைந்த கோட்பாடுகளை நீக்கி வருகின்றனர். இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆதரங்களை வைத்துப் புனையப் பட்ட கட்டுக்கதைகளையும் ஒதுக்குகின்றனர். இந்த இலக்கியம் அரசியல் நடிகர்கள் மற்றும் விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை விமர்சன வழிகளில் மேம்படுத்தியிருந்தாலும், அது பல சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது, அவற்றில் ஒன்று இந்த “திராவிட மாடல்” தொந்தரவு ஆகும். இது அவ்வப்பொழுது சரித்திரம், அகழாய்வு, சரித்திராரைவியல் முதலியவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறது. அதன் நிலை சார்பு. சமூக ஜனநாயகத்தின் மறுபரிசீலனையை முன்வைத்து, கட்டமைப்பு மற்றும் நிறுவனம் ஆகிய இரண்டும் ஆற்றிய பங்கை கவனமாக பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை நினைவு கொண்டு, இப்பொழுதெல்லாம் எந்த சரித்திராசிரியரும் தட்டிக் கேட்பதில்லை, எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.

சித்தாந்த ரீதியிலான சரித்திரவரைவியல் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை: மேலும் சித்தாந்தங்களின் இரண்டு-நிலை செயல்முறையைப் புரிந்துகொள்வதற்காக பல்வேறு வகையான வரலாற்று பகுப்பாய்வு மற்றும் செயல்முறைத் தடயங்கள் தேவை. உயர்வு தாழ்வு. சித்தாந்தங்கள் எப்படி, ஏன் உருவாகின்றன என்பதைப் பற்றிய சிறந்த புரிதல், சமூக அறிவியலில் தற்போது பரவி வரும் கருத்தியல் “அலைக்கு” விமர்சன ரீதியாக பங்களிக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிப்பதாகத் தெரியவில்லை. சமீபத்தில், இரண்டு முறை, தமிழ்நாட்டு சரித்திர பேரவை மாநாடுகள் நடந்துள்ளன. நூற்றுக் கணக்கான சரித்திராசிரியற்கள் கலந்து கொன்டுள்ளனர். ஆனால், இத்தகைய அரசியல் தலையீட்டைக் கண்டிக்கவில்லை, எந்த தீர்மானமும் போடவில்லை, நிறைவேற்றவில்லை. முன்பெல்லாம், மஸ்ஜித்-மந்திர் விவகாரத்தை வைத்துக் கொண்டு சரித்திராசிரியர்கள் சண்டை போட்டுக் கொள்வது சகஜமாக இருந்தது. பிரபலமான சரித்திராசிரியர்கள் காரசாரமாக பேசுவார்கள், விவாதிப்பார்கள், கோஷம் போடுவார்கள், தீர்மானம் போடுவார்கள், நிறைவெற்றுவார்கள்…..இப்பொழுது, திராவிட மாடலில், மூடிக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். திராவிட ஸ்டாக்கைக் கண்டு அஞ்சுகிறார்கள் போலும்.

திராவிடஎன்பது இனம் இல்லை, அது மொழி அல்லது திசையைக் குறிக்கும் சொல்: ரோமிலா தாபர் போன்ற சரித்திராசிரியர்கள் “திராவிட” என்பது இனம் இல்லை, அது மொழி அல்லது திசையைக் குறிக்கும் சொல் என்று எடுத்துக் காட்டியபிறகும், திராவீடத்துவ வாதிகள், அதை “இனம்” என்ற விததிலேயே உபயோகப் படுத்தி, வெறுப்பு அரசியல் நடத்தி வருகின்றனர். திராவிடம் என்பது ஒரு அரசியல் சொல்லாக, தமிழ்நாட்டின் பொதுப் பேச்சில் ஒரு நிலையான காரணியாக இருந்து வருகிறது, அதன் விமர்சகர்கள் தாமதமாக அதிகமாகக் குரல் கொடுத்தாலும் அது 60 ஆண்டுகள் கழித்து தான் கேட்கப் பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “திராவிட” என்ற அடைமொழி, அத்யாவசீயமானது. அரசியல்வாதி என்பது இல்லை, நடிகர் கூட அத்தகைய சித்தாந்தத்தைப் பேசலாம். கமல்ஹாசன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில், “திராவிட சித்தாந்தத்தை ஏற்காமல் எந்த கட்சியும் அரசியலில் ஈடுபட முடியாது,” என்பதெல்லாம் அத்தகைய உசுப்பேற்றும் வசனங்கள் தாம். தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பாரிஸைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும், நீதிக்கட்சி பற்றிய சமீபத்திய புத்தகத்தின் ஆசிரியருமான ஜே.பி. பிரசாந்த் மோர், திராவிடம் என்ற சொல் பல ஆண்டுகளாக மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்று கூறினார். 1916 இல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டபோது, அப்போதைய மதராஸ் பிரசிடென்சியில் தமிழ் பேசும் பிராமணர் அல்லாதவர்களை மட்டுமே குறிக்கும் வகையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது[11]. “ஆனால், இப்போது, அது பாரதிய ஜனதா கட்சி என்று கூறுவதோடு, ‘வெளியுலக செல்வாக்கை’ எதிர்கொள்வதையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது,” என்று திரு. மோர் கூறினார்[12], தமிழர் அடையாளமும் கலாச்சாரமும் ஆபத்தில் உள்ளது என்ற கருத்து ஏற்படும் போதெல்லாம். , சொல்லின் பொருத்தம் முன்னுக்கு வருகிறது.

© வேதபிரகாஷ்

28-11-2022


[1] தினமணி, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்: முதல்வர் ஸ்டாலின்!, By DIN  |   Published On : 26th November 2022 03:00 PM  |   Last Updated : 26th November 2022 03:05 PM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/26/let-the-history-of-the-indian-subcontinent-be-written-from-tamil-land-chief-minister-stalin-3956423.html

[3] இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்..முதல்வர் ஸ்டாலின் By Jeyalakshmi C Published: Saturday, November 26, 2022, 11:32 [IST].

[4] https://tamil.oneindia.com/news/chennai/let-the-history-of-the-indian-subcontinent-be-written-from-tamil-soil-says-cm-stalin-487035.html?story=3

[5] ஜீடிவி.தமிழ், துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்‘ – முதல்வர் ஸ்டாலின், Written by – Sudharsan G | Last Updated : Nov 26, 2022, 02:56 PM ISTச்.

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-speech-in-porunai-literary-festival-at-tirunelveli-421314

[7] நியூஸ்7.தமிழ்.லைவ், இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின், by EZHILARASAN D, November 26, 2022.

[8] https://news7tamil.live/let-the-history-of-the-indian-subcontinent-be-written-from-tamil-soil-chief-minister-stalin.html

[9] இ.டிவி.பாரத், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்முதலமைச்சர் ஸ்டாலின், Published on May 9, 2022, 2.24 PM IST.

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/cm-stalin-says-history-of-indian-subcontinent-must-now-be-written-from-tamil-landscape/tamil-nadu20220509142426090090000

[11] The Hindu, ‘Dravida’ has no racial connotation: historian, T. RAMAKRISHNAN,April 15, 2017 12:51 am | Updated April 18, 2017 04:10 pm IST – CHENNAI.

[12] https://www.thehindu.com/news/national/tamil-nadu/dravida-has-no-racial-connotation-historian/article18032337.ece

1,100 வருட பழமையான சோழர்களின் கல்வெட்டுகள் சமீக காலத்தில், திருவண்ணாமலை கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டனவா? – உண்மையில் நடந்ததை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்!

ஏப்ரல்26, 2017

1,100 வருட பழமையான சோழர்களின் கல்வெட்டுகள் சமீக காலத்தில், திருவண்ணாமலை கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டனவா? – உண்மையில் நடந்ததை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்!

1100 years old inscription found 17-04-2017

திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள்:  திருவண்ணாமலை கோவிலில் கல்வெட்டுகள் படியெடுப்பு காலின் மெகன்ஸியால் 1806லிருந்தே துவங்கியது. பிறகு, கல்வெட்டுத்துறையாளர்கள் 1953 வரை வந்து, கல்வெட்டுகள் மற்றும் தாமிர பட்டயங்களின் படிவுகள், தென்னிந்திய கோவில்கள் கல்வெட்டு ஆண்டு அறிக்கை மற்றும் தொகுப்புகளில் கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளன:

South Indian Temple Inscriptions, Vol.I, Nos.105-114, pp.114-124.

Col. Colin Mckenzie, D. 2869 and 2760

The Annual Report, 1902, Nos. B.469-574

South Indian Temple Inscriptions, Vol.VIII, Madras, 1937, pp. 31- 76; Inscription Nos. 57-165 [A. R. No. 469 0f 1902 to 574 of 1902]

ARE. Nos. 476, 488 and 539.

ARE. 1928-29, Nos. B 419-28

ARE. 1945-46, B. Nos.66-81.

இவற்றில், குறிப்பிட்ட கல்வெட்டுகள் பற்றி ஏற்கெனவே விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதைப் பற்றிய விவரங்களை பிரஞ்சு இந்தியவியல் நிறுவன ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்[1]. ஆனால், இப்பொழுது, திடீரென்று தாங்கள் கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொள்வது, செய்திகளை வெளியிடுவது எப்படி என்று தெரியவில்லை. குறிப்பிட்ட தொகுப்புகளில் இல்லாததை கண்டு பிடித்தால், கண்டு பிடித்ததாக சொல்லலாம், ஆனால், இவையெல்லால், பிறகு வந்த புத்தகங்களிலும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. உடைந்த மற்றும் துண்டு கல்வெட்டுகள் என்ற பகுதியில், அத்தகைய சோழர்களின் கல்வெட்டுகளைக் குறிப்பிட்டு, கோவில் புனர்நிர்மாணம் செய்யும் போது, அவற்றை வைத்து கட்டிய விவரங்களும் 2004லேயே கொடுக்கப்பட்டன[2].

Tiruvannamalai inscriptions 57, 58, 59, 60 -SII

திருவண்ணாமலையைப் பொறுத்த வரையில், வீர வல்லாளனின் பங்கை மறைக்க முடியாது: அக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில், நிசாங்கபிரதாப என்ற பட்டம் கொண்ட ஹோய்சள அரசனின் பெயரும் உள்ளது. கோப்பெருஞ்சிங்கன் என்ற பெயரும் காணப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கன், வீரநரசிம்மன் மற்றும் சோமேஸ்வரனுடன் மோதியுள்ளான்[3]. ஆனால், ஹோய்சள அரசன் வீரவல்லாளன், முகமதியர் தாக்குதலுக்குப் பிறகு திருவண்ணாமலைக் கோவிலை புனர்ப்பித்தான், என்று தெரிகிறது.

  • வீரவல்லாளன் (1291-1348) தமிழகத்தைக் காக்க அந்நியரை எதிர்த்து வீரமரணம் எய்திய மாபெரும் வீரன்.
  • அத்தகைய வீரமரணத்தை அவர் தனது எண்பதாவது வயதில், அதிலும் நயவஞ்சகத்தனமாக தூங்கிக் கொண்டிருந்த போது பிடித்துச் சென்றதால் ஏற்பட்ட முடிவு.
  • மதுரையில் சுல்தானுடன் பேசி முடிவிற்கு வருகிறோம் என்று சொல்லி, ரகசியமாக படையெடுத்து வந்து பிடித்துச் சென்ற வஞ்சகத்தின் முடிவாக இருந்தது.
  • கியாசுத்தீன் முதலில் நன்றாக நடத்துவது போல நடித்து,  செல்வத்தைக் கொடுத்தால் விட்டுவிடுவேன் என்று பேரம் பேசினான். ஆனால், 80 வயதிலும் தளரவில்லை வீரவல்லாளன்.
  • ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததும், அந்த காஃபிரைக் தோலுரித்துக் கொல்லுமாறு ஆணையிட்டான். அவ்வாறே கசாப்புக்காரர்களிடம் அகப்பட்ட பசு போல, வீரவல்லாளன் கொல்லப்பட்டான். அவனுடைய உடலிருந்து ரத்தம், சதை முதலியவை எடுக்கப்பட்டன.
  • பிறகு, அவன் தோலுருவத்தில் வைக்கோல் அடைக்கப்பட்டு, மதுரை கோட்டையின் மதிற்சுவற்றின் சுவரிலிருந்து தொங்கவிடப்பட்டது.
  • இப்படியாக திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய வீரவல்லாளனின் கதை முடிந்தது.

Vira Vallala statue

திருவண்ணாமலை கோவிலின் சரித்திரமே, வீர வல்லாளனுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நடக்கும் கொண்டாட்டங்களிலிருந்தே அதை அறிந்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் ஹொய்சளரின் பங்கை, மறைப்பது வினோதமாக இருந்தாலும், அரசியல் பின்னணி மற்றும் சித்தாந்தம் [இன்று வல்லாளனை கன்னட அரசன் என்பார்கள்] இவற்றைக் கவனிக்கும் போது புரிகிறது. இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள், தொல்துறை நிபுணர்கள் மற்றும் சரித்திராசிரியர்கள், இவற்றையெல்லாம் மீறி, பாரபட்சத்துடன் செயல்பட வேண்டும்.

Vira Vallala statue- at the entrance RHS

உண்மையில் நடந்ததை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்: பொதுவாக கோவிலுக்குச் செல்பவர்களே, இவற்றைக் காணலாம். முதலில் கல்வெட்டுகள் ஏன் உடைக்கப்பட்டு, துண்டுகளாகக் கிடக்கின்றன என்பது பற்றி விளக்க வேண்டும். அப்பொழுதுதான், இப்பொழுதுள்ள மக்களுக்கு அதன் முக்கியத்துவம் விளங்கும். முன்பு அரசன் முதல் சாதாரண மனிதன் வரை கோவிலுக்கு என்று எந்த பணி, சேவை, தானம் செய்தாலும், கல்வெட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பொறிக்கப்பட்டு வந்தது. அதாவது, அத்தகைய அறிவிப்புகள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அந்நிலையில், அத்தகைய சரித்திர ஆவணங்களை உடைத்தது, சேதமடைய செய்தது, சிதைத்தது யார், ஏனப்படி செய்தார்கள் என்று சரித்திராசிரியர்கள், கல்வெட்டு நிபுணர்கள்,  அகழ்வாய்வாளர்கள் எடுத்துச் சொல்லவேண்டும். திருவண்ணாமலையைப் பொறுத்த வரையில், முகமதியர்களின் படையெடுப்பில், கோவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சிற்பங்கள் உடைந்திருக்கும் நிலையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். பிறகு, விஜயநகர காலத்தில் புதுப்பிக்கப் பட்டது. இந்த உண்மைகளை முதலில் ஆராய்ச்சியாளர்கள், சரித்திராசிரியர்கள் மற்றும் தொல்துறை நிபுணர்கள் எடுத்துக் காட்ட வேண்டும். கோவிலில் உள்ள நடன மண்டபத்தை அலுவலமாக இந்து அறநிலையத் துறையினர் மாற்றியிருப்பதையும், இன்னொரு மண்டபத்தை ஐந்து நடசத்திர ஹோட்டல் போல சகல வசதிகளுடன் கட்டியதால், எத்தனையோ தூண்கள், சிற்பங்கள், சிமென்ட், கான்கிரீட் மற்றும் சுவர்களில் மறைந்துள்ளன. இந்த சீர்கேட்டைப் பற்றி யாரும் எழுதுவதில்லை. ஆனால், இதையெல்லாம் எழுதிகிறார்கள். அவ்வாறு செய்வது ஏன் என்றும் புரியவில்லை. ஆனால், செய்திகள் மட்டும் வெளிவந்து கொண்டிருப்பதால், நிச்சயமாக முரண்பாடு வெளிப்படுகிறது. வேறு உள்நோக்கம் இல்லை என்றால் இத்தகைய முரண்பாடுகளை தவிர்க்க வேண்டும், இல்லை செய்திகள் வருவதை தடுக்க வேண்டும். ஆனால், தங்களது கருத்துகளையும் சேர்த்து, செய்திகளில் வெளிவருவதை அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகையால், நிச்சயமாக, இவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்.

© வேதபிரகாஷ்

26-04-2017

Vira Vallala statue- Hoysala fighting with tiger

[1] Srinivas, P. R. “Tiruvannamalai, a Saiva sacred complex of South India.” (1990).

[2] Sri Bhagavan’s Devotees, Ramana’s Arunachala – Ocean of Grace Divine, Sri Ramanashram, Tiruvannamalai, 2009, Inscriptions. Pp.198-418.

 Ibid, pp.212-213.

[3] Nissankapratapa was the title of the Hoysala kings Ballala II (A.R. Nos. 123 and 126 of 1913), Vira-Narasimha (No. 116 of 1913) and Somesvara (No. 519 of 1912) with the latter two of whom Kopperunjinga  came into conflict. The title Nissankamalla is also found in a record from Tiruvannamalai (A.R. No. 480 of  1902). It is, however, not clear whether it has any reference to the contemporary ruler of Ceylon with the  same name. But it may be mentioned that Parakrama-Bahu king of Ilam sided with Kopperunjinga I in the  later’s attempt to imprison the Chola monarch (Ep. Ind. Vol. VII, p. 168).

செப்பேடுகள்: தாமிரப்பட்டயங்கள் – வரலாற்று ஆதாரங்கள்

ஒக்ரோபர்29, 2009
வரலாற்றை புரட்டிப் போடும் செப்பேடு கண்காட்சி
அக்டோபர் 29,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18291

செப்பேடுகளைப் பற்றி மறுபடியும் செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

கடந்த மேமாதம் 2010 கண்டுபிடுத்து வைக்கப் பட்டு, ஜூன் மாதத்தில் சோழர்களின் செப்பேடுகள் என்று செய்திகளில் விவரங்கள் வருகின்றன.

அதுவும், அதைப் பற்றி கருணாநிதிதான் விளக்கம் கொடுக்கிறார்.

ஒருமாதத்திற்கும் மேலாக, யார் இந்த செப்பேடுகளை வைத்திருந்தது?

http://chemozhi.wordpress.com/2010/06/20/செம்மொழி-மாநாட்டை-திசைதி/

General India news in detail

சென்னை : “”மக்களிடையே பண்டைய வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, செப்பேடு கண்காட்சி உதவும்,” என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். சென்னை எழும்பூர், அரசு அருங்காட்சியக அரங்கில், அரசர்கள் ஆட்சி செய்த கால அரசியல் மற்றும் வரலாற்றுச் செய்திகளின் பதிவுகளைத் தாங்கிய செப்பேடுகள் கண்காட்சி நேற்று துவங்கியது.

கண்காட்சியை துவக்கி வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: பண்டைய காலத்து வரலாறுகளை நினைவு கூறும் செப்பேடுகளை, தொல்லியல் துறை சேகரித்து பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. நாணயங்கள் கண்காட்சியைத் தொடர்ந்து, செப்பேடுகள் பற்றிய கண்காட்சியை நடத்துவது சிறப்பு. சோழ, பாண்டிய, பல்லவர் உள்ளிட்ட அரசர்களின் வரலாற்றை விளக்கும் செப்பேடுகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அரசர்களின் ஆட்சி முறை, கொடை, நிபந்தனைகள் பற்றி விளக்கும் வரலாற்று ஆவணமாக இந்த செப்பேடுகள் விளங்குகின்றன. பண்டைய வரலாறு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இந்த கண்காட்சி உதவும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொல்லியியல் துறை ஓய்வு பெற்ற இயக்குனர் நாகசுவாமி, செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள எழுத்துகள் கூறும் வரலாற்றை பார்வையாளர்களுக்கு விளக்கினார். ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியதற்கான விவரம் அடங்கிய செப்பேடுகள், தஞ்சை தமிழ்ச் சங்கத்தில் இருந்து பெறப்பட்ட கரந்தை பகுதி செப்பேடுகள் மற்றும் நடனத்தில் காளியை வென்ற சிவன் பற்றிய வரலாறு கூறும் திருவாலங்காடு செப்பேடுகள் உள்ளிட்ட ஏராளமான புராதனமான செப்பேடுகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில், இன்று முதல் நவம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்க்கலாம்.

———————————————————————————————————————————————

அருமைதான்.

சிந்துசமவெளிக்கு அருகில் தாமிர சுரங்கங்கள் இருந்திருக்கின்றன. தாமிரத்தில் நடனமாடும் அழகி போன்ற வடிவங்களை உருவாக்கிய மொஹஞ்சதாரோ-ஹரப்பா நாகரிகத்தவர்களுக்கு தாமிர பட்டயத்தில் ஏன் எதையும் எழுதி வைக்காமல் விட்டார்கள் என்று கேட்கலாமா?
1. ஆனால் ஐரோப்பியர் எடுத்துச் சென்ற ஆயிரக் கணக்கான அரிய செப்பேடுகள்
அந்நிய அருங்காட்சியகங்களில், ஆய்வகங்களில் உள்ளன. அவை இந்தியா திரும்பப்
பெற ஆவன செய்யமுடியுமா?

2. “லேடன் செப்பேடுகள்” எனப்படும் சோழர்களின் முக்கியமான செப்பேடுகள்
நம்பிடையே இல்லையே?

3. பல செப்பேடுகள் போலி என்று அறிவித்த பிறகும் அவற்றை வைத்து
“ஆராய்ச்சி” செய்கின்றனர், “சரித்திரம்” எழுதுகின்றனர். இவர்களை யார்
தடுப்பது?

4. இன்றும் நாணயங்களை உற்பத்தி செய்வது மாதிரி, “பொலி செப்பேடுகள்”
தயாரிக்குக் கோஷ்டிகள் உள்ளன. சிலர் மாட்டிக் கொண்டு செய்திகளும் வெளி
வந்துள்ளன. ஆனால் அவர்களோ “டாக்டர்” பட்டங்களுடன் உலா வருகின்றனர்!

5. ஆம், உண்மையிலேயே   செப்பேடுகள் வரலாற்றை “புரட்டித்தான் போடுகின்றன”!