“சரித்திரக் கீர்த்தி மிக்க சட்டசபை” – சரித்திர புரட்டில் மறுபடியும் கருணாநிதி!

சரித்திரக் கீர்த்தி மிக்க சட்டசபை : முதல்வர் உருக்கம்
ஜனவரி 12,2010,00:00 IST
http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16111

செங்கோட்டை, ஷாஜகானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது! சென்னை : “”சரித்திரக் கீர்த்திமிக்க இந்த சட்டசபையில் இருந்து வெளியேறப் போகிறோம். அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடர், புதிய சட்டசபையில் நடப்பதற்கு ஏற்ற வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,” என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, இந்த சட்டசபையில் நடக்கும் கடைசி கூட்டம் என்பதால், துணை முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்தியதும், முதல்வர் கருணாநிதி, இந்த சட்டசபையின் வரலாறு பற்றி பேசியதாவது: நான் உட்பட நாம் எல்லாம் சேர்ந்து, இந்த அவையில் இருந்து வெளியேறப் போகிறோம். நம்மை யாரும் வெளியேற்றாமலேயே நமது விருப்பப்படி வெளியேறப் போகிறோம். சிலபேர் வெளியேறுவதற்காக வந்து, அப்படி வெளியேறியவர்களையும் சேர்த்து, அழைத்துக் கொண்டு வெளியேறப் போகிறோம்.இங்கு நடக்கும் இறுதிக் கூட்டத் தொடர் இது என்பதால், இந்த சபையின் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும். டில்லியில் உள்ள செங்கோட்டை, ஷாஜகானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மொகாலய பேரரசின் மிகப்பெரிய சின்னம்.

ஏப்ரல் 23ம் தேதி, செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது! அதைப்போல, சென்னையில் உள்ள இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சின்னம். 1640ல் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான ஏப்ரல் 23ம் தேதி, இந்தக் கோட்டை கட்டப்பட்டதால், இதற்கு இப்பெயரிடப்பட்டது. கடந்த 1678ல் இக்கோட்டை வளாகத்தில் மிகத் தொன்மையான, “புனித மேரி ஆலயம்’ கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில் தான், 1753ல் ராபர்ட் கிளைவ் திருமணம் நடந்தது. 1687 முதல் 1692 வரை, கவர்னராக “யேல்’ இருந்த போது தான், ஆசியாவிலேயே மிக உயரமான கோட்டைக் கொடிமரத்தில், கம்பெனி கொடிக்குப் பதிலாக பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டது.கடந்த 1919ல், அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன், தற்போதைய சட்டசபைக் கூட்ட மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. எனவே, இதற்கும் ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடலாம் போல் தெரிகிறது.

திராவிடர்களின் ஆட்சி: ஓமந்தூராருக்குப் பின், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் இந்த கோட்டையில் முதல்வராக வீற்றிருந்திருக்கின்றனர். 1969ல் அண்ணாவின் மறைவுக்குப் பின் முதல்வராக பொறுப்பேற்ற நான், 1971, 1989, 1996, 2006ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்துள் ளேன்.அதன்பின், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த தமிழக சட்டசபையில், சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்மானங்கள், சட்டங்கள், முடிவுகள் எல்லாம் மேற்கொள்ளப் பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெண்களும் இடம்பெற வழி செய்யும் தீர்மானம், 1921ல் நிறைவேறியது. ஆதிதிராவிடர்களை, “பஞ்சமர், பறையர்’ என்ற சொற்களால் குறிப்பிடுவது அரசு ஆவணங்களில் தவிர்க்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் 1922ல் நிறைவேறியது.

கருத்துகளா, உருத்தங்களா, வருத்தங்களா? ஆலயங்கள் நுழைவுச் சட்டம் நிறைவேறியதும் இந்த சபையில் தான்.இந்த சபையில், தமிழக மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப சட்டங்களை வகுப்பது, ஆட்சியை நடத்துவது என்ற முறை அன்று இருந்தது. அது இன்றைக்கும் இருக்க வேண்டுமென்ற முனைப்போடு தான், ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளோம்.ஒரு கருத்தைச் சொன்னால், அதனால் எத்தகைய எதிரொலி ஏற்படும், எத்தகைய நிலைமைகள் உருவாகும், ஆகவே அந்தக் கருத்துக்களை சொல்லாமல் இருப்பது நல்லதல்லவா என்றெல்லாம் எண்ணிப் பார்த்து, அக்கருத்துக்களை சொல்வது தான் சிலாக்கியமானது என்பதை உணர்ந்து, நான் அறிந்தவரையில் எனது வாழ்வில் கடைபிடித்து வருகிறேன்.

நாத்திகவாதி  / பகுத்தறிவுவாதி “சென்டிமென்ட்ஸ் பார்ப்பது”! அதை இந்தச் சட்டசபையிலும் கடைபிடித்து வருகிறேன். இந்த சபையில் எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. அவை எனனென்ன என்று பேசி மறுபடியும் அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியை ஏற்படுத்த விரும்பவில்லை.அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்துவிட்டு, நாம் குடி செல்லும் புதிய இடத்திலாவது அந்த நிலை இல்லாமல் நாட்டைப் பற்றிய நினைவு, மக்களை பற்றிய நினைவுடன் நமது பணியை அங்கு துவங்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

சரித்திரம் / வரலாறு என்றாலே கருணாநிதிக்குப் பிரச்சினை வந்துவிடுகிறது! ஆம், ஏனெப்படி தப்புத் தப்பாக உளறுகிறர் என்று தெரியவில்லை. ஒன்று – ஒன்றாகப் பார்ப்போம்.

1. 1640ல் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான ஏப்ரல் 23ம் தேதி, இந்தக் கோட்டை கட்டப்பட்டதால், இதற்கு இப்பெயரிடப்பட்டது. இல்லை, இதற்கு அத்தகைய பெயர் இருந்ததாக ஆவணம் 1642 வரை இல்லை. ஜூலை 17, 1642 தேதியிட்டக் கடிதத்தில் தான் அப்பெயர் காணப்படுகிறது. அதற்கு முன்பு செபடம்பர் 1641ல் டச்சுக்காரர் ஆவணத்தில் அப்பெயர் காணப்படுகிறது. அதாவது அந்த கோட்டை ஏற்கெனவே கட்டி முடிக்கப் பட்டுவிட்டது. ஒருவேளை மதிற்சுவர் போன்றது அந்நாளில் காட்டிமுடிக்கப்பட்டுக்கக்கூடும்!  அவ்வளாவேதான்!

2. கோவில்கள் இடிக்கப்பட்ட உண்மையைப் மறைப்பது: இதைவிட முக்கியமானது எத்தனை கோவில்கள் இக்கோட்டைக் கட்ட இடிக்கப் பாடது என்பதுதான் முக்கியமான மறைக்கப் படும் உண்மை! இந்த கருணாநிதியும் இரண்டு கோவில்களை இடித்து விட்டுதான், இந்த புதிய சட்டசபை கட்டுகிறார் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும்.

“தான்தோனி லிங்கம் என்றால்” என்று நக்கலாக கேட்ட திராவிட நீதிபதி: அந்த வளாகத்தில் இரண்டு கோவில்கல் இருந்தன. ஒன்று தான்தோனி லிங்கம் கொண்ட  கோவில். அதை இடிக்கக் கூடாது என்று வழக்குத் தொட்ரப்பட்டது. கருணாநிதிக்கோ இடித்தே தீரவேண்டும் என்ற முடிவு! கோபம் என்றால் கோபம் அது அந்த நீதிபதியின் மூலமாக வெளிப்பட்டது, ““தான்தோனி லிங்கம் என்றால்……….ஹ………..அதுவாகவே தோன்றியதா…………….”,  எ ன்று கேட்டதாக செய்திகள் வெளிவந்தன. தமிழ்நெறி என்று பேசும் கருணாநிதிக்கு அன்று தெரிந்திருக்கவில்லையா?

3. செங்கோட்டை, ஷாஜகானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது! இது அப்பட்டமான பொய். “லால் கிலா” எனப்படுகின்ற செங்கோட்டை ஷஜஹானுக்கு முன்பே இருந்தது! அக்கட்டிடம் முழுக்க ராஜஸ்தான் கட்டிடக் கலை முறையில் கட்டப்பட்டதாகும். ஒரு வழியில் யானையின் சிற்பம், மற்றொரு வழியில் இருபக்கமும் யானகளின் சிற்பங்கள், மற்றும் கதவு / நுழைவு வளைவுகளில் மலர்களின் அலங்காரச் சிற்பங்கள் இவையெல்லாம் ராஜபுதினக் கட்டிடக் கலையை எடுத்துக் காட்டுகிறது. எப்படி ஆங்கிலக் கொள்ளைகாரர்கள் இர்ந்த கோட்டையில், இந்த திராவிட அரசியல்வாதிகள் இருந்து ஆட்சி செய்தனரோ, அதே மாதிரி, ஷாஜஹான் தில்லியைப் பிடித்தவுடன், செங்கோட்டையப் பிடித்துக் கொண்டான்! அவ்வளவே!

File:Diwan-i-khas, Fatehpur Sikri, India.jpg

www.asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort_di..

அதிலுள்ள பிருதிவிராஜ் நுழைவாயில், சரவண அரங்கம், பாடோ அரங்கம், ரங் மஹல் ………..முதலியன முகலாய கலாச்சாரத்தைக் காட்டவில்லை.

https://indianhistoriographymethodology.wordpress.com/wp-admin/post.php?action=edit&post=13

Inlaid pillar and part of canopy in the Diwan-i-Am, the Hall of Public Audience, Red Fort

திவானி ஃகாஸ், திவானி ஆம் எனப்படுகின்ற இடங்களைப் பார்த்தாலே போதும் உண்மை விளங்கும். ஆனால் இதை ஷாஜஹான் கட்டினார் என்றால் என்னசெய்வது?

Marble fountain bed, Rang Mahal, Red Fort

இப்படி ஆக்கிரமிப்பாளர்களையே சொந்தக்காரகளாக்கி, அவர்களே கட்டினார்கள் என்றால் என்ன சரித்திரம் படிக்கிறார்கள் இந்தியர்கள்?

Advertisements

குறிச்சொற்கள்: , , ,

10 பதில்கள் to ““சரித்திரக் கீர்த்தி மிக்க சட்டசபை” – சரித்திர புரட்டில் மறுபடியும் கருணாநிதி!”

 1. vedaprakash Says:

  மின் – தமிழ் என்ற குழுமத்தில், “தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!” என்ற தலைப்பில் விவாதம் இருந்தது. அதே நாளில், கருணாநிதி சொன்னதாக செய்தியும் வந்தது. அதனால், நான் இப்படி பதிவு செய்தேன்:
  ————————————————–
  Vedaprakash View profile
  எனக்கும்தான் ஆசை, ஆனால் சொல்லவிட மாட்டார்களே?

  கௌதம் என்ற நண்பர் நீதிமன்றத்தில் வழக்கேத் தொடர்ந்திருக்கிறார். அரசு தரப்பில் வாதங்களைக் கொடுக்க ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டதால், அரசியல் பலம், ………….இத்யாதி..உபயோகித்து அமூலாகத் திட்டமிடபட்டுவிட்டது.

  சங்க இலக்கியங்களிலேயே ஆதாரங்கள் இல்லை! அதுமட்டமா?

  “சரித்திரக் கீர்த்தி மிக்க சட்டசபை” – என்று சரித்திரத்தைப் புரட்ட மறுபடியும் ஆரம்பித்தார் கருணாநிதி!

  திரு. நரசய்யா ஏதாவது எழுதுவார் என பார்த்த்தேன்!

  நான் தினமலருக்கு அனுப்பிய பதிலின் ஒரு பகுதி: ————————————————————

  சரித்திரம் / வரலாறு என்றாலே கருணாநிதிக்குப் பிரச்சினை வந்துவிடுகிறது! ஆம், ஏனெப்படி தப்புத் தப்பாக உளறுகிறார் என்று தெரியவில்லை……………………………
  ——————————————————————
  {மேலேயுள்ள கட்டுரையைப்பார்க்கவும்}

 2. vedaprakash Says:

  அதற்கு ஹரிகிருஷ்ணன் என்பவரது பதில்-
  —————————————————–

  More options Jan 15, 6:45 pm
  From: Hari Krishnan
  Date: Fri, 15 Jan 2010 19:15:19 +0530
  Local: Fri, Jan 15 2010 6:45 pm
  Subject: Re: [MinTamil] Re: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
  Reply | Reply to author | Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author

  2010/1/15 Vedaprakash

  > “தான்தோனி லிங்கம் என்றால்” என்று நக்கலாக கேட்ட திராவிட நீதிபதி: அந்த
  > வளாகத்தில் இரண்டு கோவில்கல் இருந்தன. ஒன்று தான்தோனி லிங்கம் கொண்ட
  > கோவில். அதை இடிக்கக் கூடாது என்று வழக்குத் தொட்ரப்பட்டது.
  > கருணாநிதிக்கோ இடித்தே தீரவேண்டும் என்ற முடிவு! கோபம் என்றால் கோபம் அது
  > அந்த நீதிபதியின் மூலமாக வெளிப்பட்டது, ““தான்தோனி லிங்கம்
  > என்றால்……….ஹ………..அதுவாகவே தோன்றியதா…………….”, எ ன்று கேட்டதாக செய்திகள்
  > வெளிவந்தன. தமிழ்நெறி என்று பேசும் கருணாநிதிக்கு அன்று
  > தெரிந்திருக்கவில்லையா?

  அடடா! பழைய ஞாபகங்களைக் கிளறுகிறீர்களே! அந்தக் குட்டியூண்டு கோவிலுக்கு இஷ்டலிங்கேஸ்வரர் ஆலம் என்று பெயர். அதற்கு அருகில் ஏ ஐ டபிள்யூ சி பள்ளியில்தான் நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்தப் பள்ளியாவது இருக்கிறதா அல்லது அதுவும் பூட்ச்சா?

  பலிபீடத்தின் மேல் கையை அழுத்தி வைத்துக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, கை வழக்கினால் பாஸ் இல்லாட்டி ஃபெயில் என்றெல்லாம் வேண்டிக்கொண்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. இஷ்டலிங்கேஸ்வரருக்குப் பக்கத்தில் பாலயோகீஸ்வரர் என்றொரு இளைஞர் தாடிவைத்துக் கொண்டு, நிஷ்டையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றிருக்கும். மூன்றாண்டுகளுக்கு முன்னால் அவருடைய அண்மைய புகைப்படம் ஒன்றை நண்பர் அனுப்பிய போதும், இதோ இப்போது உணர்வதைப்போல்தான் உணர்ந்தேன். (படத்தை இணைத்திருக்கிறேன்.) இவருக்கும் இந்த ஆலயத்துக்கும் எப்படித் தொடர்பு என்பது தெரியவில்லை. இவருடைய இளம்பருவப் படம் அங்கே மாட்டியிருந்தது.

  இஷ்டலிங்கேஸ்வரர் எப்பலேந்து தாந்தோணி ஆனார்? (நான் படித்தது 1957-58 தொடங்கி 62-63 வரை…அப்ப இந்தப் பெயர் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.)

  சட்டசபை விரிவடையும்போது சிற்சபை கலைய வேண்டியதுதானே… பள்ளிக்கோடமும் சேத்துதானே போயிடுச்சு?


  அன்புடன்,
  ஹரிகி.

  DSC_0143.JPG
  106K Download

 3. vedaprakash Says:

  கிர. நரசய்யாவின் பதில் –
  ————————————————–
  From: kra narasiah
  Date: Fri, 15 Jan 2010 06:19:27 -0800 (PST)
  Local: Fri, Jan 15 2010 7:19 pm
  Subject: Re: [MinTamil] Re: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
  Reply | Reply to author | Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author

  ஸ்ரீ வேதப் பிரகாஷ் அவர்களே,

  கோட்டையின் சரித்திரத்தை நன்றாகவே ஆய்வு செய்துள்ளேன்.

  1. செயிண்ட் ஜார்ஜ் நாளன்று 1640 (23 ஏப்ரல்) சுமாராக சுவர்களுடன் முடிக்ப்பட்டு அப்பெயர் இடப்பட்டது உண்மையே.

  2.அந்த இடத்தில் ஒரு கோவிலும் இருக்கவில்லை. ஆகையால் இடிக்கப்பட்டிருக்கமுடியாது

  3. இடிக்கப்பட்ட இரண்டு கோவில்கள் இருந்த இடம் இப்போது நீதிமன்றம் இருக்குமிடம். அதற்குப் பதிலாக இடமும், பணமும் கம்பெனி கொடுத்துள்ளது.

  ஆகையால் இந்த விஷயத்தில் மட்டும் தவறு காண முடியாது. பல வேறு விஷயங்களில் காணமுடியும். உதாரணமாக சென்னை புக் ஃப்பெயரை ஆரம்பித்து வைத்து்ப் பேசுகையில், திரு கருணாநிதி, தன்னால் விருது கொடுக்கப்பட்ட மதராஸ் சரித்திர நூலில் தன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் எம் ஜி ஆர் ஜானகி முதலானோர் பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும் சொன்னார்! பலர் எனக்குத் தொலை பேசியில்
  சொல்லி வருத்தப்பாட்டனர். நான் அவர்களுக்கு அது எனது நூலாக இருக்கமுடியாதென்பதை விள்க்கினேன். அவர் குறிப்பிட்ட்து திரு முத்தைய்யா நூலை. ஆனால் அத்லும் தவறு! ஏனெனில் கருணாநிதி பெயர் அந்நூலில் 3 இடங்களில் வருகிறது.

  சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிப் பேசுகையில் “தமிழரின் நூறாண்டுக் கனவு” என்று ஒரு பெரிய பொ்ய் சொல்லப்படுகிறது! ஒரு தமிழனும் அதைப் பற்றிப் பேசியதேயில்லை! பல தமிழ் பத்திரிகைகள் கூட கூறுகின்றன்!

  ஆகையால் பல இடங்களில் தீர்க்கமாகப் பொய் பேசப்ப்டுவ்து இங்கு சகஜமாகி விட்டது!

  நரசய்யா

 4. vedaprakash Says:

  பெண்ணேஸ்வரன் கிருஷ்ணா ராவ் என்பவரது பதில் –
  —————————————————————-
  From: PENNESWARAN KRISHNA RAO
  Date: Mon, 18 Jan 2010 14:04:46 +0530
  Local: Mon, Jan 18 2010 1:34 pm
  Subject: Re: [MinTamil] Re: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
  Reply | Reply to author | Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author

  உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  எனக்குத் தெரிந்த ஒரு வழக்கறிஞர்தான் இந்த வழக்கைத் தொடுத்து இருக்கிறார்.

  இப்போ என்ன நடந்தது என்று தெரியாது.

  ஆனால் ஒரு விநோதமான சங்கதி என்னவென்றால் இப்படி எல்லாம் வழக்குப் போடும் அந்த வழக்கறிஞர் டெல்லித் தமிழ்ச் சங்கத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையைத் திருகிப் படுகொலை செய்யும் பாதகத்துக்குத் துணை நின்றார். தவறான ஆட்களுக்குத்
  துணைபோய் தமிழ்ச் சங்கத்தை நாசம் செய்வதற்குத் தயாராக இருந்தார். அதற்கு ஆதாரமாக அவர் எனக்கு எழுதிய கடிதங்களில் உள்ளன.

  அரும்பாடு பட்டு அவருடைய கோஷ்டியை தேர்தலில் தோற்க வைக்க வேண்டி வந்தது.

  அதனால் அவருடன் நட்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டி வந்தது.

  ஆனால் தை மாதத்தில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு துவங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக் கொ்ண்டேன்.

  அவருடன் முற்றாக தொடர்பு இல்லாததால அதுகுறித்து என்ன நடநத்து என்று தெரியாது.

  பென்னேஸ்வரன்

 5. vedaprakash Says:

  நரசய்யாவிற்கு என்னுடைய பதில் –
  ———————————————-
  Vedaprakash View profile More options Jan 18, 8:35 am
  From: Vedaprakash
  Date: Sun, 17 Jan 2010 19:35:15 -0800 (PST)
  Local: Mon, Jan 18 2010 8:35 am
  Subject: Re: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
  Reply | Reply to author | Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
  ஐயா வணக்கம்!

  என்னைத் தூண்டி விட்டதற்கு நன்றி.

  இரண்டு நாட்களாக இருக்கும் பழைய புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், வரைபடங்கள்………..அனைத்தையும் அலசிப் பார்த்து விட்டேன். ஆனால், கிடைத்துள்ள விவரங்கள் இப்படிதான் உள்ளன:

  1. அனுமதி 22-08-1639 அன்று கொடுக்கப்பட்ட உடனே வேலைகள் ஆரம்பித்து விட்டன.

  Roberts, J: “History of the World.”. Penguin, 1994.
  Col. D. M. Reid, The Story of Fort St. George, Diocesan Press, Madras,
  1945 [குறிப்பாக வரைப்படங்களைப் பார்க்கவும் 1653 லிருந்து
  தொடங்குகிறது].
  Davison Love, Vestiges of Old Madras, AES, New Delhi.
  C. S, Srinivachari, A History of the city of Madras, P. Varadachary &
  Co., Madras, 1939.
  N. S. Ramaswami, Fort St. George Madras, Tamilnadu State
  Archaeological Dept, Madras, 1980, p.33.

  2. முதலில் 1639ல் சிறிய கட்டிடமாக ஆரம்பிக்கப்பட்டது. தென்கிழக்கு
  பாதுகாப்புச்சுவர் துப்பாக்கிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டன.

  3. வடகிழக்கு பாதுகாப்புச்சுவர் துப்பாக்கிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டது –
  1640. பண்டகசாலையின் வேலை 01-03-1640 அன்று தொடங்கப்பட்டது. அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி 23-04-1639ல் கட்டி முடிக்கப்பட்டது! உடனே அது “செயின்ட் ஜார்ஜ் நாள்” என்பதால் “செயின்ட் ஜார்ஜ் கோட்டை” என்று பெயரிட்டார்களாம்!

  4. வடமேற்கு பாதுகாப்புச்சுவர் துப்பாக்கிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டது –
  1642.

  5. தென்கிழக்கு பாதுகாப்புச்சுவர் துப்பாக்கிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டது
  – 1644.

  6. கிரீன்ஹில் என்பவன் 1648ல் ஏஜென் டாக வந்ததும் வேலைகளை
  முடுக்கிவிட்டான். 1653ல் தான் முழுவதுமாகக் கட்டிமுடிக்கப்பட்டது!
  * அப்படியிருக்கும்போது, ஏன் 23-04-1639 தேதி மகத்துவம் வரவேண்டும்?

  7. சி. எஸ். ஸ்ரீனிவாசாச்சாரி [pakkam.42] அதனால்தான், “a date which is too late for the commencement of the work and far too early for the
  completion of the substantial part of it”, என்று குறிப்பிடுகின்றார்
  [மேற்கோள் குறியிட்டுள்ளதால் ஆங்கிலேயர் ஆவணத்திலிருந்து எடுத்தாள்கிறார் என்று நினைக்கிறேன்]. “இந்த தேதி வேலை ஆரம்பிக்கக் குறிக்க மிகவும் நேரங்கடந்தது, மற்றும் வேலை முடிக்கக் குறிக்க மிகவும் முன் தேதியிடப்படுவது” என்று உண்மையை ந்டுத்துக் காட்டுகிறார்.

  8. இனி கோவில்கள் – பகோடாக்கள் இருந்த இடத்திற்கு வருவோம். நமது தெலுங்கு பளையக்காரர்கள் கொடுத்தபோது, எந்த எல்லைகளையும் குறிப்பிட்டுக் கொடுக்கவில்லை. ஆகவே அவை எங்கிருந்தன என்ற பிரச்சினை இல்லை. உண்மை என்னவென்றால் ஆங்கிலேயர்கள் கோவில்களை இடித்தனர் என்பதேயாகும். அதனை நம்மவர்களும் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை, அவர்களும் சொல்லவில்லை.

  “இடித்துவிட்டு கட்டினார்கள் என்று குறிப்பிடும்போதுதான்
  அறியப்படுகின்றது.

  9. சரித்திரத்தில் கணக்கு என்றால் கணக்காகத் தான் பார்க்கவேண்டும்
  [இந்தியர்களுக்கு காலக்கணக்கீடு தெரியாது என்பதுதானே சரித்திர
  ஆசிரியர்களின் முக்கியமானக் குற்றாச்சாட்டு!].

  10. எதற்காகாவது யாதாவது ஒரு பெயரைக் கொடுத்துவிட்டால், அதனை சரித்திர உண்மை என்று எடுத்துக் கொள்ளமுடியாது. அதனால்தான் ராஜபுத்திரர்கள் கட்டிய கோட்டைகளைக் குறிப்பிட்டேன். அதுவும் ருணாநிதி குறிப்பிட்டதால், உன்மை சொல்லவேண்டிய அத்தியாவசியம் ஏற்படுகிறது.

  11. கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, “சான் தோம்” என்று
  பெயரிட்டுவிட்டார்கள். ஆனால் என்னவாயிற்று? உடனே, தாமஸ் அங்கு வந்தான், திருவள்ளுவருக்கு பைபிள் சொல்லிக் கொடுத்தான், பைபிள் படித்துதான், திருவள்ளுவர் திருக்குறள் எழுதினான்…………………..என்றெல்லாம் எழுதி Ph.D வாங்கிவிட்டார்களே? இதையே பாடபுத்தகங்களில் நமது சந்ததியினர்
  படிக்கிறார்களே? இதுதான் உண்மையான சரித்திரமா? [ஆமாம் உங்கள்
  புத்தகத்தில் இதைப் பற்றி நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று
  அறியலாமா?].

  12. செயின்ட் ஜார்ஜ் என்பது England’s Patron Saint அவ்வளவே! அதை
  இந்தியர்கள் மீது திணிப்பதுதான் தவறு. ஆகவே 23-04-1639 அன்று சரித்திர ரீதியில் நடக்காததை நடந்தது இன்று பேசினால், எழுதினால் நாளை சரித்திரம் ஆகி, நமது சந்ததியினர் படித்து “கூலித்தன்மையான மனப்பாங்குடன்”தான் [Collie mentality, as the British / Europeans used to say with grudge and hatred] இருப்பார்கள்.

  வேதபிரகாஷ்
  18-01-2009

 6. vedaprakash Says:

  கருப்பைய்யா சாலமன் என்பவரது பதில் –
  ——————————————————————
  karuppaiahsolomon@gmail.com View profile
  திரு. நரசய்யா அவர்களே,
  From: “karuppaiahsolo…@gmail.com”
  Date: Mon, 18 Jan 2010 02:06:49 -0800 (PST)
  Local: Mon, Jan 18 2010 3:06 pm
  Subject: Re: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
  Reply | Reply to author | Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
  திரு. நரசய்யா அவர்களே,

  இன்று தம்பு செட்டித் தெருவில் காளிகாம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆனால் மராட்டிய வீர சிவாஜி இக்கோயில் விஜயம் செய்த போது கோவில் இன்று செயின்ட்ஜார்ஜ் கோட்டை இடத்தில் இருந்தது எனப் படித்துள்ளேன், தாங்கள் விளக்கவும்.

  அதே போல் கபாலீஸ்வரர் கோவில் இன்றைய சாந்தோம் ஜெபக்கூட இடத்தில் இருந்தது எனப் படுகின்றது. தயவு செய்து ஆதாரங்களுடன் விள்க்கவும்.

 7. vedaprakash Says:

  நரசய்யாவின் பதில் –
  ———————————-
  kra narasiah View profile More options Jan 21, 8:50 am
  From: kra narasiah
  Date: Wed, 20 Jan 2010 19:50:29 -0800 (PST)
  Local: Thurs, Jan 21 2010 8:50 am
  Subject: Re: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
  Reply | Reply to author | Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author

  காளிகாம்பாள் கோவில் கோட்டையில் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை.
  ஆனால் சாந்தோம் சர்ச் இருக்குமிடத்தில் நேமிநாதர் கோவில் இருந்த்து. இன்றும் சர்ச் இருக்குமிட்த்தில் அகழ்வாய்வு செய்ததில் கண்டெடுக்கப்பட்ட கோவில் தூண்கள் உள்ளன். திருப்புகழில் கபாலீஸ்வரர் கோவிலுள்ள முருகனைக் குறித்துப் பாடுகையில் அருணகிரிநாதர் இவ்வாறு சொல்கிறார்

  “கடல் கரை திரையருகே சூழ் மயிலை பதி தனில் உறைவோனே” இது பாடப்பட்ட காலத்தில் சர்ச் அங்கு இருந்திருக்க முடியாது.
  ஆகையால் கபாலீஸ்வரர் கோவில் அங்கிருந்து இடம் பெயர்ந்தது என்ப்தை அறியலாம்.

  நரசய்யா

 8. vedaprakash Says:

  ஹரி கிருஷ்ணனின் பதில் –
  —————————————-
  Hari Krishnan View profile 2010/1/21

  திருப்புகழில் மட்டுமல்ல; திருஞான சம்பந்தர் சொல்கிறார்:

  *ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்*
  கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
  கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
  ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்

  பொருள்: பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும்
  கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?

  http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=2&Song_id

  கடற்கரைக்கு அருகில் சோலைகள் சூழ்ந்த கபாலீஸ்வரம் என்பது ஞானசம்பந்தர் வாக்கு.

  அன்புடன்,
  ஹரிகி.

 9. vedaprakash Says:

  மேற்கண்ட பதிகத்தில் ஆறாம் பாடலும் இதையே சொல்கிறது:

  மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
  *கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்*
  அடலானே றூரு மடிக ளடிபரவி
  நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

  பொருள்: பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில்
  மாசிமகநாளில் *கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில்
  எழுந்தருளியிருப்பவனும்*, வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய
  இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

  http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=2&Song_id


  அன்புடன்,
  ஹரிகி.

 10. vedaprakash Says:

  வி. திவாகர் என்பவரது பதில் –
  =============================
  மயிலைக் கோயில் எங்கே முதலில் இருந்தது, இப்போது ஏன் இங்கே இருக்கிறது என்பன்

  > போன்ற கேள்விகள் மின் தமிழுக்குப் புதிதோ என்னவோ, தமிழகத்தில் அதுவும்
  > சென்னையில் பேசிப் பேசி, எழுதி எழுதி அலுத்துப் போய்விட்டார்கள். ‘தி ஹிண்டு’ > வில் கூட இந்த பிரச்னை விவாதக்களமாக மாறிய நாட்கள் உண்டு. மெட்ராஸ் > ம்யூசிங்ஸ் முத்தையா ஹிண்டு வில் எழுதியுள்ளார்.
  > அதுவே பிரச்னையாக மாறிப்போனது. ‘மதராச பட்டினத்தில்’ நம் நரசய்யா அவர்கள் இதைப் > பற்றி எழுதியுள்ளார். மயிலைக் கோவில் மிக சமாதான முறையில் மாற்றப்படுவதற்கு > உள்ளூர்ப் பெரியவர்கள் ஒப்புக் கொண்டதாகக் கூட வரலாறு சொல்கிறது. (soft > transfer).

  பொதுவாக பதினான்காம் நூற்றாண்டு தமிழகம் முழுவதும் கோயில்கள் சூறையாடப்பட்ட

  > காலம். விஜயநகர அரசு நம்மைக் காப்பாற்றியது. ஆனால் ஐரோப்பியர்கள் காலடி எடுத்த > வேளை, மறுபடியும் கோயில்கள் வேறுவிதத்தில் பாதிக்கப்பட்டன. ஐரோப்பியர் ஒருவரை
  > ஒருவர் அடித்துக் கொள்ள அவர்களுக்கு போர்ப் பாசறையே மயிலை, திருவல்லிக்கேணி > கோயில்கள்தான். 17 ஆம் நூற்றாண்டு சென்னை கோவில்களுக்கு போதாத காலம். கடந்த
  > கால நிகழ்ச்சிகள் எல்லா புத்தகங்களிலும் நன்றாகவே பதிக்கப்பட்டுள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: