நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தலங்கள் அருகே கட்டடம் கட்டினால் சிறை, அபராதம்!

நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தலங்கள் அருகே கட்டடம் கட்டினால் சிறை, அபராதம்
ஏப்ரல் 21,2010,00:00  IST
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24271

இச்சட்டமே போலித்தனமானது என்று நன்றாகவே தெரிகின்றது.

ஏனெனில், இனிமேல் அத்தகைய விதிமீறல்காரர்களைத் தான் அச்சட்டம் தண்டிக்க முடியுமே தவிர, ஏற்கெனெவே மீறியவர்களை ஒன்றும் செய்யமுடியாது.

அதாவது, முந்தைய குற்றவாளிகளை தப்பிக்கக் கொண்டுவந்த சட்டப்பிரிவு மாதிரித்தான் உள்ளது!

ஆகவே பழையக் குற்றங்களையும் சேர்க்கும் விதத்தில் (retrospective effect) பிரிவு இருந்தாலொழிய அவர்களை ஒன்த்றும் செய்யமுடியாது!

General India news in detail

சென்னை:பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தலங்கள் திருத்தச் சட்டத்தின் படி, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ள புராதன நினைவுச் சின்னங்கள் அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டடம் கட்டுபவர்கள், அதை தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்,” என, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் சத்யபாமா பத்ரிநாத் கூறினார்.

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளவை: இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் சத்யபாமா பத்ரிநாத், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:நம்நாட்டில் 3,685 புராதன நினைவுச் சின்னங் கள் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 411 இடங்கள் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளன.பழங்கால நினைவுச் சின்னங் கள் மற்றும் புராதன தலங்களை பாதுகாப்பது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட் டுள்ளது.

100 மீட்டர் சுற்றளவிற்கு எந்தக் கட்டடமும் கட்ட அனுமதி கிடையாது: இதன்படி, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் தொல்லியல் தலங் கள் மற்றும் நினைவுச் சின்னங்களிலிருந்து, 100 மீட்டர் சுற்றளவிற்கு எந்தக் கட்டடமும் கட்ட அனுமதி கிடையாது.மேலும், 100 மீட்டரிலிருந்து 300 மீட்டர் வரை உள்ள சுற்றளவில் போதிய முன் அனுமதி பெற்றே கட்டடங்களை கட்ட முடியும். இதற்காக தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம் உருவாக்கப்படுகிறது.

தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையத்திடம் முன்அனுமதி பெற வேண்டும்: புதிய கட்டடம் கட்டுவதற்கு முன், தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையத்திடம் முன்அனுமதி பெற வேண்டும். தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம், கட்டடம் கட்ட அனுமதி வழங்கியது, வழங்காதது தொடர் பாக எந்தக் கோர்ட்டிலும் வழக்கு தொடர முடியாது.இந்த கட்டுப்பாடுகளை மீறி, கட்டடம் கட்டுபவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப் படும்.

இனிமேல் தான் வரப்போகிறதாம்! இந்த விதிமுறைகளை அமல் படுத்தத் தவறும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக் கப்படும். அதிகாரிகளுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.சென்னைக்கு அருகிலுள்ள பல புராதன சின்னங்களிலேயே ஆக்கிரமிப்புகள் உள்ளன. இச்சட்டத் திருத்தம் இரண்டு மாதத்தில் கொண்டுவரப் பட்டுள்ளது. விதிமுறை களும் விரைவில் கொண்டுவரப்படும்.

பாவம், வாட்ச்மேன்களை நம்பித்தான் நமது கலைச்சின்னங்களே இருக்கின்றதாம்! தமிழகத்தில் உள்ள 411 புராதன நினைவுச் சின்னங்களை பாதுகாக்க, ஒரு நினைவுச் சின்னத் திற்கு மூன்று வாட்ச்மேன் வீதம் 1,233 வாட்ச்மேன்களை நியமிக்க வேண்டும் என மத்திய தொல்லியல் ஆய்வு மைய இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளோம். தற் போது தமிழக புராதன சின்னங் களை பாதுகாக்க 164 வாட்ச் மேன்கள் மட்டுமே உள்ளனர். இவ்வாறு சத்யபாமா பத்ரிநாத் கூறினார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: