காலனிக் கட்டடங்களைக் கட்டிக் கொண்டு கதறுவது ஏன்?

காலனிக் கட்டடங்களைக் கட்டிக் கொண்டு கதறுவது ஏன்?

பாரம்பரிய கட்டடங்களைக் காப்போம் என்று அடிக்கடி கிளம்பி விடுகிறார்கள் சிலர். உடனே ஆங்கில பத்திரிக்கை-நாளிதழ்களில் வரிந்து கட்டிக் கொண்டு எழுத ஆரம்பித்து விடுகிறர்கள் திரும்ப-திரும்ப மியூஸியம், ஆர்ட்-காலரி, மவுண்ட் ரோடில் உள்ல சில பழைய கட்டடங்கள் இவற்றின் புகைப் படங்களை போட்டு, ஏதோ இந்த கட்டடங்கள் இல்லாவிட்டால் இந்திய, தமிழ் நாட்டு பாரம்பரியமே போய் விடும், கலாச்சாரம் மறைந்துவிடும், நாகரிகம் நசிந்துவிடும் என்ற ரீதியில் கதை விடுவார்கள். இதில் முதன்மையாக இருந்து, பிரச்சாரத்தை செய்து, பொய்களை, பற்பல மாயைகளைப் பரப்பி வருவதில், இருப்பவர் “சரித்திர என்ற போர்வையில் உலா வரும் ஆர். முத்தையா. இவருக்கு சென்னையில் உள்ள மற்ற எந்த புராதான, பழங்கால, பாரம்பரிய கட்டடமும் கண்ணில் படாது. ஆனால், ஐரோப்பியர், ஆங்கிலேயர் கட்டிய காலனிய சின்னங்களை அடிமை-கூலிக்கார மனப்பாங்குடன் கண் மூடித் தனமாக ஆதரித்து, அவை சிதலமடைகின்றன, இடிக்கப் போகிறார்கள் என்றதும் “குய்யோ, முறையோ” என்று அலரி பக்கம்- பக்கமாக எழுதித் தள்ளிவிடுவார்! அதற்கு “தி ஹிந்து” பிரத்யேகமாக இடம் கொடுக்கும்.

ஏன் இந்த பிரச்சாரம்? சென்னையில், தமிழ்நாட்டில், இந்தியாவில் அத்தகைய பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், ஞாபக கட்டடங்கள், கலாச்சார கட்டிட அமைப்புகள் இல்லையா? பல இடங்களில் நூறு-இருநூறு-முன்னூறு என்ற கால ரீதியில் உள்ள வீடுகள், கட்டடங்கள், அரசர்களின் மாளிகைகள், தங்கும் இடங்கள், ஏன் சாதாரண மக்கள், வழிப்போக்கர்கள் தங்க கட்டப் பட்டுள்ள கட்டடங்கள்….இவற்றை ஏன் கண்டு கொள்ளமல் இருக்கிறார்கள்?  அவையெல்லாம் நமது பரம்பரியத்துள் வராதா? கலச்சார சின்னங்களில் இடம் பெறாதா? பண்பாட்டில் பயனிக்காதா?

CMDA to maintain heritage buildings Special Correspondent

A separate zonal planning committee to clear plans for buildings on ECR

http://www.hindu.com/2010/04/23/stories/2010042358420100.htm

The decision to hand over conservation of heritage buildings to the CMDA will benefit several structures. A picture of Victoria Hall.

CHENNAI: The Chennai Metropolitan Development Authority (CMDA) will take up maintenance and conservation of heritage buildings in Chennai, Slum Clearance and Accommodation Control Minister Suba Thangavelan told the Assembly on Thursday. “Chennai has many heritage buildings with historical significance and architectural excellence. The list of buildings will be released and the CMDA will maintain them,” he said replying to the debate on demands for grants for his department.

The Minister said the government would implement a housing project under public-private partnership mode to meet requirements in the Chennai Metropolitan Area. The government will enter into an agreement with those who have more than 100 acres. A separate zonal planning committee would be created for plans and plot approvals for buildings on East Coast Road, stretching from Neelankarai to Puducherry.

Development plans: The Minister said under the second master plan, development plans would be prepared in the current year for Villivakkam, Velachery, Ambattur, Nazarethpet and Perumbakkam. Local bodies would give planning approval for buildings constructed within 4,000 sq ft outside the Chennai Metropolitan Area. A commercial complex will be constructed above the Chennai Mofussil Bus Terminus (CMBT) building at Koyambedu.

‘சிவன் சொத்து குலநாசம்’ – அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆவேசம்
ஏப்ரல் 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17913

Latest indian and world political news information

கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவில் நிலத்தை கள்ளத்தனமாக எப்படி விற்க்கப் பட்டது? சென்னை : ”கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவில் நிலத்தை கள்ளத்தனமாக விற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,” என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சேகர்பாபு கேள்வி எழுப்பினார். சட்டசபையில், கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது நடந்த விவாதம்:

சேகர்பாபு – அ.தி.மு.க.,: கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 3.3 ஏக்கர் நிலத்தில் 1.26 ஏக்கர் நிலம் மத்திய அரசின் பொதுப்பணித்துறைக்கு விற்கப்பட்டதாகவும்,கோவில் நிலம் காப்பாற்றப்படுமென்றும் சபையில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது அமைச்சர் உறுதியளித்தார். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்க வேண்டுமானால், கோவிலின் அனுமதியைப் பெறாமல் விற்கக்கூடாது என்ற நிபந்தனையிருந்தும், அதை கள்ளத்தனமாக விற்றவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஏற்கனவே இருக்கும் நிலை தொடர வேண்டும் என 2008ல் கோர்ட் தீர்ப்பு வந்த நிலையில், அதன்மீது மேல்முறையீடு செய்து வழக்கை துரிதப்படுத்தாதது ஏன்?
தற்போது, முதல்வரின் துணைச் செயலராக உள்ள ஜெயகாந்தன், டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, சி.எம்.டி.ஏ.,விற்கு எழுதிய கடிதத்தில், ‘இந்த 42 ஏக்கரில் அரசு நத்தம் புறம்போக்கு நிலம் பெருவாரியாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, 100 அடி சாலை இணைப்பு பகுதியில், 41 சென்ட் அரசின் நத்தம் புறம்போக்கு இடத்தில் ஓசோன் குழுமம் தன்னுடைய அலுவலகத்தை கட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த இடத்தில், கட்டுமானப் பணி தொடர்வதால், அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புகள் அதிர்கிறது என்று திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டும், இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஓசோன் குழுமம் வரைபட அனுமதி வழங்கியதில், இந்த 3. 3 ஏக்கர் நிலத்தையும் சேர்த்துதான் மனுவில் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, முறையான அனுமதி இல்லாததால், ஓசோன் குழுமத்தின் வரைபட அனுமதியை ரத்து செய்து, கோவில் நிலத்தை காப்பாற்ற வேண்டும். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று சொல்வார்கள். அது போல, சிவனுக்குண்டான இந்த சொத்தில், யார் தவறு செய்தாலும், அவர் குலம் நாசமாகிவிடும்.

ஞானசேகரன் – காங்கிரஸ்: கோவில் நிலத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அந்த இடத்தில் கட்டுமானப்பணி நடப்பதால், அருகில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராட்சச போர்வெல் மூலம் நிலத்தடி நீரை, அந்த நிறுவனம் உறிஞ்சிக் கொள்வதால், மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

வேல்முருகன் – பா.ம.க.,: எந்த அதிகார மையத்தின் உத்தரவு மூலம், இந்த கோவில் நிலம் தனியாருக்கு வழங்கப்பட்டது? சென்னையில் பல இடங்களை, இதே போல், தனியார் வளைத்து வருகின்றனர்.

சிவபுண்ணியம் – இந்திய கம்யூனிஸ்ட் : சாதாரண மக்கள் ஆக்கிரமிப்பு செய்தால், போலீசைக் கொண்டு காலி செய்கிறீர்கள். கோவில் நிலத்தில், எல்லா விதிமுறைகளை மீறி, அனுமதி எப்படி வழங்கப்பட்டது?

அமைச்சர் பரிதி இளம்வழுதி: கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 120 கோடி ரூபாய் சொத்தை தனியார் அபகரித்துள்ளதாக சொல்கிறார்கள். பிரச்னைக்குரிய நிலம் 1.77 ஏக்கர் மட்டுமே. அந்த நிலத்திற்கு இவ்வளவு மதிப்பு வருமா? மொத்த நிலத்தில், 1.77 ஏக்கர் நிலம் தற்போதுள்ள நிலையில் தொடர வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த இடத்தைத் தவிர்த்துதான் பணிகள் நடக்கிறது. அரசின் உத்தரவை ஓசோன் குழுமம் மீறவில்லை. குற்றச்சாட்டு எழுப்பியவர்கள் விரும்பினால், அவர்களோடு சேர்ந்து நானும் சம்பந்தப்பட்ட  இடத்தை பார்வையிடத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: