சிந்து சமவெளியில் பிள்ளையார்!

சிந்து சமவெளியில் பிள்ளையார்

பிள்ளையார் சிந்துசமவெளியில், அதிலும் நௌஸோர் (பாகிஸ்தான்) என்ற இடத்தில் 9000 BCE வர செல்லும் அகழ்வாய்வு படிவுகளில் காணப்பட்டுள்ளது முக்கியமாக உள்ளது.

Three-headed-elephant-figurine-Nausharo-Pak

Three-headed-elephant-figurine-Nausharo-Pak

சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மூன்று தலைகள் கொண்ட (உயரம் – 6.76, நீளம் – 6.97, அகலம் – 4,42; அளவுகள் செ.மீரில்) இந்த ஒரு உருவம் 1992ல் கிடைத்ததாகும். பாகிஸ்தான் மியூஸியத்தில் EBK 7712 என்ற எண்ணுடன் உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை பெருமளவில் இழுத்துள்ளது.

Three-headed-elephant-figurine-Nausharo

Three-headed-elephant-figurine-Nausharo

காத்தரைன் ஜேரிஜ் (Catherine Jarrige) என்பவர் தன்னுடைய கட்டுரையில் படங்களுடன் விவரித்துள்ளார். ஜொனாதன் மார்க் கெனோயர் (Jonatham Mark Keynoyer) புத்தகத்தில் 117வது பக்கத்தில், இதன் இரு படங்களைக் காணலாம்.

யானை, சிங்கம் / புலி, காளை என மூன்று தலைகள் உள்ளன. அவற்றில் யானை மற்றும் சிங்க / புலித் தலைகள் தெளிவாகவே உள்ளன. குறிப்பாக யானையின் காது, தும்பிக்கை விநாயகரைக் குறிப்பதாக உள்ளது. இத்தகைய மூன்று தலைகள் கொண்ட சிற்பங்கள், இந்தியக்கலைப் பொருட்களில் அதிகமாகவே காணப்படுகின்றன.

Harappan-elephant

Harappan-elephant

யானை சிந்து சமவெளி முத்திரைகளில் பலவற்றில் காணப்படுகின்றன. மேலேயுள்ளது விளையாடும் பொம்மைகளில் காணப்படுகிறது.

Elephant-seal-Indus

Elephant-seal-Indus

ஆகவே, கணேசன் / விநாயகன் / பிள்ளையாரை யார் அங்கு உருவாக்கினர்?

சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்றால், திராவிடர்கள் உருவாக்கினரா?

IVC-LINGAM-3

IVC-LINGAM-3

சிவனைக் குறிக்கக் கூடிய லிங்கங்கள் ஏற்கெனவே கிடைத்துள்ளன.

IVC-LINGAM-1

IVC-LINGAM-1

லிங்கம் என்பதற்கான தனித்தனியான பகுதிகளும் கிடைத்துள்ளன.

Mohenjo Daro, IVC

Mohenjo Daro, IVC

நந்தியின் பொம்மைகள் நிறையவே கிடைத்துள்ளன.

இன்றைக்கு, திராவிட சித்தாந்திகள் இப்படியுள்ள ஆதாரங்களையெல்லாம் விட்டுவிட்டு, ஏதேதோ பேசி-எழுதி வருகின்றனர். அரைத்த மாவை அரைத்துக் கொண்டு வருகின்றனர்.

9000-6000 BCE முன்பாகவே, ஏற்பட்டுள்ள கலைவடிவம் இந்தியாவில் பரவ 1300-1500 வருடங்களில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த மண் சிற்பத்தில் காணப்படும் வளைவுகள், நெளிவுகள் முதலியவை சிற்பியின் கலைத்திறனை எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய கலைத்திறன் 7000 வருடங்களாக சும்மா இருந்து, திடீரென்று 2300 வருடங்களுக்கு முன்புதான் திடீரென்று மௌரிய காலத்தில் மறுபடியும் தோன்றியது என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுவதையும் மற்றவர்கள் கூர்மையாக கவனிக்க வேண்டும்.

கலை, கலைத்தோற்றம், உருவமைப்பு, சிற்பக்கலை முதலியன, மனிதர்களிடம் தொடர்ந்து நடப்பவையாகும். காலந்தோறும், சில மாறுதல்கள் இருந்தாலும், அடிப்படயில் உள்ள பழமையின் ஆதாரம் மாறாமல் இருக்கும். உலகத்த்தில் பற்பல இடங்களில் உள்ள விநாயகர்-கணபதி-பிள்ளையார் உருவங்கள் அத்தகைய ஒற்றுமையைக் காட்டுகின்றன. இடம், பொருள், காலம் முதலியவை மாறினாலும் யானை உருவம், தும்பிக்கை, காதுகள் முதலியன மாறுவதில்லை

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “சிந்து சமவெளியில் பிள்ளையார்!”

  1. Shansnrmp Sivashanmugam Says:

    யானைத் தலையுடன் கூடிய மனித உடல் சிலை மட்டுமே பிள்ளையாராக உருவகப் படுத்தப் படுகிறது…இங்கு யானையின் தலை மட்டுமே காணப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு இதுதான் பிள்ளையார் என்று கூறுகிறார்களா?

    பிள்ளையார் வழிபாடே தமிழகத்தில் கடந்த எழுநூற்று ஐம்பது ஆண்டுகளாகத்தான் இருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: