தமிழக நாகரிகம் கண்டறிய ஆழ்கடல் தொல்லியல் ஆய்வு அவசியம்!

தமிழக நாகரிகம் கண்டறிய ஆழ்கடல் தொல்லியல் ஆய்வு அவசியம்!

ஆழ்கடல் தொல்லியல் ஆராய்ச்சி தேவை - தினமலர் - 21-09-2015

ஆழ்கடல் தொல்லியல் ஆராய்ச்சி தேவை – தினமலர் – 21-09-2015

தனித்தமிழ் இயக்கம் ஆரம்பித்ததிலிருந்தே, தமிழ் தான் முதல் மொழி, தமிழர்கள் தாம் உலகத்தின் முதல் மக்கள், தமிழகம் தாம் மனித இனம் தோன்றிய இடம், இவற்றிலிருந்து தான் எல்லாமே உருவாகின என்று கருதுகோள்கள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் கடந்த 150 ஆண்டு காலமாக வைக்கப்பட்டு வந்துள்ளன. சரித்திர ஆதாரங்கள் இல்லாமல், இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், ஒருவர் சொன்னதை-எழுதியதை இன்னொருவர் திரும்ப-திரும்ப சொல்வதும்-எழுதுவதும், சிலவற்றைச் சேர்த்துக் கொள்வதும், மற்ற ஆய்வுகளுடன் சம்பந்தப்படுத்தியும் மேலே-மேலே சொல்வதும்-எழுதுவதுமாக நடந்து வருகிறது. “ஆரிய-திராவிட” இனவாத மற்றும் மொழியியல் சித்தாந்தகளுக்குள் கட்டுப்பட்டு அத்தகைய வெளிப்பாடுகள் சுழன்று-உழன்று வந்துள்ளன. கம்பட் (2002) மற்றும் துவாரகை (1986) கடலடி அகழ்வாய்வுகளையும், இதற்கு சேர்த்துக் கொண்டு, தமது சிந்தனைகளைக் கூட்டி வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில் முறைப்படி அந்த அகழ்வாய்வுகள் செய்தாலும், ஐராவதம் மகாதேவன் போன்றோர் குறைகூறினர்[1]. ஆனால், ஆஸ்கோ பார்போலோ ஒப்புக் கொண்டது நோக்கத்தக்கது. 2010ல் என். மஹாலிங்கம் கடல் கொண்ட லெமூரியாவும் குமரிக் கண்டமும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையப் படித்தார்[2]. அதாவது, இவ்விசயத்தில் தமிழறிஞர்களுக்கிடையே கூட ஒற்றுமை இல்லை என்று தெரிகிறதுவித குழுக்களில், இயக்கங்களில், பெயர்களில் செயல்பட்டு வருகிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், விசயம் ஒன்றாக இருந்தாலும், பலர், பலவிதமாக பேசி-எழுதி வருகிறார்கள். அத்தகைய குழப்பங்களை மறைத்து, அடிக்கடி,  “தமிழக நாகரிகம் கண்டறிய ஆழ்கடல் தொல்லியல் ஆய்வு அவசியம்!” என்றெல்லாம் சொல்வதுண்டு. இப்பொழுது மறுபடியும் அத்தகைய கோரிக்கை வைக்கப்படுகிறது. தினமலரில் வந்துள்ள செய்தியின் அடிப்படையில், இந்த அலசல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தாயுமானவன், ராஜன், தயாளன் செப்.2015

தாயுமானவன், ராஜன், தயாளன் செப்.2015

தமிழக நாகரிகம் கண்டறிய ஆழ்கடல் தொல்லியல் ஆய்வு அவசியம்: ‘பிரபல நாணயவியல் ஆய்வாளர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்த பெருவழுதியின் காசுகள், சங்ககால ஆராய்ச்சியின் மிகப்பெரிய திருப்புமுனை; தமிழர் நாகரிகத்தை முழுமையாக அறிய, கடல் கொண்ட சங்ககால நகரங்கள் குறித்து ஆழ்கடல் தொல்லியல் ஆய்வு நடத்துவது மிக அவசியம்,” என, தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன் தெரிவித்தார்[3]. இந்திய அறிவியல் கண்காணிப்பு அமைப்பின் நிறுவனரும், தொல்லியலாளருமான டி.கே.பி.ராஜன்[4], கடந்த, 20 ஆண்டுகளாக கண்ணன் குறித்த, சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்திய நாகரிகம் குறித்த பல நுால்களை எழுதியுள்ளர்[5]. துவாரகை கடலடி ஆய்வு பற்றி இவர் குறிப்பிடும் போது எஸ்.ஆர். ராவ் பெயரைக் கூட குறிப்பிடமாட்டார். ஆனால், அவரது ஆய்வு, புகைப்படங்கள் எல்லாம் இவரே கடலில் மூழ்கி எடுத்ததைப் போல போட்டுக்கொள்கிறார். பழைய மாம்பலத்தில், ஒரு விட்டில், முன்பு கண்காட்சி போல அப்புகைப்படங்களை வைத்திருந்தபோது கேட்டேன். ஆனால், சரியாக பதில் சொல்லாமல் மழுப்பி விட்டார். டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியைப் பொறுத்தவரையில், தமிழக நாணவியல் ஆராய்ச்சிக்கு அவர் ஆற்றிப் பங்கு பெரிதானது, மகத்தானது, போற்றக்கூடியது.

குமரிக்கண்டம் கருதுகோள்

குமரிக்கண்டம் கருதுகோள்

கடலுக்கு அடியில் தமிழர் நாகரிகம்என்ற தலைப்பில் அவர், பேசியதாவது[6]: டி.கே.வி.ராஜன் சொல்கிறார், “உலகில், தலைசிறந்த நாகரிகங்களில் மிக பழமையானதும், இன்றும் சிறப்பாக இருந்து வருவதும், தமிழ் நாகரிகமே என்பது உலக வரலாற்று ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. ஆனால், கிரேக்க, ரோமானிய நாகரிகங்களை போல், நம்மால் முழு அளவில் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்க இலக்கியத்தோடு, இணைக்கப்பட்ட இடங்களில் அகழாய்வு நடைபெற்று உள்ளன. அந்த ஆய்வில், தமிழ் பிராமி எழுத்து கொண்ட மண் பாண்டங்கள், சுடுமண் குழாய்கள், செங்கற்சுவர்கள், சங்ககால தமிழர், கிரேக்கரோமானிய நாடுகளோடு வாணிப தொடர்பு வைத்துள்ளதற்கான ஆதாரங்களான ஆயிரக்கணக்கில் மணிகள், சங்கு வளையங்கள், பாத்திரங்கள் கிடைத்துள்ளன. “தினமலர்ஆசிரியர் அவற்றின் மூலம், சங்க கால தமிழரின் வாழ்க்கையை ஓரளவிற்கு அனுமானிக்கலாமே, தவிர முழு அளவில் கண்டறிய முடியாது. கடந்த, 1903ல், அலக்சாண்டர் ரீ என்ற ஆய்வாளர், துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில் நடத்திய அகழாய்வில் வெண்கல பாத்திரங்கள், இரும்பு கத்திகள், வேல்கள், பொன் பட்டயங்களை கண்டுபிடித்து, அவற்றை, பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்தார். ‘தமிழகம், தெற்காசிய நாடுகளின் நாகரிக தொட்டில்எனவும், அவர் புகழாரம் சூட்டினார். நுாறு ஆண்டுகளுக்கு பின், மத்திய தொல் பொருள் இலாகா சார்பில், சத்யமூர்த்தி தலைமையில், ஆதிச்சநல்லுாரில் மீண்டும் அகழாய்வு நடந்தது. அப்போது, இதன் நாகரிகம் கி.மு., 1,700க்கு முற்பட்டது. இரும்பு, வெண்கலம் உருவாக்கும் ஆலைகள் அங்கே இருந்துள்ளன என்பதும் ஆய்வில் தெரியவந்தது. அங்கு கண்டறியப்பட்ட பனை ஓட்டு ஓவியம் சங்க இலக்கியத்தை பிரதிபலிக்கிறது. பிரபல நாணயவியல் ஆய்வாளரும், ‘தினமலர்நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சங்ககால அரசனான பெருவழுதியின் நாணயங்களை கண்டுபிடித்தார். இது சங்க கால ஆராய்ச்சியின் மிகப்பெரிய திருப்புமுனையாக விளங்கியது”.

Wharf found at Kizharveli 4th century CE.

Wharf found at Kizharveli 4th century CE.

காவிரிபூம்பட்டினத்தில் 1985 முதல்,1996 வரை, நான்கு கட்டங்களாக சிறிய அளவில் நடந்தது: டி.கே.வி.ராஜன் தொடர்ந்து சொல்கிறார், “மத்திய தொல்லியல் இலாகா இயக்குனர் தயாளன், சங்ககால அரசர்களான அதியமான், ஆய் ஆண்ட இடங்களிலுள்ள குகை கோவில்களை கண்டறிந்தார். சங்க கால ஆராய்ச்சிக்காக பாடுபட்ட இவர்களை போன்ற தகுதியானவர்களை, தமிழகம் என்றும் மறக்காது. நமது நாகரிகம் 4,000 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அதன் ஆதாரங்கள் நிலத்தில் கிடைக்கவில்லை. ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியின் வழியாக கண்டுபிடிக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் காவிரிபூம்பட்டினம் (பூம்புகார்) கடலில் அழிந்ததாக கூறப்படுகிறது. இது, 30 சதுர மைல்கள் கொண்டது. அங்கு ஆழ்கடல் ஆய்வு, 1985 முதல்,1996 வரை, நான்கு கட்டங்களாக சிறிய அளவில் நடந்தது. இதில், 18ம் நுாற்றாண்டில் மூழ்கிய கப்பல் பகுதிகள், கட்டட பகுதிகள் கிடைத்தன”.  “18ம் நுாற்றாண்டில் மூழ்கிய கப்பல் பகுதிகள், கட்டட பகுதிகள் கிடைத்தன”, என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லையே? 5,000 வருடங்களுக்கு முந்தைய “மூழ்கிய கப்பல் பகுதிகள், கட்டட பகுதிகளா” கிடைத்தன? பிறகு எதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் என்று தெரியவில்லை. “நமது நாகரிகம் 4,000 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்து வருகிறது”, என்கிறார், அப்படியென்றால், ஏன் c.500-300 BCE காலத்தில் தான் சங்க இலக்கியங்கள் தோன்றிருக்க வேண்டும்? C.2000-500-300BCE வரையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? எழுத்தறிவில்லாமல் இருந்தார்களா?

The shipwreck discovered in 1991 -W Blackett 1791-92

The shipwreck discovered in 1991 -W Blackett 1791-92

1.5 கோடி ரூபாய் ரூபாய் வழங்க தனியார் அமைப்பினர் தயாராக உள்ளனர்[7]: டி.கே.வி.ராஜன் தொடர்ந்து சொல்கிறார், “பூம்புகார் ஆழ்கடல் ஆய்வில், கடலின் தரைப்பகுதியில், மூன்று மைல் பரப்பளவில் கட்டடங்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘பெரிய அளவில் கடலாய்வு மேற்கொண்டால் கடல் கொண்ட பூம்புகாரை வெளியே எடுத்து விடலாம்என, ஆய்வு நடத்திய தொல்லியல் ஆய்வாளர் எஸ்.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார். பூம்புகாரை போலவே, வடகோடியில் கடலில் மூழ்கிய மணிபல்லவம் (ஜம்பு கொலப்பட்டினம்), மருங்கூர்பட்டினம் ஆகியவற்றிலும் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட குமரி கண்டம் பற்றி குறிப்புகள் உண்மையா என, கண்டறிய குமரியிலிருந்து மடகாஸ்கர் வரை ஆய்வுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமான என்...டி., கடல் ஆய்வு கப்பலை, தனியார் ஆய்விற்கு அனுமதிக்கிறது. இதற்கான கப்பல் வாடகை, 1.5 கோடி ரூபாய் வழங்க தனியார் அமைப்பினர் தயாராக உள்ளனர். ஆனால், சங்ககால ஆழ்கடல் ஆய்விற்கு மத்திய தொல்லியல் இலாகாவும், வெளியுறவு துறையின் அனுமதி தேவை. அந்த அனுமதியை தமிழக அரசு பெற்று தந்து, கடலுக்கு அடியில் புதைந்துள்ள தமிழ் நாகரிகத்தை ஆராய உதவ வேண்டும்”, இவ்வாறு, அவர் கூறினார்.

பல ஆதாரங்கள் கிடைக்கும்: மத்திய தொல்லியல் இலாகா இயக்குனர் தயாளன் கூறியதாவது:  “தமிழக அரசர்கள் பல நாடுகளை கடந்து வர்த்தகம் செய்துள்ளதாக சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. நமது அகழாய்வில் கிரேக்கம், ஜாவா, சுமித்ரா நாட்டினர் நமது நாட்டிற்கு வந்து வர்த்தகம் செய்த தடயங்கள் கிடைத்துள்ளன. கபாடபுரம், பஃறுளி ஆறு, தென்மதுரை போன்ற ஊர்கள் எங்குள்ளன என, தெரியவில்லை. கடல் ஆய்வில் பல தொழில்நுட்ப உபகரணங்கள் வந்துள்ளன. அவற்றின் மூலம் ஆய்வுமேற்கொண்டால் பல ஆதாரங்கள் கிடைக்கும்”, இவ்வாறு, அவர் பேசினார். மறைமலை அடிகளாரின் பேரன் தாயுமானவன் உடன் இருந்தார். “கபாடபுரம், பஃறுளி ஆறு, தென்மதுரை போன்ற ஊர்கள் எங்குள்ளன என, தெரியவில்லை. கடல் ஆய்வில் பல தொழில்நுட்ப உபகரணங்கள் வந்துள்ளன. அவற்றின் மூலம் ஆய்வுமேற்கொண்டால் பல ஆதாரங்கள் கிடைக்கும்”, என்ரு பொதுவாக சொல்லியிருப்பது ஏன் என்று தெரியவில்லை. குமரிக்கண்டம் இப்பொழுதைய தமிழகத்தின் தென்பகுதியில் உள்ளது என்றால், அங்குதான் கடலடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்படித்தான் அப்பாதுரை முதல், இப்பொழுது வரை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு இடத்தை மாற்றுவானேன்?

© வேதபிரகாஷ்

23-09-2015

[1] http://www.frontline.in/static/html/fl1907/19070940.htm

[2]https://indianhistoriographymethodology.wordpress.com/2010/09/19/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

[3] தினமலர், தமிழக நாகரிகம் கண்டறிய ஆழ்கடல் தொல்லியல் ஆய்வு அவசியம், செப்டம்பர்.21, 2015.22:01.

[4] T.K.V.Rajan a well known Tamil Journalist, Archaeologist and T.V. Personality has long been concerned with Indian Archaeology and the impact of science and technology on the traditional Indian society. His extensive works in the former field include five successful audio visual cultural exhibitions he produced for the public. They were “Prehistoric Man Around Madras”, at the British Council, Madras, “Piercing the Past”. “Our Buried Past Phase I”, both sponsored by Max Mueller Bhavan, Madras and “In Search of Krishna”. Rajan has also presented “Our Buried Past” a documentary serial for Madras Doordarshan. They include “Prehistoric Man Around Madras”, Puduke – Our Ancient Sea Port”, 2000 Years Ago, From Kanchi to Taxilla, In Search of Lemuria, these have been telecast not only in Madras, but also in other TV centres through out the country. Rajan has become engrossed over the past few years in the process of cultural changes in the Indian society. His futuristic audio visual exhibition “The Last Days of Homosapiens” sponsored by Jawaharlal Nehru University had reflected the problems of changing values and eco-crisis. Rajan is the author of 3 books. In Search of Lord Krishna (Vol-1), From Kanchi to Combodia; Greater India-Revisited, Kashmir – Save it for humanity and Nallamanam Vazgha Kannanin Chuvadugal. Rajan has also edited and translated two “socially relevant” monographs into tamil. They are (1) Futurist S.L.Rao’s introduction to Futures Research (2) American Scholar Bruce W.Killer’s The Effects of Urbanization on Agrahara Brahmin Community. Rajan was graduated from Loyola College, Madras, took his M.A in Archaeology from Madras University (Where he won the Dikshitar Award for his academic excellence) and worked as a research staff at the History centre at Jawaharlal Nehru University, New Delhi. He has also learnt Anthropology under professor Polin Kolanda of the University of Houston while attending a project of Tamil Family Life & Values, in India. Later, Rajan worked as a Senior Editor of Kungumam Group of Publications and Producer SUN TV, the first tamil Satellite TV network. He produced several documentaries for SUN TV (the best is the “History of CRPF”) and he was the presenter and producer of much talked about weekly programme “Cinema Quiz” which was going strong even after 100 weeks! Later T.K.V.Rajan worked as a Chief Producer in Raj TV. He is the Director of Indian Science Monitor in Chennai. Presently, he is CEO of Meenakshi Media Private Limited.

T.K.V.Rajan, Founder Chairman, Indian Science Monitor, Cheanni,Tamilnadu, India, Mobile : 380554557,
Email : indiansciencemonitor@gmail.com; www.indiansciencemonitor.blogspot.com;

http://indiansciencemonitor.blogspot.in/

[5] தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன் எழுதிய, “காஞ்சி முதல் கம்போடியா வரை…’ நூலை, டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டார்.

http://www.dinamalar.com/News_detail.asp?Id=357659&Print=1

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1346440

[7]http://seythee.com/2015/09/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “தமிழக நாகரிகம் கண்டறிய ஆழ்கடல் தொல்லியல் ஆய்வு அவசியம்!”

 1. Shata Says:

  The Dutch, Portuguese and the British took away all our books and burnt the teachers alive. These books were translated to french, then to German, then to English or straight from French to English. The Universities teach straight from these books who’s interpretations are completely wrong and some purposely disfigured. This is the work of the human race who mind works on negative logic. All the so called ‘religions’ are such off shoots of the ‘real knowledge’ mishandled by the wrong people. Since the ShaSha Yuga has dawned I believe the Ma race will get freedom will preach the truth again about history and everything else. Generally the Ma race is the O+/- community. The red Indians are the same as us – Thaba Pani or Inshas also known as Ahimsa and wrongfully pronounced as Incas.

  • vedaprakash Says:

   Thank you for your comments and I appreciate your concern for Indian historiography.

   Definitely, Indian History has to be rewritten in right historical perspective.

   If could evidences for “The Dutch, Portuguese and the British took away all our books and burnt the teachers alive”, it would be enlightening to others!

   So also for “These books were translated to french, then to German, then to English or straight from French to English”!

 2. Shata Says:

  The entire A+ and O+ history has to be re-written The root language words and sounds are more preserved in Thai, French and Malayalam. It is not NALANDA. GNA LU GNA DA (U always has the sound ‘er’ as in french). GNA is for wisdom just one sound like cry of an elephant beautifully preserved in Thai. It means place where wisdom is being given birth by people descending from the wise. The English and subsequent local translators dropped off all the accents in french due to poor knowledge of these off shoot languages. The Parakatha was written only from right to left. West read it in the wrong direction. Far East in the proper direction. Due to British occupation and instigating their AB+/- power, mixing both types of words by the unintelligent almost 150 year ban on our teachings with a penalty of death, both Indian and Sri Lankan languages are in a real mess which greatly hampers our education. I am from Ratha Shara HaMa (Maha Rashtra) Lord Buddha’s dynasty unmixed blood since vale Gama Au (Akbar). We still carry the knowledge in our red and white cells and brain structure.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: