ஆராய்ச்சியில் மூலம் குறிப்பிட வேண்டும், தானாகவே கண்டு பிடித்தேன் போன்ற போக்கு கூடாது – ஆராய்ச்சியாளர்களுக்கு சிற்றம்பாக்கம் கல்வெட்டு புகட்டும் பாடம்!

ஆராய்ச்சியில் மூலம் குறிப்பிட வேண்டும், தானாகவே கண்டு பிடித்தேன் போன்ற போக்கு கூடாது – ஆராய்ச்சியாளர்களுக்கு சிற்றம்பாக்கம் கல்வெட்டு புகட்டும் பாடம்!

Claim of discovery of new inscriuption - 23_04_2017_105_027

உண்மைக்குப் புறம்பான கண்டுபிடிப்பு அறிவிப்புகள், பிரகடனங்கள்: சமீபத்தில் கல்வெட்டு கண்டுபிடிப்பு என்று அடிக்கடி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கோவில் கல்வெட்டுகளாகவே இருக்கின்றன. தென்னிந்திய கோவில் சாசனங்கள் [South Indian Temple Inscriptions] மற்றும் எபிகிராபிய இன்டிகா (Epigraphia Indica, இந்திய கல்வெட்டுகள் தொகுதி, இவற்றில் கடந்த 100-150 ஆண்டுகளாக ஓரளவிற்கு கண்டறியப்பட்ட எல்லா கல்வெட்டுளும், படியெடுக்கப்பட்டு, படங்களுடன் விவரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. எனவே, “கல்வெட்டு கண்டு பிடித்தேன்” என்று சொல்வதற்கு முன்னர், இத்தகைய முன்னரே பதிக்கப்பப்பட்டுள்ள புத்தகங்களுடன் சரிபார்த்துக் கொண்டு அறிவிப்பது நல்லது. ஆனால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், நாளிதழ்கள்களில்  புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டு இடுகிறார்கள். பழைய அல்லது விசயம் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கின்றன. ஆராய்ச்சியில் மூலம் குறிப்பிட வேண்டும், தானாகவே கண்டு பிடித்தேன் போன்ற போக்கு கூடாது. இதனால் தான், முன்னர் இதைப் பற்றி யாரெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்ற குறிப்பு கொடுக்க சொல்கிறார்கள். ஆனால், எல்லாவற்றையும் மீறி, இத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

Claim of discovering inscription already recorded - 23_04_2017_101_007_001

தமிழகத்தில் முதல் கோவில் கட்டியதற்கான கல்வெட்டு, திருவள்ளூர் மாவட்டம், சிற்றம்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[1]: பல்லவர் காலத்தில் தான், மண், மரம், சுதை இல்லாமல், கல்லால், குடைவரை கோவில்கள் அமைக்கும் பழக்கம் துவங்கியது. பின், கற்கோவில்கள் எழுப்பப்பட்டாலும், தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் கோவிலுக்கான சான்றுகள் கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில், தற்போது, கி.பி., 7ம் நுாற்றாண்டை சேர்ந்த கோவில் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[2]. இது, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தும் என, கூறப்படுகிறது. கல்வெட்டை கண்டுபிடித்த, ‘ஆலயம் கண்டேன்’ அமைப்பின் நிறுவனரும், வரலாற்று ஆய்வாளருமான, பத்மபிரியா பாஸ்கரன் கூறியதாவது: “தென்கரணை என, அழைக்கப்பட்ட சிற்றம்பாக்கத்தில் உள்ள, பல்லவர் கால கும்பேஸ்வரர் கோவில், சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. அதன் அருகில் தான், சிறிய செல்லியம்மன் கோவில் உள்ளது. அங்கு, மிக பழமையான, பல்லவர் கால தமிழ் கல்வெட்டு, கவனிப்பாரின்றி, கோவிலின் படிக்கல்லாக பயன்படுத்தப்படுகிறது பல்லவர் காலத்தில், பல்லவர் கிரந்தம், சமஸ்கிருத எழுத்துகள் தான் அதிகம் வெட்டப்பட்டனஆனால், வல்லம் குகையில் உள்ள, முதலாம் மகேந்திர வர்மன் கல்வெட்டு, திருக்கழுக்குன்றத்தில் உள்ள, முதலாம் நரசிம்மவர்மன் கல்வெட்டுகள், தமிழில் உள்ளன. சிற்றம்பாக்கம் செல்லியம்மன் கோவில் கல்வெட்டும், தமிழில் உள்ளது சிறப்பு. முதல் குடைவரை கோவிலுக்கான சான்றாக, கி.பி., 630ம் ஆண்டை சேர்ந்த, மகேந்திரவர்மன் கல்வெட்டு உள்ளது. நற்றம்பள்ளி கல்வெட்டின் காலம், முதலாம் பரமேஸ்வர வர்மனின், முதலாம் ஆட்சி ஆண்டான, கி.பி.,670. இக்கல்வெட்டு, 29 அங்குல நீளமும், 28.5 அங்குல அகலமும் உடையதுகல்வெட்டில், இரண்டு வட்டங்கள் உள்ளன. அவற்றின் இடையே, மலரின் இதழ்கள் போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதைச்சுற்றி, ஆறு வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. செல்லியம்மன் கோவில் பெரிதாக இருந்த காலத்தில், அதன் சுவரில், இக்கல்வெட்டு இருந்திருக்கலாம்.  கல்வெட்டு வரிகளில் இருந்து, ஆலவாயிலை சேர்ந்த, சோமாசியார் மருமகன் குமரன் என்பவர் உருவாக்கிய கோவில் என, அறிய முடிகிறதுமதுரையை போல, தென்கரணைக்கும், ஆலவாயில் என்ற பெயர் இருந்திருக்கலாம். அங்கு, மேலும் ஆய்வு செய்தால், தொடர்புடைய கூடுதல், சான்றுகள் கிடைக்கும்,” இவ்வாறு அவர் கூறினார். இதைப்பற்றி பிப்ரவரி மாத செய்தியிலும் உள்ளது என்பது குறிபிடத் தக்கது.

Priya Bhaskaran - Alayam Kanden

சென்னையில், புனித நதியான கூவத்தை அழிந்ததை போல், அந்நதிக்கரையில் உள்ள கோவில்களும் அழிகின்றன[3]: ”சென்னையில், புனித நதியான கூவத்தை அழிந்ததை போல், அந்நதிக்கரையில் உள்ள கோவில்களும் அழிகின்றன,” என, ‘ஆலயம் கண்டேன்’ மின்னிதழின் ஆசிரியர், பிரியா பாஸ்கரன் பேசினார். பிரியா பாஸ்கரன் எழுதிய, ‘தி காட்ஸ் ஆப் தி ஹோலி கூவம்’ என்ற நுாலை, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், கூவம் நதி வரைபடம் உருவாக்கிய, வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டனர். நுாலை, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், திருவள்ளூர் மாவட்ட முன்னாள் உதவி பொது மேலாளர் வைத்தியநாதன் பெற்றுக் கொண்டார். ஸ்ரீதரன் பேசியதாவது: திருபுவனம் மாதேவி பேரேரியில் இருந்து புறப்படும் கூவம் நதி, பல கால மாற்றங்களை கண்டுள்ளது. அதன் கரையில், பல்லவர் காலம் முதல் பல சைவ, வைணவ கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. ராஜராஜன், குலோத்துங்கன் காலத்து கல்வெட்டுகள் உள்ளன. நீர் மேலாண்மை, துார்வாருதல் உள்ளிட்ட தகவல்கள் அவற்றில் உள்ளன. பச்சையப்பன் முதலியார் கூட, கூவம் நதியில் குளித்து விட்டு தான், கோவிலுக்கு சென்றதாக கூறி உள்ளார். 2015ம் ஆண்டு பெய்த பெருமழையின் போது கூவம் சுத்தமானது. அரசு, கூவத்தை சுத்தப்படுத்தினால் அது உயிருள்ளதாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்[4].

Chitrambakkam inscription - Indian columbus photo

தமிழ் தொல்லியல் மற்றும் அறநிலையத் துறையினர் காப்பாற்ற வேண்டும் நுாலாசிரியர், பிரியா பாஸ்கரன் பேசியதாவது: “கூவம் புராணத்தில் இருந்து பல தகவல்களை பெற்று, கூவம் நதிக்கரையில் உள்ள கோவில்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். எனக்கு முன்பே, வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், கூவத்தை, ‘மேப்பிங்செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்; அவர் உள்ளிட்ட பலரின் உதவி கிடைத்தது. தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக கள ஆய்வு செய்தேன். டி.வி.மகாலிங்கம் கூறியுள்ள, கூவம் நதிக்கரை கோவில்களில் பலவும், கல்வெட்டுகளில் பலவும் தற்போது இல்லை. கேசவரம், கைலாய ஈஸ்வரமுடைய மகாதேவர் கோவில், வயலாநல்லுார் முருகன் கோவில் உள்ளிட்ட, 114 கோவில்களை அறிந்து, தற்போது ஆவணப்படுத்தி உள்ளேன். சிற்றம்பாக்கம் செல்லியம்மன் கோவில் வாசலில் கிடத்தப்பட்டுள்ள கல்வெட்டு, 7ம் நுாற்றாண்டை சேர்ந்தது. அக்கோவிலும், பழமையான கட்டுமானம் கொண்டது. கூவம் கிராமத்தில், 7 அடி உயரமுள்ள, நடமாடும் புத்தர் சிலையை, தமிழக தொல்லியல் துறை மீட்டது. அங்கு, சமண, புத்த மதங்கள் ஓங்கி வளர்ந்ததையும் அறிய முடிகிறது. ஆதித்த கரிகாலன், தன் இரு மனைவியருடன், மப்பேடு கோவிலுக்கு குடமுழுக்கு செய்த செய்தியையும், கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.கூவம் நதி அழிந்ததை போலவே, கூவம் நதியில் உள்ள பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும் தற்போது அழிந்து வருகின்றன. அவற்றை, தமிழ் தொல்லியல் மற்றும் அறநிலையத் துறையினர் காப்பாற்ற வேண்டும்,” இவ்வாறு அவர் பேசினார்.

Chitrambakkam inscription - 13-04-2016 blog

கூகுள் தேடலில் கிடைப்பதை கண்டுபிடிப்பு என்பதா?: ஏப்ரல் 12, 2016 அன்று, இந்தியன் கொலம்பஸ் என்று ஒருவர், இக்கல்வெட்டு புகைப்படும் மற்ற எல்லா விவரங்களையும் தனது பிளாக்கில் வெளியிட்டுள்ளார்[5]. ஒரு கூகுள் தேடலே இதனை எடுத்துக் காட்டுகிறது[6]. இதே விவரம் இன்னொரு இணைதளத்திலும் காணப்படுகிறது[7]. இருப்பினும், பிரியா பாஸ்கரன் போன்றோர் தான் கண்டுபிடித்ததாக கூறிக்கொள்வது, அறிவித்துக் கொள்வது, செய்திகளாகப் போட்டுக் கொள்வது முதலியன திகைப்பாக இருக்கிறது. “நான் தான் கண்டுபிடித்தேன்”, என்று சொல்லிக்கொள்வதற்கு முன்பாக, இதையெல்லாம் சரிபார்க்க வேண்டாமா? ஏதோ, “இன்பூளீயன்ஸ்” இருக்கிறது, நண்பர்கள் இருக்கிறார்கள், சொன்னால் போதும், புகைப்படத்துடன் செய்தியாகக் கூட போடுவார்கள் என்ற நிலையில் இவ்வாறாக செய்வது, தம்பட்டம் அடித்துக் கொள்வது போன்றானது. கோவில்களுக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மக்கள் போய் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு விசயங்கள் தெரிந்து தான் இருக்கின்றன. நூற்றுக்கணக்கானோர், ஆராய்ச்சியாளர்கள், சரித்திராசியர்கள், பிச்.டிக்களை விட அதிகமான விசயங்களைத் தெரிந்து வைத்துள்ளார்கள். எனவே, அடக்கத்துடன், மூலத்தைக் குறிப்பிட்டு எழுதுவதுதான், உண்மையான ஆராய்ச்சியாகும். எல்லாவற்றையும் நான் தான் கண்டுபிடித்தேன், என்று பெருமைப் பட்டுக் கொள்வது சரியில்லை. அதிலும் உண்மையில்லாத போது, நிலைமையே மோசமாகி விடுகிறது.

ASI clarified about Citrambakkam inscription - 24_04_2017_007_003

1947லேயேஇண்டியன் எபிகிராபிஎன்ற நூலில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது (24-04-2017): இதற்குள் தொல்லியல் துறை, 1947லேயே “இண்டியன் எபிகிராபி” என்ற நூலில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்த கல்வெட்டு பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி மூலம் அறிந்தோம். அதை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்று தொல்லியல் துறையினர் கூறினர்[8]. உண்மையில் அவர்கள் பெருந்தன்மையுடன் எடுத்துக் காட்டியுள்ளனர். 1947லேயே “இண்டியன் எபிகிராபி” என்ற நூலில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றதால், இப்பொழுது 2017ல் 70 வருடங்கள் கழித்து, நான் தான் கண்டுபிடித்தேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று மறைமுகமாக அறிவித்து விட்டனர்! எனவே, இதனை ஆராய்ச்சியாளர்களுக்கு புகட்டும்  ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

24-04-2017

Chitrambakkam inscription - Epigraphia Indoia 1947

[1] தினமலர், கோவில் கட்டியதற்கான முதல் கல்வெட்டு கண்டுபிடிப்பு, பதிவு செய்த நாள், ஏப்ரல்.23, 2017. 03.01.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1756851

[3] தினமலர், கூவம் நதிக்கரை கோவில்கள் அழிகின்றன, பதிவு செய்த நாள், பிப்ரவரி.13, 2017. 00.30.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1709744

[5] Indian Columbus, Chitrambakkam – 7th century Pallava’’s inscription slab, April 13, 2016.

[6]  http://indiancolumbus.blogspot.com/2016/04/chitrambakkam.html

Site Name: Selli Amman Temple

Site Type: Historical

Location:  Chitrambakkam, 60 kms from Chennai city, Tamil Nadu State, India

Highlights: One of the oldest inscriptions in Tamil Nadu state of India

Nearest Major Railway Station: Chennai

Nearest Airport: Chennai

How to reach: The village is reachable by road; public transportation is not dependable; it is a little known remote place and the roads are not in good condition;

Hotel: Go to Chennai where there are lot of options

Restaurants: Go to Chennai where there are lot of options

Chitrambakkam is a small village located at a distance of around 60 kms from Chennai city in Tamil Nadu State of India. The nearest well known site is Thakolam, which is at a distance of 13 kms from here. This village has a small temple which has a historically important evidence. Let us discuss about that in this article. It is a little known remote village. There, again a little known small Selli Amman Temple. In that temple, there is a stone slab that has the inscriptions dated 679 CE. It mentions about a temple which was built by someone during the reign of Paramesvara Pallava I.  It is one of the oldest evidences in the form of inscription that mentions about a structural temple in Tamil Nadu state. The temple that is mentioned in the inscription does not exist today. This Selli Amman temple is a recently built temple. People, who do not realize the importance of this ancient inscription, use that as a stepping stone to enter into the temple.Happy travelling.

[7] http://www.blogarama.com/travel-blogs/154027-indian-columbus-blog/3235144-chitrambakkam-7th-century-pallavas-inscription-slab

[8]  தினமலர், சிற்றம்பாக்கம் கல்வெட்டு பாதுகாக்கப்படும், எப்ரல். 24, 2017.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “ஆராய்ச்சியில் மூலம் குறிப்பிட வேண்டும், தானாகவே கண்டு பிடித்தேன் போன்ற போக்கு கூடாது – ஆராய்ச்சியாளர்களுக்கு சிற்றம்பாக்கம் கல்வெட்டு புகட்டும் பாடம்!”

 1. Padmapriya Baskaran Says:

  Mr Vedam Vedaprakash , Thank you for your post. I just want to let you know that there is no necessary for me to make any tall claims or “thambattam” when I have been working on the cooum cultural mapping exercise since July 2014. This group https://www.facebook.com/groups/CooumCulturalMapping/ will give you an idea of the efforts we have taken in documenting all the evidences related to the river. In fact, your own link above states that the dinamalar coverage of the book release spoke about it. You can also see the same picture has been used in several other articles earlier. For example, http://www.dtnext.in/Lifestyle/LifeStyleTopNews/2017/02/12095510/1027210/Charting-out-Cooums-course-through-temples.vpf?TId=112136
  I had also taken a group of people including the author of Indian Columbus on a trip to some temples along the river including Sitrambakkam in October 2015 as you can see here: https://www.facebook.com/events/1480933065563682/?active_tab=discussion

  All evidences were based on inscriptions that were already read, and nowhere have I made a claim that I found anything. It was clearly a misintepretation on part of Mr Sivakumar, reporter of Dinamalar to whom I had sent an appeal for protecting the inscription that lay outside.
  அன்புள்ள திரு சிவகுமார் அவர்களுக்கு,

  தங்களிடம் தொலைபேசியில் குறிப்பிட்டபடி சிற்றம்பக்கத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த முதல் கட்டப்பட்ட கோவிலின் கல்வெட்டை பற்றிய தகவல்களை கீழே கொடுத்துள்ளேன். உங்கள் முயற்சியின் மூலம் இக்கல்வெட்டு பாதுகாக்கப்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  தென்கரணை என்று அழைக்கப்பட்ட சிற்றம்பாக்கம் கிராமம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு பல்லவர் காலத்தை சேர்ந்த கும்பேஸ்வரர் ஆலயம் சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அருகே அமைந்த ஒரு சிறிய கோவில் தான் செல்லியம்மன் ஆலயம்.

  இக்கோவிலின் வாசலின் மலரின் இதழ்கள் வரையப்பட்ட ஒரு கல் கிடக்கிறது. இக்கல் அக்கோவிலின் வாசற்படியாகவும் ஆடுகளும் மனிதர்களும் அமர்ந்து ஓய்வெடுக்கும் சிறு மேடையாகவும் விளங்கும் இந்த கல்லில் தான் இது வரையில் கண்டறியப்பட்ட முதல் கட்டப்பட்ட கோவிலின் தகவல்கள் உள்ளன.

  பல்லவர்கள் காலத்தில் பெரும்பாலும் குடைவரைகளே அமைக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முதலாக ஒரு கோவில் கட்டப்பட்ட செய்தியை தெரிவிக்கும் கல்வெட்டு இது. மேலும் பெரும்பாலான பல்லவர்கள் கல்வெட்டுகள் பல்லவ கிரந்தத்தில் சமஸ்க்ரிதத்தில் அமைந்திருந்த போது வெகு சில கல்வெட்டுகள் தமிழில் காணப்படுகின்றன. வல்லம் குகையில் உள்ள முதலாம் மஹேந்திரவர்மன் கல்வெட்டு மற்றும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள முதலாம் நரசிம்மவர்மன் கல்வெட்டு போல இதுவும் தமிழில் காணப்படும் சிறப்பு பெற்றது.

  முதலாம் பரமேஸ்வரவர்மனின் முதல் ஆட்சி ஆண்டை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது கி.பி.670 ஆம் ஆண்டாகும். இக்கல் 29 அங்குல நீளமும் 28.5 அங்குல அகலமும் உடையதாக விளங்குகிறது. மத்தியில் மலரின் இதழ்கள் போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விதழ்களை சுற்றி இரண்டு வட்டங்கள் ஒன்றின் உள் ஒன்றாக செதுக்கப்பட்டுள்ளன.
  இந்த உருவத்தை சுற்றி எழுத்துக்கள் காணப்படுகின்றன. மொத்தம் ஆறு வரிகள் கொண்ட கல்வெட்டில் முதல் இரண்டு வரிகள் மேற்புறமும் அடுத்த இரண்டு வரிகள் வலப்புறமும் செதுக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது வரி கீழேயும் ஆறாவது இடப்புறமும் காணப்படுகின்றன.

  இக்கல்வெட்டு ஒரு காலத்தில் செல்லியம்மன் கோவில் பெரியதாக இருக்கும் பொழுது அதன் சுவற்றில் இருந்திருக்க வேண்டும்.

  இதன் வரிகள்
  1. ஸ்ரீ மஹாராஜ பரமேஸ்வர வர்மர்க்கு யாண்டு தலைத்தா
  2. வது துணங்கிலவருள் ஆலவாயில் சோமாசியா
  3. ரு மருமகன் கும(ரன் )
  4, ..டுப்பித்த கோ (வில்)
  5,………..அழி (வு)ம் செ
  6. ய்தார் தரும வேற்க

  இதிலிருந்த ஆலவாயில் என்ற ஊரை சேர்ந்த சோமாசியார் (சோமாஜியார் ) மருமகன் குமரன் என்பவன் எடுப்பித்த கோவில் என்ற தகவலை நாம் அறியலாம். ஆலவாயில் என்பது பொதுவாக மதுரையைக்குறிக்கும். இங்கும் அது மதுரை என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். அல்லது ஒரு வேளை தென்கரணைக்கு ஆலவாயில் என்ற பெயரும் இருந்திருக்கக் கூடும்.

  இவ்வாறு இதுவரையில் கிடைத்த முதல் கட்டப்பட்ட கோவிலை குறித்த தகவல் கூறும் கல்வெட்டு இப்படி வெட்டவெளியில் பாதுகாப்பின்றி அசுத்தத்தில் கிட க்கவிடாமல் அரசும் தொல்லியல் துறையும் பாதுகாக்க வேண்டும்.

  I had also enclosed the Epigraphia Indica pages giving the details of the inscription as proof. Sadly he seems to have not read the article properly which has resulted in this misrepresentation.

  I hope this clarifies and you will stop making assumptions about my integrity and dignity.

  Thanks
  Padmapriya Baskaran

 2. Padmapriya Baskaran Says:

  http://aalayamkanden.blogspot.in/2017/04/how-irresponsible-journalism-ruins-good.html Hope this link gives you the facts about your blasphemous post! You may or may not choose to publish this comment ! Best wishes nonetheless to you!

 3. vedaprakash Says:

  I have copied and pasted what Ms Padmapriya Baskaran wrote in the above mentioned blog:

  How irresponsible journalism ruins good intentions

  I am really pained to write this post in Aalayam Kanden where I have refrained from writing anything other than information on lesser known temples. The readers and patrons have stood by me in every effort over the years, both in the blog as well as through the Aalayam Kanden Trust.

  As many of you may be aware, in July 2014, author Venkatesh Ramakrishnan, invited me to be part of the cultural mapping of the Cooum river. Over the next two years, I was able to do an extensive study of the heritage sites along the river with the able guidance of Mr Vaidyanathan Ramamurthy. I used the Koova Puranam and the Inscriptions of Madras Presidency Volume 8 by Mr T V Mahalingam, both of which I procured with great difficulty over many months as the source of my study. The complete details of the project have been documented here chronologically https://www.facebook.com/groups/CooumCulturalMapping/

  At every step, I consulted with senior historians like Mr Sridharan K, Deputy Director Retired, State Archaeology Department, Ms Padmavathy Anaiappan, Senior Epigraphist, Dr Sankaranarayanan G, Asst. Professor of the Sri Chandrasekharendra Saraswathi Viswa Maha Vidyalaya of Kanchipuram on the inscriptions, and the findings. Through the study, we did not expect to find anything new, or claim that we did.

  One of the significant information we came across in the T V Mahalingam compilation was an inscription at Sitrambakkam on the Cooum trail that speaks about the earliest found inscription of a structural temple. It was also one of the early Pallava Inscriptions in Tamil.

  Excerpt from T V Mahalingam Volume 8 Page 543
  This was discussed at length with Prof. Sankaranarayanan, who said it had been published in Epigraphia Indica too as an article. The same was also collected.

  Mr Vaidyanathan and me, along with Mr Balaji, TTE, Tiruvallur, visited Sitrambakkam on 1st October 2015 (the date stamp can clearly be seen in the pictures) to verify the existence of this stone.

  Further we also took a group of enthusiasts on a heritage trip to this location in October, through a publicly advertised facebook event, the details of which can be found here:
  https://www.facebook.com/events/1480933065563682/?active_tab=discussion

  Couple of heritage enthusiasts who accompanied us on the trip also wrote blog posts about this site, after the trip.

  http://indiancolumbus.blogspot.com/2016/04/chitrambakkam.html
  http://veludharan.blogspot.in/2015/10/the-cooum-cultural-mapping-on-day-trip_13.html

  I had included this site in my book The Gods of the Holy Koovam published on February 12, 2017 on Page 19 where clearly the source from where the inscription was read is mentioned.

  The book was released by Mr K Sridharan of the State Archaeological Department and all proceeds of the same were given to support the Madras Literary Society library. A number of print, digital and visual media covered the event and wrote about it. All the books have since been purchased and those who hold copies can also verify this information there.

  https://www.facebook.com/events/1116962951764923/

  Notably among that was Dinamalar which had written about the book launch and also mentioned the Sitrambakkam inscription in their coverage.

  The reporter Mr Sivakumar had requested for more information on the Cooum temples so that he can do his bit in conserving them. Therefore, I first sent an article on the Kesavaram temple which was correctly published by Dinamalar. It did bring a lot of attention from the ASI to the temple, which was heartening to see,

  Wanting to protect the Selliamman temple inscription too, that lay in the open, I wrote an article on it and sent it to Sivakumar, which I reproduce below.
  அன்புள்ள திரு சிவகுமார் அவர்களுக்கு,

  தங்களிடம் தொலைபேசியில் குறிப்பிட்டபடி சிற்றம்பக்கத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த முதல் கட்டப்பட்ட கோவிலின் கல்வெட்டை பற்றிய தகவல்களை கீழே கொடுத்துள்ளேன். உங்கள் முயற்சியின் மூலம் இக்கல்வெட்டு பாதுகாக்கப்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  தென்கரணை என்று அழைக்கப்பட்ட சிற்றம்பாக்கம் கிராமம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு பல்லவர் காலத்தை சேர்ந்த கும்பேஸ்வரர் ஆலயம் சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அருகே அமைந்த ஒரு சிறிய கோவில் தான் செல்லியம்மன் ஆலயம்.

  இக்கோவிலின் வாசலின் மலரின் இதழ்கள் வரையப்பட்ட ஒரு கல் கிடக்கிறது. இக்கல் அக்கோவிலின் வாசற்படியாகவும் ஆடுகளும் மனிதர்களும் அமர்ந்து ஓய்வெடுக்கும் சிறு மேடையாகவும் விளங்கும் இந்த கல்லில் தான் இது வரையில் கண்டறியப்பட்ட முதல் கட்டப்பட்ட கோவிலின் தகவல்கள் உள்ளன.

  பல்லவர்கள் காலத்தில் பெரும்பாலும் குடைவரைகளே அமைக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முதலாக ஒரு கோவில் கட்டப்பட்ட செய்தியை தெரிவிக்கும் கல்வெட்டு இது. மேலும் பெரும்பாலான பல்லவர்கள் கல்வெட்டுகள் பல்லவ கிரந்தத்தில் சமஸ்க்ரிதத்தில் அமைந்திருந்த போது வெகு சில கல்வெட்டுகள் தமிழில் காணப்படுகின்றன. வல்லம் குகையில் உள்ள முதலாம் மஹேந்திரவர்மன் கல்வெட்டு மற்றும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள முதலாம் நரசிம்மவர்மன் கல்வெட்டு போல இதுவும் தமிழில் காணப்படும் சிறப்பு பெற்றது.

  முதலாம் பரமேஸ்வரவர்மனின் முதல் ஆட்சி ஆண்டை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது கி.பி.670 ஆம் ஆண்டாகும். இக்கல் 29 அங்குல நீளமும் 28.5 அங்குல அகலமும் உடையதாக விளங்குகிறது. மத்தியில் மலரின் இதழ்கள் போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விதழ்களை சுற்றி இரண்டு வட்டங்கள் ஒன்றின் உள் ஒன்றாக செதுக்கப்பட்டுள்ளன.
  இந்த உருவத்தை சுற்றி எழுத்துக்கள் காணப்படுகின்றன. மொத்தம் ஆறு வரிகள் கொண்ட கல்வெட்டில் முதல் இரண்டு வரிகள் மேற்புறமும் அடுத்த இரண்டு வரிகள் வலப்புறமும் செதுக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது வரி கீழேயும் ஆறாவது இடப்புறமும் காணப்படுகின்றன.

  இக்கல்வெட்டு ஒரு காலத்தில் செல்லியம்மன் கோவில் பெரியதாக இருக்கும் பொழுது அதன் சுவற்றில் இருந்திருக்க வேண்டும்.

  இதன் வரிகள்
  1. ஸ்ரீ மஹாராஜ பரமேஸ்வர வர்மர்க்கு யாண்டு தலைத்தா
  2. வது துணங்கிலவருள் ஆலவாயில் சோமாசியா
  3. ரு மருமகன் கும(ரன் )
  4, ..டுப்பித்த கோ (வில்)
  5,………..அழி (வு)ம் செ
  6. ய்தார் தரும வேற்க

  இதிலிருந்த ஆலவாயில் என்ற ஊரை சேர்ந்த சோமாசியார் (சோமாஜியார் ) மருமகன் குமரன் என்பவன் எடுப்பித்த கோவில் என்ற தகவலை நாம் அறியலாம். ஆலவாயில் என்பது பொதுவாக மதுரையைக்குறிக்கும். இங்கும் அது மதுரை என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். அல்லது ஒரு வேளை தென்கரணைக்கு ஆலவாயில் என்ற பெயரும் இருந்திருக்கக் கூடும்.

  இவ்வாறு இதுவரையில் கிடைத்த முதல் கட்டப்பட்ட கோவிலை குறித்த தகவல் கூறும் கல்வெட்டு இப்படி வெட்டவெளியில் பாதுகாப்பின்றி அசுத்தத்தில் கிட க்கவிடாமல் அரசும் தொல்லியல் துறையும் பாதுகாக்க வேண்டும்.

  இப்படிக்கு

  பிரியா பாஸ்கரன்

  I had also attached the Epigraphia Indica pages for him to get the complete information.

  Sadly the reporter had neither referred the references or my document properly and this was the report he produced, completely missing the appeal for conservation and protection of the inscription,and assuming it was a new discovery.

  I was shocked to see this and several people including Dr Sankaranarayanan and Mr KRA Narsiah contacted me to find out what had happened, as they had been involved in the process right from the beginning.

  I spoke to the reporter and pointed out his mistake and asked him to issue a corrigendum and apology. Not wanting to mess up the newspaper’s reputation and probably his job, he further added to the problem by coming up with something like this:

  One Mr Vedham Vedhaprakash went one step higher, condemning me of seeking cheap publicity. He also used my personal images and details without permission to write a series of hate posts, in the name of heritage interest, without bothering to verify facts.

  https://indianhistoriographymethodology.wordpress.com/2017/04/24/researcher-should-acknowledge-the-sources-before-making-claims/

  After I spoke to him and clarified, he did make some edits to the content of his post, but has chosen to delete my comment on his post and has not taken it off. Obviously he is seeking publicity from a mistake that Dinamalar made because of which my credibilty has been questioned. https://www.facebook.com/permalink.php?story_fbid=443861985949195&id=100009761916382&comment_id=443886649280062&notif_t=like&notif_id=1493029909257430

  His post may be one I saw. There may be several I did not. This is a post to clarify the facts as they stand and pinpoint Dinamalar and the reporter for their folly. Such irresponsible reporting not just damages the reputation of enthusiasts but also puts them off such volunteer activity in the future.

  For three years, I slogged hard to document the heritage sites along the Cooum, brought out the book and gave all the proceeds to start a Tamil section in the MLS library which is one of the heritage landmarks along the Cooum. Despite my sincere efforts, this irresponsible act of Dinamalar has slung mud on all my hard work. I am documenting this for future records and reference of net experts who rely on what they lay their eyes on the internet, and make large comments without bothering to verify facts.

 4. vedaprakash Says:

  With reference to your comments,

  “One Mr Vedham Vedhaprakash went one step higher, condemning me of seeking cheap publicity. He also used my personal images and details without permission to write a series of hate posts, in the name of heritage interest, without bothering to verify facts.”

  Here, I want to clarify as follows:

  1. In spite of the facebook correspondence, I note that you and your friends have chosen to attack me in your own style.

  2. Your dubbing me “to write a series of hate posts” is false and obviously, you are lying.

  3. Your comments that I write ………”in the name of heritage interest” etc., is ridiculous, as my writings and postings appear in public vouchsafe what I stand for.

  4. The blog has been prepared and posted with all relevant supporting materials and foot notes [spending 3 to 5 hours].

  5 All material including the so-called your “personal images and details” are available in public domain accessible to all.

  6. I used only one photo [not images, as you record, that too “personal”] as appearing here:
  http://lessonslearned.in/lessons-learned-heritage-blogging/

  7. So I do not understand what permission I require to use from you. If anything has to be obtained, you inform the required and it shall be done, as I always write, blog and post with sources.

  8. As I have bee bothered about Indian culture, heritage, tradition, civilization, history, historiography etc., I have been writing / blogging for the last 40 / 15 years.

  9. “Obviously he is seeking publicity from a mistake that Dinamalar made because of which my credibilty has been questioned.” – as for as these comments, I clarify I do not require any publicity, as I have been writing / blogging just to convey, contribute and propagate the facts.

  10. The problem you have with “Dinamalar” or its reporter etc., are your issues. As long as the news stands in the public domain, whoever reads, they understand only what it conveys.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: