தமிழ்நாடு சரித்திரப் பேரவை– 25வது கருத்தரங்கம் சென்னையில் 5, 6 7 தேதிகளில், மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்றது – நாத்திகவாதிகளின் பேச்சு [3]

தமிழ்நாடு சரித்திரப் பேரவை– 25வது கருத்தரங்கம் சென்னையில் 5, 6 7 தேதிகளில், மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்றது – நாத்திகவாதிகளின் பேச்சு [3]

Cases on anti-hindu karu

பிரமாணஎதிர்ப்பு, பிராமணதுவேசம் பிராமணர் மீதான தாக்குதல் போன்ற சித்தாந்தம் [anti-brahmin / anti-brahminism] மற்றும் பிரமாணர் அல்லாத இயக்கம் [non-brahmon /  non-brahminism]: மானிய விளக்கவுரை [endowment lecture] என்ற பெயரில் பேராசிரியர்கள் பி.ஜகதீசன், விஜயா ராமசாமி மற்றும் ஜி. வெங்கட்ராமன் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிராமணத்துவம் அல்லாத சித்தாந்தம் மற்றும் சுயமரியாதை இயக்கம் நவீன தமிழ்நாட்டில் உருவானதைப் பற்றிய நுண்ணிய ஆய்வு [Evolution of the ideology of Non-Brahminism and Self-respect in modern Tamilnadu – Reasons and provocations – Ana Alalytical study] என்ற தலைப்பில் ஜகதீசன் பேசும் போது, பொதுவாக ஏற்கெனவே தெரிந்த விசயங்களைத் தான் திரும்ப-திரும்பச் சொன்னார். பிரமாண-எதிர்ப்பு, பிராமண-துவேசம் பிராமணர் மீதான தாக்குதல் போன்ற சித்தாந்தம் [anti-brahmin / anti-brahminism] மற்றும் பிரமாணர் அல்லாத இயக்கம் [non-brahmon /  non-brahminism] என்பதை வித்தியாசப் படுத்திக் காட்ட ஒரே வரியில் சொன்னாலும், இன்று வரை நடக்கும் நிகழ்வுகள் [பிராமணர்களை அறிவாளால் வெட்டியது, பூணூல் அறுப்பு, பன்றிக்குப் பூணூல் போன்றவை[1]] அவர் மழுப்புகிறார் என்று அப்பட்டமாகவே வெளிக் காட்டியது. மேலும் பிராமணத்துவம் அல்லாத சித்தாந்தம் / மனித நேயம் [Humanism] என்று சொதப்பினார். தான் அவ்வாறு தலைப்பிட்டதாகக் கூறிக் கொண்டாலும், தலைப்பு மேலே குறிப்பிட்டது போலத்தான் இருந்தது. “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டு, பார்ப்பானை கொல்,” என்று ஈவேரா சொன்னது, முதலியவற்றை  யாரும் மறந்து விட முடியாது. ஏதோ “மழுப்பல்வாதம்” செய்கிறார் என்றுதான் வெளிப்பட்டது.

SIHC- endowment speakers

பெண்மை பேசிய திராவிட சித்தாந்திகள் பெண்மையை மதிக்கவில்லை: விஜயா ராமசாமி, இந்திய சரித்திரத்தில், பெண்களின் வாழ்க்கை மற்றும் சுயசரிதை எழுதும் பாரம்பரியங்கள்: நீலாம்பிகை அம்மையார் [Gendering the Traditions of Writing Biographies and Autobiographies in Indian Hitory: Special focus on Neelambigai Ammaiyar] என்ற தலைப்பில் பேசியதில், மறைமலை அடிகளின் மகளான நீலாம்பிகை அம்மையார் எந்த சுயசரிதையினையும் எழுதவில்லை என்று எடுத்துக் காட்டினார். எவ்வாறு நீலாம்பிகையின் உணர்வுகள் தந்தையால் மதிக்கப்படவில்லை, பணம் இல்லாமல் அவதி பட்டார் போன்றாவற்றைக் குறிப்பிட்டார். தான் எழுதப் போகும் வாழ்க்கை சரித்திரத்தின் முயற்சிகளைப் பற்றிதான் அதிகமாக விவரித்துப் பேசினார். பெண்மை பேசிய திராவிட சித்தாந்திகள் பெண்மையை மதிக்கவில்லை என்ற உண்மைதான் தெரிய வந்தது. பிறகு V. வெங்கடராமன், பிரித்தானியரும், ஆங்கிலேயரும்: சத்தியாகிரகப் போராட்டத்தைப் பற்றிய ஐரோப்பிய ஆதரவு அறிவுஜீவிகளின் போக்கு [British vd English: Pro-Gandhian attitude of the European Elites in the Civil Disobedience Movement in Tamilnadu] என்ற தலைப்பில் பேசினார். இவரது பேச்சிலும், ஏற்கெனவே தெரிந்த விசயங்களைப் பற்றிதான் தெரிய வந்தது. அரைத்தமாவையே, இப்படி ஏன் வெவ்வேறு முறைகளில் அரைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்குப் பிறகு இரவு உணவுடன் முதல் நாள் நிகழ்சி நிறைவடந்தது.

SIHC- Jadadeesan, Naganathan, Karunanandan

06-10-2018 – இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள்: ICHR மானியத்தில் பல்கலை. F-50 அறையில் 9.30 முதல் 11.30 am வரை நடைப் பெற்ற சிம்போசியத்தில் “19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூகமாற்றம்” [Social transformation in Tamilnadu during 19th and 209th centuries] என்ற தலைப்பில் பேச்சு-உரைகளை என். ராஜப்பன், ஏ. கருணானந்தன் மற்றும் சுப.வீரபாண்டியன் பேசினர்.  ராஜப்பன் பெரும்பாலும் கேரள உதாரணங்களைக் கொடுத்து தமிழக நிலையில் பேசினாலும், சமூகமாற்றத்தைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. ‘பிணம் தழுவுதல்’ பற்றி பேசினார். அது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்துள்ள சடங்கு என்று கூறப்படுகிறது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்களாம். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தைத் தழுவி வர (உடலுறவு கொள்ள) வேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்களாம். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை. மலைநாட்டில் இவ்வழக்கம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது[2]. கூறப்படுகிறது. அனுப்புவார்களாம். செய்வார்களாம். என்ற தோரணையில் உள்ளதே தவிர உறுதியாக இப்பொழுதும் பின்பற்றப் படுகிறது என்பதை சொல்லவில்லை. பிறகு, “பிணம் உண்ணுதல்” என்று அகோரிகளைப் பற்றி குறிப்பிட்டார். அகோரி போல உடலை ஒருவர் வீட்டில் வைத்திருந்தார் என்றார். அதாவது 30 கோடி மக்களில் ஒருவர்-இருவர் செய்வதை – அதையும் உறுதியாகத் தெரியாமல் நாளிதழ்களில் வரும் செய்திகளை வைத்துக் கொண்டு, இவர் பேசிய விதம், வியப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், சரித்திராசிரியர், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் போது முதன்மை ஆதாரங்கள் [Primary evidences] தேவை என்றெல்லாம் வற்புருத்தப் படும் போது, இவர் எப்படி, இவ்வாறு பேசலாம் என்று தெரியவில்லை.

SIHC-ICHR member, Nandita Krishna

நந்திதா கிருஷ்ணனை விமர்சித்து, அவரையே அழைத்து விழா நடத்தியது: ஏ. கருணானந்தன் என்பவர் பேசும் போது முதலிலேயே தான் பெரியாரிஸ, நாத்திக கொள்கைகளுக்கு சுப.வீரபாண்டியன் போன்றவுடன் ஒத்துப் போவதாக ஒப்புக் கொண்டு ஆரம்பித்தார். சபரிமலை நுழைவு தீர்ப்பை எதிர்த்து, கேரளாவில் பெண்கள் நடத்திய போராட்டதை விமர்சித்தார். சத்தியமூர்த்தி, தேவதாசி முறையை எதிர்த்தபோது, தேவதாசிகளை வைத்து எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். அதுபோலத்தான் இதுவும் உள்ளது என்றார். சோழர்களை பார்ப்பன அடிவருடிகள் என்றார். மார்க்சிஸ்ட் சித்தாந்த விளக்கம் தேவை என்று ஒப்புக் கொண்டு, இந்துவிரோத கருத்துகளை வெளியிட்டார். திருக்குறளில் உள்ள பல கருத்துகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிறார்.  சரித்திர பேராசிரியர், விவேகானந்த கல்லூரியில் சரித்திரத் துறையின் தலைவர் என்று குறிப்பிடப் படுகிறார். ஆனால், இவரது பேசுவதெல்லாம் விசித்திரமாக உள்ளது. அதாவது, எதிர்மறையாக பேசி வருவது தான். சரி இவர் யார் என்று பார்த்தால், திராவிட கழகம், தீவிர இடதுசாரி குழுக்கள், நக்சலைட் அமைப்புகள் முதலிய கூட்டங்களில், கருத்தரங்களில், இந்தியவிரோத, இந்துவிரோத, மக்களைப் பிரிக்கும் சித்தாந்த ரீதியில்   பேசியிருப்பதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு இந்த வீடியோவை கேட்கலாம்[3]. ஆகவே, தன்னுடைய “விவேகானந்த கல்லூரி” ஊன்றுகோலை வைத்துக் கொண்டு, அந்த ராமகிருஷ்ண-விவேகானந்தர் கொள்கைகளுக்கு எதிராக பேசிவருவதும் திகைப்பாக இருக்கிறது. 29-05-2014 அன்று “கால்டுவெல் படத்திறப்பு” விழாவில், “நந்திதா கிருஷ்ணா என்ற ஒரு அம்மா” என்று கிண்டலடித்து பேசினார்[4].  ஆனால், இன்றோ, அதே நந்திதா கிருஷ்ணனை வைத்து, நிறைவு விழா நடத்தியுள்ளது, வேடிக்கையாக இருக்கிறது.

SIHC- Suba veerapandian spoke

சுப.வீரபாண்டியன் தமிழில் பேசியது[5]: பரந்த இந்தியாவில் ஜாதியம் பரவியுள்ளது. நிறவெறி மற்றும் ஜாதிய உணர்வுகள் பெண்ணியத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி பேசுவதாக அறிவித்தார். பொதுவாக கருப்பு நிறப் பெண்களை விட, சிவப்பு நிறப்பெண்களை மக்கள் விரும்புவதாகக் கூறினார். ஏழையாக இருந்தாலும் சிவப்புநிற பெண்களுக்கு சீக்கிரமாக திருமணம் நடந்து விடுகிறதே! ஏன்? கண்ணாங்கரேல் என்று இருக்கிற ஆண் கூட, செக்கச்செவேல் என்றிருக்கும் பெண்ணை தான் விரும்புகிறான். உண்மைதானே..என்னையும் சேர்த்து பேசுகிறேன். எல்லோருக்குமே சிவப்புநிறத்தின் மீது ஏற்பட்டுள்ள ஒரு வேட்கையல்ல, அந்த அடிமைத்தனத்தின் இன்னொரு வடிவம். சிவப்பு உயர்ந்தது என்று நம் மனத்தில் பதிந்து விட்டது என்பதன் வெளிப்பாடு அது. ஆனால், மேலைநாட்டு நிறவெறிக்கும், நமது நிறவெறிக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. அங்கு வெள்ளையாக இருப்பவன் கருப்பனாக இருப்பவனைப் பார்த்து கேலி செய்கிறான். இங்கோ கருப்பாக இருந்து தொலைக்கிற இவனே இன்னொரு கருப்பனை கேலி செய்கிறான்…அவ்விசயத்தில் நாமும் விதிவிலக்கல்ல [நிறவெறி நமக்கும் இருக்கிறது] என்று ஒப்புக் கொண்டார். “ஆண்டபரம்பரை” என்றெல்லாம் பேசிவிட்டு, பிறகு, “பிற்பட்ட ஜாதிபட்டியில் சேர்க்கப் பட வேண்டும்” என்று தான் கோரிக்கை வைக்கின்றனர். பள்ளன், பறையன், போன்றோர் மேலே வந்து விட்டாலும் டாக்டர் வீடு இன்ஸ்பெக்டர் வீடு என்று சொல்வதற்கு மாறியுள்ளது. கௌரவ கொலை / ஆணவகொலை நம்மிடத்தில் உள்ளது.  ……..

© வேதபிரகாஷ்

09-10-2018

A. Karunanandan, atheist, anti-hindu, naxalite

[1] இதைப் பற்றியெல்லாம் என்னுடைய பிளாக்குகளில் விளக்கமாக கடந்த வருடங்களில் எழுதி, பதிவு செய்துள்ளேன்.

[2] http://yogiperiyasamy.blogspot.com/2016/05/blog-post_18.html

[3]http://www.viduthalai.in/component/videoflow/?task=play&id=518&sl=search&layout=listview&start=252

[4]http://www.viduthalai.in/component/videoflow/?task=play&id=518&sl=search&layout=listview&start=252

[5]துண்டு அரசியல், சுபவீ பேச்சு – 06-10-2018 அன்று மெட்ராஸ் யூனிவெர்சிட்டியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை சார்பாக ஆய்வரங்கம் நடைபெற்றது இதில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் – http://www.viduthalai.in/component/videoflow/?task=play&id=518&sl=search&layout=listview&start=252

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “தமிழ்நாடு சரித்திரப் பேரவை– 25வது கருத்தரங்கம் சென்னையில் 5, 6 7 தேதிகளில், மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்றது – நாத்திகவாதிகளின் பேச்சு [3]”

  1. M. Nachiappan Says:

    ’தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக்கெல்லாம் சுப.வீ.தான் சாட்சி’ இறங்கி அடிக்கும் கவிஞர் தாமரை

    By Sathish KFirst Published 11, Oct 2018, 4:30 PM IST
    lyricist, writer Thamarai Post against Suba Veerapandian

    ’இன்ஸ்பெக்டர் ஒரு புகார் கொடுக்க வந்திருக்கேன்’ ‘தப்பு நடந்து 14 வருஷம் ஆச்சா’ என்ற ட்வீட் தற்போது வரலாகி வருகிறது.

    ’இன்ஸ்பெக்டர் ஒரு புகார் கொடுக்க வந்திருக்கேன்’ ‘தப்பு நடந்து 14 வருஷம் ஆச்சா’

    என்று திமுகவின் மேல் இருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால் கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் போட்ட ட்விட்டால் வலைதள வட்டாரங்களில் நேற்றுமுதல் அறுத்துக் கிழித்து தொங்கவிடப்பட்டுக்கொண்டிருக்கிறார் பேராசிரியரும் திமுக விசுவாசியுமான சுப.வீரபாண்டியன்.

    அவர்களின் தொடர்ச்சியாக பேரசிரியர் மீது பெரும் தாக்குதல் நடத்தியிருக்கிறார் கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை.

    இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ,’ இன்னுமா இந்த சுப.வீயையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். சுப.வீ.யும் தியாகுவும் தமிழ் தமிழர் இயக்கத்தில் பொதுச்செயலாளர், தலைவர் என ஒன்றாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தார்கள். தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக்கெல்லாம் அன்னார் சுப.வீதான் சாட்சி. மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, தூற்றுவது எல்லாம் கைவந்த கலை இவர்கள் இரண்டு பேருக்கும்…

    இயக்கத்தின் பேரால் இரண்டுபேரும் நடத்திய அழிச்சாட்டியங்களுக்கெல்லாம் நானே வாழும் சாட்சி’ என்று குமுறிக்கொட்டியிருக்கிறார் தாமரை.

    வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கியதை ஒட்டி, அடுத்து யாருக்கும் பதில்கள் கனத்த மவுனத்தோடு அலைகிறார் சுபவீ.

    https://tamil.asianetnews.com/crime/mansoor-ali-khan-3-wife-attaced-by-2-ud-wife-pgb95v

பின்னூட்டமொன்றை இடுக