Posts Tagged ‘ஆசிரியர் கடிதம்’

பாரம்பரிய கட்டடங்கள் என்று போலிவேடம் போட்டு ஏமாற்றும் முத்தையா போன்றவர்கள் வெளிப்படுகிறார்கள்

மே4, 2010

பாரம்பரிய கட்டடங்கள் என்று போலிவேடம் போட்டு ஏமாற்றும் முத்தையா போன்றவர்கள் வெளிப்படுகிறார்கள்

சரித்திரம், சரித்தரம் எழுதும் முறை, சரித்திர வரைவியல் என்றேல்லாம் சொல்லும் போது, அத்தகைய வேலையில், தொழிலில், கடமையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாரபட்சம், உண்மைகளை மறைக்கும் போக்கு, ஆதாரங்களை ஒதுக்கும் பாங்கு முதலியவை இருக்கக் கூடாது.

பாரம்பரியம், கலாச்சாரம், பன்பாடு, நாகரிகம் என்றெல்லாம் பார்க்கும் போதும், அத்தகைய பேத பாவங்கள் இருக்கக் கூடாது.

ஆனால், பணம், பதவி, பட்டம், சலுகைகள், வசதிகள், உல்லாச வாழ்க்கை,……………….இலவசமாக சில கிடைக்கின்றன எனும்போது, இக்கால எழுத்தாளர்கள், சரித்திர ஆசிரியர்கள், சரித்திர வரைவியலில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் தார்மீக, தொழிற்-நெறிமுறைகள், கண்ணியம் முதலியவற்றை அடகு வைத்துவிட்டு வேலைசெய்யும் போக்குதான் முத்தையா போன்ற எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது.

ஐரொப்பிய காலத்தைய கட்டடம் / கட்டிடம் இடிக்கப்படுகிறது என்றால், உடனே வரிந்து கட்டிக் கொண்டு வந்து, “தி ஹிந்து” மற்றும் “மெட்ராஸ் ம்யூஸிங்ஸ்” முதலியவற்றில் எழுதித் தள்ளீவிடுவார். ஆனால், மற்றவை இடிக்கப் பட்டால் கண்டுகொள்ளமாட்டார்.

அத்தகைய போக்கு உண்மைகளை மறைப்பதுடன், வருங்கால சந்ததியர்களுக்கு நாம் செய்யும் மாபெரும் துரோகமும் இருக்கிறது என்பதை எழுதுபவர்கள் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆர். முத்தைய்யா என்பவர் “தி ஹிந்து”வின் பாரம்பரிய கட்ட்டிடங்கள், ஐரொப்பியர்களால் கட்டப் பட்ட கட்டிடங்கள், சென்னை வரலாறு என்பது போன்ற விஷயங்களைப் பற்றி எழுதி வரும் ஆஸ்தான எழுத்தாளர்.

இவருக்கு அத்தகைய கட்டிடங்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும், மற்றவை தெரியாது. ஐரோப்பியர்-அல்லாத-கட்டிடங்கள் / கட்டுமானங்கள், நினைவிடங்கள் இடிக்கப் பட்டால், பழுதடைந்தால், சிதலமடைந்தால்…………….அதைப் பற்றிக் கவலை இல்லை. எதுவும் எழுதமாட்டார். ஆய்வரங்களில் மூச்சுக் கூட விடமாட்டால். கேள்விகள் கேட்டாலும், பதில் சொல்லாமல், காரில் ஏரி பறந்து விடுவார். அப்படியொரு “சரித்திர ஆசிரியர்”!

யாழ்ப்பாணம், நல்லூர் ஆறுமுக நாவலர் வித்தியாநுபாலன அச்சகத்தை ஆரம்பித்து பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

அந்த  அச்சகம் நெ.300, தங்கசாலைதெ தெரு, சென்னையில் 1980கள் வரை இருந்தது.

ஒரே ஒரு ஆள் இருப்பார், வந்தவர்கள் புத்தகங்களைக் கேட்டால் எடுத்து கொடுப்பார்.மிகவும் பழையதாக இருந்தாலும் சரிசெய்து கொடுப்பார். அந்த காலத்தில் ஆறுமுக நாவலரே வாங்கிய அச்சு யந்திரங்கள் கூட அங்கு இருந்தன.

ஆனால், அந்த கட்டடம் இப்பொழுது மறைந்து விட்டது.

ஏன் தமிழ் பெயர் சொல்லும் தமிழாளிகள், தமிழிற்காக உயிர் விடுகிறேன் என்று ஊலையிடும் கோஷ்டிகள் கவலைப் படவில்லை, ஏன் கண்டு கொள்ளாவே இல்லையே?

நடு-நடுவே, வேண்டுமென்றே கிருத்துவ மோசடி கும்பல் பரப்பி வரும் தாமஸ் கட்டுக் கதைகளுக்கு பேராதரவு கொடுப்பார். என்ன இது இப்படி பொய்யாக எழுதுகிறீர்களே, என ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி “ஆசிரியர் கடிதம்” / அவருக்கேக் கடிதம் எழுதினாலும் கண்டுக் கொள்ளப் படாது. அப்படி பட்ட “சரித்திர ஆசிரியர்”!

சென்னையில் கோகலே ஹால் இடிப்பு விவகாரத்தில், கோர்ட் உத்தரவின்றி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என, ஐகோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது. சென்னை பிராட்வேயில் கோகலே ஹால் உள்ளது. இதை இடித்து விட்டு புதிதாக கட்டடம் எழுப்ப ஒய்.எம்.ஐ.ஏ., அமைப்பு நடவடிக்கை எடுத்தது. அதன்படி கட்டடத்தை இடிப்பதற்கான பணிகள் துவங்கின. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ’90 ஆண்டுகளுக்கும் மேலானது இந்தக் கட்டடம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் இங்கு கூடி பேசியுள்ளனர். எனவே, இதற்கு விடுதலைப் போராட்ட முக்கியத்துவம் உள்ளது. இந்தக் கட்டடத்தை இடிக்கக் கூடாது. தடை விதிக்க வேண்டும்’ என கோரினார். இதையடுத்து, இந்தக் கட்டடத்தை இடிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், ஜனார்த்தனராஜா அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. ஒய்.எம்.ஐ.ஏ., சார்பில் ஆஜரான வக்கீல், ‘தற்போது புதிய தலைவர் பொறுப்பேற்றுள்ளார். கட்டடத்தை ஆய்வு செய்த பின் முடிவெடுக்கப்படும். புராதன பாதுகாப்புக் குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது. குழுவின் பரிந்துரைகள் அவசியம். கோர்ட் உத்தரவின்றி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்’ என்றார். பின், விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ‘டிவிஷன் பெஞ்ச்’ தள்ளிவைத்தது.

புராதன கட்டடங்கள், இடங்களை பாதுகாக்க ஐகோர்ட் உத்தரவு
மே 06,2010,00:00  IST

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள புராதன கட்டடங்கள், இடங்களை பாதுகாக்க, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட் டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி., கட்டடம் அருகில் பாரத் இன்சூரன்ஸ் பில்டிங் உள்ளது. கார்டில் பில்டிங் என முன்னர் அழைக்கப்பட்டது; 1897ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இந்தக் கட்டடத்தின் உரிமையாளர் எல்.ஐ.சி., நிறுவனம். இந்தோ – சாராசெனிக் கட்டடக் கலைக்கு இந்த பில்டிங் ஒரு சிறந்த உதாரணம். கட்டடக் கலை மற்றும் பாரம் பரிய புராதன பாதுகாப்புக்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) பட்டியலிட்டுள்ள புராதன கட்டட பட்டியலில், கிரேடு-ஏ வரிசையில் பாரத் பில்டிங் வருகிறது. இந்தக் கட்டடத்தின் பல பகுதிகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. மோசமான நிலையில் கட்டடம் இருப்பதால், வாடகைக்கு இருந்தவர்களை வெளியேறுமாறு எல்.ஐ.சி., தரப்பில் நோட் டீஸ் அனுப்பப்பட்டது. பாரத் இன்சூரன்ஸ் பில்டிங்கை இடிப்பதற்கு பரிசீலிப்பதாகக் கருதிய ‘இன்டாக்’ அமைப்பு, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

புராதன கட்டடத்தை பாதுகாக்க வேண்டுமென அம் மனுவில் கோரப்பட் டது. ஐகோர்ட் உத்தரவுபடி, நிபுணர்கள் குழு இந்தக் கட்டடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. கட்டடத்தை புதுப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அறிக்கையில் கூறப் பட்டது. புராதன கட்டட பாதுகாப்பு குழுவை அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த மாதம் குழுவை அரசு நியமித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், ஜனார்த்தனராஜா அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. ‘இன்டாக்’ சார்பில் வக்கீல் என்.எல். ராஜா, சி.எம்.டி.ஏ., சார்பில் வக்கீல் பரந்தாமன், சென்னை மாநகராட்சி சார்பில் வக்கீல் பாரதிதாசன், எல்.ஐ.சி., சார்பில் சீனியர் வக்கீல் சோமயாஜி, வக்கீல் பார்த்திபன் ஆஜராகினர்.

‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: சென்னை பெருநகர பகுதிக்கான வளர்ச்சி கட்டுப்பாட்டு விதியை பின்பற்றாமல், பாரத் இன்சூரன்ஸ் கட்டடத்தை இடிப் பதற்கு எல்.ஐ.சி.,க்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டடத்தின் மதிப்பை ஆராயவும், கட்டடத்தை அப்படியே வைத்திருப்பதற்கான சாத் தியக் கூறுகளையும் புராதன பாதுகாப்புக் குழு ஆராய வேண்டும். முடிந்தவரை, இக்கட்டடத்தை பாதுகாக்க வேண்டும். புராதன பாதுகாப்புக் குழுவிடம் சி.எம்.டி.ஏ., மற்றும் சென்னை மாநகராட்சி கலந்து ஆலோசித்து, கட்டடத்தை முழுவதுமாக இடிப்பதில் இருந்து பாதுகாக்க உத்தரவிட வேண் டும். அல்லது கட்டடத்தில் எவ் வளவு பகுதியை பாதுகாக்க முடியுமோ அதை செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இந்த முடிவை எடுக்க வேண்டும். முழு கட்டடத்தையும் அப்படியே வைத்திருக்க முடியாது என புராதன பாதுகாப்புக் குழு கருதினால், அதில் உள்ள சிறு கோபுரங்கள், கல் தூண்கள் உள்ளிட்ட முக்கியமான அம்சங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும். முதல் ஹாலை வைத்து விட்டு மீதியுள்ள நிலத்தில் எல்.ஐ.சி., விரும்பியபடி மேம்பாடுகளை செய்து கொள்ள ஆராயலாம். புராதன கட்டடங்களின் பட்டியலை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு புராதன பாதுகாப்புக் குழு பரிந்துரைக்க வேண்டும்.

நீதிபதி பத்மநாபன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட் டீஸ் அனுப்ப வேண்டும். அப்போது தான், அந்த கட்டடங்களை இடிக்கவோ, மாற்றம் செய்யவோ, புராதன மதிப்பை குறைக்கும் வகையிலோ எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள். நீதிபதி பத்மநாபன் அறிக்கையில், கிரேடு-2ஏ, 2 பி, கட்டடங் களை அரசு பட்டியலிட வேண் டும். அந்தக் கட்டடங்களை புராதன கட்டடங்களாக அறிவிப்பது தொடர்பாக குழுவின் கருத்தை பெற வேண்டும். நீதிபதி அறிக்கையில் உள்ள கட்டடங்களை எப்படி பாதுகாப்பது, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக எப்படி கண்டறிவது என, புராதன பாதுகாப்புக் குழு ஆராய்ந்து, உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அப்போது தான், சென்னையில் வசிப்பவர்களுக்கும், சுற்றுலா வாசிகளுக்கும் புராதன கட்டடம் பற்றி தெரிய வரும். புராதன கட்டடங்கள், இடங் கள் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் அவற்றை பாதுகாக்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

கோவையில் 150 ஆண்டு பழமை வாய்ந்த, ‘குதிரை வண்டி கோர்ட்’ சமூக விரோதிகளின் அடைக்கலமாக உள்ளது. நீதிபதி பத்மநாபன் தலைமையிலான குழு தயாரித்த இந்த அறிக்கை பிரமாதமாக உள்ளது. எங்கள் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். இவ்வாறு ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

# ஆனால், அவஎருக்கு மற்ற கட்டடங்கள், நினைவு சின்னங்களைப் பற்றிக் கவலையில்லை!

# இராமலிங்க அடிகள் சென்னையில்தான் இருந்தார். அவருடன் சம்பந்தப் பட்ட பல கட்டடங்கள் இருந்தன.

# “தியாகராஜர்” பெயரைச் சொல்லிக் கொண்டு லட்சங்களை, கோடிகளை பணம் பண்ணும் கோஸ்ட்கள் இருக்கின்றன. ஆனால், அவர் சென்னையில் வந்து தங்கிய கட்டடம் எங்கே?

# “சென்னையிலே திருவையாறு” என கதறும் அந்த போலிகளுக்கு இதைப் பற்றித் தெரியுமா? தெரிந்தால் ஏன் இப்படி மௌனமாக இருந்தார்கள்?

# அருணகிரிநாதர் வந்த கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவிலில்வழிபட்டுச் சென்றார். அந்த கோவில் எங்கே?

# திருஞான சம்பந்தர் சென்னைக்கு வந்து பூம்பாவை பதிகம் பாடி, உயிரெழுப்பினார். அந்த இடம் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் இருந்தது. அது எங்கே?

# விவேகானந்தர் வந்தபோது, தங்கிய இடங்கள் எங்கே?

# சாரதா அம்மையார் சென்னைக்கு வந்தபோது தங்கிய இடங்கள் எங்கே?

# அம்பேத்கர் சென்னைக்கு வந்து தங்கிய வீடுகள் எங்கே? [அம்பேத்கர் பெரைச் சொல்லி வியாபாரம் செய்யும் கூட்டங்களுக்கு இது பற்றி யாதாவது தெரியுமா?]

இது மாதிரி லட்சத்திற்கும் மேற்பட்ட உதாரணங்களைக் கொடுக்க முடியும்.

உண்மையென்னவென்றால், தமிழனுக்குத் தனது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என்றால், கேவலமாக நினைக்கிறான். கேவலப் படுத்தினால் மகிழ்கின்றான். அத்தகைய நிலைக்குக் கொண்டு வைத்துள்ளனர், அந்நியர்களும், அவர்களின் அடிவருடி சித்தாந்தக் கூட்டங்களும்.