Posts Tagged ‘ஆதாரம்’

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – 27-12-2022 அன்று மோடி, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது (4)

திசெம்பர்30, 2022

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – 27-12-2022 அன்று மோடி, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது (4)

மதசார்பின்மை கதையும், வரலாறும்: வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது, “இந்த உண்மையான வரலாற்றை மறைத்து, தமிழர்களை ஏமாற்றும் தந்திரத்தைதான், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விமர்சித்திருப்பார் என நம்புகிறேன். என்னதான் தி.மு..வினர் மறைத்தாலும், உண்மை தான் இறுதியில் வெல்லும். அதுவும் இது, தகவல் தொழில்நுட்ப யுகம். இப்போது எதையும் மறைக்க முடியாது. இனம், மொழி வெறியைத் தூண்டி, குடும்ப அரசியலை நீண்ட காலத்திற்கு நடத்த முடியாது என்பதை தி.மு..வினர் உணர வேண்டும். காலம் அதனை நிச்சயம் உணர்த்தும். இதே மாநாட்டில் பேசும்போது, “மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைஎன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார். அவருக்கு ஓர் உண்மை வரலாற்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 1950-ல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அரசியலமைப்பின் முகப்புரையில்மதச்சார்பின்மைஎன்ற வார்த்தை சேர்க்கப்படவில்லை. 1975-ல் நாட்டில் நெருக்கடியை நிலையை அறிவித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, மிசா சட்டத்தின்கீழ், எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்து விட்டு, கொடுங்கோல் ஆட்சி நடத்தினார்எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிறையில் அடைத்துவிட்டு, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையை எல்லாம் முடக்கிவிட்டுதான், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை, இந்திரா காந்தி சேர்த்தார்.”

தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்; வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது, “இந்த வரலாற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், வரலாற்று காங்கிரஸ் மாநாட்டில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மதச்சார்பின்மைஎன்பது மதங்களைமறுப்பதுஅல்ல. அனைத்து மதங்களையும்சமமாகபேணுவதே. ஆனால், தி.மு..வின் மதச்சார்பின்மை என்பது, இந்து மதத்தற்கு மட்டும் எதிராக செயல்படுவது. அதனால்தான், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. இந்த மாநாட்டில், “பொய் வரலாறுகளை புறந்தள்ளி, மக்களை மையப்படுத்திய உண்மை வரலாறு எழுதப்பட வேண்டும்என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியதையே நானும் வலியுறுத்துகிறேன். தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் கட்டிய இந்து கோவில்கள் பற்றியும், அவர்கள் பின்பற்றிய இந்து தர்மம், கலாசாரம் பண்பாடு பற்றியும், ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகள், மொகலாய மன்னர்கள், சுல்தான்கள் ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்கள் பற்றிய வரலாறும் எழுதப்பட வேண்டும். இந்த உண்மைகளை எல்லாம் குறிப்பிட வாய்ப்பளிக்கும் வகையில், இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி,” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

27-12-2022 அன்று மோடி, பினாராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது[1]: கடந்த நவம்பர் மாதம், 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் படைகளை வென்ற லச்சித் பர்புகானின் 400-ம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி[2], “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்தியப் பார்வையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்நியர்கள் ஆட்சிக்காலத்து சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட வரலாறுதான் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. அந்நியர்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து, தியாகம் புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப நாட்டின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்என்றார். அதைத் தொடர்ந்து, டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆனால், இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றனஎன்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், “வீர பாலகர் தினம் என்பது இந்தியாவின் வீரம், தியாகம், சீக்கிய பாரம்பர்யத்தின் அடையாளம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு சம்கவுர், சிர்ஹிந்த் போர்கள் நடைபெற்றன. மதஅடிப்படைவாதத்தைப் பின்பற்றிய முகலாயப் படைகளுக்கு எதிராக நமது குருக்கள் துணிச்சலாகப் போராடினர். சீக்கிய குரு கோவிந்த் சிங்கும், அவரின் மகன்களும் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை. யார் முன்பும் தலைவணங்கவில்லை. கோவிந்த் சிங்கின் சிறுவயது மகன்கள் உயிருடன் சமாதி கட்டப்பட்டனர். ஒருபுறம் மிருகத்தனம், மறுபுறம் பொறுமை, வீரம் வெளிப்பட்டது,” என்றார்.

27-12-2022 அன்று கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும் இந்திய வரலாறு குறித்து சமீபத்தில் பேசியது: இவ்வாறு இந்திய வரலாறு குறித்து பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும் இந்திய வரலாறு குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பாறப்புறத்தில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய கேரளா முதல்வர், “சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் செய்தவர்களைத் துணிச்சலான தேசபக்தர்கள் என்றும், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் இன்றைய ஆட்சியாளர்கள் சித்திரித்துவருகின்றனர்” என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை விமர்சித்தார். “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பரிவாரங்களால் துணிச்சலான தேசபக்தர் என்று போற்றப்பட்ட சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு அந்தமான் சிறையிலிருந்து விடுதலை பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தை எந்தெந்த வழிகளில் சிதைக்கலாம் என்று சிந்தித்தார்கள். தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் முக்கியப் பங்கு வகித்தனர்” என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கேகூட இந்தக் கருத்தைக் குறிப்பிட்டார்.

27-12-2022 அன்று ஸ்டாலின் பேசியது: இந்தப் பின்னணியில்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். மேலும், “கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. அதை ஏற்கக் கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்” என்று பா.ஜ.க-வை மறைமுகமாகச் சாடினார் ஸ்டாலின். ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்ட வரலாற்று அறிஞர்களின் ஆய்வு நூல்களை பா.ஜ.க ஏற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களின் நூல்களையெல்லாம் மனதில் வைத்துத்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசுகிறார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 1990களில் சரித்திராசிரியர்கள் வேறுபட்டு சண்டை போட்டுக் கொண்டனர். இப்பொழுது அவர்களில் பாதி பேர் காலமாகி விட்டனர், சிலருக்கு 70-80-90 என்று வயாதாகி விட்டது. மற்றவர்களோ உண்மையினை மறைத்து பேசி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

30-12-2022


[1] விகடன், இந்திய வரலாற்றைக் குறை கூறிவரும் பிரதமர் மோடிபாஜக மாற்றி எழுத விரும்புவது எதை?!, ஆ.பழனியப்பன்,  Published:Today at 7 AM; Updated: 7.30 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/politics/the-prime-minister-modi-reiterates-to-rewrite-indian-history

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – இந்திய சரித்திரத்திற்கு பதிலாக தமிழக சரித்திரம் பற்றி பேசியது! (3)

திசெம்பர்30, 2022

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்மாநாடாக மாறியது – இந்திய சரித்திரத்திற்கு பதிலாக தமிழக சரித்திரம் பற்றி பேசியது! (3)

கோடிகளில் நிதியுதவி பெற்று நடத்தப் படும் மாநாடுகள்: கல்லூரி முதல்வர் வில்சன் ஆங்கிலத்தில் பேசினாலும், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று வரவேற்று பேசி, அரசியல் ரீதியில் தான் பேசினார். தமிழ்நாடு அரசு ரூ.35 லட்சங்கள் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மற்ற கல்வி நிறுவனங்கள் முதலியனவும் நிதியுதவி அளித்துள்ளன. சுமார் 2500 பேர் பதிவு செய்ததாகச் சொல்லப் படுகிறது, அப்படியென்றால், சுமார் ரூ 75 லட்சம் மேலாக தொகை வந்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ரூ.35 லட்சங்கள் கொடுத்துள்ளது என்றால், ரூ 1 கோடிக்கு மேலாக வசூலாகியிருக்கிறது. ஆனால், நிச்சயமாக, இவ்வளவு தொகையும் செலவழிக்கப் படவில்லை. ஏனெனில், பாதிக்கு மேற்பட்டவர்கள் தங்காமல், ஆய்வு கட்டுரை கொடுத்து சென்று விட்டானர்.  30-40% பேர் வழக்கம் போல சுற்றிப் பார்க்கச் சென்று விட்டனர். ஆய்வுக் கட்டுரை படிக்கும் அறைகளில் சுமார் 100 பேர் தான் இருந்தனர். மதியத்திற்கு மேல், 5-10 பேர் தான் இருந்தனர். பிறகு, ஒவ்வொருவரிடமிருந்து ஏன் ரூ 4750/-, 3,500/- என்றெல்லாம் வசூலிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வழக்கம் போல நடந்த சடங்குகள்: மஹாலக்ஷ்மி ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். ஷிரீன் மூஷ்வி, சுப்பராயலு கேசவன் தலைவராக முன் மொழிந்தார். ஷிரீன் மூஷ்வி, வழி மொழிந்தார். டி.ஆர்.பாலு, அன்பரசு, தங்கம் தென்னரசு, பொன்முடி, ஸ்டாலின், முதலியோருக்கு நினைவு பரிசு கொடுக்கப் பட்டது. தங்கம் தென்னரசு, இந்திய சரித்திரம் தமிழகத்திலிருந்து தான் துவக்கப் பட வேண்டும். பல்லாவரம் கோடாளி, அத்திரம்பாகம் பழங்கற்கால எச்சங்கள், முதலியவற்றைக் குறிப்பிட்டு, தமிழ் வைவடிவம் முந்தியது என்றெல்லாம் பேசினார். எல்லாமே, ஸ்டாலின் ஆட்சியில் தான் நடந்தது போன்று பேசியது தமாஷாக இருந்தது. பொன்முடி “திராவிட மாடல்” பாணியிலேயே பேசி முடித்தார். கால்டுவெல் பற்றியெல்லாம் பேசினார். 1935ல் ஆரம்பித்தாலும் 81வது மாநாடு இப்பொழுது நடக்கிறது. உண்மையான சரித்திரம் எழுதப் படவேண்டும். அடுத்தது ஸ்டாலின் பேசினார். ராமானுஜன் நிதியுதவி அளித்தற்கு நன்றி தெரிவித்தார். எல்லா மந்திரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

 “திராவிட சரித்திர காங்கிரஸ்மாநாடாக மாறியது: இப்படியாக முதலமைச்சர் பேசியது, சரித்திராசிரியர்களுக்குத் திகைப்பாகத் தான் இருந்தது. முந்தைய அமர்வுகளைப் போல, எந்த சரித்திராசிரியரும் பொங்கவில்லை, துடிக்கவில்லை, ஆவேசமாக எழுந்து பேசவில்லை, கத்தவில்லை. அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். சொல்லி வைத்தால் போல, இர்பான் ஹபீப் போன்றவர்களும், ரோமிலா தாபர் வகையறாக்களும் வரவில்லை. வந்திருந்தாலும், அமைதியாகத்தான் இருந்திருப்பர். கண்ணூர் போல, இர்பான் ஹபீப் ஒன்றும் ஸ்டாலினைத் தட்டிக் கேட்டிருக்க முடியாது. கத்தி ஆர்பாட்டம் போட்ட கும்பலும் இங்கு காணவில்லை. ஸ்டாலின் பேசியதை கூர்ந்து கவனித்தால், அவர் ஏதோ, “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசியது போன்று இருந்தது. அரசியல் மயமாக்கி, கொடுத்த பெரிய சொற்பொழிவை கேட்டுக் கொண்டு சும்மாதான் இருந்தனர். பொதுவாக ஆங்கிலத்தில் ஏசுவதைக் கூட விடுத்து, இவ்வாறு, “திராவிட மாடலில்” பேசியது, சரித்திராசிரியர்களுக்கு பாதித்ததாகத் தெரியவில்லை.

கண்ணாடி முன்பு நின்று தனக்கு தானே பேசியிருக்க வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும்: நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை என வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார்[1]. பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்[2];- “சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற, 81-வது ‘இந்திய வரலாற்று காங்கிரஸ்’ மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “கற்பனை கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபுதான்,” என, பேசியுள்ளார்[3]. முதல்வரின் இந்த வரிகளோடு அப்படியே நான் உடன்படுகிறேன். இந்த வரிகளை அவர், கண்ணாடி முன்பு நின்று தனக்கு தானே பேசியிருக்க வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும்[4].

நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை: நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை[5]. கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தமிழகம் வந்த பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, ‘திராவிடம்’ என்ற நிலப்பரப்பை, திராவிட இனமாக, கற்பனையாக சித்தரித்து உருவாக்கப்பட்ட கட்டுக்கதைதான், தி.மு.க.வின் அடிப்படை[6].  ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதை தான் திராவிட இனவாதம்[7].  அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாத கட்டுக் கதையாக தங்கள் கட்சியின் அடிப்படை கொள்கையாக வைத்துக் கொண்டு, யாருக்கோ பாடம் எடுத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர்[8]. இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள், ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ மூலமே, நம்மை ஆண்டனர். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாகவே, 1916-ல் தமிழகத்தில், ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ உருவானது. இதுவே பின்னாளில், நீதிக் கட்சி, திராவிடர் கழகமாகி, திராவிட முன்னேற்றக் கழகமானது. தமிழகத்தில் நீதிக் கட்சி செல்வாக்கு பெறத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுதந்திரப் போராட்டமே நீர்த்துப் போனது.

பெரியாரை வைத்து உண்டாக்கிய கட்டுக் கதைகள்: வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதியார் தங்கள் வாழ்வை தியாகம் செய்து எழுப்பிய சுதந்திரத் தீயை, நீதிக்கட்சி தனி தமிழ்நாடு, திராவிட நாடு என்று பிரிவினை பேசி அணைத்தது. அதனால்தான், 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளை, கருப்பு தினமாக பெரியார் ஈ.வெ.ரா. அறிவித்தார். இதுதான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. இவற்றையெல்லாம், தி.மு.கவினர் இப்போது பேசுவதில்லை. உயிருக்கும் மேலான நம் தாய் மொழியை, ‘காட்டுமிராண்டி மொழி’ என்றும், உலகமே வியக்கும் திருக்குறளை, ‘தங்க தட்டில் வைத்த மலம்’ என்று விமர்சித்தவர் பெரியார் ஈ.வெ.ரா. கீழ்வெண்மணியில், பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம் தேசத்தையே உலுக்கியபோது, பண்ணையார்களுக்கு ஆதரவாக நின்றவர் பெரியார் ஈ.வெ.ரா. தி.மு.க. ஆட்சியில் காவிரி நதி நீர் பிரச்னை, கச்சத் தீவை தாரை வார்த்தது என அவர்கள், சுய நலத்திற்காக, தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுத்த வரலாறுகளை தனி புத்தகமாகத்தான் வெளியிட வேண்டும். பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு யுனைஸ்கோ விருது கிடைத்ததாக, ஒரு கட்டுக்கதையை பரப்பி, அதனை பாடப் புத்தகத்திலும் இடம் பெறச் செய்தவர்கள்தான் தி.மு.க.வினர். இவையெல்லாம் தான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. இவற்றையெல்லாம், இப்போது தி.மு.க.வினர் பேசுவதில்லை.

© வேதபிரகாஷ்

30-12-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதை தான் திராவிட இனவாதம்‘ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு, By: பிரசாந்த் | Updated at : 28 Dec 2022 06:40 PM (IST), Published at : 28 Dec 2022 06:40 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/coimbatore/vanathi-srinivasan-accused-dravidian-racism-as-a-myth-created-by-the-british-93327

[3] தமிழ்.ஒன்.இந்தியா, திராவிட நாடு, பெரியார், கீழவெண்மணி.. சீமான் குரலில் முதல்வர் மு..ஸ்டாலினுக்கு பதில் சொன்ன வானதி!, By Mathivanan Maran Published: Wednesday, December 28, 2022, 17:53 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/bjp-mla-vanathi-srinivasan-replies-to-cm-mk-stalin-on-dravidam-491788.html

[5] தமிழ்.ஏசியாநெட், இதெல்லாம் கற்பனை கதை.. முதல்வர் ஸ்டாலின் சொல்வதை நம்பி ஏமாந்து விடாதீங்க.. வானதி சீனிவாசன்..!, vinoth kumar, First Published Dec 29, 2022, 10:14 AM IST, Last Updated Dec 29, 2022, 10:16 AM IST

[6] https://tamil.asianetnews.com/politics/don-t-be-fooled-by-what-cm-stalin-says-vanathi-srinivasan-rnmyhh

[7] கூடல்.காம், தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்: வானதி சீனிவாசன்!, 2022 December 29.

[8] https://koodal.com/news/2022/12/29/dravidian-race-is-a-myth-contrived-by-the-british-says-vanathi-srinivasan/

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – ஸ்டாலினின் சொற்பொழிவு (2)

திசெம்பர்30, 2022

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்மாநாடாக மாறியதுஸ்டாலினின் சொற்பொழிவு (2)

கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதனை ஏற்கக்கூடாது: கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் மட்டும்தான், நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும்; எதிர்காலத்தைக் கணிக்க முடியும். அப்படி படிக்கப்படும் வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மையான வகையில் அது அமைந்திட வேண்டும். கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதனை ஏற்கக்கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்[1]. கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகள், காப்பாற்றப்பட வேண்டும்[2]. இத்தகைய சூழலில், இந்திய வரலாற்று காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் பணி என்பது மிக மிக முக்கியமானது! 1994-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, நான் இங்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

எந்தவொரு கட்சியும் மதவாதக் கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது: மதச்சார்பின்மை என்பது, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையாகும். அதை எந்த வகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது[3]. எந்தவொரு கட்சியும் மதவாதக் கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது[4]. பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பிளவை உண்டாக்கி, அவர்களுக்குள்ளேயே படுகொலைகளைத் தூண்டுகிற சக்திகளை இயங்க அனுமதித்தால், ஜனநாயகமே இல்லாமல் போய்விடும்[5]. ஒரு மதச்சார்பற்ற அரசு அந்த சக்திகளைக் கட்டுப்படுத்தி அழித்து, சமுதாயத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்” – என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது[6]. அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள். இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி – மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்.

நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான். ஆனால் பழமைவாதிகள் அல்ல!: தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு! இங்கே இந்த மாநாடு நடப்பது மிகமிகப் பொருத்தமானது! நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான்[7]. ஆனால் பழமைவாதிகள் அல்ல! அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம்[8]. இங்கே அமைச்சர் தங்கம் தென்னரசு மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள். கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் விரிவான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது[9]. தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், எழுத்தறிவு மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது[10]. சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட, உமி நீங்கிய நெல்மணிகளின் காலம், கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது.தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது, அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அகழாய்வு முடிவுகளை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்துள்ளேன்: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த நம்முடைய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஏழு இடங்களில், இதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வுகளைத் தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் செய்யவில்லை. புனேயில் உள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம் – பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் துணையோடு அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்கிறோம். உலகளாவிய நிறுவனங்களின் பரிசீலனைக்கு எங்களது கண்டுபிடிப்புகளை அனுப்பி வைத்துக் கேட்கிறோம். இந்த அகழாய்வு முடிவுகளை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்துள்ளேன். கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடல் கடந்த பயணம் மற்றும் அவர்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக ஓர் அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம்.

தமிழினத்தின்தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது: பொருநை நாகரிகத்தை நெல்லையில் காட்சிப்படுத்த இருக்கிறோம். இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய வரலாற்று உணர்வை விதைத்திருக்கிறது. இந்த பெருமைகள் அனைத்தும் மதச்சார்பற்ற, அறிவியல் வழிபட்ட வரலாற்றைப் பற்றிய பெருமிதங்கள்!இத்தகைய வரலாற்று உணர்வை – உண்மையான வரலாற்றை – ஆய்வின் அடிப்படையிலான வரலாற்றை, மக்களிடையே கொண்டு சேர்ப்பதை, தமிழ்நாடு அரசின் கடமையாக நினைத்து நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு பழந்தமிழக நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவதுதான் முறையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்[11]. தமிழினத்தின் – தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது[12]. வரலாறு அரசர்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி, வெற்றி பராக்கிரமங்கள் பற்றிய ஆவணமாக மட்டும் இருக்கக் கூடாது. அது அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் பார்வை.

ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, இந்திய வரலாற்று காங்கிரசு அமைப்பு வழங்கினால், அதனையும் ஏற்று நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம்: திராவிட கட்டடக்கலையினை பறைசாற்றும் வானுயரக் கோவில் கோபுரங்கள் குறித்து பெருமை கொள்கிறோம். அதேபோல் கீழடியில் “ஆதன்” என்றும் “குவிரன்” என்றும் சங்ககால மக்கள் தங்கள் பெயர்களை எழுதிப்பார்த்த சின்னஞ்சிறு மண்பாண்டங்கள் குறித்தும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.இவற்றை மேலும் செழுமைப்படுத்திட, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, இந்திய வரலாற்று காங்கிரசு அமைப்பு வழங்கினால், அதனையும் ஏற்று நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம். தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயல் தொடர்பான வல்லுநர்களை உருவாக்க, இளங்கலை பட்டப்படிப்பை சென்னை கிறித்துவக் கல்லூரி வழங்குகிறது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் வரலாற்றுத் துறை, இந்த அமர்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். எனவே, வரலாற்றைப் படிப்போம், மீண்டும் சொல்லுகிறேன் வரலாற்றைப் படிப்போம், வரலாற்றைப் படைப்போம்.” இவ்வாறு அவர் பேசினார்.

© வேதபிரகாஷ்

30-12-2022


[1] தினகரன், இந்தியாவை சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபுதான் மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்: எம்சிசி கல்லூரி விழாவில் முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, 2022-12-28@ 00:39:46.

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=826150

[3] தினத்தந்தி, மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்மு..ஸ்டாலின், தினத்தந்தி டிசம்பர் 28, 1:16 am

[4] https://www.dailythanthi.com/News/State/distortion-of-history-a-danger-engulfing-the-country-says-m-k-stalin-867001

[5] நக்கீரன், மதவாதக் கட்சியாக செயல்படுவதை அனுமதிக்க முடியாது” – முதல்வர் மு.. ஸ்டாலின், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 27/12/2022 (16:07) | Edited on 27/12/2022 (16:21)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/secular-party-cannot-be-allowed-function-chief-minister-mkstalin

[7] பத்திரிக்கை.காம், நாங்கள் பழமைவாதிகள் அல்ல! இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு, DEC 27, 2022

[8] https://patrikai.com/we-are-not-conservative-chief-ministers-speech-at-the-81st-conference-of-the-indian-historical-council/

[9] கலைஞர் செய்திகள், “நாங்கள் பழமைவாதிகள் அல்ல.. உண்மையான வரலாற்றை கொண்டிருக்கிறோம்”:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!, Prem Kumar, Updated on : 27 December 2022, 12:33 PM.

[10] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2022/12/27/cm-mk-stalin-speech-indian-history-congress-function

[11] இடிவி.பாரத், இந்திய வரலாறு தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவது தான் முறைமுதலமைச்சர், Published on: December 27, 2022, 4.01 PM IST.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/indian-history-should-be-written-starting-from-the-land-of-tamil-nadu-says-cm-stalin/tamil-nadu20221227160111559559761

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாத-விவாதங்கள்- C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது (1)

மே14, 2022

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாதவிவாதங்கள்– C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது (1)

பி. என். ஓக் என்பவரின் புத்தகத்திலிருந்து, இந்த விவகாரம் தொடர்கிறது: இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன, என்று “தமிழ் இந்து” பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயிலிருந்தது, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் எனவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பி.என். ஓக் (P.N.Oak) என்பவர் 50 வருடங்களுக்கு முன்னரே இதைப் பற்றி பல புத்தகங்களை, புகைப் படங்களுடன் எழுதியுள்ளார்[1]. பிறகு V.S. கோட்போல் என்பவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்[2] மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ளார். அங்கிருக்கும் ஒரு கதவின் சிறிய துண்டை தேதிக்காக சோதனை செய்த போது, அது ஷாஜகான் காலத்திற்கு முந்தையது என்று வந்தது. மூன்றடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தில் – கீழ் மற்றும் மேலே செல்ல யாரையும் அனுமதிக்கப் படுவதில்லை. அதுதான், வருகின்ற சுற்றுலா மற்றும் இதர பயணிகளுக்கு வியப்பாக இருக்கிறது. கேட்டாலும், “செல்லக் கூடாது,” என்று தான் சொல்கின்றனர், காரணம் எதையும் சொல்வதில்லை. இதனால், பழைய புகைப் படங்களை பார்ப்பவர்களுக்கு, மற்றும் பி.என்.ஓக் புத்தகங்களைப் படித்தவர்களுக்கு, அவற்றின் மீது சந்தேகம் எழுகின்றது.

C-14 தேதி 1300ல் அக்கட்டிடம் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறதுஅடாவது ஷாஜகானுக்கு 300 வருடங்கள் முன்பு: தாஜ் மஹாலின் மரக்கதவிலிருந்து ஒரு துண்டை C-14 (carbon 14) சோதனைக்கு உட்படுத்தியபோது அது ஷாஜகானுக்கு (1592-1666) ஆண்ட காலம் (1628-1658) 300 ஆண்டுகள் முந்தைய தேதியைக் கொடுத்தது. அதாவது சுமார் 1300ம் ஆண்டு என்று வந்தது. ராஜபுத்திர ஆட்சியாளர்களின் விவரங்களின் படி,500 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு யமுனை ஆற்றங்கரையில் அரண்மனைகள், கோவில்கள் இருந்திருக்கின்றன. கட்டிடக் கலை வல்லுனர்கள் இ.பி.ஹேவல் (E.B.Havell), கெனோயர் (Mrs.Kenoyer), சர். டபிள்யூ. டபில்யூ.ஹன்டர் (Sir W W Hunter) போன்றோர், தாஜ் மஹாலின் தரைப்படம் வைத்துப் பார்த்தால், அது ஒரு இந்து கோவில் அமைப்பில் உள்ளது தெரிகிறது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். இ.பி.ஹேவல், ஜாவாவில் உள்ள ஒரு “சண்டி சேவா கோவில்” அமைப்பில் உள்ளது என்று எடுத்துக் காட்டினார். இதே போல பல ஆவணங்கள் அது முன்னரே இருந்தது என்று தெரிகிறது. ஷாஜஹான் அல்லது அவர் காலத்தில் மற்ற கோவில்களைப் போல மாற்றியமைத்துக் கட்டப் பட்டிருக்க வேண்டும்.

சித்தாந்தங்களினால் உண்மை அறிய முடியாது: புதிதாக எழுந்துள்ள சர்ச்சையின்படி அதன் அடித்தளத்தில் சுமார் 22 அறைகள் பூட்டிக் கிடப்பதாகவும், அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது[3]. இதற்காக உத்தர பிரதேசம் அலகாபாதின் லக்னோ அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவர்களின் புகாரில் உள்ள உண்மைகளை அறிய, தாஜ்மகால் கட்டிய காலத்தில் எழுதப்பட்ட முகலாயர்களின் வரலாற்று நூல்களையும் ஆதாரங்களாகக் கொள்ளலாம்[4], என்று “தமிழ் இந்துவில்” கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது. இங்கு, “இந்துத்துவர்களின்,” என்ற வார்த்தை பிரயோகத்தைக் கவனிக்கலாம். எழுதியவர் பெயர், “ஆர்.ஷபிமுன்னா” என்ருள்ளது. இதனால், ஒரு முஸ்லிம், முஸ்லிம் போலத்தான் எழுதியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. தாஜ் மஹாலின் மேற்புற அல்லது வெளிகட்டுமானம் (super structure) ஷாஜகானால் செய்யப் பட்டிருக்கலாம், ஆனால், உள்ளே இருக்கும் கட்டிடம் முஸ்லிம்களுடையது அல்ல என்பதனை அங்கிருக்கும் ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்: இந்த நிலையில், தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்[5]. அந்த வழக்கு இன்று அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது[6]. அப்போது பேசிய மனுதாரர் தரப்பு, “தாஜ்மஹால் தொடர்பான உண்மையை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. அதன் அடிப்படையில் தாஜ்மஹாலில் பூட்டியுள்ள 22 அறைகளின் கதவும் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக தொல்லியல் துறையிடம் பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் வரலாறு அதன் வயது தொடர்பாக உள்ள சந்தேகங்கள் தொடர்பான சில ஆவணங்களையும் இணைத்துள்ளேன்,” என வாதிட்டார்.

எந்த உரிமையில் தாஜ்மஹாலின் அறைக்கதவைத் திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்? – நீதிபதிகள் கேள்வி: இந்த வாதத்துக்குக் கடுமையான ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், “தாஜ்மஹால் வயதில் சந்தேகம் என்றால் அதை ஷாஜஹான் கட்டவில்லை எனக் குறிப்பிடுகிறீர்களா? தற்போது தாஜ்மஹால் யார் கட்டியது என்பதை ஆய்வு செய்யவா இப்போது கூடியிருக்கிறோம்? வரலாற்றுத் தரவுகள் தொடர்பாகப் பேச விரும்பவில்லை. மேலும், எதன் அடிப்படையில், எந்த உரிமையில் தாஜ்மஹாலின் அறைக்கதவைத் திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்?,” எனக் கேள்விகளைத் தொடர்ந்தனர்[7]. இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, “நாட்டின் குடிமகன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,” எனக் கூறியதற்கு நீதிபதிகள்[8], “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு விஷயம் தொடர்பான தரவுகளைத் தான் அறியமுடியும். ஆனால் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும், ஆராய்ச்சி செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த சட்டத்தில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்[9]. இதற்கும் பதிலளித்த மனுதாரர், “உண்மை அறியும் குழு அமைத்து தாஜ்மஹால் குறித்தான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் நமக்குத் தவறான வரலாறு கற்றுத்தரப்பட்டிருந்தால் திருத்தப்பட வேண்டும். மேலும், பூட்டப்பட்ட அறைகளுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்,” என வாதிட்டார்[10].

பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிக்கூத்தாக்காதீர்கள்என்று கூறி வழக்கு தள்ளுபடி: இந்த வாதத்துக்குப் பின் நீதிபதிகள்[11], “தாஜ்மஹால் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் ஆய்வு செய்ய எம்., நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்புகளில் உங்களை இணைத்துக் கொண்டு ஆய்வை மேற்கொள்ளுங்கள். அதில் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றம் வாருங்கள். இன்று தாஜ்மஹால் அறையை திறக்க சொல்கிறீர்கள், நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா? பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிக்கூத்தாக்காதீர்கள். நீதிமன்றத்தில் இது போன்று நடந்துகொள்ளாதீர்கள். மேலும், எந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறினீர்கள் என விளக்கமளியுங்கள்,” எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். பின்னர் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[12].

© வேதபிரகாஷ்

14-05-2022


[1]  அவரது புத்தகங்கள் இன்றும் பிரசித்தியாகவே இருக்கின்றன. இணைதளங்களில் இதுவரை லட்சக்கணக்கில் டவுன்லோன் செய்யப் பட்டுவருகின்றன.

P. N. Oak, Taj Mahal was a Rajput Palace, Hindi Sahitya Assad, New Delhi, 2003.

[2] Godbole, V.S, The Origin of the Taj Mahal, RIBA, Jornal of Rooyal Institute of British Architects, 87.9, 1980, pp. 23-23.

………………………, Taj Mahal?: A Simple Analysis of a Great Deception, Itihas Patrika Prakashan 1986, 2007.

[3] தமிழ்.இந்து, தாஜ்மகாலை வைத்து அரசியல் வேண்டாமே!, ஆர்.ஷபிமுன்னா, Published : 13 May 2022 06:34 AM; Last Updated : 13 May 2022 06:34 AM.

[4] https://www.hindutamil.in/news/opinion/columns/799377-do-not-keep-the-taj-mahal-and-do-politics.html

[5] விகடன், இன்று தாஜ்மஹால்நாளை நீதிபதிகள் அறையை திறக்க சொல்வீர்களா?” – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம், VM மன்சூர் கைரி, Published:Yesterday at 8 PM; Updated:Yesterday at 8 PM

[6] https://www.vikatan.com/news/politics/today-taj-mahal-room-will-you-tell-me-to-open-the-judges-room-tomorrow-allahabad-court

[7] தினமலர், தாஜ்மஹாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி,  Updated : மே 12, 2022  19:55 |  Added : மே 12, 2022  19:53.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3028151

[9] தினாணி, தாஜ்மஹால் மீதான பொதுநல வழக்கு தள்ளுபடி, By DIN  |   Published On : 12th May 2022 05:00 PM  |   Last Updated : 12th May 2022 05:00

[10] https://www.dinamani.com/india/2022/may/12/allahabad-hc-dismisses-petition-on-taj-mahal-3843186.html

[11] தமிழ்.ஏபிபி.லைவ், விட்டா நீதிபதிகளோட அறைகளையும் திறக்க சொல்லுவீங்க” : தாஜ்மஹாலின் அறைகளை திறக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி, By: ABP NADU | Published : 13 May 2022 08:32 PM (IST)|Updated : 13 May 2022 08:38 PM (IST).

[12] https://tamil.abplive.com/news/india/taj-mahal-case-allahabad-high-court-rejects-petition-seeking-open-22-closed-doors-52003

தமிழ்நாடு சரித்திரப் பேரவை– 25வது கருத்தரங்கம் சென்னையில் 5, 6 7 தேதிகளில், மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்றது [1]

ஒக்ரோபர்8, 2018

தமிழ்நாடு சரித்திரப் பேரவை– 25வது கருத்தரங்கம் சென்னையில் 5, 6 7 தேதிகளில், மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்றது [1]

TNHC, first session, 1993 The Hindu cutting

தமிழ்நாடு சரித்திரப் பேரவை 1993ல் உண்டானது: தமிழ்நாடு சரித்திரப் பேரவை [Tamil Nadu History Congress] 1993ல் உருவாக்கப் பட்டது. ஏற்கெனவே தென்னிந்திய சரித்திரப் பேரவை [South Indian History Congress] என்ற அமைப்பு 1979ல் உருவாக்கப் பட்டு, இயங்கி வந்ததால், இது தேவையில்லை என்று எதிர்த்தவர்களும் உண்டு[1]. ஏனெனில், குறிப்பாக தமிழகத்திலிருந்து வருபவர்களை இந்திய வரலாற்றுப் பேரவை [Indian History Congress] தமிழக சரித்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை சரியாக கவனிப்பதில்லை, கண்டுகொள்வதில்லை, மதிப்பதில்லை, போன்ற காரணங்களுக்காக, ஏற்படுத்தப் பட்டதால் தேவையில்லை என்றனர். இருப்பினும், கே.ஆர். ஹனுமந்தன் போன்றோர், ஏற்கெனவே பஞ்சாப். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் தனித்தனியாக சரித்திரப் பேரவைகளை வைத்திருப்பதால், தமிழகத்திற்கும் தனியாக இருப்பதில் ஒன்றும் ஆட்சேபனை இருக்க முடியாது என்று 1993ல் தொடங்க முயற்சியை மேற்கொண்டார். அவ்வாறே 1993ல் பதிவு செய்யப்பட்டு வருடா வருடம் மாநாடுகளை நடத்தி வருகின்றது[2].

TNHC, first session, 1993 - indian Express cutting

சென்னையில் மூன்றாவது முறை நடைபெறுகிறது: சென்னையில் முதல் மாநாடு முந்தைய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவர்களால் துவக்கி வைக்கப் பட்டு, செப்டம்பர் 10-11 1994ம் ஆண்டு மெட்ராஸ் பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. இரண்டாவது முறை சென்னையில் – ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், அக்டோபர் 27-29 2006ல் நடைபெற்றது. இப்பொழுது மூன்றவது முறையாக, நடைபெறுகிறது. சென்னை பல்கலைக்கழகம் இந்திய வரலாற்று துறை சார்பில் தமிழ்நாடு வரலாற்று பேரவையின் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா, பல்கலைக்கழக வளாகத்தில் 05-10-2018 அன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி, தமிழ்நாடு வரலாற்று பேரவையின் மாநாட்டு தலைவரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான என்.ராஜேந்திரன், தமிழ்நாடு வரலாற்று பேரவையின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். சுந்தரம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் வெள்ளிவிழா ஆண்டுமலரையும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு ஆண்டையொட்டி கருத்தரங்கு ஆய்வு கட்டுரையையும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட, உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து வரலாற்றியலுக்கு ஆற்றிய பெரும்பணிக்காக தினமலர் நாளிதழ் ஆசிரியரும், நாணவியலாளருமான ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு சிறந்த வரலாற்று அறிஞர் என்ற வெகுமதி பட்டயம் வழங்கப்பட்டது[3]. அவர் மிக முக்கிய வரலாற்று அறிஞர் மட்டுமல்ல; நாணய ஆய்வுத்துறையிலும் சிறந்து விளங்குபவர். அவரது வரலாற்று, ஆய்வுப்பணிகள் மேன்மேலும் சிறந்து விளங்க, அனைவரும் நல்வாழ்த்துகளை தெரிவிப்போம்”. என்றார்[4]. ஆனால் உடல்நிலை அசௌகரியம் காரணமாக நேரில் வந்து கலந்துகொள்ளவில்லை.

SIHC 2018-The Hindu

பின்னர், .பன்னீர்செல்வம் பேசியதாவது: பன்னீர்செல்வம் பேசியது, ““வரலாறு என்பது என்ன என்று எடுத்துக்கூற வந்த இ.எச்.கார் என்ற வரலாற்று அறிஞர், “தொடர்ச்சியான நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையிலான ஓர் இடையறாத உரையாடலே வரலாறு” என்று வரையறுத்து கூறியுள்ளார்[5]. வரலாறு என்பது. நேற்றும், இன்றும் உண்மையில் நிகழ்ந்த மற்றும் நாளை நடைபெறவிருக்கிற வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு. மனிதர்களின் அனுபவங்கள்தான் அது[6]. ஜி.எச். ரேனியர் என்னும் டச்சு அறிஞர், “சமுதாயத்திற்காகப் பங்களித்த அருஞ் செயல்களைப் புரிந்த மனிதர்களின் அனுபவங்களுடைய தொகுப்பே வரலாறு” என்று கூறுகிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஓரு திரைப்படப் பாடலில், ஒரு சம்பவம் என்பது நேற்று அது சரித்திரம் என்பது இன்று. அது சாதனையாவது நாளை. வரும் சோதனைதான் இடைவேளை – என்று பாடினார். அந்தப் பாடலில் வரும் சம்பவங்களும், சோதனைகளை சென்ற சாதனைகளும், அந்தச் சாதனைகளால் விளையும் சரித்திரமும்தான் வரலாறு ஆகிறது.

SIHC 2018-Dinamani

தமிழக வரலாற்றை மறைத்து விட முடியாது: மறைத்துவிட்டோ அல்லது ஒதுக்கிவிட்டோ எழுதப்படும் இந்திய வரலாறு என்பது ஒரு முழுமையான தேசத்தின் வரலாறாக, தேசிய வரலாறாக இருக்கமுடியாது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தமிழ்திராவிடம் என்கிற பண்பாட்டு மரபுகள், திராவிட மொழிக்குடும்பம், சைவ, வைணவ மரபுகள், கோவில்சிலை வழிபாடுகள், திராவிட கலைகளான தென்னிந்திய கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் வைதீகம் உள்ளிட்ட பல்வேறு மரபுகளில் மிகுந்த தாக்கங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளன. எனவே அவற்றை தவிர்த்துவிட்டு இந்திய பண்பாடு, நம்பிக்கை மரபுகளை யாரும் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பண்பாடு, கலைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தவர்களும் நமது தமிழர்களே ஆவர். தென்னிந்திய வரலாற்று பேரவை, தமிழ்நாடு வரலாற்று பேரவை போன்ற தமிழ் வரலாற்று ஆய்வு அமைப்புகள், தமிழக பண்பாடு குறித்த மறைக்கப்பட்ட தகவல்களை அறிவியல் முறையில் உறுதிசெய்து, தமிழகத்துக்கும், தென்னகத்துக்கும் இந்திய தேசிய வரலாற்றில் உரிய இடம் கிடைக்க முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. அந்த பணி வெற்றியுடன் தொடர்ந்திட வாழ்த்துகிறேன். நவீன இந்திய வரலாற்றிலும் தமிழகத்தின் அளப்பறிய பங்களிப்பு அதற்குரிய அளவில் இடம்பெறவில்லை[7]. இது வேதனைக்குரிய ஒன்றாகும். திராவிடர் தலைவர்களின் தொண்டுகளையும், அம்பேத்கரின் பங்களிப்பினையும் எவ்வகையிலும் குறைத்திடாது இந்திய தேசிய வரலாற்றில் இணைத்து கொள்ள வேண்டும்”, இவ்வாறு அவர் பேசினார்[8].

SIHC 2018-OPS speaking

தமிழ்நாட்டை மறைத்துவிட்டோ அல்லது ஒதுக்கிவிட்டோ எழுதப்படும் இந்திய வரலாறு என்பது ஒரு முழுமையான தேசத்தின் வரலாறாக, தேசிய வரலாறாக இருக்க முடியாது[9]: தமிழ் – திராவிடம் என்கிற பண்பாட்டு மரபுகள், திராவிட மொழிக் குடும்பம், சைவ, வைணவ மரபுகள், கோயில் – சிலை வழிபாடுகள், திராவிடக் கலைகளான தென்னிந்திய கட்டிடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் வைதீகம் உள்ளிட்ட பல்வேறு மரபுகளில் மிகுந்த தாக்கங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன[10]. எனவே, அவற்றைத் தவிர்த்துவிட்டு இந்திய பண்பாடு, நம்பிக்கை மரபுகளை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது. தமிழர்கள், கடல் கடந்து சென்று வாணிபம் செய்திருக்கிறார்கள். யவனர்களின் அத்துமீறல்களை எதிர்த்து வென்றவர்கள் சேரர்கள். இலங்கைக்கும், தமிழ் அரசுகளுக்கும் இடையிலான அரசியல், ராணுவ, வணிக பண்பாட்டு உறவுகள், இந்திய தேசிய வரலாற்றில் தமிழ்நாட்டிற்கான தன்னிகரற்ற பங்கினை நிரூபிப்பதாக உள்ளன. சங்க காலச் சோழ மன்னன் கரிகால் வளவனுக்கு முன்னரேயே இத்தகைய உறவுகள் இருந்து வரலாற்று தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன என்பதை கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்திய வரலாற்றிலேயே கடல் கடந்து, பேரரசை உருவாக்கிய ஒரே அரச வம்சம் தஞ்சையைச் சார்ந்த சோழர் வம்சமே ஆகும்.

வேதபிரகாஷ்

08-10-2018

SIHC 2018-Dinamalar

[1] South Indian History Congress was founded at a conclave of historians at the School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai – 625021, on 2nd December 1978 with Prof. K.K.Pillay as first President and Prof. K.Rajayyan as founder General Secretary.  It was registered under the Societies Act at Madurai in 1979 with Reg.No.32/1979. The Central Office of the Congress is established at School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai.  The first inaugural conference of this Congress was held at Madurai Kamaraj University Campus in February 1980. Thereafter annual sessions of the Congress were held at different universities and colleges of South India. http://www.southindianhistorycongress.org/

[2] The Tamil Nadu History Congress has had its inception in the year 1993 at Coimbatore during the South Indian History Congress. As authorized by the members of the above meeting Prof. K.R. Hanumanthan registered the society on 25.8.93 – Registration No.266 of 1993.

https://tnhc1.wordpress.com/2011/10/07/the-origin-of-tamilnadu-history-congress/

[3] தினமலர், தமிழகத்தின் மிக முக்கிய ஆய்வாளர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி

துணை முதல்வர் பன்னீர்செல்வம் புகழாரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2018,23:44 IST

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=2117102

[5] மக்கள் குரல், தமிழர்களின் பண்பாடுகள் இந்திய வரலாற்றில் இடம் பெற அரசு உதவிகளை செய்யும், அக்டோபர்.5, 2018.

[6] https://makkalkural.net/news/97928-2/

[7] தினத்தந்தி, நவீன இந்திய வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இடம்பெறவில்லை.பன்னீர்செல்வம் வேதனை, பதிவு: அக்டோபர் 06,  2018 03:45 AM

[8] https://www.dailythanthi.com/News/State/2018/10/06013541/The-role-of-Tamil-Nadu-in-modern-Indian-history-does.vpf

 

[9] தினபூமி, நவீன இந்தியாவின் வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு உரிய அளவில் இடம் பெறவில்லைதுணைமுதல்வர் .பன்னீர்செல்வம் வேதனை, சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018.

[10] http://www.thinaboomi.com/2018/10/05/98696.html