Archive for the ‘விடுதலை’ Category

‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற காணொளி வெளியீட்டு விழா – இந்திய சரித்திரம் உண்மையாக பாரதத்துவத்துடன் எழுதப் பட வேண்டிய முக்கியத்துவம்!

ஓகஸ்ட்8, 2022

‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற காணொளி வெளியீட்டு விழா – இந்திய சரித்திரம் உண்மையாக பாரதத்துவத்துடன் எழுதப் பட வேண்டிய முக்கியத்துவம்!

அசோக் குமார் குந்த்ரா, செயலாளர் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரி, விளக்கேற்றுகிறார்.

ஓலம்சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற காணொளி வெளியீட்டு விழா: ‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளி வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரியில் 7-08-2022 அன்று நடைபெற்றது[1]. ஏ.சி.சண்முகம், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக வேந்தர், அசோக் குமார் குந்த்ரா, செயலாளர் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரி, விநோத் பி. செல்வம், கரு. நாகரஜன், சென்டர் பார் சவுத் இன்டியன் ஸ்டெடீஸ் (Centre for South Indian Studies[2]), முதலியோர் கலந்து கொண்டனர். குமரேசன்[3] இந்த வீடியோ பற்றி அறிமுகம் செய்து, பின்னணியை விளக்கினார். பிறகு, ‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளியின் “ப்ரோமஸன்” (Promotion) வீடியோவும் காட்டப் பட்டது, பென்-ட்ரிவில் விற்கப் படும் இதன் விலை ரூ.500/- இந்த விடீயோ எடுத்தவர்-தொகுத்தவர் ஆனந்த் – இதைப் பற்றி சுருக்கமாக விளக்கினார். 12 நபர்கள் பேசிய வீடியோக்களைத் தொகுத்து, தேவையான இடங்களில் புகைப் படங்கள்-சித்திரங்கள், இசை முதலியவற்றை சேர்த்து, இந்த காணொலி தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த வீடியோவில் சரித்திரத் தகவல்களைப் பற்றி பேசியவர்கள்: கே. வி. ராமகிருஷ்ண ராவ், பிரபாகரன், பிரகாஷ், விஸ்வநாதன், முதலியோர். பிறகு இந்த வீடியோ எடுத்த குழு அங்கத்தினர், மற்ற எடிடிங், சித்திரம், முதலிய பணிகளை செய்தவர் அனைவருக்கும் நினைவு பரிசு கொடுக்கப் பட்டது. பிறகு, கல்லூரி செயலாளர் மற்றும் அமைச்சர் பேசினர். நன்றியுரையுடன் விழா முடிந்தது.

கலந்து கொண்டவர்கள்- மேடையிலிருந்து இடது பக்கம்
கலந்து கொண்டவர்கள்- மேடையிலிருந்து வலது பக்கம்
கலந்து கொண்டவர்கள்- மேடையிலிருந்து நடு பக்கம்
குமரேசனின் அறிமுகம்
காணொளி வெளியீடு
மத்திய அமைச்சர் பேசுகிறார்….

மத்திய அமைச்சர் பேசியது: இதில் கலந்து கொண்ட மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது[4]: “உலகின் தலை சிறந்த நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் .. சிதம்பரனார். அவரது தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி கொண்டு இருக்கிறார். நாடு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், சி யின் 150 ஆவது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் இது ஆங்கிலேயர்கள் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும்[5]. இளைஞர் மத்தியில் அக்னிபத் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது, லட்சக்கணக்கான இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அக்னிபத் திட்டத்திற்கு பதிவு செய்து வருகின்றனர்[6]. அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும்[7]. ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு எப்படி இந்தியர்கள் உலகுக்கே வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்தார்களோ, அதேபோல நாட்டின் 100-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும்[8]. 2047-ம் ஆண்டு இந்தியா மீண்டும் உலக நாடுகளை வழிநடத்தும் வல்லமையை பெற்றிருக்கும்.. ,”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசோக் குமார் குந்த்ரா, பேசுகிறார்

பலவிதங்களில், பலநிலைகளில் நடக்கும் வேலை: 75ம் சுதந்திர விழா கொண்டாட்ட விழா ஆண்டாக, பலவித நிகழ்சிகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று மத்திய அரசு ஏற்பாடு செய்திள்ளது. இதற்கு நித்யுதவியும் அளித்து வருகிறது. இதனால், பல நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் பலவிதமாகக் கொண்டாடி வருகின்றன. அவற்றில் பலரின் பங்களிப்பு பலவிதங்களில், பலநிலைகளில் உள்ளது. பலருக்கு தெரிந்தும்-தெரியாத நிலை கூட ஏற்படலாம். ஏனெனில், பல வேலைகள் பலரால் செய்துத் தரப் படும் பொழுது, அவை வியாபார ரீதியிலும் மாறுகின்றன. அபொழுது, செய்பவர்கள் தனது வேலையை செய்து, கூலி, சம்பளம், பணம் வாங்கிக் கொள்கிறான், ஆனால், அவன், அந்த வேலையின் முடிவு அல்லது பயன்பாடு பற்றி கவலைப் படுவதில்லை. பல நேரங்களில், அது அவனுக்குத் தேவையும் இல்லை அல்லது இல்லாத நிலை ஏற்படுகிறது. 1000 பேனர்களை தயார் செய்து கொடு என்றால், மரச்சட்டம் தயாரிப்பவன், கான்வாஸ் துணி கிழிப்பவன், தைப்பவன், படம் வரைபவான் தன் வேலைகளை செய்து கூலி, சம்பளம், பணம் வாங்கி சென்று விடுகிறான். அதற்கு மேல் அவன் கவலைப் படுவதில்லை.

வீடியோ / காணொளி முன்னோட்ட அறிமுகம்

1857லிருந்து1947 வரை வசதிகள் இல்லாத காலத்தில் நடந்த போராட்டங்கள்: இப்பொழுது 2022ல், பலவித தொழில் நுட்பங்கள் உள்ள நிலையில், இந்த 75ம் சுதந்திர விழா கொண்டாட்ட விழா நடைபெறுகிறது. ஆனால், 1857லிருந்து, எந்த வசதியும் இல்லாத காலத்தில், நாடு முழுவதும் சுதந்திர உணர்வை மக்களுக்கு உண்டாக்கி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பலவித போராட்டங்களை நடத்திய தலைவர்களை, வீரர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதும் கோடி கணக்கான மக்களுக்கு செய்தி சென்றுள்ளது, மக்கள் ஒன்று திரண்டு போராடியிருக்கின்றனர். அதற்காக பாமர மக்கள், படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரர், என்று எந்த வேறுபாடும் இல்லாமல் உழைத்துப் போராடியுள்ளனர். வெள்ளையர்களின் அடக்குமுறைகளைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இந்த முக்கியமான அம்சத்தைக் கவனிக்க வேண்டும். இது தான் ஒட்டு மொத்த மக்களின் ஒருமித்த சுதந்திர பொராட்டம் ஆகும். அதில் சத்தியாகிரஹம், அஹிம்சை போன்றவை முக்கிய பங்கு வகித்தன. அவைக் கண்டு தான் வெள்ளையர்- ஆங்கிலேயர் பயந்தனர். பாரத சித்தாந்தம், சனாதனக் கொள்கைகள், இந்துமத சிறப்பு அவற்றில் வெளிப்பட்டன. மற்ற மதங்கள் தங்களது மதநம்பிக்கைகளை வைத்துக் கொண்டு போரிட்டன, மக்களைக் கொன்றன, அழிவை உண்டாக்கின. இன்றின் மீது மற்றது பழிபோட்டு குறை சொல்லிக் கொண்டன. ஆனால், பாரதத்தில் உண்மையான ஞானம் வேலை செய்தது.

பாரத சித்தாந்தம் வென்றது: பீரங்கிகள்-துப்பாக்கிக் குண்டுகள் முன்பு பயப்படாமல் நின்று வீரமரணம் எய்தினர். கர்மா சித்தாந்தம் கூட ஏசப் பட்டது. தியாகம், உயிர்தியாகம், புனிதபோர், என்றெல்லாம் பற்றவர்கள் பேசினாலும், பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய உண்மையான தியாகம், உயிர்தியாகம், புனிதபோர்- யுத்தத்தினை எங்கும், எப்பொழுதும், யாருக் கண்டதில்லை. இதனால் தான் அஞ்சி நடுங்கினர். அதிலும் வஞ்சகத்துடன் வேலை செய்து, இந்தியர்களைப் பிரிக்க பார்த்தனர். அதுதான், விடுதலை போராட்ட வீரர்களில் ஏற்பட்ட சிற்சில வேறுபாடுகள்………..இது தான் வெள்ளையர்கள் ஓட வித்திட்டன. இன்றும் வெள்ளையர்களின் அடிமைகள், கூலிகள், அடிவருடிகள் இந்தியாவை, இந்தியர்களை, இந்திய மதத்தினை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை குறைகூஈ வருகின்றன, விமர்சிக்கின்றன, சரித்திரத்தை மறைத்து, பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்நிலையில், நிச்சயமாக, பாரதத்தில் உண்மையான சரித்திரத்தை சொல்ல வேண்டிய அத்தியாவசியம், தேவை மற்றும் முக்கியத்துவம் உண்டாகியுள்ளது. இதைப் போன்ற முயற்சிகள் இன்னும் தேவையாகின்றன. இந்திய சரித்திரம் உண்மையாக பாரத்துவத்துடன் எழுதப் பட வேண்டிய முக்கியத்துவம் உள்ளது.

© வேதபிரகாஷ்

08-08-2022


[1] தினத்தந்தி, சுதந்திர வீரர்களின் வாழ்கை வரலாறு – ‘ஓலம்காணொளியை வெளியீட்டு அமைச்சர் எல். முருகன் உரை, By தந்தி டிவி 7 ஆகஸ்ட் 2022 7:12 PM.

[2] Centre for South Indian Studies (CSIS) is a public charitable trust established in Delhi, engaged in academic study, research and analysis of economic, social, historical and political developments, both past and contemporary. CSIS commissions scientific research on various subjects and topics pertaining to South India, directly by its researchers and funds studies of interests that conform to its aims and objectives. It also motivates academicians and students to take up new research initiatives to rework on conventional narratives on South India to enable understanding these topics scientifically. Apart from organising research programmes, CSIS also brings out publications periodically and carries out social awareness programmes. CSIS regularly organises lectures, debates, panel discussions and talks on various subjects related to South India. We also organise seminars and workshops, as part of our academic activity.https://csisindia.com/about/

[3] Kumaresan served in the advertising industry for over two decades. He is now the Centre Co-ordinator of CSIS Chennai operations.https://csisindia.com/associates/

[4] https://www.thanthitv.com/latest-news/life-history-of-freedom-fighters-olam-video-launched-by-minister-l-murugan-text-130092

[5] மாலைமலர், அக்னிபாத் திட்டத்தை வரவேற்கும் இளைஞர்கள்மத்திய இணை மந்திரி பேச்சு Byமாலை மலர். 8 ஆகஸ்ட் 2022 12:40 AM.

[6] https://www.maalaimalar.com/news/district/among-youth-welcome-to-agnibad-program-union-joint-minister-speech-496859

[7] நியூஸ்7.தமிழ்.லைவ், அப்துல் கலாம் கண்ட கனவுபடி இந்தியா வல்லரசாகும்எல்.முருகன், by Dinesh AAugust 7, 2022

[8] https://news7tamil.live/india-is-a-superpower-as-per-abdul-kalams-dream-l-murugan.html