Archive for the ‘இந்தியம்’ Category

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ் ஆக நடந்து முடிந்த விதம் (2)

செப்ரெம்பர்11, 2023

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ் ஆக நடந்து முடிந்த விதம் (2)

மாணவர்களிடம் அடாவடி வசூல்: மாணவர்களிடம் பணம் [delegate fees] வசூலிக்கப் பட்ட முறை பரிதாபகரமான நிலையை அடைந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், ஒருவரால் ரூ.3500/- செல்லுத்துவது என்பது இயலாத விசயமாகும். குறைந்த அளவில் தான் டெலிகேட்டுகள் கலந்து கொண்டனர். ஆய்வுக்கட்டுரைகள் கூட அதிகமாக வரவில்லை. 150 வந்ததாகச் சொல்லிக் கொண்டாலும், அவ்ற்றை சமர்ப்பிக்க வந்தனரா இல்லையா என்ற விவரமும் தெரியாது. அந்நிலையில், ஒவ்வோரு மாணவரிடமும் ஆயிரக்கணக்கில் பணம் கேட்டதும், அவர்கள் செல்லுத்த முடியாத நிலை ஏற்பட்டதும் வருத்ததிற்கு உகந்ததாக இருக்கிறது. இரண்டு நாட்கள் மாநாடு என்று சொல்லிக் கொண்டாலும், ஒன்றரை நாட்களிலேயே முடித்து விட்டனர். அந்நிலையில் இம்மாந்நாட்டிற்கு நிச்சயமாக லட்சங்களில் கொடையாக, நன்கொடையாக, ஸ்பான்சர்சிப் என்று வசூல் செய்திருப்பர். அந்நிலையில், மாணவர்களுக்கு ரூ 1000/- என்று கூட வசூலித்திருக்கலாம். ஆனால், விடாப்பிடியாக ரூ. 2500/- வசூலித்தது அதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஆய்வுக் கட்டுரை வாசிக்க வரும் மாணவர்கள் வாசித்து விட்டு, சான்றிதழைப் பெற்றுக் கொண்டு சென்று விடுவர். ஆகவே, ஒரூ இரவு தங்கினாலும், அவர்களால் அந்த அளவுக்கு செலவினம் ஏற்படாது.

600 சரித்திராசிரியர்களும், 200 மாணவர்களும்: இப்படித்தான் கலந்து கொள்வதாக, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” அறிவித்துக் கொண்டது. பிறகு, மாணவர்களுக்கு இவர்கள் என்ன சலுகை கொடுத்தனர் என்று தெரியவில்லை. ஒவ்வொரு தலைவர், உபதலைவர், போன்றோர் தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ள முயன்றனரே தவிர, மாநாட்டைப் பற்றிக் கவலைப் படவில்லை. கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த முறைகளில் கவனம் செல்லுத்துவதில்லை என்று அவர்களது சுய-விளம்பர யுக்திகளில் வெளிப்பட்டது. பல மாணவ உறுப்பினர்கள் வராத அளவுக்கு கெடுபிடிகள் செய்யப் பட்டன[1].  ஆரம்பத்திலேயே இரண்டு-மூன்று குழுக்கள் இதில் உருவாகி விட்டதால், இப்பொழுதுள்ள ஆதிக்கக் குழு மற்றவர்களை அமுக்கி ஆதிக்கம் செல்லுத்தப் பார்க்கிறது. இதில், மாணவர்கள், உண்மையான ஆராய்ச்சியாளர்கள் பலிகடா ஆகின்றனர். ஸ்டேஜ் மேலே நின்று கொண்டு போட்டோ  செல்பி எடுத்துக் கொள்வது ஓன்ற விசயங்களில் அதிகமாகவே ஆய்வம் காட்டியது புலப் பட்டது. ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்கும் அறைகளில் 10-20 பேர் தான் இருந்தனர். அவர்களும் பெப்பரைப் படித்து விட்டு ஓடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது போல தெரிந்தது. அந்தந்த துணைப்பிரிவு தலைவரும் அதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” உருவான கதை: ஏற்கெனவே குறிப்பிட்டது போல, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்,” “புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ்” ஆக மாறி, அதிலும் குறுகி, சிறுத்து விட்டது போலிருக்கிறது. “புதுச்சேரி வரலாற்றுப் பேரவை,” என்று ஒரு அம்மைப்பு ஏற்கெனவே இயங்கி வருகின்றது[2]. விவரித்ததில், திண்டுக்கல்லில், தென்னிந்திய வரலாற்று மாநாடு நடந்த பொழுது, சில குழுக்களில் ஏற்பட்ட அதிருப்தி, தேர்தலில் நடந்த முறைகேடுகள், முதலியவற்றை தட்டிக் கேட்ட போது நடந்த விவகாரங்கள் இவற்றால், சிலர் “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” துவங்க முடிவு செய்தனராம்[3]. “தேர்தல்” என்றால் அவர்களது நிர்வாகத்திற்கு நடத்தப் படுவது, ஆனால், அதில் கூட, அரசியல்வாதிகளைப் போன்று ஓட்டுகளை முறையாக போடாதது, எண்ணிக்கையில் மோசடி செய்வது, சண்டை போட்டுக் கொள்வது, டித்துக் கொள்ளும் நிலைக்குச் செல்வது என்றெல்லாம் நடக்கும் பொழுது அவர்களது நிலையை அறிந்து கொள்ளலாம்[4]. இது ஏதோ ஒரு பெரிய அமைப்பு போலவும், இதன் தலைவர் சரித்திரத்தையே ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்கி விட்டது போலவும் நடந்து கொள்கின்றனர்[5]. இதைப் பற்றி ஏற்கெனவே விவரமாக எழுதி பதிவு செய்துள்ளேன்[6]. அதற்காக, இந்திய வரலாற்று பேரவை இதர மாநாடுகள் நடந்த போது, அங்கெல்லாம் சென்று, இதைப் பற்றி விளக்கி, உறுப்பினர்களை சேர்த்ததாகத் தெரிகின்றது.

வரலாற்றுப் பேரவைகளிடம் ஒற்றுமை இல்லை: ஏற்கெனவே சரித்திராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களிடையே ஒற்றுமை இல்லாதலால், இந்திய வரலாற்று பேரவை உடைந்து இந்திய கலை மற்றும் வரலாறு பேரவை, தென்னிந்திய வரலாற்று பேரவை, தமிழ்நாடு வரலாற்று பேரவை என பல மாநில “வரலாற்று பேரவைகள்” உருவாகி விட்டன. ஆகவே “உலக” என்று அடைமொழி வைத்துக் கொண்டாலும், குறுகிய, தன்னலம் கொண்ட ஆட்களால், இதுவும் சுறுங்கி விட்டது. மேலும் இப்பொழுதெல்லாம் சரித்திரம் என்றால் யாரும் மதிப்பதில்லை. அதனால், இவர்கள் அரசியலை கலந்து, அரசியல் கட்சிகளுக்கு ஜால்றா போட்டுக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டு வருகின்றனர். அவ்வாறுதான், இப்பொழுது, தென்னிந்திய வரலாற்று பேரவை, கேரளத்தவர்களின் ஆதிக்கத்திற்கு சென்று விட்டது. இதனால், அதனை “கேரள வரலாற்று பேரவை” என்று கூட சொல்லலாம். ஏற்கெனவே அதில் பிரச்சினை இருந்ததால், நீதிமன்றம் வரை சென்று மீட்டு வந்துள்ளது. இருப்பினும் அவர்களிடையே ஒற்றுமை இல்லை. சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவர். இல்லையென்றால் சண்டை ஆரமித்து விடும்.

ஆரம்ப விழா முதல் நிறைவு விழா வரை சுணக்கம் தான்:  ஆரம்ப விழாவுக்கு காலாப்பேட்டை எம்.எல்.ஏ, ஒரு அமைச்சர் மற்றும் சபாநாயகர் வந்திருந்தனர். நிறைவு விழாவிற்கும் எந்த விஐபியும் வரவில்லை. இருந்தவர்களும் சென்று விட்டார்கள் போலும். 40-50 பெயர்கள் அழைப்பிதழ், இணைதளங்களில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் காணவில்லை, அதாவது வரவில்லை. இவர்களே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்கள். மாநாட்டிற்கு சேவை செய்பவர்களைப் பாராட்டி, நினைவு பரிசு வழங்கப் பட்டது. இருப்பினும், பலரை மறந்து விட்டனர் என்பதை அவர்களுக்கேப் புரியும் வண்ணம், மற்றவர்கள் இல்லாதது எடுத்துக் காட்டியது. துவக்க நிகழ்ச்சியில் இருந்த கூட்டமும் இல்லை. தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே சென்று விட்டனர். அந்த அளவுக்கு அவசர-அவசரமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டு முடித்து விட்டது போன்று தெரிந்தது. மதிய உணவுடன் முடித்த்க் கொண்டதால், இரவு உணவு செலவும் மிச்சம் என்று நினைத்திருப்பர்.

சுயநலம், விருப்பு-வெறுப்பு நீங்கி செயல்பட்டால் தான் அமைப்பு வளரும், நிலைக்கும்: ஆரம்பநிலையிலே இத்தகைய சுயநலம், தனிமனித விருப்பு-வெறுப்பு போன்றவை, சரித்திராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களிடம் இருப்பது திகைப்பாக இருக்கிறது. ஏற்கெனவே சரித்திர பாடத்திற்கு முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில், இவர்களது இத்தகைய நடத்தைகளும் வருத்த அளிப்படாக உள்ளது. இப்படியே தொடர்ந்தால், இந்த அமைப்புகள் எல்லாம் கூடிய சீக்கிரத்தில், நடைபெறா நிலைக்குச் சென்று மறைந்து விடும் போலிருக்கிறது. ஒரு சொசைடி, சங்கம் என்று பதிவு செய்து கொண்டு தான் இவை இயங்கி வருகின்றன. அந்நிலையில் உற்ப்பினர்களின் நலன்களை கண்டுகொள்ளாமல், தங்களுக்கு விளம்பரம் தேடும் முறைகளில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தால், அவர்களுக்கு லாபம் கிடைக்குமே தவிர, உறுப்பின்னர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே, முதலில் இவ்ர்கள் தங்களைத் திருத்தி, மாறீக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

11-09-2023


[1]  குறிப்பிட்ட கெயிட் / எச்.ஓ.டி என்று அடையாளம் காணப்பட்டு, நடத்தப் பட்டதாக மாணவர்கள் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டார்கள். உண்மையில் மாணவர்களுக்கும், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிகிறது.

[2]    புதுச்சேரி வரலாற்றுப் பேரவை,  https://www.facebook.com/PuducherryHistoricalCouncil/

[3]  வேதபிரகாஷ், 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1), ஆகஸ்ட் 30, 2022.

[4] https://indianhistoriography.wordpress.com/2022/08/30/south-indian-history-congress-session-held-at-tindigul/

[5] வேதபிரகாஷ், 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், அய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (1), ஆகஸ்ட் 30, 2022.

[6] https://indianhistoriography.wordpress.com/2022/08/30/south-indian-history-congress-tindugal-session-mismanaged-and-not-handled-properly/

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடந்த விதம் (1)

செப்ரெம்பர்10, 2023

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடந்த விதம் (1)

புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்: “உலக வரலாற்று காங்கிரஸ்” புதுச்சேரியில் குறுகி விட்ட நிலைதான் தென்படுகிறது. புதுச்சேரியின் வரலாற்று பின்னணியை விளக்கும் வகையில், இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது[1]. உண்மையில், “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” [Puducherry World Histoy Congress, PWHC] என்ற  அமைப்பு, உலக சரித்திரத்தை ஆய்வோம் என்றுதான் ஆரம்பிக்கப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால், இவ்வாறு செய்தி வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது[2]. இதன், ஆலோசனை கூட்டம், தாகூர் அரசு கல்லுாரி வளாகத்தில் 06-09-2023 அன்று நடந்தது[3]. அமைப்பின் பொதுச் செயலரான பேராசிரியர் சந்தீப் குமார் தாசரி தலைமை தாங்கினார்[4].  நிர்வாகிகள், இரண்டு நாள் மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கினர். தினமலர் மற்றும் ஏதோ ஒரு உள்ளூர் ஊடகத்தில் மட்டும் இதைப் பற்றிய செய்து வெளிவந்துள்ளது. மற்ற ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை போலும்.

சரித்திரப் பாடம், வரலாறு கல்வி முதலியவற்றிற்கு மவுசு குறைந்து வருகிறது: இப்பொழுதெல்லாம் சரித்திர பாடத்தை யாரும் கண்டுகொள்வதில்லை எனலாம். ஏனெனில், அதைப் படித்து என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், பெரும்பாலான பல்கலைக் கழகங்களில், இத்துறை மூடப் பட்டு வருகிறது. மேலும், சேரும் எண்ணிக்கை குறைவதுடன், போதிக்கும் ஆசிரியர்களும் குறைந்து வருகின்றனர். இந்நிலையில், சரித்திர மாநாடு, கருத்தரங்கம் என்றெல்லாம்நடத்தினால் யார் வருவார்கள் என்று யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாக, சுற்றுலா போல, ஊரைச் சுற்ரிப் பார்க்க கூட்டம் வருவது சகஜமாக இருந்தது. ஆனால், இப்பொழுதெல்லாம், கலந்து கொள்ள ரூ 3000/-முதல் ரூ 5000/- வரை வசூலிக்கப் படுவதால், அத்தகைய கூட்டமும் குறைந்து விட்டது. அந்நிலையில், உண்மையில் ஆராய்ச்சி, கட்டுரை வாசிப்பு என்று வருவது சிலரே. இருப்பினும், ஓய்வு பெற்ற சரித்திராசிரியர்கள் முதலியோர்களுக்கு இது ஒரு கிளப் போன்றுசெயல்படுகிறது. வருடத்திற்கு மூன்று நாட்கள் வந்து ஜாலியாக தங்கி, பழைய நண்பர்களைப் பார்த்து செல்ல வசதியாக இருக்கிறது.

மாநாடு பற்றிய விவரம்: பின், வரலாற்று காங்கிரசின் பொதுச் செயலர் சந்தீப் தாசரி அளித்த பேட்டி: “புதுச்சேரிக்கு செழுமையான வரலாற்று பின்னணி உள்ளது. புதுச்சேரியின் கலாசாரமும் தனித்துவம் வாய்ந்தது. புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் உள்ளிட்டவைகள் இங்கு அமைந்துள்ளன. மேலும், பண்டைய வாணிப தொடர்புக்கும், கடல் வழி வணிகத்துக்கும் சாட்சியாக விளங்கும் அரிக்கமேடு புதுச்சேரியில் அமைந்துள்ளது. புதுச்சேரியின் வரலாற்றை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கத்தில், உலக வரலாற்று காங்கிரஸ் கடந்தாண்டு அக்டோபரில் துவங்கப்பட்டது. இந்நிலையில், அரசின் சுற்றுலாத் துறை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுலா படிப்புகள் துறையுடன் இணைந்து, வரும் 9, 10 ஆகிய தேதிகளில் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். புதுச்சேரி பல்கலையில் நடக்கும் இந்த மாநாட்டில் நாடு முழுதும் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் வரலாறு சார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் 600 பேரும், வரலாற்று துறை மாணவர்கள் 200 பேரும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை, பல்கலை துணைவேந்தர் குர்மீத்சிங் துவக்கி வைக்கிறார். பழங்கால உலகம், இடைக்கால உலகம், நவீனகால உலகம், இந்தியா மற்றும் அயல்நாட்டு சமகால வரலாறு, கடல் சார் உலகம், உலக சுற்றுலா ஆகிய தலைப்புகளில் அறிஞர்கள் பேசுகின்றனர். 150 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன,” இவ்வாறு அவர் கூறினார். ஆக, இவரும் இவ்வாறு குறுக்கி விளக்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

09-09-2023 அன்று இம்மாநாடு துவக்கி வைக்கப் பட்டது. குறிப்பிட்டது போல, கவர்னர், முதலமைச்சர் என்றெல்லாம் யாரும் வரவில்லை. உள்ளூர் காலாப்பேட்டை எம்.எல்.ஏ மற்றும் சபாநாயகர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இவ்விவரமும் அந்த எம்.எல்.ஏ இணைதளத்திலிருந்து அறியப் படுகிறது. போதிய கூட்டமும் இல்லை. விசாரித்த போது, இந்த அமைப்பில் ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சினைகள் இருப்பது தெரிகிறது. ஏற்கெனவே “புதுச்சேரி வரலாற்று காங்கிரஸ்” [Pucherry History Congress, PHC] என்று ஒரு அமைப்பு செயல்பட்டு வந்தது தெரிகிறது. ஆனால், ஏதோ காரணங்களுக்காக இப்பொழுது செயல்படவில்லை. மாற்றாக, இன்னொரு அமைப்பு ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் அதே பெயரை உபயோகிக்காமல், இவ்வாறு, “புதுச்சேரி உலக வரலாற்று காங்கிரஸ்” என்று டாம்பீகமாக பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பது தெரிகிறது. ஆனால், உன்மையில் வெளிநாட்டவர் யாரும் வரவில்லை, சுற்றுலாவுக்கு வந்தவர்களை, மாநாட்டுக்கு வந்தவர்கள் போன்று அறிவித்துள்ளனர். புதுச்சேரிக்கு சாதாரணமாக அயல்நாட்டவர் வந்து செல்வது சகஜம் தான். அதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

இந்தியாவில்உலக வரலாற்றுக் காங்கிரஸின்பரபரப்பான விசயமானது: பங்கேற்கும் பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அமர்வுகள் என்று வைத்துக் கொன்உ, “உலக வரலாற்றுக் காங்கிரஸை” உலக அளவில் நடத்தலாம், இதில். கடந்த 100 ஆண்டுகளாக வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்கேற்புடன் “சர்வதேச” மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்போது, இது ஒன்று அல்லது சில NRIகள் பங்கேற்கும் நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது, உறுகியுள்ளது. அவர்கள் தங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடும், அதை இங்கே விவரிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அத்தகைய நபர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், உள்ளூர் கூட்டத்தை கூட அத்தகைய “சர்வதேச மாநாட்டிற்கு” மாற்றுவதற்கும் வழிகள் காணப்படுகின்றன. சென்னையில், மூன்று நட்சத்திர ஹோட்டலில் பல தலைப்புகளில் பல “சர்வதேச மாநாடுகளை” நடத்தும் குழுக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கின்றன. இதுபோன்ற பல “சர்வதேச,” “உலகளாவிய,” “கண்டங்களுக்கு இடையேயான,” “உலகளாவிய” போன்றவை தோன்றி மறைந்தன. எனவே, ஆரம்பிக்கப் பட்ட தமிழ்நாடு உலக வரலாற்று மாநாடு, ஆந்திரப் பிரதேச உலக வரலாற்று மாநாடு, தெலுங்கானா உலக வரலாற்று மாநாடு, கர்நாடகா உலக வரலாற்று மாநாடு, கேரள உலக வரலாற்று மாநாடு, ஒடிஷா உலக வரலாற்று மாநாடு போன்றவற்றின் எண்ணம் குறித்து ஆச்சரியப்பட முடியாது. சமீபகாலமாக, “உலகத் தமிழ் மாநாடு” போன்றவை பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. எனவே, ஒருவர் பேசுவது, செய்தது, நடப்பது பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும்.

இது பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நுகர்வோர் கொண்ட எல்பிஜி உலகம்: பொதுமக்கள் அல்லது நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படும் போது, இயற்கையாகவே, அவர்கள் விலை மற்றும் தரத்தைப் பார்க்கிறார்கள். உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் “பொருட்கள் மற்றும் சேவைகளை” சந்தையில் கொட்டலாம், ஆனால் “நுகர்வோர்” தமது விருப்பத்திற்கு-தேவௌக்கு ஏற்ப வாங்கலாம் அல்லது வாங்காமல் இருக்கலாம், இருப்பினும் வாங்குபவர்களும் விற்பவர்களும் தங்கள் வணிகத்தைச் செய்கிறார்கள். எந்தவொரு நுகர்வோரும், “நான் 2,000, 3,000 அல்லது 5,000 ரூபாய் செலுத்தி, பயணத்திற்கும் மற்ற செலவுகளுக்கும் செலவழித்தால், அத்தகைய மதிப்புக்கு ஈடாக என்ன கிடைக்கும்?” என்று நினைப்பார்கள். நுகர்வோர் பெறவில்லை என்றால், அவர் ஏன் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்? எனவே, வரலாற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் நுகர்வோர் என்றால், நிச்சயமாக, அவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு செலுத்தியதை திரும்பப் பெற வேண்டும். மேலும், இங்கு, ஸ்பான்சர்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் லட்சங்கள் பெறப்படுகின்றன, எனவே, சேகரிக்கப்பட்ட பிரதிநிதி கட்டணத்தில் இருந்து அமைப்பாளர்கள் செலவிடுகிறார்கள் என்று யாரும் நினைக்க முடியாது. உண்மையில், பெறப்பட்ட லட்சக்கணக்கான நிதியில், அவர்கள் பிரதிநிதி கட்டணத்தை குறைக்கலாம்.

ஏறக்குறைய 100 உறுப்பினர்களுக்கு பிரதிநிதி கட்டண விலக்கு கிடைக்கும், என்பதால், மற்றவர்கள் இலவச சவாரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்களா?: ஏற்கனவே “ஜம்போ சைஸ்” செயற்குழுவில் சுமார் 100 நபர்கள் இருக்கிறார்கள். உண்மையில் 100 உறுப்பினர்களுடன், படிப்பு-ஆராய்ச்சி, கல்வி ரீதியாகவும் ஒரு மாநாட்டை நடத்தலாம். இங்கு, பிரதிநிதிக் கட்டணமாக ரூ.100 கொடுப்பார்களா என்பது தெரியவில்லை. 3,500 அல்லது இல்லையா, அப்படியானால், ஒருவர் சிந்திக்க வேண்டும், அவர்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் தேவையில்லை, அவர்களில் 90% பேர் பார்வைக்காக வருகிறார்கள், மீதமுள்ள 10% பேர் ஆய்வுக்கட்டுரைகளில் ஆர்வம் காட்ட மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் வாசித்து முடிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள். மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்குள் ஆய்வுக் கட்டுரையை முடித்து விட்டு, பீச், ரிசார்ட், கோவில் மற்றும் பலவற்றிற்குச் சென்று மகிழத் தான் சமயம் பார்ப்பார்கள். எனவே, கல்வி சாரா செயல்பாடுகளை விட, கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-09-2023


[1] தினமலர், புதுச்சேரி வரலாற்றை விளக்க 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு, பதிவு செய்த நாள்: செப் 07,2023 07:15.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3425347

[3] தினமலர், புதுச்சேரியின் வரலாற்றை விளக்க இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு, பதிவு செய்த நாள்: செப் 07,2023 05:03.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3425079

கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில் அடிக்கடி கலாட்டா செய்வது – சரித்திர பாடதிட்டத்தை குறைப்பது சாதாரணமான விசயம் தான் (2)

ஏப்ரல்19, 2023

கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில் அடிக்கடி கலாட்டா செய்வதுசரித்திர பாடதிட்டத்தை குறைப்பது சாதாரணமான விசயம் தான் (2)

சிலபஸ் குறைப்பு-அதிகரிப்பு போன்றவை சாதாரண விசயங்கள்: “என்சிஇஆர்டி நிபுணர்களைக் கொண்ட பெரிய அமைப்பு. என்சிஇஆர்டி எந்த மாற்றங்களைச் செய்தாலும் அது பொதுவாக கல்வி அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகின்றன. வரலாற்றில் யாரேனும் தனது சொந்த சித்தாந்தத்தை வைத்தால் அது அகற்றப்பட வேண்டும். ஆனால் முகலாய வரலாறு உலகளாவிய வரலாறு, அதை முழுமையாக அகற்ற முடியாது. அது சீராக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடும்,” என்று பாஜகவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் முன்னாள் என்சிஇஆர்டி தலைவர் ஜே.எஸ்.ராஜ்புத் கூறினார். “வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில பகுதிகள் விட்டுப்போய்விட்டனவா என்று ஆராயப்படுகிறது. முகலாயர் கால வரலாறு அதிகம் கற்பிக்கப்பட்டது என்று நானும் நினைக்கிறேன். ​​​​முகலாயர் காலத்தில் மட்டுமே இந்தியா இருந்தது, அதைத் தவிர வேறெப்போதும் இருந்ததில்லை என்று அதை படிக்கும்போது தோன்றும். இப்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படும் புத்தகங்களில் இவை அனைத்தும் கவனிக்கப்படுகின்றன,’என்றார் அவர்.

இடதுசாரிகளின் ஒத்துழையாமை மற்றும் அவர்களின் பழமைவாதம்: முகலாயர்கள் இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய அங்கம், அவர்களை புத்தகங்களில் இருந்து நீக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக குறைக்க முடியும் என்று ஜே.எஸ்.ராஜ்புத் கருதுகிறார்.”1970 க்குப் பிறகு, இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் அமைப்புகளில் செல்வாக்கு பெற்றனர். இந்த செல்வாக்கைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று 1999 மற்றும் 2004 க்கு இடையில் NCERT தலைவராக இருந்த ஜேஎஸ் ராஜ்புத் குறிப்பிட்டார். இந்த வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான பாடம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. “எனது பதவிக்காலத்திலும் புத்தகங்களை சீராக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் அந்த நேரத்தில் இறுதி முடிவை புத்தகத்தின் எழுத்தாளர்களிடம் விட்டுவிட்டோம். அவர்கள் மாற்றத்திற்கு தயாராக இல்லை. பின்னர் புதிய எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.” என்றார் அவர்.

நடுநிலையோடு தான் சிலபஸ் குறைக்கப் பட்டுள்ளது: புத்தகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த சர்ச்சைக்குப் பிறகு என்சிஇஆர்டியின் நன்மதிப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்காக என்சிஇஆர்டி இத்தகைய மாற்றங்களைச் செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. “இதுபோன்ற சர்ச்சைகளால் பாதிக்கப்படாத அளவிற்கு என்சிஇஆர்டியின் நன்மதிப்பு மிகவும் அதிகம். என்சிஇஆர்டி என்ன செய்தாலும், அதை சிந்தித்தே செய்கிறது. இந்தியாவில் இடதுசாரி சித்தாந்தத்தின் தாக்கம் அமைப்புகள் மீது உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். அது குறைக்கப்பட்டால் அந்த முயற்சிகளுக்கும் ஆதரவு கிடைக்கும். பலர் இந்த மாற்றங்களை வரவேற்கிறார்கள்,”என்று ராஜ்புத் கூறுகிறார்.

அடுத்த தலைமுறை அழிக்கப்படுகிறது: ஆனால் புத்தகங்களில் செய்யப்படும் இந்த மாற்றங்களை, முகலாய வரலாற்றை இந்தியாவில் இருந்து அழிக்கும் முயற்சியாக பலர் பார்க்கிறார்கள்.”வரலாறு மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு கற்பிப்பதை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று சில காலத்திற்குப் பிறகு உணரப்படுகிறது. மாற்றங்களை செய்வது பெரிய விஷயமல்ல. அவை தொடர்ந்து நடக்கின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் எப்போதும் உண்மைகளின் அடிப்படையில் நடக்கின்றன. புதிய தகவல்களின் அடிப்படையில் நிகழ்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த பல ஆண்டுகளாக நம் வரலாற்றை நம் விருப்பப்படி எழுத முயற்சி நடக்கிறது. ஒரு வகையில் வரலாறு படிப்படியாக அழிக்கப்பட்டு கட்டுக்கதைகள் அதன் இடத்தை ஆக்கிரமிக்கின்றன,” என்று இந்திய வரலாற்று காங்கிரஸின் செயலாளரும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியருமான சையத் அலி நதீம் ரெசாவி குறிப்பிட்டார்.

“2014 க்கு பிறகு, வரலாற்றுக்கு வித்தியாசமான கண்ணோட்டத்தை அளிக்க மீண்டும் மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில், வரலாற்று புத்தகங்களை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த மாற்றங்கள் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்பட்டது. இப்போது ஒரு கற்பனை வரலாற்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்றார் அவர். முகலாயர்களின் வரலாறு, புத்தகத்தில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தொடர்பான விஷயங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற என்சிஇஆர்டியின் வாதத்தை பேராசிரியர் ரெசாவி நிராகரிக்கிறார். “வரலாற்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தை நீக்க முடியாது. இப்படி செய்தால், குழந்தைகளுக்கு தவறான வரலாற்றை கற்பித்து, தவறான தகவல்களை வழங்குகிறீர்கள் என்று பொருள். இது நடந்தால் சமூகத்திலும் இது ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களின் குற்றச்சாட்டு: என்சிஇஆர்டியின் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து முகலாய மன்னர்களின் வரலாற்று பகுதி பாடம் நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், 11-ம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இஸ்லாமியர்களின் எழுச்சி மற்றும் கலாச்சார மோதல் தொடர்பான பகுதிகளை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்தப் பாடத் திட்டங்களை நீக்கக்கூடாது எனபலர் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்[1]. இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறும்போது, “மோடி அரசாங்கம் வரலாற்றுப் பாட நூல்களில் இருந்து முகலாய வரலாற்றை நீக்குகிறது. மேலும் இந்தியாவின் தற்போதைய வரலாற்றை சீனா அழித்துக் கொண்டிருக்கிறது” என்றார்[2].

மஹாராணா பிரதாப்பை ஹீரோவாக்க முயற்சிக்கிறார்கள்: புத்தகத்தில் இருக்கும் முகலாயர்கள் தொடர்பான பகுதி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். “அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளை வைத்திருக்கிறார்கள். முகலாயர்கள் இந்துக்களுடன் சண்டையிட்டதை வைத்திருக்கிறார்கள், ஆனால் முகலாயர்கள் இந்த சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப பணியாற்றினார்கள் என்று காட்டும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார். “மஹாராணா பிரதாப்பை ஹீரோவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவரை மட்டுமே வைத்து அவரை ஹீரோவாக்க முடியாது. அக்பரின் இருப்பு அங்கு அவசியம். எனவே அங்கு அக்பர் இருக்கிறார். ஆனால் அக்பர் பின்னாளில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு, சகிப்புத்தன்மை கொண்ட சமூகத்தை உருவாக்கினார் என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது,” என்று பேராசிரியர் அலி நதீம் ரெசாவி சுட்டிக்காட்டினார்.

என்.சி..ஆர்.டி.,யின் விளக்கம்: பிளஸ் 2 வரலாற்று பாட புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்[3]. இப் பாட புத்தகத்தில் திருத்தங்கள் செய்வதாக என்.சி.இ.ஆர்.டி., என்ற கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அறிவித்தது[4]. இதன்படி வரலாற்று பாட புத்தகத்தில் முகலாயர்கள் தொடர்பான சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன[5]. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் முகலாயர் தொடர்பான வரலாற்றை மாற்றி எழுத மத்திய அரசு முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன[6]. இது குறித்து என்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறியதாவது[7]: “பள்ளிக் கல்வி பாடதிட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளை என்.சி..ஆர்.டி., வழங்கி வருகிறது[8]. கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் பல பிரச்னைகளை சந்தித்தனர். பாடதிட்டங்கள் அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன. அதன்படியே பாடதிட்டங்கள் திருத்தப்பட்டன. பாடங்களின் அளவைக் குறைக்கவும், படிப்பதற்கு சுலபமாக இருக்கவும் ஒரே தகவல் பல இடங்களில் வருவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்தாண்டே 2022, அறிவிப்பு வெளியிட்டு நிபுணர்கள் உதவியுடன் பாடதிட்டங்கள் திருத்தப்பட்டன. மாணவர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விளக்கம் கடந்தாண்டே அளிக்கப்பட்டது. அந்த மாற்றங்களை சி.பி.எஸ்.., எனப்படும் மத்திய கல்வி வாரியம் தற்போது செய்துள்ளது. இதற்காக புதிய பாட புத்தகங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. கடந்தாண்டு திருத்தப்பட்டவையே தற்போதும் தொடர்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்தும் வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை[9]. அதுபோன்ற எந்த அரசியல் எண்ணமும், நிபுணர் குழுவுக்கு இல்லை,” இவ்வாறு அவர் கூறினார்[10].

2022லேயே வெளியிட்டபோது, யாரும் கண்டுகொள்ளவில்லை: கொரோனாவால் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதித்திருக்கும் நிலையில், அதிக அளவிலான பாடங்களின் சுமையை குறைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது[11]. குறைந்த பாடங்கள் கொண்ட பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பணிகள் அடிப்படையில், சிலபஸ் மற்றும் பாடநூல்களின் பாடங்கள் குறைக்கப்படும் எனத் தெரிகிறது[12].

© வேதபிரகாஷ்

19-04-2023


[1] தமிழ்.இந்து, முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்படவில்லைஎன்சிஇஆர்டி தலைவர் விளக்கம், செய்திப்பிரிவு, Published : 06 Apr 2023 07:06 AM, Last Updated : 06 Apr 2023 07:06 AM.

[2] https://www.hindutamil.in/news/india/971698-courses-on-mughals-not-scrapped-ncert-chairman-explains.html

[3] தமிழ்.இந்து, வரலாறு பாடப் புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படவில்லை: NCERT, செய்திப்பிரிவு, Published : 04 Apr 2023 07:33 PM Last Updated : 04 Apr 2023 07:33 PM.

[4] https://www.hindutamil.in/news/india/970870-ncert-chief-denies-dropping-chapters-on-mughals-says-rationalisation-1.html

[5] தமிழ்.ஏபிபி.லைவ், CBSE Syllabus: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பாடம் நீக்கம்; என்சிஇஆர்டி அறிவிப்பு, By: மாய நிலா | Updated at : 04 Apr 2023 12:06 PM (IST), Published at : 04 Apr 2023 12:02 PM (IST).

[6] https://tamil.abplive.com/education/mughals-now-out-of-syllabus-for-class-12-cbse-up-board-students-110094

[7] தமிழ்.ஒன்.இந்தியா, விடுபட்ட முகலாயர் வரலாறு.. வெடித்த சர்ச்சைகள்.. பாடத்திட்டத்தில் திருத்தமா?.. என்சிஇஆர்டி விளக்கம், By Halley Karthik, Published: Wednesday, April 5, 2023, 8:21 [IST].

[8] https://tamil.oneindia.com/news/delhi/ncert-director-s-explanation-regarding-removal-of-history-of-mughals-from-cbse-s-new-syllabus-505946.html

[9] தினமலர், முகலாயர் பாடம் திருத்தம்; என்.சி..ஆர்.டி., விளக்கம், மாற்றம் செய்த நாள்: ஏப் 05,2023 06:00.

[10] https://m.dinamalar.com/detail.php?id=3285478

[11] புதியதலைமுறை, பள்ளி மாணவர்களின் பாடச்சுமைகளை குறைக்க என்சிஇஆர்டி முடிவு, Veeramani, Published on :  28 Dec, 2021, 8:45 am

[12] https://www.puthiyathalaimurai.com/employment-news-in-tamil-latest-update/ncert-decides-to-reduce-the-syllabus-load-of-school-students

கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில் அடிக்கடி கலாட்டா செய்வது – சரித்திர பாடதிட்டத்தை குறைப்பது சாதாரணமான விசயம் தான் (1)

ஏப்ரல்19, 2023

கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில் அடிக்கடி கலாட்டா செய்வதுசரித்திர பாடதிட்டத்தை குறைப்பது சாதாரணமான விசயம் தான் (1)

கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில் பாரபட்சத்துடன் செயல்படுவது: கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில், அவ்வப்பொழுது கலாட்டா செய்து வருவது வாடிக்கையாகி விட்டது. ராமஜன்மபூமி விசயத்தில் அதிகமாகவே வெளிப்பட்டு, முஸ்லிம்களுக்கு சாதமாக வேலை செய்து, பிறகு உயர் மற்றும் உச்சநீதிமன்றங்களில் இத்தகைய சரித்திராசியர்கள் அதிகமாகவே வாங்கிக் கட்டிக் கொண்டனர். JNU, DU, AMU, Calcutta University, என்று இவர்கள் தங்களது குழுக்களை அமைத்துக் கொண்டு, செயல்பட்டு வருகிறார்கள். “செக்யூலரிஸம்” போர்வையில் அதிகமாகவே கூச்சலிடுவார்கள். இதே NCERT, ICCSR, UGC, IHC, போன்ற நிறுவனங்களில் இவர்கள் கடந்த 70 ஆண்டுகளாகக் கோலோச்சி வந்தார்கள். சரித்திரப் பாடமுறை, திட்டம் முதலியவற்றை வடிவமைப்பது, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் அவற்றை நுழைப்பது, அதற்கேற்றப் படி புத்தகங்களை எழுதுவது-வெளியிடுவது என்று செய்து வந்தார்கள்.

Left-right-centre என்று முடிந்துள்ள நிலை: பிறகு அவர்களது பாரபட்சம் அதிகமாக-அதிகமாக, நடுநிலை கொண்ட சரித்திராசியர்கள் அவற்றைத் தட்டிக் கேட்டு சரிசெய்ய முயற்சி செய்தனர். ஆனால், அவர்களை வலதுசாரிகள் என்றும், பிறகு ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவ சரித்திராசியர்கள் என்றும் கூறி ஓரங்கட்ட பார்த்தனர். ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவ சரித்திராசியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், அவர்கள், இவர்களைப் போல நன்றாக சாமர்த்தியம், சாதுர்யம் மற்றும் திறமை கொண்டவர்கள் இல்லை. வெளிப்ப்டையாக, தங்களது கருத்துகளை சொல்வதால், அவர்கள் அவ்வாறு முத்திரைக் குத்தப் பட்டார்கள்.  பிறகு, பொது மக்களுக்கே உண்மை தெரியவர, அவர்கள் எல்லோரையும் இனவாரியாக அடையாளம் கண்டு கொண்டனர். இதனால், வேறு வழியின்றனவர்களே தங்களை Left-right-centre என்றும் பிரித்துக் கொள்ள ஆரம்பித்தனர். NDTV போன்ற செனல்களில் வாத-விவாதங்களையும் அவ்வாறே நடத்தினர்.

2023ல் சிலபஸ் மாற்றம்- பாடங்கள் குறைக்கப் பட்டுள்ளது: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அதன் 12 ஆம் வகுப்பு வரலாற்று புத்தகங்களில் இருந்து முகலாய பேரரசு பற்றிய பாடத்தை நீக்கியுள்ளது[1] என்று தில்நவாஸ் பாஷா என்பவர் பாரபட்சத்துடன் நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். பிபிசி அதனை தாராளமாக வெளியிட்டுள்ளது. இது தவிர சர்ச்சைக்குரிய மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கதையை நீட்டுகிறார். என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புக்கான வரலாற்றுப் புத்தகத்தை ‘Themes of Indian history’ (இந்திய வரலாற்றின் கருப்பொருட்கள்) என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளது[2]. அதன் இரண்டாம் பகுதியில், “மன்னர்கள் மற்றும் வரலாறு, முகல் தர்பார்” என்ற 9வது அத்தியாயம் இப்போது புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது[3]. NCERT இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் புதிய வரலாற்றுப் புத்தகங்களில் முகலாய ஆட்சியாளர்கள் பற்றிய இந்த 28 பக்க அத்தியாயம் இல்லை[4]. இந்தியாவின் முன்னாள் முஸ்லிம் ஆட்சியாளர்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும் என்சிஇஆர்டியின் இந்த நடவடிக்கை, இந்திய வரலாற்றில் இருந்து முகலாயர்களை அகற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதே நேரம், மாணவர்கள் மீதான பாடத்திட்டத்தின் சுமையை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி வாதிடுகிறது.

வரலாற்றுப் புத்தகத்தில் முகலாயர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படும் சில அத்தியாயங்கள் இன்னும் உள்ளன. ஐந்தாவது அத்தியாயத்தில் ’பயணிகளின் பார்வையில்’ இந்தியா காட்டப்பட்டுள்ளது. இதில் பத்தாவது முதல் பதினேழாம் நூற்றாண்டு வரையிலான இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அத்தியாயம் ஆறு, பக்தி மற்றும் சூஃபி மரபுகள் மீது கவனம் செலுத்துகிறது. முகலாயர் காலத்தின் குறிப்பு இதில் உள்ளது. எட்டாவது அத்தியாயத்தின் தலைப்பு ’விவசாயி, நிலப்பிரபுகள் மற்றும் நிர்வாகம், விவசாய சமூகம் மற்றும் முகலாய பேரரசு’ என்பதாகும். இதில் முகலாயர் காலத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றுப் புத்தகத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை ஆதரித்து ஊடகங்களிடம் பேசிய NCERT தலைவர் தினேஷ் சக்லானி, “முகலாயர்களின் வரலாறு அகற்றப்படவில்லை. ஆனால் மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக பாடத்திட்டத்தில் இருந்து சில பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன” என்றார். “இது பாடத்திட்டத்தின் சீராக்கல் அல்ல, இது பாடப்புத்தகத்தின் சீராக்கல். கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோயால், மாணவர்களுக்கு அதிக இழப்பும் அழுத்தமும் ஏற்பட்டது. மாணவர்களின் பாடத்திட்டத்தின் சுமையை ஓரளவு குறைக்க வேண்டும் என்று உணரப்பட்டது. நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

வலதுசாரி ஆதரவு முயற்சியா?: புத்தகங்களை மாற்றும் இந்த செயல்பாட்டில், முகலாயர்கள் தொடர்பான அத்தியாயம் மட்டுமே வரலாற்று புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று சொல்லமுடியாது. மகாத்மா காந்தியின் இந்துத்துவவாதிகள் மீதான வெறுப்பு மற்றும் அவரது படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் மீதான தடை ஆகியவற்றைக் குறிப்பிடும் வாக்கியங்களும் அரசியல் அறிவியல் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயை பற்றி எழுதப்பட்ட ‘புனே பிராமணர்’ என்ற வாக்கியமும் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2002 குஜராத் கலவரம் தொடர்பான மூன்றாவது மற்றும் இறுதி குறிப்பு, 11 ஆம் வகுப்பு சமூகவியல் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. NCERT புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளன. சமூகவியல் பாடப்புத்தகத்திலிருந்து குஜராத் கலவரம் தொடர்பான குறிப்பு நீக்கப்பட்டுள்ளது

எதிர்ப்பு ஏன்? ராஜஸ்தான், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தின் கல்வி அமைச்சர்கள் இந்த மாற்றங்களை கடுமையாக எதிர்த்துள்ளனர்: என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது என்று கதை எழுதப் படுகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் இந்த மாற்றங்களை அமல்படுத்துவதற்கு முன் முழுமையான ஆய்வு செய்யப்படும் என்று ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால் உத்தரபிரதேச அரசு இந்த மாற்றங்களை ஆதரித்துள்ளது. “புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது, என்சிஇஆர்டியின் பாடத்திட்டம் அப்படியே இருக்கும். எங்கள் தரப்பில் இருந்து எந்த மாற்றமும் இல்லை” என்று உத்திர பிரதேசத்தின் கல்வி அமைச்சர் குலாப் தேவி குறிப்பிட்டார். என்சிஇஆர்டி புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் செப்டம்பர் மாதத்தில் உத்தரபிரதேச அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும். இந்த அத்தியாயத்தில், முகலாயப் பேரரசின் போது இந்தியாவின் விவசாய சமூகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முகலாயர்களைப் பற்றிய அத்தியாயம் 9, மாதாந்திர கால அட்டவணையில் இல்லை. அதாவது இந்த கல்வியாண்டில் புதிய புத்தகத்தில் இருந்தே பாடம் கற்பிக்கப்படும்.

கம்யூனிஸ்டுகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பு: வகுப்புவாத அடிப்படையில் வரலாறு எழுதுவது தீவிரமடைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மறுபுறம், சிபிஐ கட்சித்தலைவர் டி ராஜா, NCERT ஐ தேசிய பகுத்தறிவு , உண்மை ஒழிப்பு கவுன்சில் என்று அழைத்தார். “வரலாற்றை சிதைத்து வரலாற்றை மாற்ற ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட மற்றொரு முயற்சி இது. சர்தார் படேல் காந்தியின் படுகொலைக்குப் பிறகு வெறுப்பு மற்றும் வன்முறை சக்திகளை வேரறுக்க ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்தார்” என்றார். எத்தனை பொய்களாலும் இந்த உண்மையை மறைக்க முடியாது,”என்று டி ராஜா கூறினார்.

மாற்றங்களை ஆதரிக்கும் வாதம்: புதிய NCERT புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்படும் போது, ​​பல குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பரிந்துரைகள் வருகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டி புதிய ஆலோசனைகளை இவர்கள் வழங்குகிறார்கள். பொதுவாக இவற்றைக் கருத்தில் கொண்டு, பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அறிவியல் பாடங்கள் குறித்த புத்தகங்கள், புதிய தகவல்கள் வரும்போது காலத்துக்கு ஏற்ப மாறுகிறது. பல சமயங்களில் புத்தகங்களில் கிடைக்கும் தகவல்கள் காலாவதியாகிவிடுகின்றன. இந்த துறைகளில் புதிய வளர்ச்சிகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் இந்த மாற்றங்கள் இயற்கையானது. கடந்த காலங்களிலும் வரலாற்றுப் புத்தகங்கள் அல்லது பிற பாடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்காக என்சிஇஆர்டி வல்லுநர்கள் விவாதித்து மாற்றங்கள் குறித்து புத்தகங்களின் ஆசிரியர்களிடம் பரிந்துரைக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

19-04-2023


[1] பிபிசி, NCERT புத்தகங்களில் முஸ்லிம் மன்னர்கள் பாடம் நீக்கம்: முகலாயர்களின் வரலாற்றை அழிக்க முயற்சியா?, எழுதியவர், தில்நவாஸ் பாஷா, 7 ஏப்ரல் 2023

[2] https://www.bbc.com/tamil/articles/cj57vzv079ro

[3] விகடன், `பாடப்புத்தகத்தில் முகலாயர்களின் வரலாற்றுப் பகுதி நீக்கமா?’ – சர்ச்சையும் NCERT விளக்கமும்!, ரா.அரவிந்தராஜ், Published: 05 Apr 2023 2 PM; Updated: 05 Apr 2023 2 PM

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/ncert-modifies-syllabus-chapters-on-mughal-empire-from-12th-class-books

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – 27-12-2022 அன்று மோடி, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது (4)

திசெம்பர்30, 2022

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – 27-12-2022 அன்று மோடி, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது (4)

மதசார்பின்மை கதையும், வரலாறும்: வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது, “இந்த உண்மையான வரலாற்றை மறைத்து, தமிழர்களை ஏமாற்றும் தந்திரத்தைதான், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விமர்சித்திருப்பார் என நம்புகிறேன். என்னதான் தி.மு..வினர் மறைத்தாலும், உண்மை தான் இறுதியில் வெல்லும். அதுவும் இது, தகவல் தொழில்நுட்ப யுகம். இப்போது எதையும் மறைக்க முடியாது. இனம், மொழி வெறியைத் தூண்டி, குடும்ப அரசியலை நீண்ட காலத்திற்கு நடத்த முடியாது என்பதை தி.மு..வினர் உணர வேண்டும். காலம் அதனை நிச்சயம் உணர்த்தும். இதே மாநாட்டில் பேசும்போது, “மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைஎன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார். அவருக்கு ஓர் உண்மை வரலாற்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 1950-ல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அரசியலமைப்பின் முகப்புரையில்மதச்சார்பின்மைஎன்ற வார்த்தை சேர்க்கப்படவில்லை. 1975-ல் நாட்டில் நெருக்கடியை நிலையை அறிவித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, மிசா சட்டத்தின்கீழ், எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்து விட்டு, கொடுங்கோல் ஆட்சி நடத்தினார்எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிறையில் அடைத்துவிட்டு, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையை எல்லாம் முடக்கிவிட்டுதான், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை, இந்திரா காந்தி சேர்த்தார்.”

தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்; வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது, “இந்த வரலாற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், வரலாற்று காங்கிரஸ் மாநாட்டில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மதச்சார்பின்மைஎன்பது மதங்களைமறுப்பதுஅல்ல. அனைத்து மதங்களையும்சமமாகபேணுவதே. ஆனால், தி.மு..வின் மதச்சார்பின்மை என்பது, இந்து மதத்தற்கு மட்டும் எதிராக செயல்படுவது. அதனால்தான், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. இந்த மாநாட்டில், “பொய் வரலாறுகளை புறந்தள்ளி, மக்களை மையப்படுத்திய உண்மை வரலாறு எழுதப்பட வேண்டும்என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியதையே நானும் வலியுறுத்துகிறேன். தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் கட்டிய இந்து கோவில்கள் பற்றியும், அவர்கள் பின்பற்றிய இந்து தர்மம், கலாசாரம் பண்பாடு பற்றியும், ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகள், மொகலாய மன்னர்கள், சுல்தான்கள் ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்கள் பற்றிய வரலாறும் எழுதப்பட வேண்டும். இந்த உண்மைகளை எல்லாம் குறிப்பிட வாய்ப்பளிக்கும் வகையில், இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி,” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

27-12-2022 அன்று மோடி, பினாராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் சரித்திரம் பற்றி பேசியது[1]: கடந்த நவம்பர் மாதம், 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் படைகளை வென்ற லச்சித் பர்புகானின் 400-ம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி[2], “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்தியப் பார்வையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்நியர்கள் ஆட்சிக்காலத்து சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட வரலாறுதான் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. அந்நியர்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து, தியாகம் புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப நாட்டின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்என்றார். அதைத் தொடர்ந்து, டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆனால், இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றனஎன்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், “வீர பாலகர் தினம் என்பது இந்தியாவின் வீரம், தியாகம், சீக்கிய பாரம்பர்யத்தின் அடையாளம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு சம்கவுர், சிர்ஹிந்த் போர்கள் நடைபெற்றன. மதஅடிப்படைவாதத்தைப் பின்பற்றிய முகலாயப் படைகளுக்கு எதிராக நமது குருக்கள் துணிச்சலாகப் போராடினர். சீக்கிய குரு கோவிந்த் சிங்கும், அவரின் மகன்களும் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை. யார் முன்பும் தலைவணங்கவில்லை. கோவிந்த் சிங்கின் சிறுவயது மகன்கள் உயிருடன் சமாதி கட்டப்பட்டனர். ஒருபுறம் மிருகத்தனம், மறுபுறம் பொறுமை, வீரம் வெளிப்பட்டது,” என்றார்.

27-12-2022 அன்று கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும் இந்திய வரலாறு குறித்து சமீபத்தில் பேசியது: இவ்வாறு இந்திய வரலாறு குறித்து பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும் இந்திய வரலாறு குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பாறப்புறத்தில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய கேரளா முதல்வர், “சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் செய்தவர்களைத் துணிச்சலான தேசபக்தர்கள் என்றும், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் இன்றைய ஆட்சியாளர்கள் சித்திரித்துவருகின்றனர்” என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை விமர்சித்தார். “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பரிவாரங்களால் துணிச்சலான தேசபக்தர் என்று போற்றப்பட்ட சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு அந்தமான் சிறையிலிருந்து விடுதலை பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தை எந்தெந்த வழிகளில் சிதைக்கலாம் என்று சிந்தித்தார்கள். தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் முக்கியப் பங்கு வகித்தனர்” என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கேகூட இந்தக் கருத்தைக் குறிப்பிட்டார்.

27-12-2022 அன்று ஸ்டாலின் பேசியது: இந்தப் பின்னணியில்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். மேலும், “கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. அதை ஏற்கக் கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்” என்று பா.ஜ.க-வை மறைமுகமாகச் சாடினார் ஸ்டாலின். ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்ட வரலாற்று அறிஞர்களின் ஆய்வு நூல்களை பா.ஜ.க ஏற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களின் நூல்களையெல்லாம் மனதில் வைத்துத்தான், இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசுகிறார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 1990களில் சரித்திராசிரியர்கள் வேறுபட்டு சண்டை போட்டுக் கொண்டனர். இப்பொழுது அவர்களில் பாதி பேர் காலமாகி விட்டனர், சிலருக்கு 70-80-90 என்று வயாதாகி விட்டது. மற்றவர்களோ உண்மையினை மறைத்து பேசி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

30-12-2022


[1] விகடன், இந்திய வரலாற்றைக் குறை கூறிவரும் பிரதமர் மோடிபாஜக மாற்றி எழுத விரும்புவது எதை?!, ஆ.பழனியப்பன்,  Published:Today at 7 AM; Updated: 7.30 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/politics/the-prime-minister-modi-reiterates-to-rewrite-indian-history

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – இந்திய சரித்திரத்திற்கு பதிலாக தமிழக சரித்திரம் பற்றி பேசியது! (3)

திசெம்பர்30, 2022

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்மாநாடாக மாறியது – இந்திய சரித்திரத்திற்கு பதிலாக தமிழக சரித்திரம் பற்றி பேசியது! (3)

கோடிகளில் நிதியுதவி பெற்று நடத்தப் படும் மாநாடுகள்: கல்லூரி முதல்வர் வில்சன் ஆங்கிலத்தில் பேசினாலும், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று வரவேற்று பேசி, அரசியல் ரீதியில் தான் பேசினார். தமிழ்நாடு அரசு ரூ.35 லட்சங்கள் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மற்ற கல்வி நிறுவனங்கள் முதலியனவும் நிதியுதவி அளித்துள்ளன. சுமார் 2500 பேர் பதிவு செய்ததாகச் சொல்லப் படுகிறது, அப்படியென்றால், சுமார் ரூ 75 லட்சம் மேலாக தொகை வந்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ரூ.35 லட்சங்கள் கொடுத்துள்ளது என்றால், ரூ 1 கோடிக்கு மேலாக வசூலாகியிருக்கிறது. ஆனால், நிச்சயமாக, இவ்வளவு தொகையும் செலவழிக்கப் படவில்லை. ஏனெனில், பாதிக்கு மேற்பட்டவர்கள் தங்காமல், ஆய்வு கட்டுரை கொடுத்து சென்று விட்டானர்.  30-40% பேர் வழக்கம் போல சுற்றிப் பார்க்கச் சென்று விட்டனர். ஆய்வுக் கட்டுரை படிக்கும் அறைகளில் சுமார் 100 பேர் தான் இருந்தனர். மதியத்திற்கு மேல், 5-10 பேர் தான் இருந்தனர். பிறகு, ஒவ்வொருவரிடமிருந்து ஏன் ரூ 4750/-, 3,500/- என்றெல்லாம் வசூலிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வழக்கம் போல நடந்த சடங்குகள்: மஹாலக்ஷ்மி ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். ஷிரீன் மூஷ்வி, சுப்பராயலு கேசவன் தலைவராக முன் மொழிந்தார். ஷிரீன் மூஷ்வி, வழி மொழிந்தார். டி.ஆர்.பாலு, அன்பரசு, தங்கம் தென்னரசு, பொன்முடி, ஸ்டாலின், முதலியோருக்கு நினைவு பரிசு கொடுக்கப் பட்டது. தங்கம் தென்னரசு, இந்திய சரித்திரம் தமிழகத்திலிருந்து தான் துவக்கப் பட வேண்டும். பல்லாவரம் கோடாளி, அத்திரம்பாகம் பழங்கற்கால எச்சங்கள், முதலியவற்றைக் குறிப்பிட்டு, தமிழ் வைவடிவம் முந்தியது என்றெல்லாம் பேசினார். எல்லாமே, ஸ்டாலின் ஆட்சியில் தான் நடந்தது போன்று பேசியது தமாஷாக இருந்தது. பொன்முடி “திராவிட மாடல்” பாணியிலேயே பேசி முடித்தார். கால்டுவெல் பற்றியெல்லாம் பேசினார். 1935ல் ஆரம்பித்தாலும் 81வது மாநாடு இப்பொழுது நடக்கிறது. உண்மையான சரித்திரம் எழுதப் படவேண்டும். அடுத்தது ஸ்டாலின் பேசினார். ராமானுஜன் நிதியுதவி அளித்தற்கு நன்றி தெரிவித்தார். எல்லா மந்திரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

 “திராவிட சரித்திர காங்கிரஸ்மாநாடாக மாறியது: இப்படியாக முதலமைச்சர் பேசியது, சரித்திராசிரியர்களுக்குத் திகைப்பாகத் தான் இருந்தது. முந்தைய அமர்வுகளைப் போல, எந்த சரித்திராசிரியரும் பொங்கவில்லை, துடிக்கவில்லை, ஆவேசமாக எழுந்து பேசவில்லை, கத்தவில்லை. அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். சொல்லி வைத்தால் போல, இர்பான் ஹபீப் போன்றவர்களும், ரோமிலா தாபர் வகையறாக்களும் வரவில்லை. வந்திருந்தாலும், அமைதியாகத்தான் இருந்திருப்பர். கண்ணூர் போல, இர்பான் ஹபீப் ஒன்றும் ஸ்டாலினைத் தட்டிக் கேட்டிருக்க முடியாது. கத்தி ஆர்பாட்டம் போட்ட கும்பலும் இங்கு காணவில்லை. ஸ்டாலின் பேசியதை கூர்ந்து கவனித்தால், அவர் ஏதோ, “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசியது போன்று இருந்தது. அரசியல் மயமாக்கி, கொடுத்த பெரிய சொற்பொழிவை கேட்டுக் கொண்டு சும்மாதான் இருந்தனர். பொதுவாக ஆங்கிலத்தில் ஏசுவதைக் கூட விடுத்து, இவ்வாறு, “திராவிட மாடலில்” பேசியது, சரித்திராசிரியர்களுக்கு பாதித்ததாகத் தெரியவில்லை.

கண்ணாடி முன்பு நின்று தனக்கு தானே பேசியிருக்க வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும்: நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை என வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார்[1]. பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்[2];- “சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற, 81-வது ‘இந்திய வரலாற்று காங்கிரஸ்’ மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “கற்பனை கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபுதான்,” என, பேசியுள்ளார்[3]. முதல்வரின் இந்த வரிகளோடு அப்படியே நான் உடன்படுகிறேன். இந்த வரிகளை அவர், கண்ணாடி முன்பு நின்று தனக்கு தானே பேசியிருக்க வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும்[4].

நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை: நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளே கட்டுக் கதைகளால் உருவாக்கப்பட்டவை[5]. கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தமிழகம் வந்த பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, ‘திராவிடம்’ என்ற நிலப்பரப்பை, திராவிட இனமாக, கற்பனையாக சித்தரித்து உருவாக்கப்பட்ட கட்டுக்கதைதான், தி.மு.க.வின் அடிப்படை[6].  ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதை தான் திராவிட இனவாதம்[7].  அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாத கட்டுக் கதையாக தங்கள் கட்சியின் அடிப்படை கொள்கையாக வைத்துக் கொண்டு, யாருக்கோ பாடம் எடுத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர்[8]. இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள், ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ மூலமே, நம்மை ஆண்டனர். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாகவே, 1916-ல் தமிழகத்தில், ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ உருவானது. இதுவே பின்னாளில், நீதிக் கட்சி, திராவிடர் கழகமாகி, திராவிட முன்னேற்றக் கழகமானது. தமிழகத்தில் நீதிக் கட்சி செல்வாக்கு பெறத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுதந்திரப் போராட்டமே நீர்த்துப் போனது.

பெரியாரை வைத்து உண்டாக்கிய கட்டுக் கதைகள்: வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதியார் தங்கள் வாழ்வை தியாகம் செய்து எழுப்பிய சுதந்திரத் தீயை, நீதிக்கட்சி தனி தமிழ்நாடு, திராவிட நாடு என்று பிரிவினை பேசி அணைத்தது. அதனால்தான், 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளை, கருப்பு தினமாக பெரியார் ஈ.வெ.ரா. அறிவித்தார். இதுதான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. இவற்றையெல்லாம், தி.மு.கவினர் இப்போது பேசுவதில்லை. உயிருக்கும் மேலான நம் தாய் மொழியை, ‘காட்டுமிராண்டி மொழி’ என்றும், உலகமே வியக்கும் திருக்குறளை, ‘தங்க தட்டில் வைத்த மலம்’ என்று விமர்சித்தவர் பெரியார் ஈ.வெ.ரா. கீழ்வெண்மணியில், பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம் தேசத்தையே உலுக்கியபோது, பண்ணையார்களுக்கு ஆதரவாக நின்றவர் பெரியார் ஈ.வெ.ரா. தி.மு.க. ஆட்சியில் காவிரி நதி நீர் பிரச்னை, கச்சத் தீவை தாரை வார்த்தது என அவர்கள், சுய நலத்திற்காக, தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுத்த வரலாறுகளை தனி புத்தகமாகத்தான் வெளியிட வேண்டும். பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு யுனைஸ்கோ விருது கிடைத்ததாக, ஒரு கட்டுக்கதையை பரப்பி, அதனை பாடப் புத்தகத்திலும் இடம் பெறச் செய்தவர்கள்தான் தி.மு.க.வினர். இவையெல்லாம் தான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. இவற்றையெல்லாம், இப்போது தி.மு.க.வினர் பேசுவதில்லை.

© வேதபிரகாஷ்

30-12-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதை தான் திராவிட இனவாதம்‘ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு, By: பிரசாந்த் | Updated at : 28 Dec 2022 06:40 PM (IST), Published at : 28 Dec 2022 06:40 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/coimbatore/vanathi-srinivasan-accused-dravidian-racism-as-a-myth-created-by-the-british-93327

[3] தமிழ்.ஒன்.இந்தியா, திராவிட நாடு, பெரியார், கீழவெண்மணி.. சீமான் குரலில் முதல்வர் மு..ஸ்டாலினுக்கு பதில் சொன்ன வானதி!, By Mathivanan Maran Published: Wednesday, December 28, 2022, 17:53 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/bjp-mla-vanathi-srinivasan-replies-to-cm-mk-stalin-on-dravidam-491788.html

[5] தமிழ்.ஏசியாநெட், இதெல்லாம் கற்பனை கதை.. முதல்வர் ஸ்டாலின் சொல்வதை நம்பி ஏமாந்து விடாதீங்க.. வானதி சீனிவாசன்..!, vinoth kumar, First Published Dec 29, 2022, 10:14 AM IST, Last Updated Dec 29, 2022, 10:16 AM IST

[6] https://tamil.asianetnews.com/politics/don-t-be-fooled-by-what-cm-stalin-says-vanathi-srinivasan-rnmyhh

[7] கூடல்.காம், தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்: வானதி சீனிவாசன்!, 2022 December 29.

[8] https://koodal.com/news/2022/12/29/dravidian-race-is-a-myth-contrived-by-the-british-says-vanathi-srinivasan/

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது – ஸ்டாலினின் சொற்பொழிவு (2)

திசெம்பர்30, 2022

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்மாநாடாக மாறியதுஸ்டாலினின் சொற்பொழிவு (2)

கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதனை ஏற்கக்கூடாது: கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் மட்டும்தான், நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும்; எதிர்காலத்தைக் கணிக்க முடியும். அப்படி படிக்கப்படும் வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மையான வகையில் அது அமைந்திட வேண்டும். கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதனை ஏற்கக்கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்[1]. கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகள், காப்பாற்றப்பட வேண்டும்[2]. இத்தகைய சூழலில், இந்திய வரலாற்று காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் பணி என்பது மிக மிக முக்கியமானது! 1994-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, நான் இங்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

எந்தவொரு கட்சியும் மதவாதக் கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது: மதச்சார்பின்மை என்பது, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையாகும். அதை எந்த வகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது[3]. எந்தவொரு கட்சியும் மதவாதக் கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது[4]. பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பிளவை உண்டாக்கி, அவர்களுக்குள்ளேயே படுகொலைகளைத் தூண்டுகிற சக்திகளை இயங்க அனுமதித்தால், ஜனநாயகமே இல்லாமல் போய்விடும்[5]. ஒரு மதச்சார்பற்ற அரசு அந்த சக்திகளைக் கட்டுப்படுத்தி அழித்து, சமுதாயத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்” – என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது[6]. அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள். இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி – மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்.

நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான். ஆனால் பழமைவாதிகள் அல்ல!: தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு! இங்கே இந்த மாநாடு நடப்பது மிகமிகப் பொருத்தமானது! நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான்[7]. ஆனால் பழமைவாதிகள் அல்ல! அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம்[8]. இங்கே அமைச்சர் தங்கம் தென்னரசு மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள். கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் விரிவான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது[9]. தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், எழுத்தறிவு மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது[10]. சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட, உமி நீங்கிய நெல்மணிகளின் காலம், கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது.தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது, அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அகழாய்வு முடிவுகளை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்துள்ளேன்: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த நம்முடைய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஏழு இடங்களில், இதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வுகளைத் தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் செய்யவில்லை. புனேயில் உள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம் – பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் துணையோடு அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்கிறோம். உலகளாவிய நிறுவனங்களின் பரிசீலனைக்கு எங்களது கண்டுபிடிப்புகளை அனுப்பி வைத்துக் கேட்கிறோம். இந்த அகழாய்வு முடிவுகளை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்துள்ளேன். கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடல் கடந்த பயணம் மற்றும் அவர்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக ஓர் அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம்.

தமிழினத்தின்தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது: பொருநை நாகரிகத்தை நெல்லையில் காட்சிப்படுத்த இருக்கிறோம். இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய வரலாற்று உணர்வை விதைத்திருக்கிறது. இந்த பெருமைகள் அனைத்தும் மதச்சார்பற்ற, அறிவியல் வழிபட்ட வரலாற்றைப் பற்றிய பெருமிதங்கள்!இத்தகைய வரலாற்று உணர்வை – உண்மையான வரலாற்றை – ஆய்வின் அடிப்படையிலான வரலாற்றை, மக்களிடையே கொண்டு சேர்ப்பதை, தமிழ்நாடு அரசின் கடமையாக நினைத்து நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு பழந்தமிழக நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவதுதான் முறையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்[11]. தமிழினத்தின் – தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது[12]. வரலாறு அரசர்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி, வெற்றி பராக்கிரமங்கள் பற்றிய ஆவணமாக மட்டும் இருக்கக் கூடாது. அது அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் பார்வை.

ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, இந்திய வரலாற்று காங்கிரசு அமைப்பு வழங்கினால், அதனையும் ஏற்று நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம்: திராவிட கட்டடக்கலையினை பறைசாற்றும் வானுயரக் கோவில் கோபுரங்கள் குறித்து பெருமை கொள்கிறோம். அதேபோல் கீழடியில் “ஆதன்” என்றும் “குவிரன்” என்றும் சங்ககால மக்கள் தங்கள் பெயர்களை எழுதிப்பார்த்த சின்னஞ்சிறு மண்பாண்டங்கள் குறித்தும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.இவற்றை மேலும் செழுமைப்படுத்திட, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, இந்திய வரலாற்று காங்கிரசு அமைப்பு வழங்கினால், அதனையும் ஏற்று நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம். தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயல் தொடர்பான வல்லுநர்களை உருவாக்க, இளங்கலை பட்டப்படிப்பை சென்னை கிறித்துவக் கல்லூரி வழங்குகிறது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் வரலாற்றுத் துறை, இந்த அமர்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். எனவே, வரலாற்றைப் படிப்போம், மீண்டும் சொல்லுகிறேன் வரலாற்றைப் படிப்போம், வரலாற்றைப் படைப்போம்.” இவ்வாறு அவர் பேசினார்.

© வேதபிரகாஷ்

30-12-2022


[1] தினகரன், இந்தியாவை சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபுதான் மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்: எம்சிசி கல்லூரி விழாவில் முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, 2022-12-28@ 00:39:46.

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=826150

[3] தினத்தந்தி, மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்மு..ஸ்டாலின், தினத்தந்தி டிசம்பர் 28, 1:16 am

[4] https://www.dailythanthi.com/News/State/distortion-of-history-a-danger-engulfing-the-country-says-m-k-stalin-867001

[5] நக்கீரன், மதவாதக் கட்சியாக செயல்படுவதை அனுமதிக்க முடியாது” – முதல்வர் மு.. ஸ்டாலின், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 27/12/2022 (16:07) | Edited on 27/12/2022 (16:21)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/secular-party-cannot-be-allowed-function-chief-minister-mkstalin

[7] பத்திரிக்கை.காம், நாங்கள் பழமைவாதிகள் அல்ல! இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு, DEC 27, 2022

[8] https://patrikai.com/we-are-not-conservative-chief-ministers-speech-at-the-81st-conference-of-the-indian-historical-council/

[9] கலைஞர் செய்திகள், “நாங்கள் பழமைவாதிகள் அல்ல.. உண்மையான வரலாற்றை கொண்டிருக்கிறோம்”:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!, Prem Kumar, Updated on : 27 December 2022, 12:33 PM.

[10] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2022/12/27/cm-mk-stalin-speech-indian-history-congress-function

[11] இடிவி.பாரத், இந்திய வரலாறு தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவது தான் முறைமுதலமைச்சர், Published on: December 27, 2022, 4.01 PM IST.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/indian-history-should-be-written-starting-from-the-land-of-tamil-nadu-says-cm-stalin/tamil-nadu20221227160111559559761

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்” மாநாடாக மாறியது (1)

திசெம்பர்30, 2022

இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று காங்கிரசு ஆகி,  “திராவிட சரித்திர காங்கிரஸ்மாநாடாக மாறியது (1)

திமுகமாடல்ஆரம்பித்துதிராவிட மாடலில்முடிந்தது: இந்திய வரலாற்று காங்கிரஸ் சென்னையில் 27-12-2022 ஆரம்பித்து நடந்ததை அந்த அளவுக்கு மற்றவர்களால் (emeritus professors, elite-eminent historians, JNU-AMU experts), குறிப்பாக ஊடகங்களால் பொருட்படுத்தப் படாமல், நடந்து முடிந்தது வியப்பாக இருந்தது. அதாவது, இந்த மாநாடு ஜே.என்.யூ [ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்], ஏ.எம்.யூ [அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்] போன்ற கம்யூனிஸ மற்றும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் உள்ளது மற்றும் அத்தகைய சித்தாந்தங்களைப் பின்பற்றும் சரித்திர விற்பன்னர்கள், வித்தகர்கள் மற்றும் பண்டிதர்களால் நிறைந்திருக்கும் என்பது அறிந்த விசயமே. ஆனால், திமுகவின் ஆதிக்கம் முதல் நாளிலேயே பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. தாம்பரம் வழிநெடுக, டிஜிடல் பேனரே வால்போஸ்டராக பல இடங்களில் ஒட்டப் பட்டிருந்தன. “சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இந்திய வரலாறு காங்கிரஸைத் துவக்கி வைக்க வரும் முதலமைச்சரே வருக,” என்ற சுவரொட்டிகள் இருந்தன. முன்னர் முரசொலியில் இதே வகையில் விலம்பரங்கள்” வெளியிடப் பட்டிடருந்தன. அதற்கு முன்னர், கல்லூரி முதல்வர் வில்சன் முதல்வரைப் பார்த்து வரவேற்றிருக்கிறார். அப்பொழுது, இக்கல்லூரி தயாரித்த வீடியோ, “திமுக-மாடல்” அல்லது “திராவிட மாடலில்” இருந்தது எனலாம். ஏனெனில், அவ்வீடியோ “உதய சூரியனில்லாரம்பித்து முடிகிறது[1].

திராவிட மாடலில்ஆரம்பித்து வைக்கப் பட்ட மாநாட்டில்ஆரியர்தொல்லைக்கு உன்டானது: 26-12-2022 மாலையிலிருந்து, 27-12-2022 வரை நாடெங்கிலும் இருந்து, பல மாநிலங்களிலிருந்து உறுப்பினர்கள் வந்து கொண்டிருந்தனர். என்ட்ரல், எழும்பூர், மீனம்பாக்கம் என்று அவரவர் வசதிக்கேற்றப் படி பஸ், ரெயில், விமானம் என்று பயணித்து வந்து சேர்ந்து கொன்டிருந்தனர். 27-12-2022 காலை, கல்லூரி வாசல், உள்வளாகம் மற்றும் அரங்கம் பாதுகாப்பு போலீசாரின் கட்டுப்பாட்டில் சென்றன. பல நூற்றுக் கணக்கான பேராசிரியர்கள், பேரளர்கள் (முதியவர், பெண்கள் உட்பட) உள்ளே அனுபப்படாமல் நிறுத்தப் பட்டனர். சுற்றி இன்னொரு வாயிலில் மூலமாக வரச் செய்தனர்[2]. பலர் வெளிமாநிலங்களிலிருந்து வந்து கொண்டிருந்ததால், தமது லக்கேஜுடன் சிரமப் பட்டனர். ஆட்டோ-டாக்ஸிகாரர்களுக்கு கொண்டாட்டம். கூடுதல் பணம் கேட்டு, நசசரித்துப் பிடுங்கிக் கொண்டனர். “இந்தி தெரியாது போடா,” என்றெல்லாம் சொல்லவில்லை, இந்தி பேசியே கறாராக வசூலித்து விட்டனர். அவர்களும், இதுதான் “திராவிட மாடல்’ என்றும் நினைத்திருக்கலாம். அரங்கத்திலும் ஏகப் பட்ட கெடுபிடிகள். உள்ளே சென்றவர்கள் வெளியே வரமுடியாது, உள்ளேயும் செல்ல முடியாது. ஒருவேளை கண்ணூர் போல ஏதாவது கலாட்டா ஆகிவிடும் என்று நினைத்தனரோ என்று தெரியவில்லை. இங்கு இர்பான் ஹபீப்பும் வரவில்லை[3].

பெயருக்கு அங்கிலத்தில் ஆரம்பித்து தமிழில் முழுமையாக படித்தது: சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.27) தொடங்கி வைத்தார்[4]. இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “It is my honour, to be among these great historians and inaugurate the 81st Annual Session of the Indian History Congress. After a gap of 26 years, the annual session of Indian History Congress is being held in Tamil Nadu[5]தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு, 1996-ஆம் ஆண்டு, இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாடு நடந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த அந்த மாநாட்டில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறார்கள்[6]. இப்போது நடக்கும் இந்த மாநாட்டில், நான் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்[7]. இந்திய வரலாற்று காங்கிரசின் 81-ஆவது அமர்வை நடத்துவதற்கு, தமிழ்நாட்டைத் தேர்வு செய்தமைக்கு, நான் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்[8]. இதற்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடிய அனைவரையும் இந்த நேரத்தில் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்[9]. 1935-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வரலாற்று அமைப்பானது, 87 ஆண்டுகளைக் கடந்தும், வரலாறு படைத்துக் கொண்டு இருக்கிறது[10]. எந்த அமைப்பாக இருந்தாலும், அதனை உருவாக்குவது எளிது. ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் கடினம்.

மதச்சார்பற்றஅறிவியல்பூர்வமான வரலாறு: தொடர்ச்சியாக இந்த அமைப்பின் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தவர்களின் ஆர்வத்தால், இது இத்தகைய மாபெரும் வளர்ச்சியையும் – தொடர்ச்சியையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. உண்மையான வரலாற்றை – அறிவியல்பூர்வமான வரலாற்றை வடித்துத் தருவதுதான் இந்திய வரலாற்று காங்கிரசின் மிக முக்கியக் குறிக்கோளாக அமைந்துள்ளது. குறிப்பாக, மதச்சார்பற்ற – அறிவியல்பூர்வமான வரலாற்றை எழுதுவதை ஊக்குவித்து வருகிறீர்கள். பல தலைமுறைகளாக வரலாற்று ஆசிரியர்களை ஊக்குவிக்கும் அமைப்பாகவும், வரலாற்று உணர்வை ஏற்படுத்தி வரும் அமைப்பாகவும் இது விளங்கிக் கொண்டிருக்கிறது. ‘தத்துவ ஞானிகள் இதுவரை, உலகத்தைப் பற்றி, பல்வேறு முறைகளில் விளக்கம் சொல்லி வந்தார்கள். ஆனால் நாம், எப்படி அதை மாற்றி அமைப்பது என்று நினைப்பவர்கள்” – என்றார் பொதுவுடைமை ஆசான் காரல் மார்க்ஸ். இந்திய வரலாற்றுக் காங்கிரஸ் என்பது, வரலாற்று மாற்றத்திற்கு, சிந்தனை மாற்றத்திற்கு, அடித்தளம் அமைக்கும் அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா?: D.D.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், பிபின் சந்திரா, ஏ.எல்.பாஷம், ராகுல் சாங்கிருத்தியாயன், தேவி பிரசாத், கே.பி.ஜெய்ஸ்வால் ஆகிய மிக மூத்த வரலாற்றாசிரியர்களின் வரிசையில் வைத்து போற்றத்தக்க, கேசவன் வேலுதத், இர்பான் அபீப் ஆகியோர் இந்த அமைப்பை வழிநடத்தி வருவது மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இன்றைய காலத்தின் தேவை என்பது வரலாற்று உணர்வை ஊட்டுதல், அறிவியல் பார்வையை உருவாக்குதல். வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது[11]. வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக, சம்பளத்துக்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றைப் படித்தாக வேண்டும்[12]. இவ்வாறெல்லாம் ஸ்டாலின் பேச்சினார், பேச்சைத் தொடர்ந்தார்.

© வேதபிரகாஷ்

30-12-2022


[1] The 81st session of the Indian History Congress will be held in Madras Christian College, Tambaram, Chennai between 27th and 29th of December 2022.

[2] முன்பு அர்ஜின் சிங் வாரங்கல் மநாட்டிற்கு வந்தபோது, செய்த அடாவடித் தனத்தை விட அதிகமாக செய்தனர் எனலாம். இங்கு, நக்ஸலைட்டுகள் பாதிப்பு என்றதால் அவ்வாறு செய்யப் பட்டது. இங்கு என்னவென்று தெரியவில்லை.

[3]  திராவிட ஆரராய்ச்சிப் பேரவை – நாகநாதன், கே.பி. ஜகதீசன், சுப.வீரப் பாண்டியன், கருணாநந்தம் போன்றோர் முன்னரே சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.

[4] முழு பேச்சை, தமிழக அரசு செய்தி வெளியீடாக, இங்கிருந்து டவுன்லோட் செய்து படிக்கலாம்: https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr271222_2363_0.pdf

[5] தமிழ்.இந்து, வரலாற்றுத் திரிபுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின், செய்திப்பிரிவு, Published : 27 Dec 2022 01:37 PM, Last Updated : 27 Dec 2022 01:37 PM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/920591-m-k-stalin-speech-indian-history-congress.html

[7] பிபிசி.தமிழ், வரலாறை திரிக்கும் கதைகளை நம்பாதீர்கள்” – வரலாற்றுக் காங்கிரஸ் அமர்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?, 27 டிசம்பர் 2022

[8] https://www.bbc.com/tamil/articles/clj2r16jw1go

[9] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், CM Stalin Speech: ‘கற்பனை கதையை வரலாறு என்கிறார்கள்’ –முதல்வர் ஸ்டாலின் பேச்சு!, Stalin Navaneethakrishnan, 27 December 2022, 16:10 IST.

[10] https://tamil.hindustantimes.com/tamilnadu/tn-cm-stalin-participated-81th-indian-history-congress-conference-131672136209346.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, வரலாறு படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!, By Arsath Kan Published: Tuesday, December 27, 2022, 14:23 [IST]

[12] https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-stalin-s-speech-about-history-and-keezhadi-excavation-491567.html

இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப் படட்டும் – தமிழக அரசியலும், சரித்திரம்-சரித்திரவரைவியல், சரித்திராசிரியர்கள் – சித்தாந்தம் முதலியன!

நவம்பர்30, 2022

இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்தமிழக அரசியலும், சரித்திரம்சரித்திரவரைவியல், சரித்திராசிரியர்கள்சித்தாந்தம் முதலியன!

திராவிட இனம், ஹிராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, “திராவிட” என்ற கோஷம் அதிகமாகி விட்டது, அது மட்டுமல்லாது, தன்னை “திராவிடியன் ஸ்டாக்,” (Dravidian stock) என்று குறிபிட்டுக் கொண்டு, “திராவிட மாடல்” (Drvidian model) ஆட்சிமுறை பின்பற்றப் போகிறோம் என்று ஸ்டாலின் அறிவித்தாகி விட்டது. அதிலிருந்து, அகழாய்வு அரசியலாக்கப் பட்டு, தொல்துறை திமுக அமைச்சர்கள் நடத்தி வருவது போல மாறிவிட்டது. கீழடி உச்சத்தில், எம்.பிக்கள், மந்திரிகள், அதிகாரிகள் என்று அடிக்கடி, அகழாய்வு நடக்கும் இடங்களுக்குச் சென்று பார்ப்பது, குழிகளில் இறங்குவது, பொருட்களைத் தொட்டுப் பார்ப்பது என்றெல்லாம் சகஜமாக நடந்து வருகின்றன. எந்த நியாவானும் இதையெல்லாம் தவறு என்று யோக்கியமாக எடுத்துக் காட்டவில்லை. மெற்குறிப்பிட்டவர்கள், தோண்டி கிடைத்தவற்றை, கைகளில் வைத்துக் கொண்டு அவற்றைப் பற்றி விவரிக்கின்றனர். இருப்பினும், கிடைத்த எல்லா பொருட்களையும் 6th.cent.BCE / 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று குறிக் கொள்வது தமாஷாக இருக்கிறது.

இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்:  தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் திருநெல்வேலியில் இலக்கிய திருவிழா முதன்முதலாக தொடங்கியது. தமிழ் மொழியின் இலக்கிய செழுமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அறிவு சார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்[1].  பாளையங்கோட்டையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.26, 27) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவை காணொலி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார்[2]. அப்போது, “தமிழ்ச் சமூகமானது இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம்[3]. கீழடியைத் தொடர்ந்து சிவகளை, கொற்கை என பல அகழ்வாய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் வழியாகவும் அறிவியல்பூர்வமாக நிறுவப்படும் நமது தொன்மை நம்முடைய பெருமை[4]. இந்தப் பெருமையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று, அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன[5]. தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபுகளைப் போற்றும்விதமாக பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களைத் தமிழ்நாடு அரசு நடத்துகிறது[6]. இதில் முதல் நிகழ்வாக, அன்னைமடியான பொருநை ஆற்றங்கரையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கியத் திருவிழா சிறந்ததொரு முயற்சி. அறிவை விரிவு செய், அகண்டமாக்குஎன்று பாவேந்தர் சொன்னதற்கிணங்க நமது தமிழ் மண்ணின் செழுமைமிக்க இலக்கிய பண்பாட்டினை உலகிற்குப் பறைசாற்ற நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு எனது வாழ்த்துகள். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்,” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திராவிட மாடல் என்பது சித்தாந்தம். அதனை தமிழக முதல்வர் கையிலெடுத்துள்ளார் – பேசிய அமைச்சர்: அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்[7], “திருநெல்வேலி என்றால் தியாக வரலாறு உள்ள பூமி. இந்த மண்ணில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இது போன்ற விழாவை யாரும் நடத்தியதில்லை…….. திராவிட மாடல் என்பது சித்தாந்தம். அதனை தமிழக முதல்வர் கையிலெடுத்துள்ளார்………. ,” என்று பேசினார்[8]. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று கடந்த மே 2022லேயே சட்டசபையில் சொன்னதாக செய்தி வந்துள்ளது[9]. அதையே தான், நவம்பர் 2022லும் சொல்கிறார். அப்பொழுது, “அதேபோல், அகழாய்வுகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்களை ஆய்வு செய்திட (1) தொல் தாவரவியல் (Paleo Botany), (2) தொல் விலங்கியல் (Paleo Zoology), (3) தொல் மரபணு ஆய்வு (Ancient DNA Analysis) (4) சுற்றுச்சூழல் தொல்லியல் (Environmental Archaeology) (5) மண் பகுப்பாய்வு (Soil Analysis), (6) உலோகவியல் (Metallurgy Study), (7) கடல்சார் ஆய்வு (Marine Archaeology) போன்ற பல்துறை வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றிடப் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன,” என்றெல்லாமும் சொல்லியிருப்பதை கவனிக்கலாம்[10].

இனவாதக் கட்டுக் கதைகள் சரித்திரம் ஆகாது: .19-20 நூற்றாண்டுகளில், அரசியல் வாழ்க்கையில் கருத்துக்கள், விதிமுறைகள் மற்றும் கலாச்சாரம் போன்ற கருத்துக்கள் வகிக்கும் பங்கை அறிஞர்கள் மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளனர். உருவாக்கப் பட்ட கட்டுக் கதைகள், இட்டுக் கதைகள், கருதுகோள்கள் முதலியவற்றை ஆய்ந்து, பற்பல புனைந்த கோட்பாடுகளை நீக்கி வருகின்றனர். இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆதரங்களை வைத்துப் புனையப் பட்ட கட்டுக்கதைகளையும் ஒதுக்குகின்றனர். இந்த இலக்கியம் அரசியல் நடிகர்கள் மற்றும் விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை விமர்சன வழிகளில் மேம்படுத்தியிருந்தாலும், அது பல சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது, அவற்றில் ஒன்று இந்த “திராவிட மாடல்” தொந்தரவு ஆகும். இது அவ்வப்பொழுது சரித்திரம், அகழாய்வு, சரித்திராரைவியல் முதலியவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறது. அதன் நிலை சார்பு. சமூக ஜனநாயகத்தின் மறுபரிசீலனையை முன்வைத்து, கட்டமைப்பு மற்றும் நிறுவனம் ஆகிய இரண்டும் ஆற்றிய பங்கை கவனமாக பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை நினைவு கொண்டு, இப்பொழுதெல்லாம் எந்த சரித்திராசிரியரும் தட்டிக் கேட்பதில்லை, எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.

சித்தாந்த ரீதியிலான சரித்திரவரைவியல் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை: மேலும் சித்தாந்தங்களின் இரண்டு-நிலை செயல்முறையைப் புரிந்துகொள்வதற்காக பல்வேறு வகையான வரலாற்று பகுப்பாய்வு மற்றும் செயல்முறைத் தடயங்கள் தேவை. உயர்வு தாழ்வு. சித்தாந்தங்கள் எப்படி, ஏன் உருவாகின்றன என்பதைப் பற்றிய சிறந்த புரிதல், சமூக அறிவியலில் தற்போது பரவி வரும் கருத்தியல் “அலைக்கு” விமர்சன ரீதியாக பங்களிக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிப்பதாகத் தெரியவில்லை. சமீபத்தில், இரண்டு முறை, தமிழ்நாட்டு சரித்திர பேரவை மாநாடுகள் நடந்துள்ளன. நூற்றுக் கணக்கான சரித்திராசிரியற்கள் கலந்து கொன்டுள்ளனர். ஆனால், இத்தகைய அரசியல் தலையீட்டைக் கண்டிக்கவில்லை, எந்த தீர்மானமும் போடவில்லை, நிறைவேற்றவில்லை. முன்பெல்லாம், மஸ்ஜித்-மந்திர் விவகாரத்தை வைத்துக் கொண்டு சரித்திராசிரியர்கள் சண்டை போட்டுக் கொள்வது சகஜமாக இருந்தது. பிரபலமான சரித்திராசிரியர்கள் காரசாரமாக பேசுவார்கள், விவாதிப்பார்கள், கோஷம் போடுவார்கள், தீர்மானம் போடுவார்கள், நிறைவெற்றுவார்கள்…..இப்பொழுது, திராவிட மாடலில், மூடிக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். திராவிட ஸ்டாக்கைக் கண்டு அஞ்சுகிறார்கள் போலும்.

திராவிடஎன்பது இனம் இல்லை, அது மொழி அல்லது திசையைக் குறிக்கும் சொல்: ரோமிலா தாபர் போன்ற சரித்திராசிரியர்கள் “திராவிட” என்பது இனம் இல்லை, அது மொழி அல்லது திசையைக் குறிக்கும் சொல் என்று எடுத்துக் காட்டியபிறகும், திராவீடத்துவ வாதிகள், அதை “இனம்” என்ற விததிலேயே உபயோகப் படுத்தி, வெறுப்பு அரசியல் நடத்தி வருகின்றனர். திராவிடம் என்பது ஒரு அரசியல் சொல்லாக, தமிழ்நாட்டின் பொதுப் பேச்சில் ஒரு நிலையான காரணியாக இருந்து வருகிறது, அதன் விமர்சகர்கள் தாமதமாக அதிகமாகக் குரல் கொடுத்தாலும் அது 60 ஆண்டுகள் கழித்து தான் கேட்கப் பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “திராவிட” என்ற அடைமொழி, அத்யாவசீயமானது. அரசியல்வாதி என்பது இல்லை, நடிகர் கூட அத்தகைய சித்தாந்தத்தைப் பேசலாம். கமல்ஹாசன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில், “திராவிட சித்தாந்தத்தை ஏற்காமல் எந்த கட்சியும் அரசியலில் ஈடுபட முடியாது,” என்பதெல்லாம் அத்தகைய உசுப்பேற்றும் வசனங்கள் தாம். தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பாரிஸைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும், நீதிக்கட்சி பற்றிய சமீபத்திய புத்தகத்தின் ஆசிரியருமான ஜே.பி. பிரசாந்த் மோர், திராவிடம் என்ற சொல் பல ஆண்டுகளாக மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்று கூறினார். 1916 இல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டபோது, அப்போதைய மதராஸ் பிரசிடென்சியில் தமிழ் பேசும் பிராமணர் அல்லாதவர்களை மட்டுமே குறிக்கும் வகையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது[11]. “ஆனால், இப்போது, அது பாரதிய ஜனதா கட்சி என்று கூறுவதோடு, ‘வெளியுலக செல்வாக்கை’ எதிர்கொள்வதையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது,” என்று திரு. மோர் கூறினார்[12], தமிழர் அடையாளமும் கலாச்சாரமும் ஆபத்தில் உள்ளது என்ற கருத்து ஏற்படும் போதெல்லாம். , சொல்லின் பொருத்தம் முன்னுக்கு வருகிறது.

© வேதபிரகாஷ்

28-11-2022


[1] தினமணி, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்: முதல்வர் ஸ்டாலின்!, By DIN  |   Published On : 26th November 2022 03:00 PM  |   Last Updated : 26th November 2022 03:05 PM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/26/let-the-history-of-the-indian-subcontinent-be-written-from-tamil-land-chief-minister-stalin-3956423.html

[3] இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்..முதல்வர் ஸ்டாலின் By Jeyalakshmi C Published: Saturday, November 26, 2022, 11:32 [IST].

[4] https://tamil.oneindia.com/news/chennai/let-the-history-of-the-indian-subcontinent-be-written-from-tamil-soil-says-cm-stalin-487035.html?story=3

[5] ஜீடிவி.தமிழ், துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்‘ – முதல்வர் ஸ்டாலின், Written by – Sudharsan G | Last Updated : Nov 26, 2022, 02:56 PM ISTச்.

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-speech-in-porunai-literary-festival-at-tirunelveli-421314

[7] நியூஸ்7.தமிழ்.லைவ், இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின், by EZHILARASAN D, November 26, 2022.

[8] https://news7tamil.live/let-the-history-of-the-indian-subcontinent-be-written-from-tamil-soil-chief-minister-stalin.html

[9] இ.டிவி.பாரத், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்முதலமைச்சர் ஸ்டாலின், Published on May 9, 2022, 2.24 PM IST.

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/cm-stalin-says-history-of-indian-subcontinent-must-now-be-written-from-tamil-landscape/tamil-nadu20220509142426090090000

[11] The Hindu, ‘Dravida’ has no racial connotation: historian, T. RAMAKRISHNAN,April 15, 2017 12:51 am | Updated April 18, 2017 04:10 pm IST – CHENNAI.

[12] https://www.thehindu.com/news/national/tamil-nadu/dravida-has-no-racial-connotation-historian/article18032337.ece

‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற காணொளி வெளியீட்டு விழா – இந்திய சரித்திரம் உண்மையாக பாரதத்துவத்துடன் எழுதப் பட வேண்டிய முக்கியத்துவம்!

ஓகஸ்ட்8, 2022

‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற காணொளி வெளியீட்டு விழா – இந்திய சரித்திரம் உண்மையாக பாரதத்துவத்துடன் எழுதப் பட வேண்டிய முக்கியத்துவம்!

அசோக் குமார் குந்த்ரா, செயலாளர் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரி, விளக்கேற்றுகிறார்.

ஓலம்சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற காணொளி வெளியீட்டு விழா: ‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளி வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரியில் 7-08-2022 அன்று நடைபெற்றது[1]. ஏ.சி.சண்முகம், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக வேந்தர், அசோக் குமார் குந்த்ரா, செயலாளர் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரி, விநோத் பி. செல்வம், கரு. நாகரஜன், சென்டர் பார் சவுத் இன்டியன் ஸ்டெடீஸ் (Centre for South Indian Studies[2]), முதலியோர் கலந்து கொண்டனர். குமரேசன்[3] இந்த வீடியோ பற்றி அறிமுகம் செய்து, பின்னணியை விளக்கினார். பிறகு, ‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளியின் “ப்ரோமஸன்” (Promotion) வீடியோவும் காட்டப் பட்டது, பென்-ட்ரிவில் விற்கப் படும் இதன் விலை ரூ.500/- இந்த விடீயோ எடுத்தவர்-தொகுத்தவர் ஆனந்த் – இதைப் பற்றி சுருக்கமாக விளக்கினார். 12 நபர்கள் பேசிய வீடியோக்களைத் தொகுத்து, தேவையான இடங்களில் புகைப் படங்கள்-சித்திரங்கள், இசை முதலியவற்றை சேர்த்து, இந்த காணொலி தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த வீடியோவில் சரித்திரத் தகவல்களைப் பற்றி பேசியவர்கள்: கே. வி. ராமகிருஷ்ண ராவ், பிரபாகரன், பிரகாஷ், விஸ்வநாதன், முதலியோர். பிறகு இந்த வீடியோ எடுத்த குழு அங்கத்தினர், மற்ற எடிடிங், சித்திரம், முதலிய பணிகளை செய்தவர் அனைவருக்கும் நினைவு பரிசு கொடுக்கப் பட்டது. பிறகு, கல்லூரி செயலாளர் மற்றும் அமைச்சர் பேசினர். நன்றியுரையுடன் விழா முடிந்தது.

கலந்து கொண்டவர்கள்- மேடையிலிருந்து இடது பக்கம்
கலந்து கொண்டவர்கள்- மேடையிலிருந்து வலது பக்கம்
கலந்து கொண்டவர்கள்- மேடையிலிருந்து நடு பக்கம்
குமரேசனின் அறிமுகம்
காணொளி வெளியீடு
மத்திய அமைச்சர் பேசுகிறார்….

மத்திய அமைச்சர் பேசியது: இதில் கலந்து கொண்ட மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது[4]: “உலகின் தலை சிறந்த நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் .. சிதம்பரனார். அவரது தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி கொண்டு இருக்கிறார். நாடு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், சி யின் 150 ஆவது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் இது ஆங்கிலேயர்கள் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும்[5]. இளைஞர் மத்தியில் அக்னிபத் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது, லட்சக்கணக்கான இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அக்னிபத் திட்டத்திற்கு பதிவு செய்து வருகின்றனர்[6]. அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும்[7]. ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு எப்படி இந்தியர்கள் உலகுக்கே வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்தார்களோ, அதேபோல நாட்டின் 100-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும்[8]. 2047-ம் ஆண்டு இந்தியா மீண்டும் உலக நாடுகளை வழிநடத்தும் வல்லமையை பெற்றிருக்கும்.. ,”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசோக் குமார் குந்த்ரா, பேசுகிறார்

பலவிதங்களில், பலநிலைகளில் நடக்கும் வேலை: 75ம் சுதந்திர விழா கொண்டாட்ட விழா ஆண்டாக, பலவித நிகழ்சிகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று மத்திய அரசு ஏற்பாடு செய்திள்ளது. இதற்கு நித்யுதவியும் அளித்து வருகிறது. இதனால், பல நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் பலவிதமாகக் கொண்டாடி வருகின்றன. அவற்றில் பலரின் பங்களிப்பு பலவிதங்களில், பலநிலைகளில் உள்ளது. பலருக்கு தெரிந்தும்-தெரியாத நிலை கூட ஏற்படலாம். ஏனெனில், பல வேலைகள் பலரால் செய்துத் தரப் படும் பொழுது, அவை வியாபார ரீதியிலும் மாறுகின்றன. அபொழுது, செய்பவர்கள் தனது வேலையை செய்து, கூலி, சம்பளம், பணம் வாங்கிக் கொள்கிறான், ஆனால், அவன், அந்த வேலையின் முடிவு அல்லது பயன்பாடு பற்றி கவலைப் படுவதில்லை. பல நேரங்களில், அது அவனுக்குத் தேவையும் இல்லை அல்லது இல்லாத நிலை ஏற்படுகிறது. 1000 பேனர்களை தயார் செய்து கொடு என்றால், மரச்சட்டம் தயாரிப்பவன், கான்வாஸ் துணி கிழிப்பவன், தைப்பவன், படம் வரைபவான் தன் வேலைகளை செய்து கூலி, சம்பளம், பணம் வாங்கி சென்று விடுகிறான். அதற்கு மேல் அவன் கவலைப் படுவதில்லை.

வீடியோ / காணொளி முன்னோட்ட அறிமுகம்

1857லிருந்து1947 வரை வசதிகள் இல்லாத காலத்தில் நடந்த போராட்டங்கள்: இப்பொழுது 2022ல், பலவித தொழில் நுட்பங்கள் உள்ள நிலையில், இந்த 75ம் சுதந்திர விழா கொண்டாட்ட விழா நடைபெறுகிறது. ஆனால், 1857லிருந்து, எந்த வசதியும் இல்லாத காலத்தில், நாடு முழுவதும் சுதந்திர உணர்வை மக்களுக்கு உண்டாக்கி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பலவித போராட்டங்களை நடத்திய தலைவர்களை, வீரர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதும் கோடி கணக்கான மக்களுக்கு செய்தி சென்றுள்ளது, மக்கள் ஒன்று திரண்டு போராடியிருக்கின்றனர். அதற்காக பாமர மக்கள், படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரர், என்று எந்த வேறுபாடும் இல்லாமல் உழைத்துப் போராடியுள்ளனர். வெள்ளையர்களின் அடக்குமுறைகளைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இந்த முக்கியமான அம்சத்தைக் கவனிக்க வேண்டும். இது தான் ஒட்டு மொத்த மக்களின் ஒருமித்த சுதந்திர பொராட்டம் ஆகும். அதில் சத்தியாகிரஹம், அஹிம்சை போன்றவை முக்கிய பங்கு வகித்தன. அவைக் கண்டு தான் வெள்ளையர்- ஆங்கிலேயர் பயந்தனர். பாரத சித்தாந்தம், சனாதனக் கொள்கைகள், இந்துமத சிறப்பு அவற்றில் வெளிப்பட்டன. மற்ற மதங்கள் தங்களது மதநம்பிக்கைகளை வைத்துக் கொண்டு போரிட்டன, மக்களைக் கொன்றன, அழிவை உண்டாக்கின. இன்றின் மீது மற்றது பழிபோட்டு குறை சொல்லிக் கொண்டன. ஆனால், பாரதத்தில் உண்மையான ஞானம் வேலை செய்தது.

பாரத சித்தாந்தம் வென்றது: பீரங்கிகள்-துப்பாக்கிக் குண்டுகள் முன்பு பயப்படாமல் நின்று வீரமரணம் எய்தினர். கர்மா சித்தாந்தம் கூட ஏசப் பட்டது. தியாகம், உயிர்தியாகம், புனிதபோர், என்றெல்லாம் பற்றவர்கள் பேசினாலும், பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய உண்மையான தியாகம், உயிர்தியாகம், புனிதபோர்- யுத்தத்தினை எங்கும், எப்பொழுதும், யாருக் கண்டதில்லை. இதனால் தான் அஞ்சி நடுங்கினர். அதிலும் வஞ்சகத்துடன் வேலை செய்து, இந்தியர்களைப் பிரிக்க பார்த்தனர். அதுதான், விடுதலை போராட்ட வீரர்களில் ஏற்பட்ட சிற்சில வேறுபாடுகள்………..இது தான் வெள்ளையர்கள் ஓட வித்திட்டன. இன்றும் வெள்ளையர்களின் அடிமைகள், கூலிகள், அடிவருடிகள் இந்தியாவை, இந்தியர்களை, இந்திய மதத்தினை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை குறைகூஈ வருகின்றன, விமர்சிக்கின்றன, சரித்திரத்தை மறைத்து, பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்நிலையில், நிச்சயமாக, பாரதத்தில் உண்மையான சரித்திரத்தை சொல்ல வேண்டிய அத்தியாவசியம், தேவை மற்றும் முக்கியத்துவம் உண்டாகியுள்ளது. இதைப் போன்ற முயற்சிகள் இன்னும் தேவையாகின்றன. இந்திய சரித்திரம் உண்மையாக பாரத்துவத்துடன் எழுதப் பட வேண்டிய முக்கியத்துவம் உள்ளது.

© வேதபிரகாஷ்

08-08-2022


[1] தினத்தந்தி, சுதந்திர வீரர்களின் வாழ்கை வரலாறு – ‘ஓலம்காணொளியை வெளியீட்டு அமைச்சர் எல். முருகன் உரை, By தந்தி டிவி 7 ஆகஸ்ட் 2022 7:12 PM.

[2] Centre for South Indian Studies (CSIS) is a public charitable trust established in Delhi, engaged in academic study, research and analysis of economic, social, historical and political developments, both past and contemporary. CSIS commissions scientific research on various subjects and topics pertaining to South India, directly by its researchers and funds studies of interests that conform to its aims and objectives. It also motivates academicians and students to take up new research initiatives to rework on conventional narratives on South India to enable understanding these topics scientifically. Apart from organising research programmes, CSIS also brings out publications periodically and carries out social awareness programmes. CSIS regularly organises lectures, debates, panel discussions and talks on various subjects related to South India. We also organise seminars and workshops, as part of our academic activity.https://csisindia.com/about/

[3] Kumaresan served in the advertising industry for over two decades. He is now the Centre Co-ordinator of CSIS Chennai operations.https://csisindia.com/associates/

[4] https://www.thanthitv.com/latest-news/life-history-of-freedom-fighters-olam-video-launched-by-minister-l-murugan-text-130092

[5] மாலைமலர், அக்னிபாத் திட்டத்தை வரவேற்கும் இளைஞர்கள்மத்திய இணை மந்திரி பேச்சு Byமாலை மலர். 8 ஆகஸ்ட் 2022 12:40 AM.

[6] https://www.maalaimalar.com/news/district/among-youth-welcome-to-agnibad-program-union-joint-minister-speech-496859

[7] நியூஸ்7.தமிழ்.லைவ், அப்துல் கலாம் கண்ட கனவுபடி இந்தியா வல்லரசாகும்எல்.முருகன், by Dinesh AAugust 7, 2022

[8] https://news7tamil.live/india-is-a-superpower-as-per-abdul-kalams-dream-l-murugan.html