Posts Tagged ‘என்சிஇஆர்டி’

கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில் அடிக்கடி கலாட்டா செய்வது – சரித்திர பாடதிட்டத்தை குறைப்பது சாதாரணமான விசயம் தான் (1)

ஏப்ரல்19, 2023

கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில் அடிக்கடி கலாட்டா செய்வதுசரித்திர பாடதிட்டத்தை குறைப்பது சாதாரணமான விசயம் தான் (1)

கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில் பாரபட்சத்துடன் செயல்படுவது: கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில், அவ்வப்பொழுது கலாட்டா செய்து வருவது வாடிக்கையாகி விட்டது. ராமஜன்மபூமி விசயத்தில் அதிகமாகவே வெளிப்பட்டு, முஸ்லிம்களுக்கு சாதமாக வேலை செய்து, பிறகு உயர் மற்றும் உச்சநீதிமன்றங்களில் இத்தகைய சரித்திராசியர்கள் அதிகமாகவே வாங்கிக் கட்டிக் கொண்டனர். JNU, DU, AMU, Calcutta University, என்று இவர்கள் தங்களது குழுக்களை அமைத்துக் கொண்டு, செயல்பட்டு வருகிறார்கள். “செக்யூலரிஸம்” போர்வையில் அதிகமாகவே கூச்சலிடுவார்கள். இதே NCERT, ICCSR, UGC, IHC, போன்ற நிறுவனங்களில் இவர்கள் கடந்த 70 ஆண்டுகளாகக் கோலோச்சி வந்தார்கள். சரித்திரப் பாடமுறை, திட்டம் முதலியவற்றை வடிவமைப்பது, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் அவற்றை நுழைப்பது, அதற்கேற்றப் படி புத்தகங்களை எழுதுவது-வெளியிடுவது என்று செய்து வந்தார்கள்.

Left-right-centre என்று முடிந்துள்ள நிலை: பிறகு அவர்களது பாரபட்சம் அதிகமாக-அதிகமாக, நடுநிலை கொண்ட சரித்திராசியர்கள் அவற்றைத் தட்டிக் கேட்டு சரிசெய்ய முயற்சி செய்தனர். ஆனால், அவர்களை வலதுசாரிகள் என்றும், பிறகு ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவ சரித்திராசியர்கள் என்றும் கூறி ஓரங்கட்ட பார்த்தனர். ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவ சரித்திராசியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், அவர்கள், இவர்களைப் போல நன்றாக சாமர்த்தியம், சாதுர்யம் மற்றும் திறமை கொண்டவர்கள் இல்லை. வெளிப்ப்டையாக, தங்களது கருத்துகளை சொல்வதால், அவர்கள் அவ்வாறு முத்திரைக் குத்தப் பட்டார்கள்.  பிறகு, பொது மக்களுக்கே உண்மை தெரியவர, அவர்கள் எல்லோரையும் இனவாரியாக அடையாளம் கண்டு கொண்டனர். இதனால், வேறு வழியின்றனவர்களே தங்களை Left-right-centre என்றும் பிரித்துக் கொள்ள ஆரம்பித்தனர். NDTV போன்ற செனல்களில் வாத-விவாதங்களையும் அவ்வாறே நடத்தினர்.

2023ல் சிலபஸ் மாற்றம்- பாடங்கள் குறைக்கப் பட்டுள்ளது: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அதன் 12 ஆம் வகுப்பு வரலாற்று புத்தகங்களில் இருந்து முகலாய பேரரசு பற்றிய பாடத்தை நீக்கியுள்ளது[1] என்று தில்நவாஸ் பாஷா என்பவர் பாரபட்சத்துடன் நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். பிபிசி அதனை தாராளமாக வெளியிட்டுள்ளது. இது தவிர சர்ச்சைக்குரிய மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கதையை நீட்டுகிறார். என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புக்கான வரலாற்றுப் புத்தகத்தை ‘Themes of Indian history’ (இந்திய வரலாற்றின் கருப்பொருட்கள்) என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளது[2]. அதன் இரண்டாம் பகுதியில், “மன்னர்கள் மற்றும் வரலாறு, முகல் தர்பார்” என்ற 9வது அத்தியாயம் இப்போது புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது[3]. NCERT இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் புதிய வரலாற்றுப் புத்தகங்களில் முகலாய ஆட்சியாளர்கள் பற்றிய இந்த 28 பக்க அத்தியாயம் இல்லை[4]. இந்தியாவின் முன்னாள் முஸ்லிம் ஆட்சியாளர்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும் என்சிஇஆர்டியின் இந்த நடவடிக்கை, இந்திய வரலாற்றில் இருந்து முகலாயர்களை அகற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதே நேரம், மாணவர்கள் மீதான பாடத்திட்டத்தின் சுமையை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி வாதிடுகிறது.

வரலாற்றுப் புத்தகத்தில் முகலாயர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படும் சில அத்தியாயங்கள் இன்னும் உள்ளன. ஐந்தாவது அத்தியாயத்தில் ’பயணிகளின் பார்வையில்’ இந்தியா காட்டப்பட்டுள்ளது. இதில் பத்தாவது முதல் பதினேழாம் நூற்றாண்டு வரையிலான இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அத்தியாயம் ஆறு, பக்தி மற்றும் சூஃபி மரபுகள் மீது கவனம் செலுத்துகிறது. முகலாயர் காலத்தின் குறிப்பு இதில் உள்ளது. எட்டாவது அத்தியாயத்தின் தலைப்பு ’விவசாயி, நிலப்பிரபுகள் மற்றும் நிர்வாகம், விவசாய சமூகம் மற்றும் முகலாய பேரரசு’ என்பதாகும். இதில் முகலாயர் காலத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றுப் புத்தகத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை ஆதரித்து ஊடகங்களிடம் பேசிய NCERT தலைவர் தினேஷ் சக்லானி, “முகலாயர்களின் வரலாறு அகற்றப்படவில்லை. ஆனால் மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக பாடத்திட்டத்தில் இருந்து சில பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன” என்றார். “இது பாடத்திட்டத்தின் சீராக்கல் அல்ல, இது பாடப்புத்தகத்தின் சீராக்கல். கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோயால், மாணவர்களுக்கு அதிக இழப்பும் அழுத்தமும் ஏற்பட்டது. மாணவர்களின் பாடத்திட்டத்தின் சுமையை ஓரளவு குறைக்க வேண்டும் என்று உணரப்பட்டது. நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

வலதுசாரி ஆதரவு முயற்சியா?: புத்தகங்களை மாற்றும் இந்த செயல்பாட்டில், முகலாயர்கள் தொடர்பான அத்தியாயம் மட்டுமே வரலாற்று புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று சொல்லமுடியாது. மகாத்மா காந்தியின் இந்துத்துவவாதிகள் மீதான வெறுப்பு மற்றும் அவரது படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் மீதான தடை ஆகியவற்றைக் குறிப்பிடும் வாக்கியங்களும் அரசியல் அறிவியல் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயை பற்றி எழுதப்பட்ட ‘புனே பிராமணர்’ என்ற வாக்கியமும் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2002 குஜராத் கலவரம் தொடர்பான மூன்றாவது மற்றும் இறுதி குறிப்பு, 11 ஆம் வகுப்பு சமூகவியல் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. NCERT புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளன. சமூகவியல் பாடப்புத்தகத்திலிருந்து குஜராத் கலவரம் தொடர்பான குறிப்பு நீக்கப்பட்டுள்ளது

எதிர்ப்பு ஏன்? ராஜஸ்தான், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தின் கல்வி அமைச்சர்கள் இந்த மாற்றங்களை கடுமையாக எதிர்த்துள்ளனர்: என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது என்று கதை எழுதப் படுகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் இந்த மாற்றங்களை அமல்படுத்துவதற்கு முன் முழுமையான ஆய்வு செய்யப்படும் என்று ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால் உத்தரபிரதேச அரசு இந்த மாற்றங்களை ஆதரித்துள்ளது. “புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது, என்சிஇஆர்டியின் பாடத்திட்டம் அப்படியே இருக்கும். எங்கள் தரப்பில் இருந்து எந்த மாற்றமும் இல்லை” என்று உத்திர பிரதேசத்தின் கல்வி அமைச்சர் குலாப் தேவி குறிப்பிட்டார். என்சிஇஆர்டி புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் செப்டம்பர் மாதத்தில் உத்தரபிரதேச அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும். இந்த அத்தியாயத்தில், முகலாயப் பேரரசின் போது இந்தியாவின் விவசாய சமூகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முகலாயர்களைப் பற்றிய அத்தியாயம் 9, மாதாந்திர கால அட்டவணையில் இல்லை. அதாவது இந்த கல்வியாண்டில் புதிய புத்தகத்தில் இருந்தே பாடம் கற்பிக்கப்படும்.

கம்யூனிஸ்டுகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பு: வகுப்புவாத அடிப்படையில் வரலாறு எழுதுவது தீவிரமடைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மறுபுறம், சிபிஐ கட்சித்தலைவர் டி ராஜா, NCERT ஐ தேசிய பகுத்தறிவு , உண்மை ஒழிப்பு கவுன்சில் என்று அழைத்தார். “வரலாற்றை சிதைத்து வரலாற்றை மாற்ற ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட மற்றொரு முயற்சி இது. சர்தார் படேல் காந்தியின் படுகொலைக்குப் பிறகு வெறுப்பு மற்றும் வன்முறை சக்திகளை வேரறுக்க ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்தார்” என்றார். எத்தனை பொய்களாலும் இந்த உண்மையை மறைக்க முடியாது,”என்று டி ராஜா கூறினார்.

மாற்றங்களை ஆதரிக்கும் வாதம்: புதிய NCERT புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்படும் போது, ​​பல குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பரிந்துரைகள் வருகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டி புதிய ஆலோசனைகளை இவர்கள் வழங்குகிறார்கள். பொதுவாக இவற்றைக் கருத்தில் கொண்டு, பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அறிவியல் பாடங்கள் குறித்த புத்தகங்கள், புதிய தகவல்கள் வரும்போது காலத்துக்கு ஏற்ப மாறுகிறது. பல சமயங்களில் புத்தகங்களில் கிடைக்கும் தகவல்கள் காலாவதியாகிவிடுகின்றன. இந்த துறைகளில் புதிய வளர்ச்சிகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் இந்த மாற்றங்கள் இயற்கையானது. கடந்த காலங்களிலும் வரலாற்றுப் புத்தகங்கள் அல்லது பிற பாடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்காக என்சிஇஆர்டி வல்லுநர்கள் விவாதித்து மாற்றங்கள் குறித்து புத்தகங்களின் ஆசிரியர்களிடம் பரிந்துரைக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

19-04-2023


[1] பிபிசி, NCERT புத்தகங்களில் முஸ்லிம் மன்னர்கள் பாடம் நீக்கம்: முகலாயர்களின் வரலாற்றை அழிக்க முயற்சியா?, எழுதியவர், தில்நவாஸ் பாஷா, 7 ஏப்ரல் 2023

[2] https://www.bbc.com/tamil/articles/cj57vzv079ro

[3] விகடன், `பாடப்புத்தகத்தில் முகலாயர்களின் வரலாற்றுப் பகுதி நீக்கமா?’ – சர்ச்சையும் NCERT விளக்கமும்!, ரா.அரவிந்தராஜ், Published: 05 Apr 2023 2 PM; Updated: 05 Apr 2023 2 PM

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/ncert-modifies-syllabus-chapters-on-mughal-empire-from-12th-class-books