Posts Tagged ‘புஷ்பப் பல்லக்கு’

ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியாரை (1894-1994) பல்லக்கை விடுத்து, காரில் செல்லுமாறு ஈவேரா (1879-1973) செய்தார் என்ற கதை எப்படி, ஏன், அவ்வாறு, எதற்காக உலா வருகிறது! (3)

மே5, 2022

ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியாரை (1894-1994) பல்லக்கை விடுத்து, காரில் செல்லுமாறு ஈவேரா (1879-1973) செய்தார் என்ற கதை எப்படி, ஏன், அவ்வாறு, எதற்காக உலா வருகிறது! (3)

1923ல் நடந்த ஊர்வலத்தில் பல்லக்கில் சென்ற பெரியவர்: ஏப்ரல் 23, 1923 அன்று திருச்சிராப்பள்ளிக்கு பெரியவர் வந்ததாக, “தி ஹிந்துவில்” மே 10, 1923 தேதியில் ஒரு தலையங்கம் காணப்படுகிறது. திருவானைக்காவல் கோவிலுக்குச் சென்ற போது, பெரிய ஊர்வலமாக, சகல மரியாதைகளுடன் சென்றதாக உள்ளது. தேவாரங்கள் முழங்க, எட்டு மைல் நீள தூரம் அந்த விமரசியான ஊர்வலம் சென்றதாக டி.கே. பாலசுப்ரமணிய ஐயர் விவரித்துள்ளார்[1]. காலை 6 மணிக்கு ஆரம்பித்த அந்த ஊர்வலம், இரவு 10 மணிக்கு திருவானைக்காவில் முடிந்தது.

திராவிடர் கழகம் கட்டுக்கதைகளை உண்டாக்குவதேன்?: “ஆதீனத்தில் வசித்து வரும் பல்லக்கு தூக்கும் 72 பேர்” என்றுள்ளதால், அந்த எண்ண்க்கையைச் சேர்த்து, இக்கதையினை உருவாக்கியிருப்பதை அறியலாம். பிறகு “பிராமணர்-சூத்திரர்” என்று குறிப்பிட்டு, வர்ணாஷ்ரமம், சநாதனம், ஆரியம் என்றெல்லாம் வாதங்களை வைத்து, பிரச்சினை ஆக்கலாம்[2]. வீரமணி, “என்னதான் இவர்கள் பல்லக்கில் பயணம் செய்ய ஆசைப் பட்டாலும்சூத்திரமடாதிபதிகள்தானே! சூத்திரன் என்றால் விளக்கத்தைச் சொல்லவும் முடியுமா?,” என்று கிளப்பியுள்ளதிலிருந்தும் கவனிக்கலாம். திருமாவளவன் எப்பொழுதுமே ஆக்ரோஷமாக சனாதனம், ஆரியம், பார்ப்பனீயம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்த விசயம் தான். 03-05-2022 விவாதத்தில், ஆதீனம் “ராஜ ரிஷி” என்று கருதப் படுகிறார்கள், அவர்களின் சைவ மடங்களுக்கு தனியான பாரம்பரியம், சம்பிரதாயம் முதலியவை உள்ளன, அவற்றைத் தான் பின்பற்றுகிறோம் என்று தெளிவாக சொன்னார்கள்ஆக மொத்தம், மடாதிபதிகளைப் பிரிப்பது, அதன் மூலம் பக்தர்களை பிரிப்பது, முடியாக இந்துக்களைப் பிரிப்பது என்ரு தான், இவை செயல்படுவதை கவனிக்கலாம்.

வண்டியின் பின்னால் செல்கிறார், தள்ளிக் கொண்டும் செல்வார். உண்மையில் அவர் வேகமாக நடப்பார். காலில் போட்டிருக்கும் மரசெருப்புகளை கவனிக்கவும்…

ஈவேரா, ஈவேரா பெரியார் மற்றும் பெரியார் வாழ்க்கை அரசியல் மற்றும் கலவரம்அமைதியில்லாத் தன்மையுடன் இருந்தது: ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி (1894-1994) மற்றும் ஈவேரா பெரியார் (1879-1973) சமகாலத்தவர் எனும்போது, நிகழ்வுகளை ஆய்வாளர்கள் முறையாக ஆவணப்படுத்த வேண்டும். டி.டி.கே. (1899-1974), சதாசிவம் (1902-1997) போன்றோர், 1960-70களில் முக்கியமான நபர்கள், திமுக ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் தம்முடைய பங்களிப்பை சமூகத்தில் செய்து வந்தார்கள்.. ஈவேராவைப் போல அரசியல், ஆர்பாட்டம், இந்தியவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள், இன்று தியாகிகள், சமூகசீர்திருத்தவாதிகள் என்றெல்லாம் புகழப் படுகின்றனர். ஆனால், ஈவேரா, ஈவேரா பெரியார் மற்றும் பெரியார் வாழ்க்கை அரசியல் மற்றும் கலவரம்-அமைதியில்லாத் தன்மையுடன் இருந்தது. காங்கிரஸில் இருந்தது, விலகியது, எதிர்த்தது, திராவிடஸ்தான் கேட்டது, சுதந்திரத்தை எதிர்த்தது, துக்கநாள் அனுஷ்டிததது, டிமுக இவரை ஓரங்கட்டியது எல்லாமே எதிர்மறை போக்கனவைகளாகத்தான் இருக்கின்றன. ஆகவே, கட்டுக் கதைகளை உருவாக்கக் கூடாது, ஏனெனில், அவை வெளிபட்டு விடும். இவை இப்பொழுது நடந்தவை, கண்ணால் பார்த்த சாட்சிகள் உண்டு! எனவே, உறுதியாக தேதிகள், காலம், நேரம், இடம் என்று எதுவுமே குறிப்பிடாமல், அல்லாவுதின் கதைகள் போல விவரிப்பது தமாஷாக உள்ளது.

பெரியவர், பெரியார் ஆரோக்கியம்முதலியவைப் பற்றிய விவரங்கள்: பெரியவர் மூக்குக் கண்ணாடி போட்டது பற்றி ஏகப்பட்ட விமர்சனங்களை திராவிட, திமுக-காரர்கள் வைத்தனர். “புகழ்பெற்ற கண் மருத்துவர் ஒருவர், புகழ்பெற்ற ஓர் சமயப் பெரியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்தார். மருத்துவர் பெரியவரின் தீவிர பக்தர்,” என்று அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்[3]. ஆனால், பெரியார் சிறுநீரகப் பிரச்சினையால் அவதிபட்டு வந்தார். குடலிறக்கத்திற்கு அய்யா அவர்களின் வயது காரணமாக – ஆபரேஷன் செய்ய முடியாத நிலை காரணமாக தானாகவே குடலிறக்கம் சரி செய்யப்பட என்னென்ன வழிமுறைகள் உண்டோ அத்தனையும் மேற்கொள்ளப்பட்டது. பெரியார், தனது 80 வயதுக்குப் பிறகு 1959லிருந்து, நடப்பதற்கே சிரமப்பட்டார். சிறுநீர்ப் பையில் ஏற்பட்ட கோளாறு மற்றும் குடலிறக்க நோய் போன்றவற்றால் துன்பமுற்றார். சிறுநீர் வெளியேறாததால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு ரப்பர் குழாய் பொருத்தி சிறுநீரை வெளியேற்றச் செய்தார்கள். அவ்வளவு துன்பமுற்றபோதும் சக்கர நாற்காலியில் அழைத்துப் போகச் செய்து, பின்னர் கைத் தாங்கலாக மேடைக்கு கொண்டு செல்லப்பட்டார். நீண்டதூரப் பயணங்கள் மேற்கொண்டார். பெரியார் கடைசியாக பங்கேற்ற பொதுக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 நடந்தது. ஏற்கனவே குடலிறக்க நோயால் (ஹெர்ணியா) அவதிப்பட்டு வந்த பெரியார் அந்தக் கூட்டம் முடிந்த பிறகு, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார். டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் மறைந்தார். ஆனால், இதைப் பற்றியெல்லாம் யாரும் விமர்சிக்கவில்லை.

1931லிருந்து வெளிநாட்டவர் பெரியவரை சந்திப்பது அவரைப் பற்றி புத்தகங்களில் எழுதுவது: 1994 வரை வாழ்ந்த ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியாருடன், பல வெளிநாட்டு அறிஞர்கள், எழுத்தாளர்கள் என்று வந்து பேட்டி கண்டு தங்களது அனுபவங்களை எழுதி வந்தனர். சந்தித்தவர்களில் நம்மவர்களும் அடங்குவர்[4]. இந்த விசயத்தில் தான் மற்றவர்களுக்கு [மற்ற சங்கரமடாதிபதிகளுக்கு] இவர் மீது பொறாமையாக இருந்தது. பால் பிரென்டன் இவரை 1931ல் வந்து பேட்டி கண்டபோது, இவருக்கு வயது 37 தான்[5]. இருப்பினும் தனது அறிவுசாதுர்யத்தால், அவரை கவர்ந்தார். குறிப்பாக அவரது எளிமை அனைவரையும் ஈர்த்தது, திகைக்க வைத்தது.

  • 1955ல் பேராசிரியர் மில்டன் சிங்கர், சிகாகோ பல்கலைகழகம், சந்தித்தார்[6].
  • 1959ல் ஆர்தர் கோயஸ்ட்லர் இவரை பார்த்த போது, ஆச்சரியமாகத்தான் இருந்தது.
  • 1962ல் அர்ஜென்டினாவைச் சேர்ந்த, யூஹினா போர்கினி என்ற ஆராய்ச்சியாளர் சந்தித்தார்[7].
  • 1963ல், டாக்டர் ஆல்பர்ட் பிராங்ளின் என்ற அமெரிக்கத் தூதுவர், பெரியவரை மதுரையில் சந்தித்தார்[8].
  • 1965ல் கிரேக்க அரசி மற்றும் இளவரசி  காளாஹஸ்தியில் பெரியவரை சந்தித்து பேசினர்[9].
  • 1970ல், சென்னையில் உலக தத்துவ மாநாடு நடந்தபோது, டெஹ்ரான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியர், சையீத் நாசர் சந்தித்தார்[10].

இப்படி, அயல்நாட்டவர் குறிப்பாக, மதம், தத்துவம், ஆன்மிகம் போன்ற விசயங்களில் கவரப் பட்டவர்கள், இவரை பேட்டி எடுக்க, உரையாட ஏன் சோதிக்கக் கூட வந்த போது, அவர்களுடன் இணையாக உரையாடினார். அவர் மேனாட்டு அறிஞர்களை மேற்கோளாகக் காட்டிய போது, அவர்கள் வியந்தனர். அதாவது, 20ம் நூற்றாண்டு வரையிலான  மதம், தத்துவம், ஆன்மிகம் போன்ற சங்கதிகளில் உள்ள பிரபலங்கள், அக்கால கருத்துகள் முதலியவற்றை அறிந்திருந்தார். 

பெரியாரைப் பொறுத்த வரையில்,கிருபாளினி, அம்பேத்கர், ஜின்னா, ராஜாஜி, என்று அரசியல்வாதிகள் சந்தித்தது அல்லது இவரே அவர்களை சந்தித்தது என்றுள்ளது. வழக்கம் போல, இவரை சந்தித்தவர்களும், அதைப் பற்றி பெரும்பாலும் குறிப்பிடவில்லை. ஏனெனில், இவர் தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்வது, வாதிப்பது, பேசியதிருந்து மாறுபடுவது போன்ற முரண்பாடுகள்ளால், மறுமுறை சந்திப்பதையும் விடுத்தனர்.

வயதான காலத்தில், இருவர் பற்றி தீர்மானிப்பது: ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி (1894-1994) மற்றும் ஈவேரா பெரியார் (1879-1973), இருவரது காலநிலையை கீழே அட்டவணையில், 10-ஆண்டுகளாக வைத்துப் பார்த்தால், அவரது 20, 30, 40, 5-, 60, 70 ஆண்டுகளில் செய்தவை வைத்து, சரித்திரத்தைத் தீர்மானிக்கலாம். 1968ல் 89 வயதான ஈவேரா, 74 வயதான ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதியை திருவானைக் கோவிலில் மறைமுகமாக மிரட்டினாரா இல்லையா என்று உறுதியாக சொல்லமுடியாது. தேதியும் குறிப்பிடப் படவில்லை. வழக்கம் போல, குடி அரசு, விடுதலை இதழ்களிலிலும் இல்லை, பிறகு, எப்படி அக்கதைகளை உருவாக்கினர் என்ற கேள்வி எழுகின்றது.

ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி (1894-1994)ஈவேரா (1879-1973)
191420 35
19243045
19344055
19445065
19546075
19647085

மேலே எடுத்துக் காட்டியுள்ளபடி, ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி 1931லிருந்து பல வெளிநாட்டு அறிஞர்களை சந்தித்து, ஆன்மீகம், மானுடம், தத்துவம் போன்றவற்றைப் பற்றிப் பேசி, அவற்றை வெளிநாட்டவர்களே தங்களது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால்,  ஈவேரா பெரியார் பற்றிய எழுத்துகள் எல்லாமே பிறகு 1980-90களில் தான் வந்தன.  பெரியார் சுயமரியாதைப் பிராச்சாரக் கழகம் காட்டும் புத்தகங்கள், குடி அரசு, விடுதலை போன்றவை தான் ஆதாரங்களாக உள்ளன. இவற்றை சரிபார்க்க, மற்றவர்களின் எழுத்துகள், புத்தகங்கள், ஆவணங்கள் மிகக் குறைவான நிலையில் உள்ளன.

© வேதபிரகாஷ்

05-05-2022


[1] T.K.Balasubramaia Iyer (10 May 1923). “Editorial”. The Hindu. Never before in the annals of Tiruchirapalli have we witnessed the grandeur and enthusiasm that were displayed at the reception of His Holiness Sri Jagadguru Sri Sankaracharya of Kanchi Kamakoti Peetam who arrived at Tiruchirapali on the 23rd. The mile long procession headed by richly caparisoned elephants and surging crowds with His Holiness seated high on the ivory palanquin in the center, surrounded by large concourse of Brahmins chanting the Vedas, and followed by numerous Bhajan parties and Thevaram parties, the rich and tasteful decorations all along the route which extended to nearly eight miles, the buoyant enthusiasm of the huge crowd that pressed on all sides just to have a glimpse of His Holiness’ beaming countenance and that followed the procession right through to the end, the festive appearance of the whole town and the eagerness of everyone in that vast concourse of people to do some sort of service to His Holiness were sights for Gods to see and they beggar all description. It showed in a clear and unmistakable way the stronghold of religion and religious ideals still on the people of the country. No Viceroy or even the Emperor himself could have evoked such spontaneous and heartfelt enthusiasm. It took nearly five hours for the procession to reach its destination. His Holiness had a smile or a word of cheer for every one of the assembled people and when he retired into the mutt, His Holiness observed that the weariness of the journey was counteracted by the unprecedented enthusiasm of the people. https://en.bharatpedia.org.in/wiki/Chandrashekarendra_Saraswati

[2]  டிவி விவாதங்களில், இத்தகைய வாதங்கள் ஏற்கெனெவே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மேலும், இந்த பல்லக்கு விசயத்திலும் 03-05-2022 அன்று வாத-விவாதங்களில் வெளிப்பட்டுள்ளது.

[3]  ஞாநி ஒரு நோயாளியின் டைரிக் குறிப்பு! – பக்கங்கள், , Wednesday, August 10, 2011, http://malaikakitham.blogspot.com/2011/08/blog-post_10.html

[4]  As a Jagadguru, he was popular with dignitaries including the King and Queen of Nepal, the Queen Mother of Greece, the Dalai Lama, Sathya Sai Baba, Mahatma Gandhi, Kannadasan, C. Rajagopalachari, M. S. Subbulakshmi, Indira Gandhi, R. Venkataraman, Subramanian Swamy, Shankar Dayal Sharma, MGR, Jayalalitha, Karunanidhi, Kalki Krishnamurthy, Sivaji Ganesan, Ilaiyaraaja, R. M. Veerappan, Rajinikanth, Kamalhassan, Sri Sri Ravi Shankar, Prannoy Roy, Amitabh Bachchan, R. P. Goenka, Birla Family, JRD Tata and Atal Bihari Vajpayee.

[5] Dr.Paul Brunton, author of the well-known book “A Search in Secret India”, first published in London in 1934, was the first Westerner to have an interview with the Sage in 1931.

[6]  Prof. Milton Singer of the University of Chicago, met the Sage in 1955.

[7]   A scholar from Argentina, Miss. Eughina Borghini met His Holiness in 1962

[8]  Dr.Albert Franklin, U.S.Consul General in Madras, saw the Paramachrya for the first time in 1963 in the Madurai Meenakhi Temple during the Kumbhabhishekham ceremony

[9] Queen Frederica from Greece and her daughter Princess Irene met the Paramacharya in 1965 at Kalahasti.

[10] Professor Sayeed Nasr, the Vice-Chancellor of Teheran University who participated in a World Conference on Philosophy in Madras in 1970 met the Paramacharya in Kanchi

ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியாரை (1894-1994) பல்லக்கை விடுத்து, காரில் செல்லுமாறு ஈவேரா (1879-1973) செய்தார் என்ற கதை எப்படி, ஏன், அவ்வாறு, எதற்காக உலா வருகிறது! (2)

மே5, 2022

ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியாரை (1894-1994) பல்லக்கை விடுத்து, காரில் செல்லுமாறு ஈவேரா (1879-1973) செய்தார் என்ற கதை எப்படி, ஏன், அவ்வாறு, எதற்காக உலா வருகிறது! (2)

காஞ்சி பெரியவர் கோவிலுக்குச் சென்று கும்பிட்டது, ஈவேரா கும்பலுக்கு ஆணை இட்டது: லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்து சொன்னது, “பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்புஅந்த நேரத்தில், .வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார். பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது”. இனி இன்னொரு கதையினைப் பார்ப்போம்.

1957ல் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது, வரவேற்கும் நிகழ்ச்சி. தி ஹிந்து ஆசிரியர்.

தந்தை பெரியாரும், காஞ்சி பெரியவரும்! பல்லக்கில் வந்தது, ஈவேரா விமர்சித்தது![1]: இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.  ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?,” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது. அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்,!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள். “இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்,” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன…

லஸ் கதையில் எழும் கேள்விகள்: கீழ்கண்ட முக்கியமான விசயங்களை எடுத்துக் கொள்ளலாம்:

  1. லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள்.
  2. காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே. (1899-1974), சதாசிவம் (1902-1997) போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள்.
  3. பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
  4. அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
  5. இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.
  6. பிறகு, பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள்.

ஆக, டி.டி.கே., சதாசிவம், போலீஸ் அதிகாரிகள், ஈவேரா மற்ற ஊடகக்காரர்கள் யாருக்குமா இவ்விசயத்தை தங்களது டைரி அல்லது குறிப்புகளில் எழுதிவைக்கவில்லை என்ற வினா எழுகிறது. முக்கியமான பிரச்சினை என்னவென்றால், தேதி குறிப்பிடாதது தான்!

திருமயிலையில் எந்த கோவிலுக்கு பெரியவர் வந்தார்?: திருமயிலையில், கீழ்கண்ட சிவாலங்கள் பழமையானதும் முக்கியாமானவையும் ஆகும். ஆக, இவற்றிற்கு, ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி வந்திருக்கலாம்:

1.  ஶ்ரீ காரணீஸ்வரர் கோவில் Sri Karaneeswarar Temple

 2. ஶ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோவில் Sri Theerthapaleeswarar Temple

 3. ஶ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் Sri Velleeswarar Temple

 4. ஶ்ரீவிர்பாக்ஷேஸ்வரர் கோவில்  Sri Virupaksheeswarar Temple

 5.  ஶ்ரீ வாலீஸ்வரர் கோவில் Sri Valeeswarar Temple

 6.  ஶ்ரீ மல்லீஸ்வரர் கோவில் Sri Malleeswarar Temple

 7.  ஶ்ரீ கபாலீஸ்வரர் கோவில் Sri Kapaleeswarar Temple

லஸ் கார்னர் என்றால், கடைசி மூன்றுதான் வருகின்றன. டி.டி.கேவுக்கு லஸ் கார்னரில் பதிவுபெற்ற அலுவலகம் இருந்தது. ஆனால், தீர்மானமாக சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

1957ல் கபாலீஸ்வரர் கோவிலுக்கு புஷ்ப பல்லக்கில் ஊர்வலமாகச் சென்றது: செப்டம்பர் 1957ல் பெரியவர் வந்தபோது, கஸ்தூரி ஶ்ரீனிவாசன், தி ஹிந்துவின் தலைமை ஆசிரியர் வரவேற்று உபசாரம் செய்தார்[2]. 1958லும் சங்கர ஜெயந்தி தருணத்தில், சமஸ்கிருத கல்லூரியிருந்து கபாலீஸ்வரர் கோவில் வரை பல்லக்கில் அழைத்துச் செல்லப் பட்டார். ஆதிசங்கரரரின் விக்கிரகமும் தெருக்களில் சுற்றி எடுத்துச் செல்லப்பட்டது. இப்படி நடந்து கொண்டிருக்கும் போது, ஏதாவது பிரச்சினை உண்டாகியிருந்தால், நிச்சயம், தினசரி நாளிதழ்களில் செய்தி வந்திருக்கும். ஆனால், ஒன்றும் இல்லை.  ஆக, இத்தகைய பல்லக்கு பவனி, ஊர்வலங்கள் எல்லாம் சாதாரணமாக, நடந்திருக்கின்றன. இப்பொழுது, இத்தகைய நாத்திகக் கூட்டங்கள் பெருக, அரசு ஆதரவும் கொடுப்பதால், ஏதோ பிரச்சினை போல, இவையெல்லாம் மாற்றப் படுகின்றன.

1968ல் பல்லக்கை விடுத்து காரில் சென்ற கதை: ஒரு புறம் வீரமணியே, சங்கராச்சாரியார் நடந்து சென்றார் என்று கதை சொல்லும் போது, இல்லை காரில் திரும்பி சென்றார் திகவினர் இக்கதையை தமக்கேயுரிய பாணியில் மாற்றி சொல்லி, எழுதி வருகின்றனர். 1968ல் திருவானைக்காவில் அவர் மடத்திற்கு சென்று திரும்பிய போது நடந்தது என்கின்றனர். 72 சூத்திரர், முன்னர் 18, பின்னர் 18 என்று நாதஸ்வரம் முழங்க சென்றபோது, ஈவேரா திரும்ப அப்படி வந்தால், காவேரியில் தூக்கிப் போடுங்கள் என்றாராம்! உடனே பயந்து போய், பல்லக்கை விட்டுவிட்டு, காரில் திரும்பினாராம்! பாக்கி 36 என்ன செய்து கொண்டிருந்தனர் என்று விளக்கவில்லை. ஆனால், இக்கதைகளுக்கு எந்த ஆதாரங்களோ, செய்திகளோ இல்லை!  1968ல் ஈவேராவுக்கு வயது 89, ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதிக்கு74, அந்நிலையில் அவர்கள் ஒரே நாளில் அங்கிருந்தார்களா என்று தெரியாது! 74 வயதான ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி பல்லக்கில் போனார் என்றால் அதில் எந்த விசயமும் இல்லையே? ஈவேராவைத் தூக்கிச் சென்றது என்றதெல்லாம் 1960-70களில் இருந்தவர்களுக்குத் தெரிந்த விசயம். வயதானவர் என்றாதால், அதனை வித்தியாசமாக விமர்சித்ததில்லை! எனவே, இப்படி அநாகரிகமாக கட்டுக் கதைகளை உருவாக்குவது, துவேசம், வெறுப்பு, காழ்ப்பு போன்ற எதிர்மறை குணாதிசயங்களால் உண்டானவை என்றாகிறது.

© வேதபிரகாஷ்

05-05-2022


[1] இது அப்படியே பலரால் பதிவு செய்யப் பட்டுள்ளது, ஆனால், ஆதாரத்தை யாரும் கொடுக்கவில்லை. சிலர், பல்லாக்கு சமாசாரம் மட்டும் தனியாக போட்டிருக்கிறார்கள் இது “வேதம் புதிது” படத்திலும் சித்தரிக்கப் பட்டுள்ளது.

வேதபிரகாஷ், காஞ்சிப் பெரியவர்ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [2], மார்ச்.18, 2020.

[2] PRabhu S, Periyava Mylapore Kapali 1957, Thursday, March 19, 2020.

https://prtraveller.blogspot.com/2020/03/periyava-mylapore-kapali-1957.html

ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியாரை (1894-1994) பல்லக்கை விடுத்து, காரில் செல்லுமாறு ஈவேரா (1879-1973) செய்தார் என்ற கதை எப்படி, ஏன், அவ்வாறு, எதற்காக உலா வருகிறது! (1)

மே5, 2022

ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியாரை (1894-1994) பல்லக்கை விடுத்து, காரில் செல்லுமாறு ஈவேரா (1879-1973) செய்தார் என்ற கதை எப்படி, ஏன், அவ்வாறு, எதற்காக உலா வருகிறது! (1)

விவரங்கள் வெளிப்படைத் தன்மையாக, அறியப்படக்கூடியதாக மற்றும் உண்மையாக இருக்க வேண்டும்: இணைதளங்களில் இன்றைக்கு நிறைய விசயங்கள் கிடைக்கின்றன. அவை உண்மையும், பொய்யாக இருக்கின்றன. பொழுதுபோக்கிற்காக பதிவு போடுபவர்கள் உண்மைத் தன்மை, நம்பகத் தன்மை, சரித்திர ஆதாரம் மற்ற சரிபார்க்கும் முறை முதலியவற்றைப் பற்றி கலலைப் பட மாட்டார்கள். ஆராய்ச்சி (Research), ஆராய்ச்சி நெறிமுறை (Research methodology), மூலங்களை நாடிச் செல்லுதல் (going / searching for sources), பார்த்தல் (filed-work)-படித்தல் (reading) குறிப்பெடுத்தல் (taking notes), ஒப்பிடுதல் (cross verification), சரிபார்த்தல் (verification for authenticity) என்று எ தையும் செய்ய மாட்டார்கள். பிரச்சார ரீதியில் பொய்யான தகவல்களைப் பரப்பக் கூடாது.

பிரச்சார ரீதியில் பொய்யான தகவல்களைப் பரப்புவது: பிரச்சாரம் (propaganda), அரசியல், தவறான தகவல் பரப்பும் வேலை செய்பவர்களுக்கு (misinformation campaign), இது ஒரு ஜாலியான, மகிழ்ச்சியான வேலையாகக் கூட இருக்கிறது (paid workers for propaganda). அவ்வாறு செய்ய வேண்டி, குழுக்கள் உருவாகும் போது, அமைப்புகள், நிறுவனங்கள் உருவாகி, வியாபார ரீதியில் லாப-நஷ்ட பலன்களையும் கணக்கு பார்க்கின்றன. அந்நிலையில் கல்வி, கல்வித் தரன், போதிக்கும் முறை, ஆராய்ச்சி, மேற்படிப்பு என்பதெல்லாம் பலநிலைகளில் சீரழிகின்றன. ஆகவே, கடந்த கால நிகழ்வுகள், சமீபத்தை நிகழ்வுகள் முதலியவை ஒழுங்காக, விருப்பு-வெறுப்பு இன்றி ஆவணப் படுத்த வேண்டும். யேஷ்யம், கற்பனை, யூகம், முதலியவை சமீபகாலத்தைய நிகழ்வுகளில் எளிமையாக நீக்கி விடலாம்.  

சமீப கால சரித்திரம் முறையாக எழுதப் படவேண்டும்: சரித்திராசிரியர்களுக்கு, வெளிப்படைத் தன்மையான உண்மை அல்லது சரித்திர நிகழ்வுத் தனமை அறியும் மனநிலை (objectivity) இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சரித்திராசியர்கள் கூறுகிறார்கள். அதாவது, ஒரே நிகழ்ச்சியை 10 சரித்திராசியர்கள், 10 இடங்களில் சுற்றி உட்கார்ந்து கொண்டு 10 கோணங்களில் 10 விதமாக சரித்திரம் எழுதினால், அந்த 10 சரித்திரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றுள்ளது. ஆனால், சரித்திரம் என்ன எழுதப் பட்டது, படுகிறது, அல்லது எழுதப் பட்டு வருகின்றது, என்பது அல்ல, அது உண்மையிலேயே கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது ஆகும்[1]. 100, 200, 300 வருடங்கள், 1000, 1500, 2000 என்றெல்லாம் காலகட்டங்களில் நடந்தன என்று சரித்திரம் எழுதப் படுகிறது. உண்மையில், துலுக்கரோ, ஆங்கிலேயர்களோ, பரந்த இந்தியாவை, இந்தியர்களை முழுமையாக ஆண்டதே இல்லை. அவ்வாறு ஆண்டதாக, பிறகு வந்த சரித்திராசியர்கள் 20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளில் எழுதி வைத்தனர். ஆனால், இந்தியர் மற்ற இடங்களுக்குச் சென்று கட்டிடங்கள், கோவில்கள் என்றெல்லாம் பார்த்து வரும் போது, அவர்களுக்கு உண்மை புரிகிறது.

பொது மக்கள் அறிந்த சரித்திரத்தை மறைக்க முடியாது: இந்தியாவில் பொதுவாக எல்லோரையும் நல்லமுறையில் பாதிக்கப் படும் விசயங்கள் பற்றி தான் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, மக்களால் பதிவு செய்யப் படுகின்றன. கெட்டதாக பாதிக்கப் படும் விசயங்கள், நடத்தைகள், இம்சைகள், கொடுமைகள் மறக்கப் படுகின்றன, மிகவும் அதிகமாகும் போது பதிவு செய்யப் படுகின்றன. உதாரணத்திற்கு, “புள்ளப் பிடிக்கிறவன் கிட்டே புடுச்சி கொடுத்தி விடுவே,” என்று குழந்தைகளை மிரட்டுவது உண்டு. அதாவது, துலுக்கர் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு செல்வது என்பது, சாதாரணமாக இருதது. அந்த பாதிப்பில் அந்த பழமொழியே சரித்திரமாக நிலைத்தது. ஆக, இந்தியர்களுக்கு சரித்திரம் எழுதத் தெரியாது, சரித்திரம் எழுதும் முறை தெரியாது என்றெல்லாம் சொல்லும் குற்றச்சாட்டுகள், அதிகமாக ஜனத்தொகைக் கொண்ட இந்தியர்களிடம் எடுபடாது. அதுபோலத் தான் இந்த பெரியவா-பெரியார், காஞ்சி ஆச்சாரியார்-ஈரோடு ஈவேரா, பார்த்ததாக, சந்தித்துக் கொண்டதாக, அல்லது அறிந்து கொண்டதாக சொல்லப் படும் கதைகள்.

ஈவேரா சங்கரச்சாரியாரை பல்லக்கை விட்டு நடந்து போக வைத்தது: மாங்காட்டில் இருக்கும் லக்ஷ்மிநாராயணன் (சக்தி விகடன்) ஒருவருக்கு இன்னொருவர் சொன்னதாக, இக்கதைக்கு மூலத்தைக் கொடுக்கிறார்கள்!  பொறுப்பு ஆசிரியர் ரவிபிரகாஷ் என்றும், கே.வீரமணி குறிப்பிட்டுள்ளதை கவனிக்கலாம்[2]. இது அப்படியே முரசொலியிலும் வந்துள்ளது[3]. வீரமணியின் வர்ணனையை, நியூஸ்.18.தமிழ் வெளியிட்டுள்ளது[4], “….சங்கராச்சாரியார்கள் ஒரு கால கட்டம் வரை மனிதர்கள் சுமக்க பல்லக்கில்தான் பயணம் செய்து வந்தனர்[5]. ஒருமுறைதந்தை பெரியார் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அதன் வழியாகப் பல்லக்கில் (மேனா) காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்லக்கில் சென்ற நிலையில், “முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, மனிதர்கள் சுமந்து செல்ல பல்லக்கில் சொகுசாகப் பயணிக்கலாமா? இவரெல்லாம் துறவியா?” என்ற கேள்வியை எழுப்பினார்[6]. பெரியார் பேச்சைக் கேட்டுஇதனைக் காதில் வாங்கிய சங்கராச்சாரியார் பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி நடந்து சென்றார்[7]அது முதல் பல்லக்கில் செல்லும் பயணமுறையைக் கைவிட்டனர் சங்கராச்சாரியார்கள்[8]. இப்பொழுதெல்லாம் சங்கராச்சாரியார்கள் விமானத்தில் தானே பறக்கின்றனர்[9]. பார்ப்பனர்களே இந்த முடிவுக்கு வந்து விட்ட நிலையில் நம் ஆதினகர்த்தர்களுக்கு என்ன வந்தது?,…….” பிராமணர்-பிராமணர் அல்லாதவர் என்று பிரச்சினை உண்டாக்க திரிபு விளக்கத்தையும் கொடுத்திருப்பதைக் கவனிக்கலாம்[10]. இப்படியே இக்கதை பரவினால், நாளைக்கு நடந்த நிகழ்ச்சியாக மற்றவர்களும் குறிப்பிடலாம். இப்பொழுதே, இது இணையதளத்தில் நடக்க ஆரம்பித்து விட்டது. இதில் தான் ஆபத்து உள்ளது. ஏனனில், இது நடந்ததா, இல்லையா என்று யாருக்கும் தெரியாது.

லஸ் கார்னரில் திககாரர்கள் அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருந்த நிகழ்ச்சி[11]: லக்ஷ்மிநாராயணன் என்பவர் சொன்னது, “காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது. காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்”.

© வேதபிரகாஷ்

05-05-2022


[1] K. V. Ramakrishna Rao – Histoy is not what was, is or has been written about the past, but it is actually why had happened in the past, https://kvramakrishnarao.wordpress.com/

[2]  விடுதலை, வரவேற்கத்தக்க ஆணை, தருமபுரி ஆதீனம் பல்லக்கில் செல்லத் தடை, 03-05-2022, பக்கம்.2

[3]  முரசொலி, மனிதனை மனிதன் சுமப்பதா? மனித உரிமைக்கு எதிரானது, 04-05-2022, பக்கம்.8

[4] NEWS18 TAMIL, கை ரிக்ஷாவை ஒழித்த மாநிலம் இதுதருமபுர ஆதினம் பல்லக்கில் செல்லத் தடை வரவேற்கத்தக்க ஆணைகி.வீரமணி, LAST UPDATED : MAY 03, 2022, 17:59 IST

[5] https://tamil.news18.com/news/tamil-nadu/k-veermani-statement-about-ban-dharmapuram-aadheenam-palanquin-vjr-740204.html

[6] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சங்கராச்சாரியாரையே நடந்து போக வைத்தார் பெரியார்.. ஆதினகர்த்தர்களுக்கு என்ன வந்தது.? கி.வீரமணி ஆவேசம்.!, Asianet Tamil, Chennai, First Published May 3, 2022, 8:48 PM IST; Last Updated May 3, 2022, 8:48 PM IST

[7] https://tamil.asianetnews.com/politics/what-happened-to-the-adinakartas-k-veeramani-is-obsessed–rbbbur

[8] தமிழ்.ஒன்.இந்தியா, கை ரிக்ஷாவை ஒழித்த மாநிலம்.. 21ஆம் நூற்றாண்டிலும் இப்படியா?” தருமபுர ஆதினம் விவகாரத்தில் கி.வீரமணி, By Vigneshkumar Updated: Tuesday, May 3, 2022, 22:25 [IST].

[9] https://tamil.oneindia.com/news/chennai/dravidar-kazhagam-chief-k-veermani-welcomes-tn-govt-s-order-to-ban-dharmapuram-aadheenam-pattina-pra-457015.html

[10] என்னதான் இவர்கள் பல்லக்கில் பயணம் செய்ய ஆசைப் பட்டாலும் ‘சூத்திர’ மடாதிபதிகள்தானே! சூத்திரன் என்றால் விளக்கத்தைச் சொல்லவும் முடியுமா? இதனை எதிர்த்ததுண்டா? ராமேசுவரம் குடமுழுக்கின்போது சிருங்கேரி சங்கராச்சாரி யாருக்கு முதல் மரியாதையா? காஞ்சி சங்கராச்சாரியாருக்கு முதல் மரியாதையா என்ற சர்ச்சை ஏற்பட்ட பொழுது – ‘சூத்திர’ மதுரை ஆதின கர்த்தர்தானே சமரசம் செய்து தீர்த்து வைத்தார்.

[11] இது அப்படியே பலரால் (பக்தர்கள்) பிளாக்குகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது, ஆனால், ஆதாரத்தை யாரும் கொடுக்கவில்லை. சிலர், பல்லாக்கு சமாசாரம் மட்டும் தனியாக போட்டிருக்கிறார்கள்.