Archive for the ‘கிருஷ்ணகிரி, பாறை ஓவியம், பழங்கற்காலம்,’ Category

கிருஷ்ணதேவராயர் மலை, கிருஷ்ணகிரி மலை, சையது மலை ஆகுமா? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் கதை இங்கும் அரங்கேற்றப் படுகிறதா?

பிப்ரவரி28, 2022

கிருஷ்ணதேவராயர் மலை, கிருஷ்ணகிரி மலை, சையது மலை ஆகுமா? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் கதை இங்கும் அரங்கேற்றப் படுகிறதா?

சரித்திரம் ஆதாரம் இல்லாத பெயர் மாற்றம் ஏன்?: துலுக்கர் மற்றும் கிருத்துவர் இந்தியாவில் பல இடங்களில் தெருக்கள், கிராமங்கள், ஊர்கள் முதலியவற்றின் பெயர்களை மாற்றி வருகிறார்கள். இதை அவர்கள் திட்டத்துடன் செயல் படுத்தி வௌகிறார்கள். முதலில், தாமாகவே முகவரியில் பாஷா தெரு, சையது வீதி, பெத்தேல் நகர், மைக்கேட்பட்டி, என்றெல்லாம் செய்வர். கடிதங்கள், ஆவணங்களில் அவ்வாறே குறிப்பிடுவர். பிறகு ஓரளவுக்கு தாக்கம் ஏற்பட்டவுடன், அரசு, அதிகாரம் ஆட்சி, கட்சி போன்றவற்றில் உள்லவர்களின் உதவியுடன், மாநில அரசு ஆவணங்களிலும் அவ்வாறே பெயர் மாற்றங்களை செய்வர். கடைகளின் போர்டுகளில் அவ்வாறே குறிப்பிடுவர். தமிழகத்தில் உள்ள ஊர்கள் எல்லாம் தொன்மையானவை, ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் இந்தியா முழுவதிலிருந்தும் பற்பல ஞானிஅகள், ரிஷிகள், முனிவர், பெரியார் என்று வந்துள்ளனர். அதனால், ஒவ்வொரு ஊரின் பெயரின் பின்னாலும், 2000, 21000 வருடங்கள் சரித்திரம் உள்ளது. அதனை இவ்வாறு பெயர் மாற்றத்தின் மூலம் அழிப்பது மறைப்பது முதலியவை மிகப்பெரிய குற்றம் ஆகும். மீபத்தில் மைக்கேல்பட்டி விவகாரத்தில், இத்தகைய பெயர் மாற்ற விவகாரம், நீதிபதியின் கவனதிற்கும் சென்றுள்ளது.

திருக்காட்டுப் பள்ளி, மைக்கேல்பட்டி ஆனதே கிறிஸ்தவ மதமாற்றத்திற்குச் சான்று:

திருக்காட்டுப்பள்ளி (Thirukattupalli), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட அக்னீஸ்வரர் திருக்கோவில் இங்கு உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது. இன்றைய செக்யூலார் மற்றும் நாத்திக-இந்து விரோத ஆட்சியில், தமிழக புராதன இடங்கள், ஊர்கள், கிராமங்கள் முதலியவற்றின் பெயர்க்ள் மாற்றப் படுவதிலிருந்தே, அங்கே எவ்வாறு துலுக்கர் மற்றும் கிருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில், திடீரென்று தஞ்சாவூர், கும்பகோணம், திருநெல்வேலி, கன்யாகுமரி போன்ற இடங்களில் அல்லாப்பேட்டை, மொஹம்மது நகர், அஹமது நகர், பெத்தேல் நகர், மைக்கேல் பட்டி என்றெல்லாம் தோன்றி விட முடியாது. இது, மக்கள் தொகை, ஜனத்தொகை மாற்றம், புவியியல், சரித்திரம் மற்றும் உள்ளூர் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் என்று எல்லாவற்றியும் மாற்றும், மறைக்கும் வேலைகள் ஆகும்[3]. இதற்கு உள்ளூர் அதிகாரிகளும் ஒத்துழைத்துள்ளார்கள் என்று தெரிகிறது[4]. பத்திரப் பதிவுகளில், 200 ஆண்டுகளாக இருந்து வரும் பெயர்களை இன்றும் உபயோகப் படுத்தப் படுகிறது. இல்லையென்றால், மூல்ங்களை அறிய முடியாது, சரிபார்க்கவும் முடியாது. இல்லையென்றால், அவ்வாறேல்லாம் பெயர்களை மாற்றி விட முடியாது. அவை அரசு ஆவணங்களிலும் இடம் பெற முடியாது

கிருஷ்ணதேவராய மலை, கிருஷ்ணகிரி மலை சையது மலை ஆகாது: கிருஷ்ணகிரிக் கோட்டை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரியில் உள்ள உள்ள ஒரு மலைக் கோட்டை ஆகும். இது இம்மாவட்டத்தில் உள்ள வலுவான கோட்டைகளுள் ஒன்று. இது ஒரு மலைக் கோட்டை. சுவர்களும், கொத்தளங்களும் பெருமளவுக்கு நல்ல நிலையில் உள்ள இக்கோட்டை தற்போது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் ஆகும். இக்கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் மேலாண்மையின் கீழ் உள்ளது. நகரத்தின் பழைய பேட்டையிலிருந்து மலை உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இக்கோட்டையுள்ள மலையானது கிருஷ்ணதேவராயர் மலை என்று அழைப்படுகிறது. ஆனால், திடீஎன்று, சையத் பாஷா மலை என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டு இப்பொழுது அழைக்கப்படுகிறது. இந்த மலையில் சையத் பாஷா என்ற இசுலாமியரின் உடல் புதைக்கப் பட்டுள்ளதாக, ஒரு தர்கா கட்டப்பட்டுள்ளது. இதனால் இது இப்பெயரால் அழைக்கப்படுகிறது, என்று விளக்கமும் கொடுக்கப் படுகிறது. இப்படி கட்டுக்கதைகளை உருவாக்கி, மலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு, அடாவடித் தனம் செய்வது, கலவரங்களை உண்டாக்குவது துலுக்கர்-கிருத்துவர்களின் திட்டமாக உள்ளது. ஆனால், ஊடக பலம், பிரச்சார யுக்தி, அனைத்துலக பணபலம்-ஆதரவு முதலியவற்றால் இந்துக்களின் மீது ப்ழி போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

விஜயநகர காலத்தில் கட்டப் பட்ட கோட்டை, துலுக்க பெயரில் தெரிய வைப்பது சரித்திர துரோகம் ஆகும்: இக்கோட்டை விஜயநகரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டது. அக்காலத்தில் “பரமகால்” என அழைக்கப்பட்ட இப்பகுதியையும் கோட்டையையும் ஜெகதேவிராயர் என்பவர் போர்களில் அவர் காட்டிய வீரத்துக்காக விஜயநகரப் பேரரசிடம் இருந்து பரிசாகப் பெற்றுக்கொண்டார். இவர் ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டுவந்தார். ஆதலால், துலுக்கருக்கும், இக்கோட்டைக்கும், மலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 1670ல் இக்கோட்டையைச் சத்திரபதி சிவாஜி கைப்பற்றிக்கொண்டார் 17 ஆம் நூற்றாண்டில் பீஜப்பூர் சுல்தான் கீழிருந்த பரமகாலும் கோட்டையும் ஷாஜிக்கு (Shaji) என்பவனுக்கு வழங்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஷாஜி பெங்களூரைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டார். இவர் இறந்த பின்னர் இளைய மகன் வியாங்கோஜி அரசனானார்., என்பதெல்லாம் பிறகு உண்டான நிகழ்வுகள்.

ஆட்சிஅதிகாரம் மாறுவதால் கோட்டை பெயர் மாறாது: 18ம் நூற்றாண்டில் மைசூர் அரசர் சிக்க தேவராய உடையாரின் கட்டளைப்படி ஐதர் அலி இக்கோட்டையையும் பரமகாலையும் கைப்பற்றினார். பின்னர் மைசூர் அரசரிடம் இருந்து பிரிந்த ஐதர் அலி ஶ்ரீரங்கப்பட்டினத்தைத் தலைநகரமாக்கி ஆண்டபோது இக்கோட்டையையும் தன்வசமே வைத்துக்கொண்டார். முதலாம் ஆங்கில மைசூர்ப் போரின்போது இடம்பெற்ற நீண்ட முற்றுகையைத் தொடர்ந்து இக்கோட்டை பிரிடிஷார் கைப்பற்றிக் கொண்டனர். 1791 ஆம் ஆண்டில், மூன்றாவது ஆங்கில மைசூர்ப் போரின்போது, திப்பு சுல்தானின் வசம் இருந்த இக்கோட்டையை தளபதி மாக்ஸ்வெல்லின் தலைமையிலான பிரிடிஷ் படைகள் தாக்கின. ஆனாலும் பிரிடிஷ் படைகள் கடும் இழப்புகளுடன் பின்வாங்கவேண்டி ஏற்பட்டது. 1792ல் ஶ்ரீரங்கப்பட்டின ஒப்பந்தப்படி இக்கோட்டை பிரிடிஷாரிடம் சென்றது. மேலும், ஒரு இடத்தில் நடக்கும் தீவிரவாத நிகழ்வுகளை மறைத்து, வெள்ளையடித்து, தம்மை “புனிதர்” போல காட்டிக் கொள்ளவும் அத்தகைய பெயர்-மாற்றம் மோசடிகளை செய்து வருகின்றனர். ஆமாம், இதே மலையில், இஸ்லாமிய தீவிரவாதிகள் மறைந்து கொண்டு, வெடிகுண்டுகள் தயாரித்தனர், பயிற்சியும் கொடுத்தனர்.

படம் – இந்து முன்னணி – நன்றி

வங்காள பயங்கரவாதிகள் இம்மலையில் வந்து தங்கியிருந்தனர்: மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டும், பீகார் மாநிலம் புத்தகயாவில் கடந்த 2018-ம் ஆண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. அவ்வழக்கில், ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டான்[1]. குற்றப்பத்திரிகையில், இந்திய அரசு மற்றும் வங்கதேச அரசுகளுக்கு எதிராக போர் தொடுக்க, ஜமாத் உல் முஜாஹிதீன், பங்களாதேஷ் அமைப்பு சதி செய்து வருவதாகவும், அதில் ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் முக்கிய உறுப்பினர் என்றும் கூறப்பட்டது[2]. இந்த தாக்குதலில் வங்கதேச நாட்டை சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜமாத்உல் முஜாஹிதீன் வங்காளதேசம் (ஜே.எம்.பி.) என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த ஜே.எம்.பி. அமைப்பின் தலைவர் கவுசா என்கிற முனீர் என்கிற ஜஹிதுல் இஸ்லாம் (வயது 39) என்பவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி, 2019 அன்று கைது செய்தனர். விசாரணையில் அவர், வங்காளதேசத்தில், ஜமால்பூர் மாவட்டம், சோகாவிக்கே கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், பர்த்வான், புத்தகயா ஆகிய இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், கர்நாடக மாநிலம், சோலதேவனஹள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பு வழக்கு உள்பட சில வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

படம் – இந்து முன்னணி – நன்றி

இரண்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் இம்மலையில் தங்கியிருந்தது தெரிந்தது: தொடர் விசாரணையில் கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணதேவராயர் என்கிற சையத் பாஷா மலையில் பயங்கரவாதி கவுசா பதுங்கி இருந்தபோது, வெடிகுண்டுகள் தயாரித்ததும், வெடிகுண்டு பரிசோதனை செய்ததும் தெரியவந்தது[3]. இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் சி.வி.சுப்பாரெட்டி தலைமையில் 4 வாகனங்களில் 14 பேர் அடங்கிய குழுவினர், பயங்கரவாதி கவுசாவை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்[4]. விசாரணையில் இவர் மட்டுமல்ல மேலும் சில பயங்கரவாதிகள் கிருஷ்ணகிரி மலையில் 10 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி பெற்றது தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிந்தது[5]. மேலும் மலையில் இருந்து வெடிபொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு சோதனை நடத்த பயன்படுத்திய பைப்புகள், 4 பேட்டரி, வயர்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர். இந்த வெடிபொருட்களை சப்ளை செய்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடந்தது[6].

படம் – இந்து முன்னணி – நன்றி

இந்து முன்னணிக்கு நன்றி: மேலே குறிப்பிட்ட விவரங்களிலிருந்து, துலுக்கர் இவ்விசயத்தில் எவ்வாறு செயல்பட்டனர் என்பது வெளிப்படுகிறது. இந்து முன்னணி இதற்காக போராடியுள்ளது. அதனால், அவர்களுக்கு உரிய நன்றியை சொல்லியாக வேண்டும். களத்தில் இறங்கி போராடும் இந்துவீரர்கள் அவர்கள். சரித்திரத்தையும் காக்கப் பாராடுகிறார்கள். குமுதம் ரிப்போர்டர், மார்ச்1 2022 இவ்விரங்களைக் கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவராக இருந்த பரிதா நவாப் பெயர் மாற்றம் தீர்மானத்தை செய்தார். பெயர் மாற்றப் பின்னணியில் திமுக மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், பரிதா நவாப் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் உள்ளன. 2010க்குப் பிறகு எந்த பிரச்சினையும் இல்லை. இப்பொழுது, ம்றுபடியும் பெயர்மாற்ற முயற்சி, தீர்மானம் என்று வந்துள்ளதால், விவகாரம் ஆகியுள்ளது. 2006ல் லோகோ / சின்னம் பெயரில், கூகுளில் அவ்வாறான பெயரை வைத்து ஆரம்பிக்கிறர்கள் என்று தெரிகிறது. எனவே, கூகுள் பெயர்களையும் கவனிக்க வேண்டும் என்றாகிறது.

.

© வேதபிரகாஷ்

28-02-2022

படம் – இந்து முன்னணி – நன்றி

[1] தினமலர், கிருஷ்ணகிரி மலையில் வெடிகுண்டு? தீவிரவாதியை அழைத்து வந்து விசாரணை,  Added : ஜூலை 07, 2019  10:15.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2314699

[3] மாலைமலர், கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றது அம்பலம், பதிவு: செப்டம்பர் 25, 2019 11:37 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2019/09/25113704/1263231/militants-trained-in-Krishnagiri-mountain.vpf

[5] தமிழ்.இந்து, கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்துவந்து தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல், செய்திப்பிரிவு, Published : 24 Sep 2019 08:40 AM; Last Updated : 24 Sep 2019 08:40 AM.

[6] https://www.hindutamil.in/news/crime/517052-investigation-on-terrorist-in-krishnagiri.html

படம் – இந்து முன்னணி – நன்றி

கிருஷ்ணகிரி மலைப்பகுதிகளில் ஏற்கெனவே இருப்பதை, “கண்டு பிடித்தது” என்று அடிக்கடி செய்தி வருவது! [2]

மே21, 2019

கிருஷ்ணகிரி மலைப்பகுதிகளில் ஏற்கெனவே இருப்பதை, “கண்டு பிடித்ததுஎன்று அடிக்கடி செய்தி வருவது! [2]

Location of Nakkalpatti village

Location of Nakkalpatti village

இது நகல்பட்டியின் கூகுள் வான் தோற்றம்….

Location of Nakkalpatti village-hill

Location of Nakkalpatti village-hill

அருகில் உள்ள மலையின் தோற்றம்….மக்கள் சென்று வந்ததால், பாதைகளும் தெரிகின்றன….

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[1].தமிழகத்தில் பாறை ஓவியங்கள் குகைச் சுவர்களிலும், பிற பாறையின் விதானப் பகுதி, குடைபோன்ற அமைப்புகளிலும், மேற்பரப்புகளிலும் தங்களுடைய எண்ணங்களை வெளியே சொல்ல எழுத்துக்கள் வழக்கத்தில் இல்லாத காலங்களில், தான் தங்கி ஓய்வெடுத்த இடங்களிலும், வழிபாடு செய்த இடங்களில் வெண்சாந்து மற்றும் சிவப்பு நிற ஓவியங்களை அக்கால மனிதர்களால் வரையப்பட்டவையாகும். இந்த பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டின் தொன்மையைக் குறிக்கும் வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன. இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலை ஈடுபாடு, சமூக வாழ்க்கை நடைமுறைகள், வேட்டைக் கருவிகளாக பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான முக்கிய ஆவணங்களாக இவை விளங்குகின்றன. இது போன்ற பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரி பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர், கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேகுப்பம் பஞ்சாயத்து மொட்டையன்கொட்டாய், கூசுக்கல் குட்டை என்ற இடத்தில் ஒட்டமார் கவியில் இரு கற்களுக்கு இடையே கூரை போன்று 100 அடி நீளத்திலும், 20 அடி அகலத்திலும் காணப்படும் ஒரு பாறையின் அடிப்பகுதியில் இந்த பாறை ஓவியங்கள் வரையப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

Hill top with details of caves

Hill top with details of caves

Hill top with details of caves-another view

Hill top with details of caves-another view

அருகில் உள்ள இன்னொரு மலை, மலையுச்சியின் தோற்றம்….

 

குகை தோற்றத்தை கவனிக்கலாம்……

Hill top with details of caves-close view

Hill top with details of caves-close view

பாறை ஓவியங்களின் விவரங்கள்: இது குறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது[2]: இந்த ஓவியங்கள் பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டுள்ளது. சில மங்கிய வகையில் காணப்படுகின்றன. இவை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தெற்கு முனையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் தொடர் செய்தியை கூறுபவையக இருக்கின்றது. ஒரு மனிதன் மையத்தை நோக்கி செல்வது போலவும், அவனை நோக்கி அம்பு செல்வது போலவும் வரையப்பட்டுள்து. இரண்டாவதில் அவனை பாடையில் வைத்து, சடங்கு செய்வது போலவும், சுற்றியும் மனிதர்கள் உள்ளது போலவும் வரையப்பட்டுள்ளது. மூன்றாவதில் இறந்த மனிதனை அலங்காரம் செய்து பாடையில் வைத்து தூக்கி செல்வது போலவும், தூக்கி செல்பவர்கள் ஒரே மாதிரி உடை அணிந்து உள்ளது போலவும் காட்டப்பட்டுள்ளது. அதன் அருகே ஒரு பெரிய உருவம் வரையப்பட்டுள்ளது. அது மனிதனும், பறவையும் கலந்த ஓர் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

Hill top with details of caves

Hill top with details of caves

The hilly path proves that it is frequented with men trekking continuously

The hilly path proves that it is frequented with men trekking continuously

மக்கள் தொடர்ந்து நடந்து வருவதால் உண்டான பாதைகள் பல காணப்படுகின்றன.

ஓவியங்களின் மற்ற விவரங்கள்: அதுமட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட மனித உருவங்களும், 5 நட்சத்திர கோல வடிவங்களும், மூன்று பாண்டி விளக்குகளும் கேடயத்துடன் போரிடும் காட்சி ஒன்றும் வரையப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து ஆய்வாளர் சுகவன முருகன் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்ட ஓவியங்களில் பறவைகள் வரையப்பட்டுள்ளது சிறப்பானதாகும். இங்கு 3 இடங்களில் அழகாக மயில் வரையப்பட்டுள்ளது. ஒன்று ஓடி வருவது போலவும், கொண்டை அலகுகள், மயிற்பீலியும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 இடங்களில் மயில் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,’ என்றார். இந்த ஆய்வின் போது, பொருளாளர் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ரவி, விமலநாதன், பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் லட்சுமணன், சக்திவேல், குமார், ஸ்ரீராம், ராமசாமி, சத்தியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Inside darga, geological evidence

Inside darga, geological evidence

தர்காவின் உட்புறத் தோற்றம்……..பழங்காலத்தில் பாறைக்குழம்பு ஆறியுள்ள நிலையைக் காட்டுகிறது…………..

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் புகார்: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மலையில் ஜல்லி கற்களுக்காக பாறைகள் வெட்டப்படுவதால், பாறையில் உள்ள பழமையான ஓவியங்கள் அழிந்து வருகிறது. எனவே, குவாரி பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய தலைவர் மனோகரன், செயலாளர் சுகவனமுருகன் ஆகியோர் கலெக்டர் கதிரவனிடம் மனு அளித்துள்ளனர்[3]. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வெங்கட்டாபுரம் குண்டல் குண்டா மலையில் வரலாற்று காலத்திற்கு முந்தைய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பாறை ஒவியங்கள் உள்ளது. இங்குள்ள குகையில் புதிய கற்கால கல் ஆயுதங்களும், ஓடுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில் இந்த மலை பகுதியில் ஜல்லிக்காக பாறைகள் பெருமளவில் உடைக்கப்பட்டு வருகிறது. இதனால் மலையின் ஒரு பகுதி முற்றிலும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது. தற்போது அரிய தொல்லியல் சின்னமான பாறை ஓவியங்கள் உள்ள கல்யாணகெவி என்னும் பெரியகுகை வாழிடப்பகுதி வரை கல் உடைக்கப்பட்டு இச்சின்னங்கள் அழியும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது[4]. இந்த வரலாற்று சின்னங்கள் ஆய்வுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் பாதுகாக்க வேண்டும். குவாரி பணிகளை நிறுத்தவிட்டால், பாறை ஓவியங்களை மீட்க இயலாத பேரிழப்பு ஏற்படும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trekker photo - with courtesy

Trekker photo- with courtesy

பழங்காலத்தில் பாறைக்குழம்பு ஆறியுள்ள நிலையைக் காட்டுகிறது…………..முழுப்புகைப்படம்.  புகைப்படத்திற்கு நன்றி.

முன்னமே இருந்தவற்றை கண்டு பிடித்தோம் என்பது சரியா?” கிருஷ்ணகிரியில் ஐந்தாறு சிறிய குன்றுகள், பெங்களூருக்கு போகும் வழியில் இருப்பதாலும் “ட்ரெக்கிங்: என்ற ரீதியில் தொலைவில் உள்ள இடங்களுக்கு சென்று வருவது என்ற முறையிலும், இளைஞர்கள், இருசக்கர வாகனங்களில் இப்பகுதிகளுக்கு வந்து செல்கிறார்கள். குன்றின் மீது ஏறி, பொழுது கழித்து திரும்புகிறார்கள். அவ்வாறு அவர்கள் செல்லும்போது குன்றுகளின் பகுதிகள், சிற்பங்கள், பழங்கற்கால எச்சங்கள் முதலியவற்றை புகைப்படம் எடுத்து இணைதளங்களில் போட்டு வருகிறார்கள். இதுதவிர முன்னமே பழங்குடியினர் மற்றும் தேடி வரும் மக்கள் என்பவர்கள் தாராளமாக சென்று வருகிறார்கள். “எக்ஸ்ட்ராக்ட்” [extract] தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலைசெயும் வேலையாட்கள் மூலிகைகள், நார்கள், பழங்கள், கொட்டைகள், விதைகள் முதலியவற்றை பரித்து-சேகரித்டுச் செல்கிறார்கள். ஆர்களும், இங்கிருக்கும் கோவில்கள், சிற்பங்கள், பழங்காலத்து எச்சங்கள் என்று சொல்லப்படுகின்ற பெருங்கற்கால சின்னங்கள் முதலியவற்றை எல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இப்பொழுது சிலர் பல பெயர்களில் குழுக்களை ஏற்படுத்தி கொண்டு அதே இடங்களுக்குச் சென்று தாங்கள் ஏதோ புதியதாக கண்டு பிடித்து விட்டது போன்று சில ஊடங்களுக்கு அறிக்கைகள், பேட்டிகள் முதலியவற்றைக் கொடுத்து கொண்டு, விளம்பர ரீதியில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டு தொகுப்புகள் முதலியவற்றை கூட பார்க்காமல் தாங்களே கண்டுபிடித்தது போன்று பிரச்சாரம் செய்து வருவது வியப்பாக இருக்கிறது.

Showing the details of structure on the hill

Showing the details of structure on the hill

கோட்டை, சையது பாட்ஷா தர்கா, மற்ற கட்டிட தோற்றங்களை கவனிக்கலாம்…..

குவாரி, கிரானைட் வியாபாரம் முதலியவற்றை, இந்த ஆய்வு குழுக்கள் ஏன் எதிர்ப்பதில்லை?: தமிழ்நாட்டில் கிரானைட் வியாபாரம் பெருகியதிலிருந்து, அரசியல்வாதிகள், அவர்களது உறவினர் மற்றும் நண்பர்கள், அரசிடமிருந்து ஓப்பந்தம், அனுமதி பெற்று மலைகளில் இருந்த பாறைகளை உடைத்து, அவற்றை ஏற்றுமதி செய்து கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாது சாலை போடுதல், சாலைகள்-பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகளில், அருகில் உள்ள குன்றுகள், மலைகள் இவற்றிலிருந்து கற்கள் கற்பாறைகள் அவற்றை எடுத்து உபயோகப்படுத்தி வருகிறார்கள் மற்றும் விற்பனையும் செய்து விடுகிறார்கள். பழங்கற்காலம், இடைக்காலம், நவீன காலங்களில் கட்டப்பட்ட கோவில்கள், சிற்பங்கள் முதலியவற்றையும், இவ்வேலைகளின் மூலம் அழித்து வருகிறார்கள். இந்நிலையில், இப்படி புதிய-புதிய பெயர்களில் ஆய்வுகுழுக்கள் தோன்றி இவற்றை பாதுகாக்க வேண்டும், என்றெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டிருப்பது, வியப்பாக இருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து 40 ஆண்டு காலமாக நடந்து வரும் கிரானைட் வியாபாரம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் பற்றி அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால் அவர்கள் ஒருவேளை அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறார்களா பிரச்சினையை திசை திருப்ப முயல்கிறார்கள் என்றும் என்ன தோன்றுகிறது. மற்ற விசயங்களில் ஆறுவழி சாலை போடாதே என்றெல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள், மலைகள் மறைந்து கொண்டுதான் வருகின்றன.

© வேதபிரகாஷ்

21-05-2019

Rock_cut_carvings_in_Syed_bassa_malai_krishnagiri

Rock_cut_carvings_in_Syed_bassa_malai_krishnagiri

தர்காவுக்குப் போகும் வழியில் செதுக்கப் பட்டுள்ள விநாயகர், லிங்கம் மற்றும் நந்தி சிற்பங்களை காணலாம்……..படங்கள் இணைதளத்திலிருந்து, எடுத்து உபயோகப் படுத்தப் பட்டுள்ளன – நன்றி.

Vinayaka, Linga, at the bottom, Darga on the top

Vinayaka, Linga, at the bottom, Darga on the top

[1] தினத்தந்தி, கிருஷ்ணகிரி அருகே கி.மு.500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்பதுக்கை கண்டுபிடிப்பு, பதிவு: மே 13, 2019 05:00 AM

தினகரன், கிருஷ்ணகிரி அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு, 2019-03-04@ 12:07:05

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=477835

[3] தினகரன், பர்கூர் மலையில் பாறைகள் வெட்டியெடுப்பதால் அழியும் ஓவியங்கள், 2016-09-02@ 12:01:24

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=243106