Archive for the ‘மசூதி’ Category

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாத-விவாதங்கள்- C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது – விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்தால் உண்மைகள் விளங்கும்! (2)

மே14, 2022

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாதவிவாதங்கள்– C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறதுவிஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்தால் உண்மைகள் விளங்கும்! (2)

இத்தகைய பிரச்சினைகள் எழுவதேன், பின்னணி என்ன?: உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ் மஹாலில் பூட்டியிருக்கும் 22 அறைகளை ஆய்வு செய்ய, இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அண்மையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுத்தாக்கல் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி, பா.ஜ.க நிர்வாகியின் இந்த முன்னெடுப்பை வரவேற்றிருக்கிறார். ஊடகங்கள் இவ்வாறு, இத்தகைய பிரச்சினைகளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள் மட்டும் செய்து வருகிறார்கள், அதனால், நாட்டில், மத-அமைதி சீர்குலைகிறது, கலவரங்களுக்கு வழிவகுக்கும், அதன் மூலம் தேர்தல் ஆதாயம் கிடைக்கும் என்றெல்லாம் விவரிக்கப் படுகிறது. இது ராமஜன்மபூமி விவகாரத்திலிருந்தே செய்யப் படும் பிரச்சாரமாகி விட்டது.  இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற அமைப்புகள் கூட அரசியல் சார்புடன், இதைப் பற்றி விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இதிலிருந்து சரித்திராசிரியர்கள், அகழாய்வு நிபுணர்கள் முதலியவர்களும் பாரபட்சத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் என்றே தெரிகிறது.

ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி தாஜ் மஹால் இடம் தமக்கு சொந்தமானது என்கிறார்: இது தொடர்பாகப் பேசிய தியா குமாரி[1], “தாஜ் மஹால் கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் என்ன இருந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு என்ன இருந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுள்ளது. மேலும், தாஜ் மஹால் இருக்கும் அந்த நிலம் எங்கள் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது. ஆனால், அதை ஷாஜஹான் கையகப்படுத்திக்கொண்டார். அந்த நிலத்துக்குப் பதிலாக இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதை என் குடும்பம் ஏற்றுக்கொண்டதா எனத் தெரியவில்லை. அப்போது நீதிமன்றமும் இல்லை என்பதால் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பில்லாமல் போனது. அது தொடர்பான பதிவேடுகளை தற்போது ஆய்வு செய்துவருகிறோம். அந்த ஆய்வுக்குப் பிறகு என்ன நடவடிக்கை எடுப்பது என முடிவெடுப்போம்,” எனத் தெரிவித்தார்[2]. இவர் இதற்கு முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்போது, “எங்கள் குடும்பம் ராமர் மகனின் வாரிசு. அதற்கான ஆதாரத்தைத் தேவையெனில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்” எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞான தொழிற்நுட்பங்கள் மூலம் பல உண்மைகளை கண்டறியலாம்: இப்பொழுது அகழாய்வு மற்றும் பூமியின் மேற்பரப்பு, கட்டிடங்களில் உள்ளமைப்பு முதலியவற்றை தோண்டாமலேயே, இடிக்காமலேயே, நவீன விஞ்ஞானகருவிகளைக் கொண்டு கண்டறிய முடியும். சாடிலைட் இமேஜரி மூலம் பழைய நதியோட்டப் பாதைகள் எல்லாம் கண்டுபிடிக்கப் பட்டு அலசப் படுகிறது. LIDAR மூலம் பூமிக்குள் இருக்கும் பொருட்கள், பட்டிடங்கள் முதலியவற்றக் கண்டு பிடிக்க முடிகிறது. அதாவது பூமியைட் தோண்டாமலேயே, பூமிக்குள் இருக்கும் பொருட்கள், கட்டிடங்கள் முதலியவை இருப்பதை கண்டுபிடிக்கலாம். அதை வைத்து தாஜ்மஹால் போன்றவற்றை ஆராயலாம். சுவர்களில், அஸ்திவாரங்களில் என்னவுள்ளன என்பதை சுலபமாக அறியலாம். முகலாயர், முஸ்லிம்கள் இருக்கின்ற ராஜபுத்திரர் கோட்டைகள், அரண்மனைகள், கோவில்கள் முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டு, மேறுபுறம் மாற்றியமைத்து மற்றும் முழுவதுமாக இடித்து கட்டியுள்ளனர் என்பது உண்மையாகும். டில்லி, ஆக்ரா, போன்ற இடங்களில் உள்ள கட்டிடங்களுக்குச் சென்று பார்த்தாலே, இவ்வுண்மை புலப்படும். இதனை யாரும் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

3-D முறையில் ஒரு கட்டிடத்தை பலவாறு ஆராயலாம்: இக்கால இளைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுனர்களும் விஞ்ஞான முறையில் உண்மைகளை அறிந்து வெளியிடலாம், அப்பொழுது உண்மை தெரிந்து விடும். ஆகாயத்திலிருந்து பலவித கோணங்களில் பார்க்கும் போது, உள்ளே பார்க்க முடியும். குறிப்பிட்ட புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டால், 3-D முறையில் தலைகீழாகவும் பார்க்கலாம், எல்லா கோணங்களில்ம் பார்க்கலாம், அத்தகைய புகைப் படங்களையும் முப்பரிமாணங்களில் உருவாக்கலாம். அதனை நீதிமன்றம் தடுக்கமுடியாது. ஆனால், அனுமதி கொடுக்கப் பட மாட்டாது.  ஆனால்சரித்திரத்தை, சரித்திரத் தன்மையினை, நடந்த உண்மையினை ஏன் மறைக்க, மறுக்க, மறக்க வேண்டும், தெரிந்து கொண்டால் என்ன தவறும் இல்லை. MA  படி, PhD ஆராய்ச்சி செய், தனியாக வேண்டுமானால் இது பற்றி விவாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லும் பொழுது, இந்த நவீனமுறைகளும் தெரிந்திருக்க வேண்டுமே?

பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் விக்கிரங்கள் இருக்கிறதா இல்லையா?: தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் விக்கிரங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை விட பூட்டப் பட்ட அறைகள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகின்றது! தாஜ் மஹாலின் குறுக்குவெட்டுத் தோற்றம், தரைப்படம், பக்கவாட்டு அமைப்பு போன்ற புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளன. மூன்றடுக்குகள் கொண்ட இந்த கட்டிடத்தில் பல அறைகள் இருப்பது தெரிகிறது. எனவே அவை பொதும்மக்களின் பார்வைக்கு ஏன் அனுமதிப்பதில்லை என்று தெரியவில்லை. அறைகஐ திறப்பதினால் என்ன பிரச்சினை அல்லது முன்னமே ASI பார்த்திருந்து, ஆவணப் படுத்தியிருந்தால், அவற்றை அறிக்கையாக வெளியிடலாமே? வருடாவருடம் Indian Archaeology – A Review என்ற அறிக்கைகள் கொண்ட தொகுப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது. அவற்றில், இவை இடம் பெற்றிருந்தால், யாரும் கேட்கப் போவதில்லை. அதி பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடலாம்.

கட்டிடங்கள் மாற்றிக் கட்டப் படுவது தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிதான்: மக்கள் தொடர்ந்து வாழும் பகுதிகளின் மேற்பரப்பு, அவர்களின் தினசரி வாழ்க்கையினால், தொடர்ந்து அதிகமாகத்தான் ஏறிவருகிறது, அதற்கு தாஜ்மஹால் விதிவிலக்கல்ல, அவ்விடமும் கைமாறி இருக்கிறது அல்லது ஆண்ட அரசுகள் ஆக்கிரமித்து சொந்தமாக்கிக் கொண்டிருக்கும். இப்பொழுது ஒருவன் ஒரு இடம் தனக்கு சொந்த என்றால், இப்பொழுதுள்ள சட்டத்தின் படி சொந்தம். ஆக்கிரமிப்பு அதில் வருவதில்லை! அதுபோல, முகலாயர்கள் ஆக்ராவை ஆக்கிரமித்துக் கொண்டபோது, அது அவர்களுக்கு சொந்தமில்லை, ராஜபுத்திரர்களிடமிருந்து தான் பிடிங்கிக் கொண்டார்கள்! இருக்கின்ற கட்டிடத்தை மாற்றி அமைப்பது என்பது சாதாரண விசயம். இப்பொழுதும் அஸ்திவாரம் நன்றாக இருந்தால் அதன் மீது தான் கட்டிடம் எழுப்பப் படும்! சுவர்கள், கூரை வரை நன்றாக, பலமாக இருந்தால், அவற்றின் மீதும் கட்டிடங்கள் கட்டுவது வழக்கும். மசூதிகளில் அவற்றைக் காணலாம்! ASIன் கீழ் வரும் புராதன கட்டிடங்கள் ஒரே மாதிரியாகத்தான் வழக்கத்தில் செயல்படுத்த வேண்டும். உள்ளே சென்று எல்லாவற்றையும் பார்க்க அனுமதிக்க வேண்டும். பல்லவரத்தில் கோட்டை விட்டதால், பஞ்சப் பாண்டவர் குகைக்கோவில், இபொழுது மசூதியாகி விட்டது! இது 70 ஆண்டுகளில் நடந்தது!

புரதான கட்டிடங்கள் மாற்றப் படுவதை சட்டப் படி தடுக்க வேண்டும்: பொதுவாக இப்பிரச்சினை இந்து-முஸ்லிம் விவகாரத்தில் முடியும், அமைதி குலையும், கலவரங்கள் உண்டாகும் என்ற பயத்தில் தான் தயக்கம்/ காட்டப் படுகிறது. ஆனால், பல்லாவம் போன்று பல புராதன இடங்கள், கட்டிடங்கள், கோவில்கள் இன்றும் ஆக்கிரமிக்கப் படுகின்ற, மாற்றப் படுகிறன. காஞ்சிபுரத்தில் ஒரு சிவன் கோவிலையே மறைத்து கோடவுனாக உபயோகித்து வந்ததும், சமீபத்தில் தெரிய வந்துள்ளது. அதனால், இத்தகைய சர்ச்சைக்குரிய இடங்களுக்குள் செல்ல தயக்கம் காட்டப் படுகிறது. பிறகு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப் படுகிறது, இருக்கின்ற தூண்கள், சிலைகள் முதலியவையும் அழிக்கப் படும், சரித்திரம் மறைக்கப் படும்! புராதன பட்டிடங்கள், நினைவிடங்கள் பற்றி சட்டங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவை முறையாக செயல்படுத்தப் படுவதில்லை. Infra-structure development  என்று வரும் பொழுதும், பலமுறை, பலவழிகளில் வளைக்கப் படுகின்றன,  சரிசெய்யப் படுகின்றன! பிறகு மதம், மதவாதம் என்றெல்லாம் வரும்பொழுது, செக்யூலரிஸம் வெள்ளையடிக்கப் பட்ட கம்யூனலிஸம் தான் வெல்லும், எல்லாமே மறக்க-மறுக்கப் படும்!

© வேதபிரகாஷ்

14-05-2022


[1] விகடன், தாஜ் மஹால் நிலம் எங்களுக்குச் சொந்தமானதுஷாஜஹான் அபகரித்துக்கொண்டார்!” – பாஜக எம்பி தியா குமாரி, VM மன்சூர் கைரி, Published:11 May 2022 7 PMUpdated:11 May 2022 7 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-mp-diya-kumari-claimed-that-taj-mahal-land-belonged-to-her-family

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாத-விவாதங்கள்- C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது (1)

மே14, 2022

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாதவிவாதங்கள்– C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது (1)

பி. என். ஓக் என்பவரின் புத்தகத்திலிருந்து, இந்த விவகாரம் தொடர்கிறது: இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன, என்று “தமிழ் இந்து” பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயிலிருந்தது, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் எனவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பி.என். ஓக் (P.N.Oak) என்பவர் 50 வருடங்களுக்கு முன்னரே இதைப் பற்றி பல புத்தகங்களை, புகைப் படங்களுடன் எழுதியுள்ளார்[1]. பிறகு V.S. கோட்போல் என்பவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்[2] மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ளார். அங்கிருக்கும் ஒரு கதவின் சிறிய துண்டை தேதிக்காக சோதனை செய்த போது, அது ஷாஜகான் காலத்திற்கு முந்தையது என்று வந்தது. மூன்றடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தில் – கீழ் மற்றும் மேலே செல்ல யாரையும் அனுமதிக்கப் படுவதில்லை. அதுதான், வருகின்ற சுற்றுலா மற்றும் இதர பயணிகளுக்கு வியப்பாக இருக்கிறது. கேட்டாலும், “செல்லக் கூடாது,” என்று தான் சொல்கின்றனர், காரணம் எதையும் சொல்வதில்லை. இதனால், பழைய புகைப் படங்களை பார்ப்பவர்களுக்கு, மற்றும் பி.என்.ஓக் புத்தகங்களைப் படித்தவர்களுக்கு, அவற்றின் மீது சந்தேகம் எழுகின்றது.

C-14 தேதி 1300ல் அக்கட்டிடம் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறதுஅடாவது ஷாஜகானுக்கு 300 வருடங்கள் முன்பு: தாஜ் மஹாலின் மரக்கதவிலிருந்து ஒரு துண்டை C-14 (carbon 14) சோதனைக்கு உட்படுத்தியபோது அது ஷாஜகானுக்கு (1592-1666) ஆண்ட காலம் (1628-1658) 300 ஆண்டுகள் முந்தைய தேதியைக் கொடுத்தது. அதாவது சுமார் 1300ம் ஆண்டு என்று வந்தது. ராஜபுத்திர ஆட்சியாளர்களின் விவரங்களின் படி,500 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு யமுனை ஆற்றங்கரையில் அரண்மனைகள், கோவில்கள் இருந்திருக்கின்றன. கட்டிடக் கலை வல்லுனர்கள் இ.பி.ஹேவல் (E.B.Havell), கெனோயர் (Mrs.Kenoyer), சர். டபிள்யூ. டபில்யூ.ஹன்டர் (Sir W W Hunter) போன்றோர், தாஜ் மஹாலின் தரைப்படம் வைத்துப் பார்த்தால், அது ஒரு இந்து கோவில் அமைப்பில் உள்ளது தெரிகிறது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். இ.பி.ஹேவல், ஜாவாவில் உள்ள ஒரு “சண்டி சேவா கோவில்” அமைப்பில் உள்ளது என்று எடுத்துக் காட்டினார். இதே போல பல ஆவணங்கள் அது முன்னரே இருந்தது என்று தெரிகிறது. ஷாஜஹான் அல்லது அவர் காலத்தில் மற்ற கோவில்களைப் போல மாற்றியமைத்துக் கட்டப் பட்டிருக்க வேண்டும்.

சித்தாந்தங்களினால் உண்மை அறிய முடியாது: புதிதாக எழுந்துள்ள சர்ச்சையின்படி அதன் அடித்தளத்தில் சுமார் 22 அறைகள் பூட்டிக் கிடப்பதாகவும், அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது[3]. இதற்காக உத்தர பிரதேசம் அலகாபாதின் லக்னோ அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவர்களின் புகாரில் உள்ள உண்மைகளை அறிய, தாஜ்மகால் கட்டிய காலத்தில் எழுதப்பட்ட முகலாயர்களின் வரலாற்று நூல்களையும் ஆதாரங்களாகக் கொள்ளலாம்[4], என்று “தமிழ் இந்துவில்” கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது. இங்கு, “இந்துத்துவர்களின்,” என்ற வார்த்தை பிரயோகத்தைக் கவனிக்கலாம். எழுதியவர் பெயர், “ஆர்.ஷபிமுன்னா” என்ருள்ளது. இதனால், ஒரு முஸ்லிம், முஸ்லிம் போலத்தான் எழுதியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. தாஜ் மஹாலின் மேற்புற அல்லது வெளிகட்டுமானம் (super structure) ஷாஜகானால் செய்யப் பட்டிருக்கலாம், ஆனால், உள்ளே இருக்கும் கட்டிடம் முஸ்லிம்களுடையது அல்ல என்பதனை அங்கிருக்கும் ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்: இந்த நிலையில், தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்[5]. அந்த வழக்கு இன்று அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது[6]. அப்போது பேசிய மனுதாரர் தரப்பு, “தாஜ்மஹால் தொடர்பான உண்மையை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. அதன் அடிப்படையில் தாஜ்மஹாலில் பூட்டியுள்ள 22 அறைகளின் கதவும் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக தொல்லியல் துறையிடம் பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் வரலாறு அதன் வயது தொடர்பாக உள்ள சந்தேகங்கள் தொடர்பான சில ஆவணங்களையும் இணைத்துள்ளேன்,” என வாதிட்டார்.

எந்த உரிமையில் தாஜ்மஹாலின் அறைக்கதவைத் திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்? – நீதிபதிகள் கேள்வி: இந்த வாதத்துக்குக் கடுமையான ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், “தாஜ்மஹால் வயதில் சந்தேகம் என்றால் அதை ஷாஜஹான் கட்டவில்லை எனக் குறிப்பிடுகிறீர்களா? தற்போது தாஜ்மஹால் யார் கட்டியது என்பதை ஆய்வு செய்யவா இப்போது கூடியிருக்கிறோம்? வரலாற்றுத் தரவுகள் தொடர்பாகப் பேச விரும்பவில்லை. மேலும், எதன் அடிப்படையில், எந்த உரிமையில் தாஜ்மஹாலின் அறைக்கதவைத் திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்?,” எனக் கேள்விகளைத் தொடர்ந்தனர்[7]. இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, “நாட்டின் குடிமகன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,” எனக் கூறியதற்கு நீதிபதிகள்[8], “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு விஷயம் தொடர்பான தரவுகளைத் தான் அறியமுடியும். ஆனால் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும், ஆராய்ச்சி செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த சட்டத்தில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்[9]. இதற்கும் பதிலளித்த மனுதாரர், “உண்மை அறியும் குழு அமைத்து தாஜ்மஹால் குறித்தான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் நமக்குத் தவறான வரலாறு கற்றுத்தரப்பட்டிருந்தால் திருத்தப்பட வேண்டும். மேலும், பூட்டப்பட்ட அறைகளுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்,” என வாதிட்டார்[10].

பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிக்கூத்தாக்காதீர்கள்என்று கூறி வழக்கு தள்ளுபடி: இந்த வாதத்துக்குப் பின் நீதிபதிகள்[11], “தாஜ்மஹால் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் ஆய்வு செய்ய எம்., நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்புகளில் உங்களை இணைத்துக் கொண்டு ஆய்வை மேற்கொள்ளுங்கள். அதில் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றம் வாருங்கள். இன்று தாஜ்மஹால் அறையை திறக்க சொல்கிறீர்கள், நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா? பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிக்கூத்தாக்காதீர்கள். நீதிமன்றத்தில் இது போன்று நடந்துகொள்ளாதீர்கள். மேலும், எந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறினீர்கள் என விளக்கமளியுங்கள்,” எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். பின்னர் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[12].

© வேதபிரகாஷ்

14-05-2022


[1]  அவரது புத்தகங்கள் இன்றும் பிரசித்தியாகவே இருக்கின்றன. இணைதளங்களில் இதுவரை லட்சக்கணக்கில் டவுன்லோன் செய்யப் பட்டுவருகின்றன.

P. N. Oak, Taj Mahal was a Rajput Palace, Hindi Sahitya Assad, New Delhi, 2003.

[2] Godbole, V.S, The Origin of the Taj Mahal, RIBA, Jornal of Rooyal Institute of British Architects, 87.9, 1980, pp. 23-23.

………………………, Taj Mahal?: A Simple Analysis of a Great Deception, Itihas Patrika Prakashan 1986, 2007.

[3] தமிழ்.இந்து, தாஜ்மகாலை வைத்து அரசியல் வேண்டாமே!, ஆர்.ஷபிமுன்னா, Published : 13 May 2022 06:34 AM; Last Updated : 13 May 2022 06:34 AM.

[4] https://www.hindutamil.in/news/opinion/columns/799377-do-not-keep-the-taj-mahal-and-do-politics.html

[5] விகடன், இன்று தாஜ்மஹால்நாளை நீதிபதிகள் அறையை திறக்க சொல்வீர்களா?” – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம், VM மன்சூர் கைரி, Published:Yesterday at 8 PM; Updated:Yesterday at 8 PM

[6] https://www.vikatan.com/news/politics/today-taj-mahal-room-will-you-tell-me-to-open-the-judges-room-tomorrow-allahabad-court

[7] தினமலர், தாஜ்மஹாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி,  Updated : மே 12, 2022  19:55 |  Added : மே 12, 2022  19:53.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3028151

[9] தினாணி, தாஜ்மஹால் மீதான பொதுநல வழக்கு தள்ளுபடி, By DIN  |   Published On : 12th May 2022 05:00 PM  |   Last Updated : 12th May 2022 05:00

[10] https://www.dinamani.com/india/2022/may/12/allahabad-hc-dismisses-petition-on-taj-mahal-3843186.html

[11] தமிழ்.ஏபிபி.லைவ், விட்டா நீதிபதிகளோட அறைகளையும் திறக்க சொல்லுவீங்க” : தாஜ்மஹாலின் அறைகளை திறக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி, By: ABP NADU | Published : 13 May 2022 08:32 PM (IST)|Updated : 13 May 2022 08:38 PM (IST).

[12] https://tamil.abplive.com/news/india/taj-mahal-case-allahabad-high-court-rejects-petition-seeking-open-22-closed-doors-52003

கிருஷ்ணதேவராயர் மலை, கிருஷ்ணகிரி மலை, சையது மலை ஆகுமா? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் கதை இங்கும் அரங்கேற்றப் படுகிறதா?

பிப்ரவரி28, 2022

கிருஷ்ணதேவராயர் மலை, கிருஷ்ணகிரி மலை, சையது மலை ஆகுமா? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் கதை இங்கும் அரங்கேற்றப் படுகிறதா?

சரித்திரம் ஆதாரம் இல்லாத பெயர் மாற்றம் ஏன்?: துலுக்கர் மற்றும் கிருத்துவர் இந்தியாவில் பல இடங்களில் தெருக்கள், கிராமங்கள், ஊர்கள் முதலியவற்றின் பெயர்களை மாற்றி வருகிறார்கள். இதை அவர்கள் திட்டத்துடன் செயல் படுத்தி வௌகிறார்கள். முதலில், தாமாகவே முகவரியில் பாஷா தெரு, சையது வீதி, பெத்தேல் நகர், மைக்கேட்பட்டி, என்றெல்லாம் செய்வர். கடிதங்கள், ஆவணங்களில் அவ்வாறே குறிப்பிடுவர். பிறகு ஓரளவுக்கு தாக்கம் ஏற்பட்டவுடன், அரசு, அதிகாரம் ஆட்சி, கட்சி போன்றவற்றில் உள்லவர்களின் உதவியுடன், மாநில அரசு ஆவணங்களிலும் அவ்வாறே பெயர் மாற்றங்களை செய்வர். கடைகளின் போர்டுகளில் அவ்வாறே குறிப்பிடுவர். தமிழகத்தில் உள்ள ஊர்கள் எல்லாம் தொன்மையானவை, ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் இந்தியா முழுவதிலிருந்தும் பற்பல ஞானிஅகள், ரிஷிகள், முனிவர், பெரியார் என்று வந்துள்ளனர். அதனால், ஒவ்வொரு ஊரின் பெயரின் பின்னாலும், 2000, 21000 வருடங்கள் சரித்திரம் உள்ளது. அதனை இவ்வாறு பெயர் மாற்றத்தின் மூலம் அழிப்பது மறைப்பது முதலியவை மிகப்பெரிய குற்றம் ஆகும். மீபத்தில் மைக்கேல்பட்டி விவகாரத்தில், இத்தகைய பெயர் மாற்ற விவகாரம், நீதிபதியின் கவனதிற்கும் சென்றுள்ளது.

திருக்காட்டுப் பள்ளி, மைக்கேல்பட்டி ஆனதே கிறிஸ்தவ மதமாற்றத்திற்குச் சான்று:

திருக்காட்டுப்பள்ளி (Thirukattupalli), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட அக்னீஸ்வரர் திருக்கோவில் இங்கு உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது. இன்றைய செக்யூலார் மற்றும் நாத்திக-இந்து விரோத ஆட்சியில், தமிழக புராதன இடங்கள், ஊர்கள், கிராமங்கள் முதலியவற்றின் பெயர்க்ள் மாற்றப் படுவதிலிருந்தே, அங்கே எவ்வாறு துலுக்கர் மற்றும் கிருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில், திடீரென்று தஞ்சாவூர், கும்பகோணம், திருநெல்வேலி, கன்யாகுமரி போன்ற இடங்களில் அல்லாப்பேட்டை, மொஹம்மது நகர், அஹமது நகர், பெத்தேல் நகர், மைக்கேல் பட்டி என்றெல்லாம் தோன்றி விட முடியாது. இது, மக்கள் தொகை, ஜனத்தொகை மாற்றம், புவியியல், சரித்திரம் மற்றும் உள்ளூர் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் என்று எல்லாவற்றியும் மாற்றும், மறைக்கும் வேலைகள் ஆகும்[3]. இதற்கு உள்ளூர் அதிகாரிகளும் ஒத்துழைத்துள்ளார்கள் என்று தெரிகிறது[4]. பத்திரப் பதிவுகளில், 200 ஆண்டுகளாக இருந்து வரும் பெயர்களை இன்றும் உபயோகப் படுத்தப் படுகிறது. இல்லையென்றால், மூல்ங்களை அறிய முடியாது, சரிபார்க்கவும் முடியாது. இல்லையென்றால், அவ்வாறேல்லாம் பெயர்களை மாற்றி விட முடியாது. அவை அரசு ஆவணங்களிலும் இடம் பெற முடியாது

கிருஷ்ணதேவராய மலை, கிருஷ்ணகிரி மலை சையது மலை ஆகாது: கிருஷ்ணகிரிக் கோட்டை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரியில் உள்ள உள்ள ஒரு மலைக் கோட்டை ஆகும். இது இம்மாவட்டத்தில் உள்ள வலுவான கோட்டைகளுள் ஒன்று. இது ஒரு மலைக் கோட்டை. சுவர்களும், கொத்தளங்களும் பெருமளவுக்கு நல்ல நிலையில் உள்ள இக்கோட்டை தற்போது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் ஆகும். இக்கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் மேலாண்மையின் கீழ் உள்ளது. நகரத்தின் பழைய பேட்டையிலிருந்து மலை உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இக்கோட்டையுள்ள மலையானது கிருஷ்ணதேவராயர் மலை என்று அழைப்படுகிறது. ஆனால், திடீஎன்று, சையத் பாஷா மலை என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டு இப்பொழுது அழைக்கப்படுகிறது. இந்த மலையில் சையத் பாஷா என்ற இசுலாமியரின் உடல் புதைக்கப் பட்டுள்ளதாக, ஒரு தர்கா கட்டப்பட்டுள்ளது. இதனால் இது இப்பெயரால் அழைக்கப்படுகிறது, என்று விளக்கமும் கொடுக்கப் படுகிறது. இப்படி கட்டுக்கதைகளை உருவாக்கி, மலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு, அடாவடித் தனம் செய்வது, கலவரங்களை உண்டாக்குவது துலுக்கர்-கிருத்துவர்களின் திட்டமாக உள்ளது. ஆனால், ஊடக பலம், பிரச்சார யுக்தி, அனைத்துலக பணபலம்-ஆதரவு முதலியவற்றால் இந்துக்களின் மீது ப்ழி போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

விஜயநகர காலத்தில் கட்டப் பட்ட கோட்டை, துலுக்க பெயரில் தெரிய வைப்பது சரித்திர துரோகம் ஆகும்: இக்கோட்டை விஜயநகரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டது. அக்காலத்தில் “பரமகால்” என அழைக்கப்பட்ட இப்பகுதியையும் கோட்டையையும் ஜெகதேவிராயர் என்பவர் போர்களில் அவர் காட்டிய வீரத்துக்காக விஜயநகரப் பேரரசிடம் இருந்து பரிசாகப் பெற்றுக்கொண்டார். இவர் ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டுவந்தார். ஆதலால், துலுக்கருக்கும், இக்கோட்டைக்கும், மலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 1670ல் இக்கோட்டையைச் சத்திரபதி சிவாஜி கைப்பற்றிக்கொண்டார் 17 ஆம் நூற்றாண்டில் பீஜப்பூர் சுல்தான் கீழிருந்த பரமகாலும் கோட்டையும் ஷாஜிக்கு (Shaji) என்பவனுக்கு வழங்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஷாஜி பெங்களூரைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டார். இவர் இறந்த பின்னர் இளைய மகன் வியாங்கோஜி அரசனானார்., என்பதெல்லாம் பிறகு உண்டான நிகழ்வுகள்.

ஆட்சிஅதிகாரம் மாறுவதால் கோட்டை பெயர் மாறாது: 18ம் நூற்றாண்டில் மைசூர் அரசர் சிக்க தேவராய உடையாரின் கட்டளைப்படி ஐதர் அலி இக்கோட்டையையும் பரமகாலையும் கைப்பற்றினார். பின்னர் மைசூர் அரசரிடம் இருந்து பிரிந்த ஐதர் அலி ஶ்ரீரங்கப்பட்டினத்தைத் தலைநகரமாக்கி ஆண்டபோது இக்கோட்டையையும் தன்வசமே வைத்துக்கொண்டார். முதலாம் ஆங்கில மைசூர்ப் போரின்போது இடம்பெற்ற நீண்ட முற்றுகையைத் தொடர்ந்து இக்கோட்டை பிரிடிஷார் கைப்பற்றிக் கொண்டனர். 1791 ஆம் ஆண்டில், மூன்றாவது ஆங்கில மைசூர்ப் போரின்போது, திப்பு சுல்தானின் வசம் இருந்த இக்கோட்டையை தளபதி மாக்ஸ்வெல்லின் தலைமையிலான பிரிடிஷ் படைகள் தாக்கின. ஆனாலும் பிரிடிஷ் படைகள் கடும் இழப்புகளுடன் பின்வாங்கவேண்டி ஏற்பட்டது. 1792ல் ஶ்ரீரங்கப்பட்டின ஒப்பந்தப்படி இக்கோட்டை பிரிடிஷாரிடம் சென்றது. மேலும், ஒரு இடத்தில் நடக்கும் தீவிரவாத நிகழ்வுகளை மறைத்து, வெள்ளையடித்து, தம்மை “புனிதர்” போல காட்டிக் கொள்ளவும் அத்தகைய பெயர்-மாற்றம் மோசடிகளை செய்து வருகின்றனர். ஆமாம், இதே மலையில், இஸ்லாமிய தீவிரவாதிகள் மறைந்து கொண்டு, வெடிகுண்டுகள் தயாரித்தனர், பயிற்சியும் கொடுத்தனர்.

படம் – இந்து முன்னணி – நன்றி

வங்காள பயங்கரவாதிகள் இம்மலையில் வந்து தங்கியிருந்தனர்: மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டும், பீகார் மாநிலம் புத்தகயாவில் கடந்த 2018-ம் ஆண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. அவ்வழக்கில், ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டான்[1]. குற்றப்பத்திரிகையில், இந்திய அரசு மற்றும் வங்கதேச அரசுகளுக்கு எதிராக போர் தொடுக்க, ஜமாத் உல் முஜாஹிதீன், பங்களாதேஷ் அமைப்பு சதி செய்து வருவதாகவும், அதில் ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் முக்கிய உறுப்பினர் என்றும் கூறப்பட்டது[2]. இந்த தாக்குதலில் வங்கதேச நாட்டை சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜமாத்உல் முஜாஹிதீன் வங்காளதேசம் (ஜே.எம்.பி.) என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த ஜே.எம்.பி. அமைப்பின் தலைவர் கவுசா என்கிற முனீர் என்கிற ஜஹிதுல் இஸ்லாம் (வயது 39) என்பவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி, 2019 அன்று கைது செய்தனர். விசாரணையில் அவர், வங்காளதேசத்தில், ஜமால்பூர் மாவட்டம், சோகாவிக்கே கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், பர்த்வான், புத்தகயா ஆகிய இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், கர்நாடக மாநிலம், சோலதேவனஹள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பு வழக்கு உள்பட சில வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

படம் – இந்து முன்னணி – நன்றி

இரண்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் இம்மலையில் தங்கியிருந்தது தெரிந்தது: தொடர் விசாரணையில் கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணதேவராயர் என்கிற சையத் பாஷா மலையில் பயங்கரவாதி கவுசா பதுங்கி இருந்தபோது, வெடிகுண்டுகள் தயாரித்ததும், வெடிகுண்டு பரிசோதனை செய்ததும் தெரியவந்தது[3]. இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் சி.வி.சுப்பாரெட்டி தலைமையில் 4 வாகனங்களில் 14 பேர் அடங்கிய குழுவினர், பயங்கரவாதி கவுசாவை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்[4]. விசாரணையில் இவர் மட்டுமல்ல மேலும் சில பயங்கரவாதிகள் கிருஷ்ணகிரி மலையில் 10 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி பெற்றது தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிந்தது[5]. மேலும் மலையில் இருந்து வெடிபொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு சோதனை நடத்த பயன்படுத்திய பைப்புகள், 4 பேட்டரி, வயர்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர். இந்த வெடிபொருட்களை சப்ளை செய்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடந்தது[6].

படம் – இந்து முன்னணி – நன்றி

இந்து முன்னணிக்கு நன்றி: மேலே குறிப்பிட்ட விவரங்களிலிருந்து, துலுக்கர் இவ்விசயத்தில் எவ்வாறு செயல்பட்டனர் என்பது வெளிப்படுகிறது. இந்து முன்னணி இதற்காக போராடியுள்ளது. அதனால், அவர்களுக்கு உரிய நன்றியை சொல்லியாக வேண்டும். களத்தில் இறங்கி போராடும் இந்துவீரர்கள் அவர்கள். சரித்திரத்தையும் காக்கப் பாராடுகிறார்கள். குமுதம் ரிப்போர்டர், மார்ச்1 2022 இவ்விரங்களைக் கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவராக இருந்த பரிதா நவாப் பெயர் மாற்றம் தீர்மானத்தை செய்தார். பெயர் மாற்றப் பின்னணியில் திமுக மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், பரிதா நவாப் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் உள்ளன. 2010க்குப் பிறகு எந்த பிரச்சினையும் இல்லை. இப்பொழுது, ம்றுபடியும் பெயர்மாற்ற முயற்சி, தீர்மானம் என்று வந்துள்ளதால், விவகாரம் ஆகியுள்ளது. 2006ல் லோகோ / சின்னம் பெயரில், கூகுளில் அவ்வாறான பெயரை வைத்து ஆரம்பிக்கிறர்கள் என்று தெரிகிறது. எனவே, கூகுள் பெயர்களையும் கவனிக்க வேண்டும் என்றாகிறது.

.

© வேதபிரகாஷ்

28-02-2022

படம் – இந்து முன்னணி – நன்றி

[1] தினமலர், கிருஷ்ணகிரி மலையில் வெடிகுண்டு? தீவிரவாதியை அழைத்து வந்து விசாரணை,  Added : ஜூலை 07, 2019  10:15.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2314699

[3] மாலைமலர், கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றது அம்பலம், பதிவு: செப்டம்பர் 25, 2019 11:37 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2019/09/25113704/1263231/militants-trained-in-Krishnagiri-mountain.vpf

[5] தமிழ்.இந்து, கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்துவந்து தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல், செய்திப்பிரிவு, Published : 24 Sep 2019 08:40 AM; Last Updated : 24 Sep 2019 08:40 AM.

[6] https://www.hindutamil.in/news/crime/517052-investigation-on-terrorist-in-krishnagiri.html

படம் – இந்து முன்னணி – நன்றி