Posts Tagged ‘பக்கவாட்டு’

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாத-விவாதங்கள்- C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது (1)

மே14, 2022

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாதவிவாதங்கள்– C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது (1)

பி. என். ஓக் என்பவரின் புத்தகத்திலிருந்து, இந்த விவகாரம் தொடர்கிறது: இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன, என்று “தமிழ் இந்து” பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயிலிருந்தது, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் எனவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பி.என். ஓக் (P.N.Oak) என்பவர் 50 வருடங்களுக்கு முன்னரே இதைப் பற்றி பல புத்தகங்களை, புகைப் படங்களுடன் எழுதியுள்ளார்[1]. பிறகு V.S. கோட்போல் என்பவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்[2] மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ளார். அங்கிருக்கும் ஒரு கதவின் சிறிய துண்டை தேதிக்காக சோதனை செய்த போது, அது ஷாஜகான் காலத்திற்கு முந்தையது என்று வந்தது. மூன்றடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தில் – கீழ் மற்றும் மேலே செல்ல யாரையும் அனுமதிக்கப் படுவதில்லை. அதுதான், வருகின்ற சுற்றுலா மற்றும் இதர பயணிகளுக்கு வியப்பாக இருக்கிறது. கேட்டாலும், “செல்லக் கூடாது,” என்று தான் சொல்கின்றனர், காரணம் எதையும் சொல்வதில்லை. இதனால், பழைய புகைப் படங்களை பார்ப்பவர்களுக்கு, மற்றும் பி.என்.ஓக் புத்தகங்களைப் படித்தவர்களுக்கு, அவற்றின் மீது சந்தேகம் எழுகின்றது.

C-14 தேதி 1300ல் அக்கட்டிடம் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறதுஅடாவது ஷாஜகானுக்கு 300 வருடங்கள் முன்பு: தாஜ் மஹாலின் மரக்கதவிலிருந்து ஒரு துண்டை C-14 (carbon 14) சோதனைக்கு உட்படுத்தியபோது அது ஷாஜகானுக்கு (1592-1666) ஆண்ட காலம் (1628-1658) 300 ஆண்டுகள் முந்தைய தேதியைக் கொடுத்தது. அதாவது சுமார் 1300ம் ஆண்டு என்று வந்தது. ராஜபுத்திர ஆட்சியாளர்களின் விவரங்களின் படி,500 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு யமுனை ஆற்றங்கரையில் அரண்மனைகள், கோவில்கள் இருந்திருக்கின்றன. கட்டிடக் கலை வல்லுனர்கள் இ.பி.ஹேவல் (E.B.Havell), கெனோயர் (Mrs.Kenoyer), சர். டபிள்யூ. டபில்யூ.ஹன்டர் (Sir W W Hunter) போன்றோர், தாஜ் மஹாலின் தரைப்படம் வைத்துப் பார்த்தால், அது ஒரு இந்து கோவில் அமைப்பில் உள்ளது தெரிகிறது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். இ.பி.ஹேவல், ஜாவாவில் உள்ள ஒரு “சண்டி சேவா கோவில்” அமைப்பில் உள்ளது என்று எடுத்துக் காட்டினார். இதே போல பல ஆவணங்கள் அது முன்னரே இருந்தது என்று தெரிகிறது. ஷாஜஹான் அல்லது அவர் காலத்தில் மற்ற கோவில்களைப் போல மாற்றியமைத்துக் கட்டப் பட்டிருக்க வேண்டும்.

சித்தாந்தங்களினால் உண்மை அறிய முடியாது: புதிதாக எழுந்துள்ள சர்ச்சையின்படி அதன் அடித்தளத்தில் சுமார் 22 அறைகள் பூட்டிக் கிடப்பதாகவும், அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது[3]. இதற்காக உத்தர பிரதேசம் அலகாபாதின் லக்னோ அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவர்களின் புகாரில் உள்ள உண்மைகளை அறிய, தாஜ்மகால் கட்டிய காலத்தில் எழுதப்பட்ட முகலாயர்களின் வரலாற்று நூல்களையும் ஆதாரங்களாகக் கொள்ளலாம்[4], என்று “தமிழ் இந்துவில்” கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது. இங்கு, “இந்துத்துவர்களின்,” என்ற வார்த்தை பிரயோகத்தைக் கவனிக்கலாம். எழுதியவர் பெயர், “ஆர்.ஷபிமுன்னா” என்ருள்ளது. இதனால், ஒரு முஸ்லிம், முஸ்லிம் போலத்தான் எழுதியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. தாஜ் மஹாலின் மேற்புற அல்லது வெளிகட்டுமானம் (super structure) ஷாஜகானால் செய்யப் பட்டிருக்கலாம், ஆனால், உள்ளே இருக்கும் கட்டிடம் முஸ்லிம்களுடையது அல்ல என்பதனை அங்கிருக்கும் ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்: இந்த நிலையில், தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்[5]. அந்த வழக்கு இன்று அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது[6]. அப்போது பேசிய மனுதாரர் தரப்பு, “தாஜ்மஹால் தொடர்பான உண்மையை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. அதன் அடிப்படையில் தாஜ்மஹாலில் பூட்டியுள்ள 22 அறைகளின் கதவும் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக தொல்லியல் துறையிடம் பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் வரலாறு அதன் வயது தொடர்பாக உள்ள சந்தேகங்கள் தொடர்பான சில ஆவணங்களையும் இணைத்துள்ளேன்,” என வாதிட்டார்.

எந்த உரிமையில் தாஜ்மஹாலின் அறைக்கதவைத் திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்? – நீதிபதிகள் கேள்வி: இந்த வாதத்துக்குக் கடுமையான ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், “தாஜ்மஹால் வயதில் சந்தேகம் என்றால் அதை ஷாஜஹான் கட்டவில்லை எனக் குறிப்பிடுகிறீர்களா? தற்போது தாஜ்மஹால் யார் கட்டியது என்பதை ஆய்வு செய்யவா இப்போது கூடியிருக்கிறோம்? வரலாற்றுத் தரவுகள் தொடர்பாகப் பேச விரும்பவில்லை. மேலும், எதன் அடிப்படையில், எந்த உரிமையில் தாஜ்மஹாலின் அறைக்கதவைத் திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்?,” எனக் கேள்விகளைத் தொடர்ந்தனர்[7]. இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, “நாட்டின் குடிமகன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,” எனக் கூறியதற்கு நீதிபதிகள்[8], “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு விஷயம் தொடர்பான தரவுகளைத் தான் அறியமுடியும். ஆனால் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும், ஆராய்ச்சி செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த சட்டத்தில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்[9]. இதற்கும் பதிலளித்த மனுதாரர், “உண்மை அறியும் குழு அமைத்து தாஜ்மஹால் குறித்தான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் நமக்குத் தவறான வரலாறு கற்றுத்தரப்பட்டிருந்தால் திருத்தப்பட வேண்டும். மேலும், பூட்டப்பட்ட அறைகளுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்,” என வாதிட்டார்[10].

பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிக்கூத்தாக்காதீர்கள்என்று கூறி வழக்கு தள்ளுபடி: இந்த வாதத்துக்குப் பின் நீதிபதிகள்[11], “தாஜ்மஹால் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் ஆய்வு செய்ய எம்., நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்புகளில் உங்களை இணைத்துக் கொண்டு ஆய்வை மேற்கொள்ளுங்கள். அதில் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றம் வாருங்கள். இன்று தாஜ்மஹால் அறையை திறக்க சொல்கிறீர்கள், நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா? பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிக்கூத்தாக்காதீர்கள். நீதிமன்றத்தில் இது போன்று நடந்துகொள்ளாதீர்கள். மேலும், எந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறினீர்கள் என விளக்கமளியுங்கள்,” எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். பின்னர் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[12].

© வேதபிரகாஷ்

14-05-2022


[1]  அவரது புத்தகங்கள் இன்றும் பிரசித்தியாகவே இருக்கின்றன. இணைதளங்களில் இதுவரை லட்சக்கணக்கில் டவுன்லோன் செய்யப் பட்டுவருகின்றன.

P. N. Oak, Taj Mahal was a Rajput Palace, Hindi Sahitya Assad, New Delhi, 2003.

[2] Godbole, V.S, The Origin of the Taj Mahal, RIBA, Jornal of Rooyal Institute of British Architects, 87.9, 1980, pp. 23-23.

………………………, Taj Mahal?: A Simple Analysis of a Great Deception, Itihas Patrika Prakashan 1986, 2007.

[3] தமிழ்.இந்து, தாஜ்மகாலை வைத்து அரசியல் வேண்டாமே!, ஆர்.ஷபிமுன்னா, Published : 13 May 2022 06:34 AM; Last Updated : 13 May 2022 06:34 AM.

[4] https://www.hindutamil.in/news/opinion/columns/799377-do-not-keep-the-taj-mahal-and-do-politics.html

[5] விகடன், இன்று தாஜ்மஹால்நாளை நீதிபதிகள் அறையை திறக்க சொல்வீர்களா?” – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம், VM மன்சூர் கைரி, Published:Yesterday at 8 PM; Updated:Yesterday at 8 PM

[6] https://www.vikatan.com/news/politics/today-taj-mahal-room-will-you-tell-me-to-open-the-judges-room-tomorrow-allahabad-court

[7] தினமலர், தாஜ்மஹாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி,  Updated : மே 12, 2022  19:55 |  Added : மே 12, 2022  19:53.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3028151

[9] தினாணி, தாஜ்மஹால் மீதான பொதுநல வழக்கு தள்ளுபடி, By DIN  |   Published On : 12th May 2022 05:00 PM  |   Last Updated : 12th May 2022 05:00

[10] https://www.dinamani.com/india/2022/may/12/allahabad-hc-dismisses-petition-on-taj-mahal-3843186.html

[11] தமிழ்.ஏபிபி.லைவ், விட்டா நீதிபதிகளோட அறைகளையும் திறக்க சொல்லுவீங்க” : தாஜ்மஹாலின் அறைகளை திறக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி, By: ABP NADU | Published : 13 May 2022 08:32 PM (IST)|Updated : 13 May 2022 08:38 PM (IST).

[12] https://tamil.abplive.com/news/india/taj-mahal-case-allahabad-high-court-rejects-petition-seeking-open-22-closed-doors-52003