Posts Tagged ‘வரைப் படம்’

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாத-விவாதங்கள்- C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறது – விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்தால் உண்மைகள் விளங்கும்! (2)

மே14, 2022

தாஜ் மஹால் பற்றிய சரித்திர ரீதியிலான தொடரும் வாதவிவாதங்கள்– C-14 தேதி  அக்கட்டிடம் 1300 CEல் கட்டப் பட்டதை எடுத்துக் காட்டுகிறதுவிஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்தால் உண்மைகள் விளங்கும்! (2)

இத்தகைய பிரச்சினைகள் எழுவதேன், பின்னணி என்ன?: உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ் மஹாலில் பூட்டியிருக்கும் 22 அறைகளை ஆய்வு செய்ய, இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அண்மையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுத்தாக்கல் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி, பா.ஜ.க நிர்வாகியின் இந்த முன்னெடுப்பை வரவேற்றிருக்கிறார். ஊடகங்கள் இவ்வாறு, இத்தகைய பிரச்சினைகளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள் மட்டும் செய்து வருகிறார்கள், அதனால், நாட்டில், மத-அமைதி சீர்குலைகிறது, கலவரங்களுக்கு வழிவகுக்கும், அதன் மூலம் தேர்தல் ஆதாயம் கிடைக்கும் என்றெல்லாம் விவரிக்கப் படுகிறது. இது ராமஜன்மபூமி விவகாரத்திலிருந்தே செய்யப் படும் பிரச்சாரமாகி விட்டது.  இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற அமைப்புகள் கூட அரசியல் சார்புடன், இதைப் பற்றி விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இதிலிருந்து சரித்திராசிரியர்கள், அகழாய்வு நிபுணர்கள் முதலியவர்களும் பாரபட்சத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் என்றே தெரிகிறது.

ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி தாஜ் மஹால் இடம் தமக்கு சொந்தமானது என்கிறார்: இது தொடர்பாகப் பேசிய தியா குமாரி[1], “தாஜ் மஹால் கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் என்ன இருந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு என்ன இருந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுள்ளது. மேலும், தாஜ் மஹால் இருக்கும் அந்த நிலம் எங்கள் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது. ஆனால், அதை ஷாஜஹான் கையகப்படுத்திக்கொண்டார். அந்த நிலத்துக்குப் பதிலாக இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதை என் குடும்பம் ஏற்றுக்கொண்டதா எனத் தெரியவில்லை. அப்போது நீதிமன்றமும் இல்லை என்பதால் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பில்லாமல் போனது. அது தொடர்பான பதிவேடுகளை தற்போது ஆய்வு செய்துவருகிறோம். அந்த ஆய்வுக்குப் பிறகு என்ன நடவடிக்கை எடுப்பது என முடிவெடுப்போம்,” எனத் தெரிவித்தார்[2]. இவர் இதற்கு முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்போது, “எங்கள் குடும்பம் ராமர் மகனின் வாரிசு. அதற்கான ஆதாரத்தைத் தேவையெனில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்” எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞான தொழிற்நுட்பங்கள் மூலம் பல உண்மைகளை கண்டறியலாம்: இப்பொழுது அகழாய்வு மற்றும் பூமியின் மேற்பரப்பு, கட்டிடங்களில் உள்ளமைப்பு முதலியவற்றை தோண்டாமலேயே, இடிக்காமலேயே, நவீன விஞ்ஞானகருவிகளைக் கொண்டு கண்டறிய முடியும். சாடிலைட் இமேஜரி மூலம் பழைய நதியோட்டப் பாதைகள் எல்லாம் கண்டுபிடிக்கப் பட்டு அலசப் படுகிறது. LIDAR மூலம் பூமிக்குள் இருக்கும் பொருட்கள், பட்டிடங்கள் முதலியவற்றக் கண்டு பிடிக்க முடிகிறது. அதாவது பூமியைட் தோண்டாமலேயே, பூமிக்குள் இருக்கும் பொருட்கள், கட்டிடங்கள் முதலியவை இருப்பதை கண்டுபிடிக்கலாம். அதை வைத்து தாஜ்மஹால் போன்றவற்றை ஆராயலாம். சுவர்களில், அஸ்திவாரங்களில் என்னவுள்ளன என்பதை சுலபமாக அறியலாம். முகலாயர், முஸ்லிம்கள் இருக்கின்ற ராஜபுத்திரர் கோட்டைகள், அரண்மனைகள், கோவில்கள் முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டு, மேறுபுறம் மாற்றியமைத்து மற்றும் முழுவதுமாக இடித்து கட்டியுள்ளனர் என்பது உண்மையாகும். டில்லி, ஆக்ரா, போன்ற இடங்களில் உள்ள கட்டிடங்களுக்குச் சென்று பார்த்தாலே, இவ்வுண்மை புலப்படும். இதனை யாரும் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

3-D முறையில் ஒரு கட்டிடத்தை பலவாறு ஆராயலாம்: இக்கால இளைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுனர்களும் விஞ்ஞான முறையில் உண்மைகளை அறிந்து வெளியிடலாம், அப்பொழுது உண்மை தெரிந்து விடும். ஆகாயத்திலிருந்து பலவித கோணங்களில் பார்க்கும் போது, உள்ளே பார்க்க முடியும். குறிப்பிட்ட புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டால், 3-D முறையில் தலைகீழாகவும் பார்க்கலாம், எல்லா கோணங்களில்ம் பார்க்கலாம், அத்தகைய புகைப் படங்களையும் முப்பரிமாணங்களில் உருவாக்கலாம். அதனை நீதிமன்றம் தடுக்கமுடியாது. ஆனால், அனுமதி கொடுக்கப் பட மாட்டாது.  ஆனால்சரித்திரத்தை, சரித்திரத் தன்மையினை, நடந்த உண்மையினை ஏன் மறைக்க, மறுக்க, மறக்க வேண்டும், தெரிந்து கொண்டால் என்ன தவறும் இல்லை. MA  படி, PhD ஆராய்ச்சி செய், தனியாக வேண்டுமானால் இது பற்றி விவாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லும் பொழுது, இந்த நவீனமுறைகளும் தெரிந்திருக்க வேண்டுமே?

பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் விக்கிரங்கள் இருக்கிறதா இல்லையா?: தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் விக்கிரங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை விட பூட்டப் பட்ட அறைகள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகின்றது! தாஜ் மஹாலின் குறுக்குவெட்டுத் தோற்றம், தரைப்படம், பக்கவாட்டு அமைப்பு போன்ற புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளன. மூன்றடுக்குகள் கொண்ட இந்த கட்டிடத்தில் பல அறைகள் இருப்பது தெரிகிறது. எனவே அவை பொதும்மக்களின் பார்வைக்கு ஏன் அனுமதிப்பதில்லை என்று தெரியவில்லை. அறைகஐ திறப்பதினால் என்ன பிரச்சினை அல்லது முன்னமே ASI பார்த்திருந்து, ஆவணப் படுத்தியிருந்தால், அவற்றை அறிக்கையாக வெளியிடலாமே? வருடாவருடம் Indian Archaeology – A Review என்ற அறிக்கைகள் கொண்ட தொகுப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது. அவற்றில், இவை இடம் பெற்றிருந்தால், யாரும் கேட்கப் போவதில்லை. அதி பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடலாம்.

கட்டிடங்கள் மாற்றிக் கட்டப் படுவது தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிதான்: மக்கள் தொடர்ந்து வாழும் பகுதிகளின் மேற்பரப்பு, அவர்களின் தினசரி வாழ்க்கையினால், தொடர்ந்து அதிகமாகத்தான் ஏறிவருகிறது, அதற்கு தாஜ்மஹால் விதிவிலக்கல்ல, அவ்விடமும் கைமாறி இருக்கிறது அல்லது ஆண்ட அரசுகள் ஆக்கிரமித்து சொந்தமாக்கிக் கொண்டிருக்கும். இப்பொழுது ஒருவன் ஒரு இடம் தனக்கு சொந்த என்றால், இப்பொழுதுள்ள சட்டத்தின் படி சொந்தம். ஆக்கிரமிப்பு அதில் வருவதில்லை! அதுபோல, முகலாயர்கள் ஆக்ராவை ஆக்கிரமித்துக் கொண்டபோது, அது அவர்களுக்கு சொந்தமில்லை, ராஜபுத்திரர்களிடமிருந்து தான் பிடிங்கிக் கொண்டார்கள்! இருக்கின்ற கட்டிடத்தை மாற்றி அமைப்பது என்பது சாதாரண விசயம். இப்பொழுதும் அஸ்திவாரம் நன்றாக இருந்தால் அதன் மீது தான் கட்டிடம் எழுப்பப் படும்! சுவர்கள், கூரை வரை நன்றாக, பலமாக இருந்தால், அவற்றின் மீதும் கட்டிடங்கள் கட்டுவது வழக்கும். மசூதிகளில் அவற்றைக் காணலாம்! ASIன் கீழ் வரும் புராதன கட்டிடங்கள் ஒரே மாதிரியாகத்தான் வழக்கத்தில் செயல்படுத்த வேண்டும். உள்ளே சென்று எல்லாவற்றையும் பார்க்க அனுமதிக்க வேண்டும். பல்லவரத்தில் கோட்டை விட்டதால், பஞ்சப் பாண்டவர் குகைக்கோவில், இபொழுது மசூதியாகி விட்டது! இது 70 ஆண்டுகளில் நடந்தது!

புரதான கட்டிடங்கள் மாற்றப் படுவதை சட்டப் படி தடுக்க வேண்டும்: பொதுவாக இப்பிரச்சினை இந்து-முஸ்லிம் விவகாரத்தில் முடியும், அமைதி குலையும், கலவரங்கள் உண்டாகும் என்ற பயத்தில் தான் தயக்கம்/ காட்டப் படுகிறது. ஆனால், பல்லாவம் போன்று பல புராதன இடங்கள், கட்டிடங்கள், கோவில்கள் இன்றும் ஆக்கிரமிக்கப் படுகின்ற, மாற்றப் படுகிறன. காஞ்சிபுரத்தில் ஒரு சிவன் கோவிலையே மறைத்து கோடவுனாக உபயோகித்து வந்ததும், சமீபத்தில் தெரிய வந்துள்ளது. அதனால், இத்தகைய சர்ச்சைக்குரிய இடங்களுக்குள் செல்ல தயக்கம் காட்டப் படுகிறது. பிறகு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப் படுகிறது, இருக்கின்ற தூண்கள், சிலைகள் முதலியவையும் அழிக்கப் படும், சரித்திரம் மறைக்கப் படும்! புராதன பட்டிடங்கள், நினைவிடங்கள் பற்றி சட்டங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவை முறையாக செயல்படுத்தப் படுவதில்லை. Infra-structure development  என்று வரும் பொழுதும், பலமுறை, பலவழிகளில் வளைக்கப் படுகின்றன,  சரிசெய்யப் படுகின்றன! பிறகு மதம், மதவாதம் என்றெல்லாம் வரும்பொழுது, செக்யூலரிஸம் வெள்ளையடிக்கப் பட்ட கம்யூனலிஸம் தான் வெல்லும், எல்லாமே மறக்க-மறுக்கப் படும்!

© வேதபிரகாஷ்

14-05-2022


[1] விகடன், தாஜ் மஹால் நிலம் எங்களுக்குச் சொந்தமானதுஷாஜஹான் அபகரித்துக்கொண்டார்!” – பாஜக எம்பி தியா குமாரி, VM மன்சூர் கைரி, Published:11 May 2022 7 PMUpdated:11 May 2022 7 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-mp-diya-kumari-claimed-that-taj-mahal-land-belonged-to-her-family